கார்த்திகா, கணேசர் 

%%%%%%%%%%%%%%%%%




















யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடனக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவி. நடனத்துறை விற்பன்னர் ஏரம்பு செல்லையா, யாழ். இணுவில் வீரமணி ஐயர் ஆகியோரின் மாணவியான இவர், பரதக்கலை பற்றிய மேலறிவினைப் பெறுவதற்காக இந்தியா சென்று வழுவூர் இராமையாப்பிள்ளையிடம் மரபுவழி நடனத்தைக் குருகுல முறையில் கற்றுத் தேறினார். இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நடன வாரிசாகத் திகழ்கின்றார்.


இவர் 1972 இல் கொழும்பில் ஆடற் கலையகத்தை நிறுவி நாட்டிய நிகழ்வுகள், பயிற்சிகள் வழங்கிப் பெரும் கலைத்தொண்டினை ஆற்றி வந்த இவர், தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் (1969), காலந்தோறும் நாட்டியக்கலை, இந்திய நாட்டியத்தின் நாடக மாபு, நாட்டியக் கடலின் புதிய அலைகள் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசின் கலாசார இலாகா, இங்கிலாந்திலுள்ள பிளாக்பூல் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நடனக் கருத்தரங்குகளையும், விரிவுரைகளையும் நடத்தினார். இவர் பல அரங்கேற்றங்களை நெறியாள்கை செய்துள்ளார். இந்தியாவில் உயர்தர நாட்டியத் தாரகைகள் 21 பேரில் இவரும் ஒருவர். அவுஸ்திரேலியத் தமிழ் கூட்டுத்தாபன வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிகின்றார்.


தமிழ்நாடு அரசின் விருது, தஞ்சாவூர் பல்கலைக்கழக விருது, இலங்கை இந்து கலாசார அமைச்சின் நாட்டியக் கலாநிதி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.






தமிழகத்திலே பரதக்கலைக்கு பெரு விருட்சம்போல் விளங்கிவர் பத்மஸ்ரீ வழுவூர் இராமையா பிள்ளை அவர்கள்.

ஆடற்கலையில் சிறந்து விளங்கிய நர்த்தகிகளான கமலா லக்ஷ்மணன் வைஜெந்திமாலா மாலி பத்மா சுப்பிரமணியம் சித்திரா விஸ்வேஸ்வரன் போன்றோரை உருவாக்கியவர் ஸ்ரீ வழுவூர் இராமையா பிள்ளை அவர்களே. சென்னையில் அவர் வீட்டிலேயே தங்கி பரதத்தைக் கற்றுக்கொண்டார் கார்த்திகா .

இவரது 

 குரு நாதருக்கு பத்மஸ்ரீ விருது இந்திய ராஷ்ட்டிரபதியால் வழங்கப்பட்ட பொழுது ராஸ்ட்ரபதி பவனில் நடந்தகலை நிகழ்ச்சியில் பரதம் ஆடுவதற்கு  குரு நாதர் தன்னையே தெரிவு செய்திருந்தார். எனது குருவிற்கு எனது ஆற்றல்மேல் இருந்த நம்பிக்கையை இது காட்டுகிறது.என்று கார்த்திகா ஒரு முறை மன ம் நெகிழ்ந்து கூறியிருக்கிறார் .


அதை அடுத்து 1967 Febuary 17 இல் இவரது  பரத நாட்டியம் பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக்கல்லூரி கட்டிட நிதி திரட்டுவதற்காக நடைபெற்றது. பத்மஸ்ரீ வழுவூர் இராமையா பிள்ளை அவர்கள் சென்னையில் இருந்து வருகை தந்து நடாத்தி வைத்தார். அவரது நட்டுவாங்கத்துடன் கச்சேரி சிறப்பாக நடந்தேறியது.

நிகழ்ச்சியின் பின் பிரமாதமான விமர்சனங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன சிந்தாமணி வார இதழ் 24 02 67 இல் “யோகாவின் விமர்சனம்பின்வருமாறு கூறுகிறது 

கார்த்திகாவின் நாகநிருத்தியத்தில் பிரதிபலித்த ருத்ரபாவமும் சர்ப்பமாக தன் உடலை வளைத்து நளினமாக ஆடியது மனதைவிட்டு அகலாது. கிறஸ்ண ஜயர் கூறியது போன்றே வழுவூராரின் பாணியில் சிலையை வெல்லும் நடன நிலைகளும் சிறப்புப் பயிற்சி மூலமே பெறப்படும்  அங்கக் குழைவும்துவட்சியும் அக்குழைவாலும் துவட்சியாலும் பெறப்படும் எழிலும் நேர்த்தியும் பரதமுனி கூறும் 108 கரணங்களும் ஒழுங்கே இடம்பெறும் அந்த அழகை அன்று கார்த்திகாவின் ஆடலில் கண்டோம். மொத்தத்தில் ஈழத்திலும் ஒரு கமலா லக்ஷ்மணன் உருவாகி விட்டார் என்ற திருப்தியோடு அன்று ரசிகர் சென்றனர் என்று கூறினால் மிகையாகாது.என்று .




