இணுவிலி ல் பாதகன்புலமா ?பாகுதேவன் புலமா?

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இணுவிலில் மன்னர் பரராஜசேகரனின் தம்பி செகராச சேகரன் தாவடி (பாசறை) பற்றி அறிந்திருக்கிறோம் இங்கு போர் வீரர்கள் தங்கியதும் அறிந்தீர்கள் .
இப்பொழுது கைதிகளை என்ன செய்வது என்ற பிரச்சனை எழுந்தபொழுது
இவர்களை பாதகர்கள் (கைதிகள் )என்று கூறி ஒரு புலத்தில் அடைத்தார்கள்
இதனால் இந்த இடத்தை பாதகன்புலம் என்று அழைப்பவர்களும் உண்டு
அதேநேரம் இந்தப் புலத்தை பாகுதேவன் என்கிற மற ப்படைத்தலை வனின் கட்டுப்பாட்டில் இருந்ததால்
இதை பாகுதேவன் புலம் என்றும் அழைப்பார்கள்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%

வடமராட்சி /தென்மராட்சி /சாதிகள் பற்றி சிறு அலசல்
இராவனபூமி இரண்டாம் பகுதியைஎழுதுகிறேன்
அறிந்து கொள்ளுங்கள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தமிழ் நாட்டிலே தொழிலின் காரணமாகவே சாதிப்பிரிவுகளேற்பட்டதென்பது சகலரும் ஒரே வாய்ப்பட ஒப்புக்கொள்ளப்பட்டதொன்றாகும். பலபல தொழில்களைப் புரியும் சகல சாதியரும் நாட்டுக்குத் தேவைப்பட்டபடியால் எல்லாக் குலத்தவர்களும் ஈழநாட்டில் குடியேற்றப்பட்டனர். இன்னும் இராசபவனிக்கும், அரசாங்க சேவைக்கும் தேவைப்பட்ட சிவிகை காவுவோர், கோல் கொண்டொழுகுவோர், முரசடிப்போர், பறைசாற்றுவோர் முதலா னோர்களும் யாழ்ப்பாணத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
குடியேற்றப்பட்ட சாதியருள் ஒருசல சாதிமக்களுக்கு அரசாங்கம் சில பல ஒழுக்கங்களை வகுத்து, அதனைக் கட்டாயச் சட்டமுமாக்கி அதன் பயனாய் நாட்டுக்கு வருமானத்தையும் ஊழியத்தையும் தேடிக்கொண்டது. உதாரணமாக வேளாளர், செட்டிகள் முதலாம் சாதியருள் தாம் தாம் ஒழுதுண்டு வாழ்பவரைத் தவிர உழவர், பள்ளர் முதலாம் பண்ணையாட்களைக் கொண்டு கமஞ்செய்து உண்பவரெல்லாம் தமக்கு வேலைசெய்யும் அத்தனை வேலையாட்களையும் கொண்டு வருஷமொருமுறை பதினைந்து நாட்களுக்கு இராச ஊழியஞ்செய்ய அனுப்புதல் வேண்டும். விளைவில் ஆறிலொரு பங்கும் கொடுக்க வேண்டும். சிவியார் எனப்பட்டோர் அரசாங்க சிவிகையாட்களாகவும், சிவிகை முன் செல்லும் கூறியராகவும், அரன்மனை வாயிலாளராகவும், ஒவ்வொரு குழுவினராக மாதந் தோறும் முறைப்படி இராசசேவை செய்யவேண்டும். இத்தொண்டிற்காக அரசாங்கத்தால் நிலங்கள் அவர்களுக்கு உபகரிக்கப்பட்டன. ஆண்டிகளானோர் விடியற்காலம் ஐந்து மணிக்கு எழுந்து ஊர்கள் தோறும், கிராமங்கள் தோறும் சென்று சங்குகள் ஊதி மக்களைத் துயிலெழுப்ப வேண்டும். கோயில்களிலும் அரண்மனைகளிலும் செய்யும் சேவைகளை ஒழித்த மற்றக்காலங்களில் ஊர்தோறும் சென்று யாசகம் பண்ணுவதோடு மாரியம்மன் கோயில், பிடாரி கோயில்களுக்குப் பூசகராயும் வலைஞர் முதலிய சாதியாருக்கு குருக்கள் மாராகவும் பணியாற்றவேண்டும். முக்கியர், கரையார், பரவர், திமிலர் முதலானவர்களில் அரசாங்க