யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. அன்னலெட்சுமி இராஜதுரை
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
திருநெல்வேலி செங்குத்தா இந்துக்கல்லூரி, சுன்னாகம் இராமநாதன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பெற்றார். கலைச் செல்வி என்னும் மாத இதழில் கவிதை எழுதியதன் மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தார். இத்துடன் “யாழ். நங்கை” என்ற புனை பெயரில் சிறுகதை எழுத்தாளராகவும் விளங்கினார்.
1962ஆம் ஆண்டு யூன் மாதம் 1ஆம் திகதி வீரகேசரியில் உதவி ஆசிரியராகச் சேர்ந்த திருமதி. அன்னலெட்சுமி இராஜதுரை தமது செய்திக் கடமைகளோடு “மாணவர் கேசரி” என்னும் பக்கத்தையும் கவனித்து வந்தார். 1966ஆம் ஆண்டு வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட “ஜோதி” என்னும் குடும்பவார இதழின் பொறுப்பாசிரியராக கடமைபுரிந்தார். 1973ஆம் ஆண்டிலிருந்து 1984ஆம் ஆண்டுவரை மித்திரன் வாரமலர் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் கடமைபுரிந்தார். இக்காலப்பகுதியில் கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், நேர்முகங்கள், சிறுவர் தொடர்கதைகள், விமர்சனங்கள், மொழி பெயர்ப்புக் கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை மித்திரன் வாரமலர், வீரகேசரி நாளிதழ், ஞாயிறு இதழ் ஆகியவற்றில் எழுதிவந்தார். 1984ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டுவரை வீரகேசரி நாளிதழுடன் இணைந்து செய்திப் பகுதியில் கடமையாற்றியதுடன் மகளிர் பகுதி, இலக்கியப்பகுதி போன்ற விசேட பக்கங்களுக்கும், நாளிதழின் சிறப்பு மலர்களுக்கும் பொறுப்பாக இருந்து கடமையாற்றினார்.
2000ஆம் ஆண்டிலிருந்து மங்கையர் கேசரி, கலைக்கேசரி ஆகிய வார அனுபந்தங்களின் பொறுப்பாசிரியராக செயற்பட்டார். அதன்பின் வீரகேசரியின் ‘சங்கமம்’ வார அனுபந்தத்தின் பொறுப்பாசிரியராகவும் இருந்து வருகிறார். 2010ஆம் ஆண்டிலிருந்து கலைக்கேசரி மாத சஞ்சிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றினார்
நெருப்பு வெளிச்சம் (சிறுகதைத் தொகுதி) உள்ளத்தின் கதவுகள் (நாவல்), விழிச்சுடர் (குறுநாவல்) இருபக்கங்கள் (கவிதைத் தொகுதி) என்பன இவரது படைப்புக்களாகும். சமீபத்தில் தமது பத்திரிகைத்துறையின் 50 ஆண்டுகால அனுபவங்களின் ஒரு தொகுப்பாக “நினைவுப் பெருவெளி” என்னும் நூலை இவர் எழுதி வீரகேசரி வெளியீடாக வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
மணிலா, பீஜிங் நகரங்களில் நடைபெற்ற மாநாடுகளில் கலந்துகொண்ட அனுபவங்களை வீரகேசரி வார வெளியீட்டில் தொடராகப் பல வாரங்கள் எழுதியுள்ளார். 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு கோயம்புத்தூரில் நடைபெற்ற உலக செம்மொழி மாநாட்டில் இவர் பார்வையாளராகக் கலந்து கொண்டு வீரகேசரியில் தொடர்கட்டுரைகளை எழுதியமையும் குறிப்பிடத்தக்கது.
வரது மகத்தான பணிகளைப் பாராட்டி இந்து கலாசார அமைச்சு 1992ஆம் ஆண்டு “தமிழ் மணி” விருது வழங்கிக் கெளரவித்தது. சிறந்த பத்திரிகையாளருக்கான விருதை 1992ஆம் ஆண்டு எஸ்மண்ட் விக்கிரமசிங்க அறக்கட்டளை, அன்றைய ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க மூலம் இவருக்கு வழங்கிக் கெளரவித்தது.
கொழும்பு தமிழ் இளைஞர் கலாசார கூட்டமைப்பு, தென்கிழக்கு ஆய்வு மையம், கொழும்பு கலைச் சங்கம், கொழுந்து சஞ்சிகை, கொழும்பு றோற்றரி (ஞிoஹீary விlub) கிளப் என்பனவும் இவரது பணிகளைப் பாராட்டிக் கெளரவித்துள்ளன.
மல்லிகை சஞ்சிகை அட்டையில் இவரது படத்தைப் பிரசுரித்து இலக்கிய வரலாற்றில் பெருமை சேர்த் துள்ளது.
2003ஆம் ஆண்டு இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கம் சிறந்த பத்திரி கையாளர்க ளுக்கான விரு தை யும், தங்கப் பதக்கத்தையும் வழங்கிக் கெளரவித்தது. 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் விருது வழங்கிக் கெளரவித்தது. எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு மையம் 2011ஆம் ஆண்டுக்கான தமிழியல் விருதுகளையும் மற்றும் ‘கொடகே வாழ்நாள் சாதனையாளர்’ விருதுகளையும் அண்மையிலே வழங்கிக் கெளரவித்தது.
விழிச்சுடர் (குறுநாவல்)
உள்ளத்தின் கதவுகள் (புதினம்)
நெருப்பு வெளிச்சம் (சிறுகதைத் தொகுப்பு)
இருபக்கங்கள் (கவிதைத் தொகுப்பு)
நினைவுப் பெருவெளி
என்கிற நூல்களை எழுதி வெளியிட்டார் .