பரதக் கலையின் மறுமலர்ச்சிக்குப் பெரும்பங்களிப்புச் செய்த இலங்கையர்களில் மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர் கலாநிதி ஆனந்த குமாரசுவாமி அவர்கள். 1910, 1911 காலகட்டத்தே திருவாரூரில் வாழ்ந்தவரான புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் ஞானம் அம்மையாரிடம் பரதக் கலையின் நுணுக்கங்கள்பற்றி நன்கு கற்றறிந்த இவர் பரதக் கலை தொடர்பில் பல ஆங்கிலக் கட்டுரைகளை எழுதி அதன் சிறப்பினை உலகறியச் செய்தார். 1912ல் இறைவனின் ஐந்தொழிலையும் பிரதிபலிக்கும் சிவநடனத்தை விளக்கி சித்தாந்த தீபிகை எனும் பல தொடர் கட்டுரைகளை எழுதினார்10. நந்திகேஸ்வரரின் அபிநய தர்ப்பணம் எனும் நூலினை துர்க்கிராலா எனும் அறிஞரோடு இணைந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு 1917ல் நியூயோர்க்கில் அதனை வெளியிட்டார். மரபுவழிவந்த பரதக் கலைஞர்களான தேவதாசிகள் சமூக நிலையில் ஒதுக்கப்பட்டமையை கண்டித்து அவர்கள் சமூகத்தில் மிக மதிக்கப்படவேண்டியவர்கள் என வலியுறுத்தி அக்காலகட்டத்தே பத்திரிகைகளில் பல கட்டுரைகளை எழுதினார்.


யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த ஏரம்பு சுப்பையா 1946ல் தமிழகம் சென்று பரத நாட்டியத்தை திருச்செந்தூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடம் முறையாகப் பயின்றதோடு கலாநிதி குரு கோபிநாத் அவர்களிடம் கதகளியையும் நன்கு கற்றவர். சந்திரலேகா, சக்ரதாரி போன்ற திரைப்படங்களில் நடனமாடி புகழ்பெற்றவர். நாடுதிரும்பியதும் நடனக் கலையை வளர்த்தவர். யாழ்ப்பாணத்தில் உயர் குடும்பத்தினர் நடனமாடுதலை வெறுத்த அக்காலத்தே அவர்களது பிள்ளைகளுக்கு நடனத்தைப் போதித்து மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். இலங்கையின் முதல் நடன ஆசிரியராக அரசால் நியமிக்கப்பட்டவர். பல பாடசாலைகளில் பரதக்கலையை போதித்தவர். 1956ல் கொக்குவில் கலாபவனத்தை நிறுவி தொடர்ந்து பரதக்கலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்தவர். தனது புதல்வி சாந்தினியையும் நடனத்துறையில் சிறப்பாக ஈடுபடுத்தியவர்.





கர்நாடக இசைக் கலைஞரும் கவிஞருமான யாழ்ப்பாணம் வீரமணி ஐயர் அவர்கள் இலங்கையின் பரதக் கலையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர். ருக்மணிதேவி அருண்டேல், எம்.டி.ராமநாதன், பாபநாசம் சிவன் ஆகியோரிடம் நாட்டியத்தையும் இசையையும் பயின்றவர். மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியரகவும் பின்னர் கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி ஆசிரியராகவும் இணைந்து இசைநடன வளர்ச்சிப் பணியில் பெரும் பங்களிப்பினை நல்கியவர். இவரால் எழுதப்பட்ட பல கீர்த்தனைகள் பலராலும் போற்றப்படுபவை. தனது இறுதிக்காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இவரால் எழுதப்பட்ட இசைநடன நூல்கள் மிக்க சிறப்பானவையாக பலராலும் கருதப்படுபவை.








நாட்டியக்கலை வளர்ச்சிக்கும் விமர்சனம் வேண்டும் . விமர்சகன் என்போன், கலைஞனும், ரசிகனும் இணையும் கட்டத்தில் தோன்றுபவன். இரசிகனனா வன், தான் சுவைத்த கலையினை விசேட ஆர்வத்துடன் அணுகும் போது, கலையின் பல அம்சங்களையும் தெளிவாகக் காண் பதுடன், அக்கலையாக்கங்களின் சிறப்புகளையும், அவற்றின் ஆக்கியோனுக விளங்கும் கலைஞனின் திறமைகளையும், அவ னின் பிரச்சினைகளையும் புரிந்து கொள்கிறா ன். இதுவே விமர்சகனின் முதற்கட்டமாகின்றது.