கடற் சேவையிலிருப்பவரைத் தவிர, மற்றவர்கள் முத்துக்குளிப்புக் காலத்தில் வருடத்தில் பதினைந்து நாளைக்கு அரசாங்க கடமையாற்றக் கடமைப்பட்டவராவர். இவர்களுக்கு மீன் வரியில்லை. வலையர் அரசன் வேட்டைக்குச் செல்லும் போது உடன் செல்லவேண்டும். கடைஞர் சுண்ணம் நீற்றுக் கொடுத்தல் வேண்டும். கம்மாளர், கொல்லர், தச்சர் முதலான விஸ்வகர்ம குலத்தவர்கள் கிராம மக்களுக்கு தேவைப்பட்ட கலப்பை, கொழு, அரிவாள் முதலியவைகள் கூலியின்றிச் செய்து கொடுத்தும், வருடத்தில் எட்டு நாளைக்கு இராசகாரியமுஞ் செய்தல் வேண்டும். இவர்களுக்குக் கிராமங்கள் தோறும் வரியின்றி நிலங்கள் வழங்கப்பட்டன. ஈழத்திரும்பென நெடுங்காலம் பெயர்படைத்த இரும்பு யாழ்ப்பாணத்தில் செய்யப்பட்ட இரும்பேயாம். கன்னார், தட்டார், கற்சிற்பியர் இராச அரண்மனையிலும் கோயிலிலும் வருடத்தி;ல் பதினைந்து நாள் வேலைசெய்யுங் கடமைப்பட்டவராவர்.சிவியார் அரசாங்கத்துக்குச் சிவிகை ஆட்களாகவும், சிவிகை முன் செல்லுங் கூறியராகவும், அரன்மனை வாயில் காப்போராகவும், மாதங்கள் தோறும் முறைப்படி ஒவ்வொரு தொகையினராக மாறி மாறிக் கடமையாற்றல் வேண்டும். இவர்களுக்கு அரசாங்க நிலங்கள் மான்யமாய்விடப்பட்டன. உமணர் இரசாங்கத்துக்கு உப்பு அமைப்பவர்களாக இருந்தார்கள். ஆண்டிகள் விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து நகரங்கள், கிராமங்கள் தோறும் சென்று சங்கநாதஞ் செய்து மக்களைத் துயிலெழுப்பவேண்டும். கோயில்களிலும் அரண்மனைகளிலுமுள்ள முறைக்காலங்களைத்தவிர ஏனைய நாட்களில் ஊர்தோறுஞ் சென்று யாகஞ்செய்து பிழைக்க வேண்டும். முக்கியர், கரையார், பரவர், திமிலர் முதலானோர் முத்துக்குளிப்புக் காலங்களில் வருஷத்தில் பதினைந்து நாளைக்கு இராச ஊழியஞ் செய்யக் கடமைப்பட்ட வராவர். இவர்களுக்கு மீன் வரியில்லை. கொல்லர், தச்சர் முதலானோர் கிராமத்தாருக்கு வேண்டும் கல்பை, கொழு, அரிவாள் முதலியபயிர்த் தொழில் கருவிகளைக் கூலியின்றிச் செய்து கொடுக்கவேண்டும். வருஷத்தில் எட்டு நாளைக்கு இராச கருமமுஞ் செய்தல் வேண்டும். அரசாங்க நிலங்கள் மான்யமாய் விடப்பட்டன. நிலங்களுக்கு வரிகளும் நீக்கப்பட்டன. கைக்கோளர், சேணியர்களுக்குயாதொரு கட்டுப்பாடுமி;ல்லை. கன்னார், தட்டார், கற்சிப்பியர் முதலானோர்! இராச அரண்மனையிலும், கோயில்களிலும் வருஷத்தில் பதினைந்து நாட்கள் வேலை செய்யக் கடமைப்பட்டவராவர். வண்ணார் முறைமுறையாக அரசன் சென்று தங்குமிடங்களுக்கு வெள்ளை கட்டுங்கடனுடையார். பறையர் யுத்தகாலங்களில் முற்பறை கொட்டுங் கடனுடையர். இவ்வண்ணம் ஒவ்வொரு சாதியாரும் வருஷந்தோறும் சில சில தினங்களுக்கு இராசகாரியங்கள் செய்து வந்தனர். இவ்வழக்கம் பரங்கியர், ஒல்லாந்தர் காலங்களிலும் நீடித்து இருந்து பின் ஆங்கிலேயர் காலத்தில் 1810ம் வருடம் இவைகள் நீக்கப்பட்டன.
