இடுகைகள்

படம்
  காற்றின் தழுவலும் வண்டினத்தின் முகவுரையும் ஏற்றமிகு என் மனதில் அவளின் ஏக்கம் சேற்றில் வளரும் தாமரையா? அவள் சீற்றமிகு கடலின் இதமான தடவல்கள் ஈரமான குறு மணலை ...சுதி ஏத்தும் காட்சிகள் ஆழமாய் மனதில் குறு குறுக்கும் காற்றின் தழுவலில் தனை மறந்து கை விளக்கு சுடரோ துயில் கொள்ளும் . நாற்ருக்களோ தலை குனியும் முந்தானை சேலை சிலிர்க்க வைக்கும் அம்மட்டோ ? இல்லை இல்லை முந்தானை அசைவதால் .வெண் பனி சங்குகளின் பரிணாமம் இந்தா! இந்தா!! என கை அசைக்கும் நான் என்ன விதி விலக்கா? தீப்பெட்டி முத்தம் பெரு நெருப்பை மூட்டுதல் போல் உணர்சிகள் மனதில் விரகமாய் வெடிக்க நான் விட்ட ஏக்க மூச்சின் காற்றுக்கள் அனல் காற்றாய் எரிமலையாய் என்று தான் உன் கன்னத்தை தீண்டுமோ? துணிந்து
  ஊருக்கும் கிராமத்துக்கும் பலர் விளக்கம் தெரியாமல் கட்டுரைகள் எழுத்து கிறார்கள் அதனால் உண்மையை உரக்க சொல்வோம் சராசரிக் குடிமக்கள் வசித்த வாழ்விடம் ஊர் என்று அழைக்கப்பட்டது. பிராமணர்கள் வசித்த வாழ்விடத்திற்கு கிராமம் என்று பெயர். இதனால் இணுவில் கிராமம் ஆனது கோண்டாவில் ஊர் ஆனது %%%%%%%%%%%%%%% போர் இல்லாத இடமே இல்லை. காட்டிலே விலங்கொடு விலங்கு போராடுகின்றது. எளிய விலங்கை வலிய விலங்கு கொல்லுகின்றது. நீரிலே மீனோடு மீன் போராடுகின்றது. சிறிய மீன் பெரிய மீனுக்கு இரையாகின்றது. நாட்டிலே அரசும் அரசும் போராடுகின்றன; எளியவர் நாட்டை வலியவர் கவர்ந்து ஆளுகின்றனர். படை வலிமையுடைய நாடே சிறந்த நாடாக இன்று மதிக்கப்படுகின்றது. முற்காலத்தில் தமிழ்நாட்டில் மலிந்திருந்தார்கள். அன்னார், "உச்சி மீது வான் இடிந்து வீழு கின்ற போதினும் அச்ச மில்லை அச்ச மில்லை அக்ச மென்ப தில்லையே" என்று பாடிக்கொண்டு போர்க்களம் செல்லும் பான்மையாளர். ஆண்களும் பெண்களும் வீரம் வாய்ந்து விளங்கினார்கள். இத் தகைய மறக்குடியில் தோன்றினாள், ஒரு மங்கை; தன் மனப்பான்மைக்கேற்ற வீரன் ஒருவனை மணந்து ஒரு வீரக்குழந்தையைப் பெற்றாள். அவள்
  நந்தாவில் ^^^^^^^^^^^^ தூண்டாமணி விளக்கு என்பது இந்துக் கோவில்களின் கருவறையில் உள்ள ஒரு வகை விளக்காகும். இவ்விளக்கினைத் தூங்காமணி விளக்கு, நந்தா விளக்கு என்றும் அழைக்கின்றார்கள். இவ்விளக்கினை, திருநுந்தா விளக்கு என்று முதலாம் இராஜேந்திரன் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார்கள். நுந்துதல் என்பதற்கு தூண்டுதல் என்று பொருள். இவ்விளக்கின் சிறப்பு அமைப்பின் காரணமாகத் திரியைத் தூண்டுதல் அவசியமற்று இருப்பதால் நுந்தா விளக்கு என்றும் தூண்டாமணி விளக்கு என்றும் அழைக்கப்பெறுகிறது. நுந்தா விளக்கு என்பது திரிந்து நந்தா விளக்கு என்றும், தூண்டாமணி விளக்கு என்பது திரிந்து தூங்காமணி விளக்கு என்றும் அறியப்பெறுகிறது முட்டை வடிவில் காணப்படும் இந்த அணையா