 இக்கட்டத்தில், விமர்சகன் கலை பற்றிய சகல தரவுகளையும் கிரகிக்கின் முன். கலையாக்கங்களை கண்டு சுவைப்பதுடன், கலையின் சமூக வரலாற்று மற்றும் பண்பாட்டு ரீதியிலான விசேட குணவியல்புகளை நூல்கள் மூலமும் கலைஞர்களுடன் தொடர்பு கொண்டு பணியாற்றுவதன் மூலமும் இத்தரவு களைச் சேகரித்துக் கொள்கிறான் விமர்சகன்.

விமர்சகன் என்போன், கலைஞனும், இரசிகனும் சந்திக்கும் மட்டத்தில் பிறகின்றான் ,



 மேற்படிப்புப் படிக்கவெண்ணிப் பெண்கள் மேலை நாடுகளுக்குப் போகும் போது ஏன் தன் மனைவி நாட்டியம் பயில இந்தியா செல்லக் கூடாது என்ற தனது கணவரின் பரந்த சிந்தனையின் வெளிப்பாடே தன் திருமணத்துக்குப் பின் நாட்டியக் கலையில் தீவிரமாக இறங்கியதன் பின் புலம் என்கி றார்  கலாநிதி கார்த்திகா கணேசர்.

த ன்னுடைய தாயார் எவ்வளவு அர்ப்பணிப்போடு நாட்டியக் கலைக்காக இயங்கியதைத் தன் தொட்டில் பருவத்தில் இருந்து நேரே கண்டு அனுபவத்ததைச் சுவையான சம்பவங்ளை  நினைவில் கொண்டு 

தினமும் ஒரு தவம் போலத் தான் கற்ற நடனக் கலையைப் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார் அம்மா, அங்கே பார்வையாளராக யாரும் இருக்காத விடத்தும் அவர் தொடர்ந்து ஆடிக் கொண்டே இருப்பார் என்கிறார்  கார்த்திகாவின் மகனான அமிழ்தன் 


புகழ்பெற்ற பரதக்கலைஞர்களின் வரிசையிலே லீலாம்பிகை செல்வராசா, கார்த்திகா கணேசர், கமலா ஜோண்பிள்ளை போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள். கார்த்திகா கணேசர் எழுதிய தமிழர் வளர்த்த ஆடற் கலைகள், காலந்தோறும் நாட்டியக் கலை, இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு, நாட்டியக் கலையில் புதிய மரபு போன்ற நூல்கள் மிக்க சிறப்பு வாய்ந்தவை. திருமதி லீலா செல்வராசா எழுதிய ஆடற்கலை மற்றும் நாட்டிய சாரம் போன்ற நூல்கள் பரதக் கலையின் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்துவன.


தமிழகத்தின் வழுவூர் இராமையாப்பிள்ளை, அடையாறு லக்ஷ்மன், தண்டாயுதபாணி பிள்ளை போன்ற பெரும்புகழ்பெற்ற நாட்டிய ஆசான்களிடமும் சென்னை கலாஷேத்திரா, திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி போன்ற நாட்டியக் கல்வி நிறுவனங்களிலும் பயின்ற நூற்றுக்குமதிகமான தமிழ் சிங்கள நடனக் கலைஞர்களை இன்று இலங்கையில் காணமுடியும்.


1960ல் சு.நடேசபிள்ளை அவர்களால் நிறுவப்பட்ட இராமநாதன் இசைக்கல்லூரி 1975ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு இராமநாதன் நுண்கலைக் கல்லூரி எனப் பெயர்மாற்றம் பெற்றதுடன் நடனத்துறையில் பட்டப்படிப்பினையும் மேற்கொண்டுள்ளது. அதேபோல் கிழக்கில் மட்டக்களப்பில் 1982ல் தொடங்கப்பட்ட விபுலானந்தர் இசைநடனக் கல்லூரி கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் எனும் பெயருடன் நடனத்துறையில் பட்டப்படிப்பினை மேற்கொண்டுள்ளது. இலங்கையிலுள்ள அனேக தமிழ்ப் பாடசாலைகளில் இன்று பரதம் உயர்தர வகுப்புவரை போதிக்கப்படுவதை இதில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டும்.

.

இப்படிப்பட்ட நிலையில் சுருக்கமாக கார்த்திகா கணேசரை சுருக்கமாக தொகுத்துக் கூறினால் ..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



கார்த்திகா கணேசர் அவர்கள் 60களில் தமிழ்நாடு சென்று நாட்டியமேதை வழுவூர் இராமையாபிள்ளை அவர்களிடம் குருகுலவாசம் செய்து பரதநாட்டியம் பயின்றவர். தனது இளம் வயதில் இலங்கையில் நடனம் பயின்றிருந்தாலும் திருமணத்தின் பின்னரே இவர் இந்தியா சென்று  நடனம் பயின்றார். நாட்டியத்தின் மேல் இவர் கொண்ட அதீத ஆர்வத்திற்கு இவருடைய கணவர் திரு. கணேசர் அவர்கள் மிகவும் பக்கபலமாக இருந்துள்ளார். 