மேலே கூறப்பட்ட சாதியரைப் போலவே மறவரும் பதினாறு முதல் இருபத்துநான்கு வயது வரையும் போர்ப்பயிற்சி கற்றுப் பின்பு கிராமக் காவலராகி படைத்தொழிலுக்கு வேண்டிய காலத்தில் தொண்டாற்றவும் கடமைப்பட்ட வராயினர். மற்றவர்கள் பதினாறு வயது முதல் இருபத்துநான்கு வயதுவரை யுத்தப்பயி ற்சிபயின்று கிராமக் காவலராக கடமையாற்றி, போர்ப்பறை முழங்கும்போது படையில் சேர்ந்தும் சேவைசெய்ய வேண்டும். இவர்களுக்கு அரசாங்க நிலங்கள் மான்யமாக வழங்கப்பட்டன. யுத்தமில்லாக் காலங்களில் கிராமக்காவல் செய்து வாழுதல் வேண்டும்.
இவர்களைப் போலவே அரசனையும் நாட்டையுங், காப்பதற்கும், பயமின்றி வாழ்வதற்கும், பகைவரை அழித்தொழிப்பதற்கும் தம் சொந்தக் குலத் தொழிலாய்க் கொண்ட மறவர்களையும் தம் நாற்படைகளிலும் பணிபுரிவதற்கும் வரவழைத்து அமர்;;த்திக் கொண்டனர்.
குடியேற்றப்பட்ட சாதியார்கள் அனைவரும் வேளாண் முதலிமார்களின் துணைகொண்டே, தருவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் மறவர்கள் படைவீரர்களா கவும் மன்னர்களின் மெய்க்காப்பாளர்களாகவும் இலங்கைக்கு வந்தார்களேயொழிய ஏனைய சாதியர்களைப் போல் வேளாண் பிரபுக்களால் குடியேற்றப்பட்டார்களென நம்ப இடமில்லை. இவ்விதிகளுக்கமையவே பண்டைக் காலத்தில் சகலசாதியரும் வருடத்தில் சில நாட்களுக்கு இராசபணிகள் செய்து வந்தனர். இவ்வழக்கம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலம் வரைக்கும் நீடித்திருந்து பின்பு 1810ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. (யாழ்ப்பாணச் சரித்திரம் ஆ. மு. பி.)
கைலாயமாலைப் பாடலிலும் யாழ்ப்பாண வைபவமாலையிலும் கூறப்பட்ட தனிநாயகமுதலியும் அவன் பரிவாரங்களும் நெடுந்தீவில் குடியேறுவதற்கு முன்னும், முஸ்லிம்கள் சங்கு குளிப்பதற்கு இங்கு வந்து தங்குவதற்கு முன்னும், படைவீரர்களே ஆதியில் நெடுந்தீவில் குடியேறினர் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை.