அந்தக் காலம் முதல் இன்றுவரை எழுத்துத்துறையில் குறமகள், யாழ்நங்கை - அன்னலட்சுமி இராஜதுரை, புதுமைப்பிரியை - பத்மா சோமகாந்தன், ந. பாலேஸ்வரி, சிதம்பரபத்தினி, குந்தவை - சடாட்சரதேவி, பவானி ஆழ்வாப்பிள்ளை, ரூபராணி யோசேப், இராஜம் புஸ்பவனம், தமிழ்ப்பிரியா, யோகா பாலச்சந்திரன், அருண் விஜயராணி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், மண்டைதீவு கலைச்செல்வி, கோகிலா மகேந்திரன், சௌமினி, மண்டூர் அசோகா, சிவமலர் செல்லத்துரை, தாமரைச்செல்வி, ஆதிலட்சுமி இராசதுரை, நயிமா சித்திக், சந்திரா தியாகராசா, சந்திரா தனபாலசிங்கம், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், சிவயோகமலர் ஜெயக்குமார், ஆனந்தி, கவிதா, கெக்கிராவ ஸகானா, ராணி சீதரன் ஆகியோருட்படப் பல பெண் எழுத்தாளர்களை அறிந்திருக்கிறேன்.
அவர்களில் ஒரு மூத்த பெண் படைப்பாளி பத்திரிகைத்துறையில் 48 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து பணியாற்றி வருவது உண்மையில் மெச்சத்தக்க சாதனையாகும். ஆமாம்... அவர் தான் யாழ்நங்கை என்ற பெயரில் அன்றுதொட்டுப் பல படைப்புகளைத்தரும் மூத்த பெண் படைப்பாளி அன்னலட்சுமி இராஜதுரை.
வானொலி நாடகம், உரைச்சித்திரம், வானொலி மகளிர் நிகழ்ச்சி முதலியவற்றையும் எழுதித் தயாரித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு சிறப்பிப்பவர். சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல், விமர்சனம் என பல துறைகளிலும் தடம் பதித்தவர்.
திருமதி. அன்னலெட்சுமி இராஜதுரை இந்நாட்டில் ஒரு தலைசிறந்த பத்திரிகையாளரும், எழுத்தாளரும், பேச்சாளரும் மட்டுமன்றி மனித நேயம் மிக்க ஒரு பெண்மணியாகவும் நம் மத்தியில் வாழ்ந்து வருகிறார்.
இன்று எத்தனையோ இளம்பெண்கள் சிறந்த படைப்பாளிகளாக, பத்திரிகையாளர்களாக விளங்குகிறார்கள். சர்ச்சைக்குரிய விடயங்களையும் துணிச்சலோடு எழுதுகிறார்கள். பெண்ணியம் பேசுகிறார்கள். ஆனால் அன்று ஒரு இளம்பெண் படைப்பாளியாக விளங்கியதோடு, துணிச்சலோடு பத்திரிகைத்துறையைத் தானாக விரும்பி ஏற்றுக்கொண்டு பணிபுரிய முன்வந்தமை முற்போக்கானதும் பாராட்டுக்குரியதுமாகும்.
1959 -ம் ஆண்டு 'கலைச்செல்வி" சஞ்சிகை இவரை இளம் எழுத்தாளர் என அறிமுகப்படுத்தியது. 1962-ம் ஆண்டு முதல் வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் உதவி ஆசிரியராகப் பணியை ஆரம்பித்தார். பத்திரிகைத்துறை, ஆங்கிலம் ஆகியவற்றில் டிப்ளோமா தேர்ச்சிச் சான்றிதழ்கள் பெற்றுக்கொண்டவர். ஓவியத்துறையிலும் ஆசிரியர் தரரதரப் பத்திரம் பெற்றுக்கொண்டபெண் இவர் .
சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல், விமர்சனம் என எழுத்துத்துறையில் தடம்பதித்தார். கலைச்செல்வி, சிரித்திரன், வீரகேசரி மற்றும் சஞ்சிகைகளிலும் தொடர்ந்து எழுதிவந்தார். இலங்கை வானொலியில் மகளிர் நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்தார். அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு சிறப்பித்தா ர்.
நெருப்பு வெளிச்சம் (சிறுகதைத் தொகுதி), உள்ளத்தின் கதவுகள் (நாவல்), விழிச்சுடர் (குறுநாவல்) இருபக்கங்கள் (கவிதைத் தொகுதி) என்பன இவரது படைப்புகளாகும்.
மணிலா, பீஜிங் நகரங்களில் நடைபெற்ற மாநாடுகளில் கலந்துகொண்ட அனுபவங்களை வீரகேசரி வாரவெளியீட்டில் தொடராகப் பல வாரங்கள் எழுதிப் பாராட்டுப் பெற்றார்.
இவரது பணிகளைப் பாராட்டி இந்துக் கலாசார அமைச்சு 1992 -ம் ஆண்டு 'தமிழ்மணி" விருது வழங்கிக் கௌரவித்தது.
சிறந்த பெண் படைப்பாளியாகப், பத்திரிகையாளராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்து சாதனை படைத்துவரும், பெண்ணினத்துக்குப் பெருமை சேர்க்கும் அன்னலட்சுமி இராஜதுரைஅவர்களை நினைவு மீட்டுவதில் பெருமை கொள்கிறேன்
கருத்துகள்
கருத்துரையிடுக