யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. அன்னலெட்சுமி இராஜதுரை %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% திருநெல்வேலி செங்குத்தா இந்துக்கல்லூரி, சுன்னாகம் இராமநாதன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பெற்றார். கலைச் செல்வி என்னும் மாத இதழில் கவிதை எழுதியதன் மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தார். இத்துடன் “யாழ். நங்கை” என்ற புனை பெயரில் சிறுகதை எழுத்தாளராகவும் விளங்கினார். 1962ஆம் ஆண்டு யூன் மாதம் 1ஆம் திகதி வீரகேசரியில் உதவி ஆசிரியராகச் சேர்ந்த திருமதி. அன்னலெட்சுமி இராஜதுரை தமது செய்திக் கடமைகளோடு “மாணவர் கேசரி” என்னும் பக்கத்தையும் கவனித்து வந்தார். 1966ஆம் ஆண்டு வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட “ஜோதி” என்னும் குடும்பவார இதழின் பொறுப்பாசிரியராக கடமைபுரிந்தார். 1973ஆம் ஆண்டிலிருந்து 1984ஆம் ஆண்டுவரை மித்திரன் வாரமலர் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் கடமைபுரிந்தார். இக்காலப்பகுதியில் கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், நேர்முகங்கள், சிறுவர் தொடர்கதைகள், விமர்சனங்கள், மொழி பெயர்ப்புக் கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை மித்திரன் வாரமலர், வீரகேசரி நாளிதழ், ஞாயிறு இதழ் ஆ...
இடுகைகள்
டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கார்த்திகா, கணேசர் %%%%%%%%%%%%%%%%% யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடனக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவி. நடனத்துறை விற்பன்னர் ஏரம்பு செல்லையா, யாழ். இணுவில் வீரமணி ஐயர் ஆகியோரின் மாணவியான இவர், பரதக்கலை பற்றிய மேலறிவினைப் பெறுவதற்காக இந்தியா சென்று வழுவூர் இராமையாப்பிள்ளையிடம் மரபுவழி நடனத்தைக் குருகுல முறையில் கற்றுத் தேறினார். இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நடன வாரிசாகத் திகழ்கின்றார். இவர் 1972 இல் கொழும்பில் ஆடற் கலையகத்தை நிறுவி நாட்டிய நிகழ்வுகள், பயிற்சிகள் வழங்கிப் பெரும் கலைத்தொண்டினை ஆற்றி வந்த இவர், தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் (1969), காலந்தோறும் நாட்டியக்கலை, இந்திய நாட்டியத்தின் நாடக மாபு, நாட்டியக் கடலின் புதிய அலைகள் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசின் கலாசார இலாகா, இங்கிலாந்திலுள்ள பிளாக்பூல் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நடனக் கருத்தரங்குகளைய...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
திரு.க.பாலேந்திரா %%%%%%%%%%%%%%%%%% திரு.க.பாலேந்திரா, அரியாலையூர். அமரர்கள் Dr.கனகரத்தினம் , சரோஜினி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வர் ஆவார். அவர் .யாழ் இந்துக் கல்லூரி மற்றும் மொறட்டுவ(Moratuwa University Sri Lanka), துரண்ணியம் (நோர்வே)(Trondheim Technical University,Norway) , மி;டில்செக்சு (இங்கிலாந்து)(Middlesex University England) ஆகிய பல்கலைக்;கழகங்களிலும் பயின்று பொறியியல் துறையில் (Msc)முதுமாணி பட்டம் பெற்றவர். இலங்கை மின்சார சபையிலும் , இலண்டனில பல நிறுவனங்களிலும் பொறியியலாளராக பணியாற்றியவர்;. அரியாலையில்; சிறுவயதில் ஊற்றெடுத்த இவரது நாடக ஆர்வம் , இன்றுவரை மனைவி ஆனந்தராணியின் துணையுடன்50 வருடங்களுக்கு மேலாக தொடர்கிறது. இவர்களது ஒரே மகள் மானசியையும் மற்றைய சில புலம் பெயர் இளையவர்களையும் தமிழ் நாடகத்துறையில் ஈடுபட வைத்துள்ளனர்.மானசியின் நெறியாள்கையில் “அது” என்ற நாடகம் லண்டனில் 2018 இல் நிகழ்ந்தது. பாலேந்திரா நெறிப்படுத்திய சுமார் எழுபது நாடகங்களில் எமது வாழ்வியலுடன் தொடர்பு கொண்ட மொழிபெயர்ப்பு நாடகங்களும் , சுதேசிய நாடகங்களும் அடங்கும். இவர் பலரது கூட்டுமுயற்சியியைநெ...