இவர்கள் தமிழ் நாடான பாண்டி நாட்டிலிருந்தே வந்தவர்களாவர். பாண்டிநாட்டில் போர்வீரர்கள் யாவரும் மறவர் குலத்தார் என்பது சங்க இலக்கியங்களாலும் மற்றும் இந்தியநாட்டுச் சரித்திரங்களாலும் சந்தேகமறத்தெளிந்த உண்மையாகும். இவ்வுண்மையின் படியும், முன் அத்தியாயங்களில் கூறிய சரித்திர ஆதாரங்களின் படியும் நெடுந்தீவின் பூர்வ குடிகள் மறவரே மறவரென்பது யாவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய தொன்றாகும். நெடுந்தீவில் இவர்கள் குடியேறிய காலத்தில் தாம் இந்தியாவில் வசித்த கிராமத்தின் பெயரான வல்லையை இங்குஞ் சூட்டியுள்ளார்கள். தற்போது வல்லையெனப்பட்ட பெயரால் வெல்லையாக மாறப்பட்டு வந்துள்ளது. யுத்தத்தில் பணிபுரியாத மறவர்கள் வெல்லையில் குடியேறியிருக்கலாம். போர்வீரர்கள் மாத்திரம் துறைமுகத்துக் கருகாமையில் பாடி அமைத்து வாழ்ந்து பின்பு குடும்பமாய் வாழ்வதற்கும் இவ்விடத்தையே வளமாக்கிக் கொண்டிருக்கலாம். காலகதியில் தமிழ் மன்னர்களின் செல்வாக்கும், யுத்தங்களும் குறைந்து குறைந்து போக, யுத்தத் தொழிலையே நம்பியிருந்த மறவர்கள் தம் சீவனத்திற்காக வௌ;வேறு தொழில்களைப் புரியவுந் தலைப்பட்டனர். வெல்லையில் குடியிருந்தோரும் மெல்ல மெல்லத் துறைமுகத்தை நாடிவரலாயினர். துறைமுகத்தில் போர் வீரராகக் கடமையாற்றியோரும், வெல்லையிலிருந்து மெல்ல மெல்ல வந்தோருமான இக்குலத்தவர்கள் தம் தாயகமான இந்தியாவை நாடாமல், நெடுந்தீவு நடுக்குறிஞ்சியையே தம் சொந்த நடாக்கிக் கொண்டு வாழலானார்கள். இவர்களின் குலப்பெயர்களைக் கொண்ட மறவன்புலம் என்னும் ஒரு பரந்த வெளியும், மறவனோடையும் நெடுந்தீவிலிருப்பது கண்கூடு.
இருபெரும் பகுதிகள். ஒன்று வடமராட்சி (வட + மறவர் + ஆட்சி) மற்றது தென்மராட்சி (தென் + மறவர் + ஆட்சி) இன்னும் மறவன்புலம் (சாவகச்சேரியிலுள்ளது) மறத்திகன்னாட்டி (அடம்பனுக்கும் நெடுங்கண்டலுக்கு மிடையிலிருக்கிறது) தற்போதும் மறவர்கள் இங்கு பெருந்தொகையாக வாழ்கிறார்கள். இன்னும் மறவன்பிட்டி, மறவன்திடல். மறவன்காடு, மறவன் ஓடை முதலாம் பெயர் கொண்ட இடங்களெல்லாம் இவர்களின் பூர்வதலங்களாம். நெடுந்தீவு, புங்குடுதீவு முதலிய தீவுகளிலும் மேற்கூறிய நாமங்கள் கொண்ட காணிகளும் குறிச்சிகளும் இருக்கின்றன. வேலணையில் பழைய பஸ்நிலையத்திற் கருகாமையிலிருக்கும் ஒருகாணியின் பெயர் வலதேவன் சீமாவென்று அழைக்கப்படுகிறது. இது மாத்திரமல்ல தமிழ்மன்னர்காலத்தில் மறவர்களுக்குக் காணிகள் குறிச்சிகள் கொடுத்தவிதமும் ஒரு நூதனமுறையாகும். அது எப்படியெனில். காணிகளோ, குறிச்சிகளோ விரும்புகின்ற மறவனைத் தமிழ் மன்னன் அழைத்து, மூச்சுப்பிடிக்கும்வரைக்கும் நீளத்துக்கும் அகலத்துக்கும் ஓடச்சொல்லி, ஓடுமட்டும் ஒடி எங்கே களைத்து நிற்கிறானோ அங்கிருந்து ஒடியதூரம் வரைக்கும் உள்ளநிலத்தைச் சதுரப்பட அளந்து