விளக்கினை மணி விளக்கென்றும் தூங்காமணி விளக்கென்றும் குறிப்பிடுகிறார்கள். நந்தா விளக்கு என்றும் இதனைக் குறிப்பிடுவதுண்டு. நந்துதல் என்ற சொல்லுக்கு அணைதல் என்று பொருள். நந்தா விளக்கு என்றால் அணையாமல் எரியும் விளக்கு என்று பொருள். தூண்டா விளக்கு என்றும் தீண்டா விளக்கு என்றும் இத்தகைய விளக்குகள் குறிப்பிடப்படுவது உண்டு. இரவும் பகலும் எரியும் இந்த விளக்கின் திரி தூண
  நீர்நிலைகள் என்பன, கடல்கள், ஆறுகள், சுனைகள், மடுக்கள் மற்றும் நீரோடைகள் ஆகியவற்றையும், ஏரிகள், குளங்கள், அணைகள் போன்றவற்றையும் குறிக்கும்.ஐம்பூதங்களும் (பஞ்சபூதங்கள்) அடங்கியதுதான் இவ்வுலகம் என்கிறது தொல்காப்பியம். இவ்வைந்தில் எந்த ஒன்று குறைந்தாலும், மிகுந்தாலும் உலக உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும்! அக்காலத்தில் 47 வகையான நீர்நிலைகள் இருந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. அவை: 1.அகழி: கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண். 2. அருவி: மலை முகட்டில் தேங்கியநீர் குத்திட்டு விழுதல். 3. ஆறு: பெருகி ஓடும் நதி. 4. இலஞ்சி: பலவற்றுக்கும் பயன்படும் நீர்த்தேக்கம். 5.ஆழிக்கிணறு: கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு. 6. உறைகிணறு: மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு. 7. ஊருணி: மக்கள் பருகும் நீர்நிலை. 8.ஊற்று: பூமிக்கு அடியிலிருந்து நீர் ஊறுவது. 9. ஏரி: பாச நீர்த்தேக்கம். 10.ஓடை: அடியிலிருந்த ஊற்று எடுக்கும் நீர்/ எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர். 11.கட்டுக் கிணறு: சரளை நிலத்தில் வெட்டி, கல் செங்கல் இவற்றால் சுவர் கட்டிய கிணறு. 12. கடல்: சமுத்திரம் 1
  இராவனபூமி என்கிற பெயரிட்டு தொடரை தருகிறேன் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள மறக்காமல் வாசியுங்கள் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நித்திலத்தீவென்று வித்தகரால் போற்றிப்புகழ்ந்த இலங்கை என்ற ஈழவள நாட்டிலே முத்தமிழ்காத்த முடி மன்னரின் கொடிபறக்கவும், குடை சிறக்கவும், கொற்றந்தழைக்கவும் வித்திட்ட பெருமை படைவீரர்களான மறவர்குலப் பெருங்குடிமக்களையே முதற்கண் சாரும்.வடஈழத்திலே, குறிப்பாகத் தீவகத்திலே குடிபதி களாக வாழ்ந்த மறவர்குலத்தவர்கள்.இவர்கள்“நெடுந்தீவு சஞ்சுவான் கோயில் கிறீஸ்தவர்கள் தமிழ் மன்னர் காலத்தில் போர் வீரர்களாக நெடுந் தீவில் இறக்கப்பட்டவர்களென்றும், இவர்கள் மறவர் குலத்தைச் சேர்ந்தவர்களென்றும்மற்றப்படி உள்ளபடியே இவர்கள் மேன்குல மக்களென்றும்”அறிய முடிகிண்றது. பண்டைக்காலத் தமிழர் காலத்தில் மாதோட்டம் மிகச் சிறந்த செல்வ நாடாய்த் திகழ்ந்தது. ரோமர், கிரேக்கர் முதலானோர் தம்மரக்கல்களோடு இங்கு வந்து, தந்தம் முத்து, தோகை, இலவங்கம், முதலாம் விலையுயர்ந்த திரவியங்கள் ஏற்றிச் சென்றிருக்கின்றனர். மாதோட்டத்தை ஆண்ட சிற்றரசர்களோடு பலமுறை சோழரும், பாண்டியரும் போர் பொருதியுள்ளனர். சிலகாலம் சோழரும் பாண்டியரும்