இலங்கையில் பல நடன நிகழ்ச்சிகளை வழங்கியுள்ள இவர் கொழும்பில் கார்த்திகா ஆடற் கலையகம் என்ற நாட்டியப் பள்ளியை நிறுவி நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பரதநாட்டியத்தை பயிற்றுவித்துள்ளார். . மாணவிகளுடன் மிக அன்பாகப் பழகுவார். இவருடைய அணுகுமுறை மிக வித்தியாசமாக இருக்கும்.




இவர் 1974ஆம் ஆண்டு தயாரித்த "இராமாயணம்" முழுநீள நாட்டிய நாடகத்தில் குதிரையோட்டம், இராம-இராவண யுத்தம், வானரப் படைகளின் போர் போன்றவற்றிற்கு இலங்கையின் வடமோடி நாட்டுக்கூத்து ஆட்ட வகைகளை இணைத்திருந்தார். ஆனந்தராணி பாலேந்திரா  இதில் இராமராக நடனமாடியிருந்தார்  பேராசிரியர் மௌனகுரு அவர்கள்  இந்தக் கூத்து அடவுகளைப் பழக்கினார்.


அந்தக் காலத்தில் இது புதிய முயற்சியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே நேரத்தில் கண்டனங்களும் எழுந்தன. அவற்றைக் கண்டு தளராது தொடர்ந்து  எல்லாளன்-துட்டகாமினி, கிருஷ்ண லீலா, உதயம் போன்ற பல நாட்டிய நாடகங்களை தயாரித்து மேடையேற்றியுள்ளார். 




காலம் தோறும் நாட்டியக் கலை,  தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், நாட்டியக் கடலில் புதிய அலைகள் இவற்றுள் சில. காலந்தோறும் நாட்டியக் கலை என்னும் நூலுக்கு 1982இல் தமிழக அரசின் முதற் பரிசு கிடைத்தது. மூன்று பதிவுகள் வெளிவந்தன. 

மிகவும் பரந்துபட்ட அறிவு கொண்ட இவர் நாட்டியம் பற்றி மட்டுமல்லாது வேறு பல அறிவுசார்ந்த விடயங்களைப்பற்றியும் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘ஞானம்’ மாத இதழில் இவரது பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

ஒஸ்ரேலியாவில் சிட்னியில் வசித்துவரும் இவர் இப்போதும் நாட்டியம் கற்பித்து வருகிறார். அத்தோடு ஒஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறார்.


இவருக்கு முன்னாள் பல கடமைகள் உண்டு .அதாவது உலக நடனக் கலைஞர்களை ஒருங்கிணைத்து  எம்முடைய கலாசார விழுமியங்களை மேற்கொண்டு செல்வது பற்றி யே ஆகும் 



 எமது முன்னோர்கள் காலாதி காலமாக வளர்த்த கலை எம்மை வந்தடைந்துள்ளது. அதைக் காலத்திற்குக் காலம் கலைஞர்கள் பழமையில் இருந்து புதுமை படைத்த வண்ணமே உள்ளனர். புதுமையைப்படைக்கும் கலைஞர், பழமையின் படிமுறை வளர்ச்சியை அறிந்தவராகவும் இன்றைய சமூக சிந்தனை உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். இவர்களே புதுமை படைக்கும் தகைமை பெற்றவர்கள்.”


அரங்காற்றுகை என்பது பலரதும் உழைப்பில் தங்கியிருப்பது. தன்முனைப்பு அற்றது. இதனை நன்கு புரிந்துகொண்டவர் கார்த்திகா கணேசர்.


இலங்கையில் தமிழ் விழாக்களில் பெரும்பாலும் தமிழ்த்தாய் வாழ்த்தாக ” பாரதியின் வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி” தான் பாடப்படுகிறது. தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் இந்தப் பழக்கம் மரபாகவே தொடருகிறது. நடன அரங்குகளில், அரங்கேற்றங்களில், நாதஸ்வரக்கச்சேரிகளிலும் இசையரங்குகளிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் போட்டிகளிலும் பாரதி நீக்கமற நிறைந்திருக்கிறார்.





பாரதியின் கனவுகளை தான் சார்ந்த நடனத்துறையின் ஊடாக ஆடலில் காண்பிக்கவேண்டும் என்ற நீண்ட நாள் கனவுடன் வாழ்ந்தவர் நடன நர்த்தகி கார்த்திகா கணேசர்.



















கருத்துகள்