மான்யமாகக் கொடுக்கப்பட்டதாம். கொடுக்கப்பட்ட குறிச்சிகளுக்கு அந்தந்த மறவர்களின் நாமமே வழங்கப்பட்டதாம். இவ்வண்ணம் மறவர்களுக்கு மான்மமாக வழங்கப்பட்ட குறிச்சிகள் பருத்தித்துறை சிவன்கோயிலுக்கருகாமையிலுள்ள சிங்கபாகுதேவன் குறிச்சி, வதிரியிலே வதிரிபாகுதேவன் குறிச்சி, உடு;ப்பிட்டிப்பகுதிகளிலே சமரபாகு தேவன்குறிச்சி, செயக்கொடி பாகுதேவன் குறிச்சி, குறுளிபாகுதேவன் குறிச்சி முதலியன இன்றைக்கும் உறுதிச்சாசனங்களில் எழுதப்பட்டு வருகின்றன. அன்றியும் மறவருள்ளே தலைசிறந்த அதிகாரிகளாக விளங்கிய வீரமாணிக்கத் தேவனும், நராங்குபாகுதேவனும் பலாலியிலும், நரசிங்க தேவனும், சி;ன்னநாட்டான் தேவனும் மயிலிட்டியிலும் சிற்றரசர்களைப் போன்றவலிமையோடு வாழ்ந்தார்கள்
இவர்களுக்கு வழங்கியுள்ள பழங்கால நாமங்களைக் கொண்டும் ருசுப்படுத்தலாம். வல்லைத் தேவன், வலங்கை மறான், புலிமாறன், விலங்குத் தேவன், கோரமாறன், கொம்புத்தேவன், நீலமாறன் முதலாம் பெயர்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. தேவன் மாறன் என்ற நாமங்கள் மறவருக்கு உரித்தான பெயர்களாகும். இன்னும் இவர்கள் கத்தோலிக்கரான பின் ஞானஸ்நானப் பெயரோடும் இவர்களின் குலப்பெயர்கள் இணைக்கப்பட்டிருப்பதை ஞானஸ்நானப் பதிவு நூலில் பரக்கக் காணலாம். விலங்குப் பாவுலு (இவர் விலங்குத் தேவன் சந்ததி) கொம்பன் அந்தோனி (இவர் கொம்புத் தேவன் சந்ததி) நீலன் குருசான் (இவர் நீலமாறன் சந்ததி) இவ்வண்ணம் எத்தனையோ பெயர்களுண்டு. இன்னும் இக் குலத்தவர்கள் வணங்கிய சூலியம்மாள் என்னும் தேவதையின் பெயரைக் கொண்டும் ஒரு பெண்மணிக்கு சூலாயி ஆனாள் என்ற பெயரும் ஞானஸ்நான டாப்பில் இருப்பதையும் அறியலாம்.
இன்னும் இக்குலத்தவர்களுக்கு ஒரு பிள்ளை பிறந்து விட்டால் அதிலும் ஆண் குழவி வந்தால் பிள்ளை பிறந்த முப்பத்தொராம் நாளை வெகு சிறப்பொடு கொண்டாடுவார்கள். உற்றார் உறவோர் நண்பர் முதலானோருக்குத் திருமுகம் போக்கி யாவரும் வரவழைக்கப்பட்டு அக் கொண்டாட்டம் நடைபெறும். இவ் வைபவத்தின் போது நடுவீட்டில் இதற்கென சாணத்தால் மெழுகிடப்பட்ட இடத்தில் மஞ்சள் மாவினால் ஒருசிங்க உருவம் கீறுப்பட்டிருக்கும். அதன்மேல் வயதுமுதிர்ந்த மூதாட்டி ஒருத்தி பிறந்த சிசுவை மடியில் வைத்துக்கொண்டு ஒரு பாடல் படிப்பாள். அப்பாட்டில் குறிப்பிடும் சாமான்களெல்லாம் பிள்ளைக்கு அன்பளிப்பாக இனசனங்கள் கொண்டுவந்து வைப்பார்கள். இவ்வுண்மையின் படியும், முன் அத்தியாயங்களில் கூறிய சரித்திர ஆதாரங்களின் படியும் நெடுந்தீவின் பூர்வ குடிகள் மறவரே மறவரென்பது யாவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய தொன்றாகும்.மேலே சுட்டிக்காட்டிய ஒரு சில சரித்திரக்குறிப்புக்களும், கட்டுரைகளும் நெடுந்தீவில் மறவர்கள் வாழ்ந்தனர் என்ற உண்மையையும் இந்தீவின் பண்டைக்காலப் பெருமையையும் தெளிவாக்கிறது.






கருத்துகள்