  இணுவிலி ல் பாதகன்புலமா ?பாகுதேவன் புலமா? ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ இணுவிலில் மன்னர் பரராஜசேகரனின் தம்பி செகராச சேகரன் தாவடி (பாசறை) பற்றி அறிந்திருக்கிறோம் இங்கு போர் வீரர்கள் தங்கியதும் அறிந்தீர்கள் . இப்பொழுது கைதிகளை என்ன செய்வது என்ற பிரச்சனை எழுந்தபொழுது இவர்களை பாதகர்கள் (கைதிகள் )என்று கூறி ஒரு புலத்தில் அடைத்தார்கள் இதனால் இந்த இடத்தை பாதகன்புலம் என்று அழைப்பவர்களும் உண்டு அதேநேரம் இந்தப் புலத்தை பாகுதேவன் என்கிற மற ப்படைத்தலை வனின் கட்டுப்பாட்டில் இருந்ததால் இதை பாகுதேவன் புலம் என்றும் அழைப்பார்கள் %%%%%%%%%%%%%%%%%%%%%%% வடமராட்சி /தென்மராட்சி /சாதிகள் பற்றி சிறு அலசல் இராவனபூமி இரண்டாம் பகுதியைஎழுதுகிறேன் அறிந்து கொள்ளுங்கள் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ தமிழ் நாட்டிலே தொழிலின் காரணமாகவே சாதிப்பிரிவுகளேற்பட்டதென்பது சகலரும் ஒரே வாய்ப்பட ஒப்புக்கொள்ளப்பட்டதொன்றாகும். பலபல தொழில்களைப் புரியும் சகல சாதியரும் நாட்டுக்குத் தேவைப்பட்டபடியால் எல்லாக் குலத்தவர்களும் ஈழநாட்டில் குடியேற்றப்பட்டனர். இன்னும் இராசபவனிக்கும், அரசாங்க சேவைக்கும் தேவைப்பட்ட சிவிகை காவுவோர்,
படம்
  இணுவில் வீரமணி அய்யர் %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த ம. த. நடராஜ ஐயர், சுந்தராம்பாள் தம்பதியினருக்கு 1931 அக்டோபர் 15 இல் இரண்டாவது புதல்வனாகப் பிறந்த வீரமணிஐயர், தனது சிறுவயதுக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், (தற்போதைய இணுவில் இந்துக் கல்லூரி) உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றார். அங்கு படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர். ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 1996 ஆம் ஆண்டு அவரது மனைவியார் ருக்மணி அம்மையார் காலமானார். என். வீரமணி ஐயர் 2003ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ந்திகதி யாழ்ப்பாணத்தில் காலமானார். கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக இந்தியா சென்ற இடத்தில், இசை, நடனம், நாடகம் என்பனவற்றால் கவரப்பட்டு, திருமதி ருக்மணிதேவி அருண்டேல் அவர்களிடம் பரதநாட்டியம்கற்றுக் கொண்டார் , எம். டி. ராமநாதன் இசை கற்றுக் கொண்டார் , பாபநாசம் சிவன் சாகித்ய குரு வானவரை தன இசைக் குருவாக ஏற்றார் தாய்நாடு திரும்பி, தான் படித்த மானிப்பாய் இந்துக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணி புரிந்தார். சில ஆண்டுகளின் பின்னர், கோப்பாய்