இராவனபூமி என்கிற பெயரிட்டு தொடரை தருகிறேன்
உங்களைப் பற்றி அறிந்து கொள்ள மறக்காமல் வாசியுங்கள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நித்திலத்தீவென்று வித்தகரால் போற்றிப்புகழ்ந்த இலங்கை என்ற ஈழவள நாட்டிலே முத்தமிழ்காத்த முடி மன்னரின் கொடிபறக்கவும், குடை சிறக்கவும், கொற்றந்தழைக்கவும் வித்திட்ட பெருமை படைவீரர்களான மறவர்குலப் பெருங்குடிமக்களையே முதற்கண் சாரும்.வடஈழத்திலே, குறிப்பாகத் தீவகத்திலே குடிபதி களாக வாழ்ந்த மறவர்குலத்தவர்கள்.இவர்கள்“நெடுந்தீவு சஞ்சுவான் கோயில் கிறீஸ்தவர்கள் தமிழ் மன்னர் காலத்தில் போர் வீரர்களாக நெடுந் தீவில் இறக்கப்பட்டவர்களென்றும், இவர்கள் மறவர் குலத்தைச் சேர்ந்தவர்களென்றும்மற்றப்படி உள்ளபடியே இவர்கள் மேன்குல மக்களென்றும்”அறிய முடிகிண்றது.
பண்டைக்காலத் தமிழர் காலத்தில் மாதோட்டம் மிகச் சிறந்த செல்வ நாடாய்த் திகழ்ந்தது. ரோமர், கிரேக்கர் முதலானோர் தம்மரக்கல்களோடு இங்கு வந்து, தந்தம் முத்து, தோகை, இலவங்கம், முதலாம் விலையுயர்ந்த திரவியங்கள் ஏற்றிச் சென்றிருக்கின்றனர்.
மாதோட்டத்தை ஆண்ட சிற்றரசர்களோடு பலமுறை சோழரும், பாண்டியரும் போர் பொருதியுள்ளனர். சிலகாலம் சோழரும் பாண்டியரும் மாதோட்டத்தை வென்று இங்கு ஆணையுஞ் செலுத்தியுள்ளார் கள். 9.பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் வடபாகம் சோழ மண்டலத்தின் ஒரு பகுதியாயிற்று. கி.பி.1012 இல் முழு இலங்கையும் சோழமண்டலத்துக்குச் சேர்ந்தது. யாழ்ப்பாண இராச்சியத்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த சிங்கை நகர் (வல்லிபுரம்) அரசர்கள் சோழப் பிரதானிகளாயினர். சோழர்கள் எண்ணிறந்த சைவக் கோவில்களைப் புதிதாக அமைத்ததுடன், பழைய சைவாலயங்களையும் புதுப்பித்தனர். நூற்றிருபத்தாறு நீண்ட ஆண்டுகள் தொடர்ச்சியாகச் சோழராட்சி இலங்கையில் நிலவிய காலத்தில் நயினாதீவில் இருந்த பழம்பெருமை வாய்ந்த நயினார்கோவிலும் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டது
பிற்கால சோழர்களில் பராந்தக சோழன் ,முதலாம் ராஜ ராஜன்,ராஜேந்திர சோழன் தொடங்கி பிற்க்கால சோழர்கள் பல முறை இலங்கை மீது படையெடுத்துள்ளனர்.இதன் மூலம் தான் மறவர்கள் இலங்கைக்கு படைவீரரய் வந்துள்ளனர் . இவர்களின் படையெழுச்சிக் காலத்தில் மறவர்களே சேனா வீரர்களாகக் கடமையாற்றினர். போர் முடிந்த பிற்பாடு ஒரு சில போர்வீரர்கள் தம் தாயகந் திரும்பாமல் மாதோட்டத்திலே தங்கினர்.இது 12-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கூறுகின்றது.அந்த காலக்கட்டத்தில் சோழ அதிகாரிகளின் பெயர்களிலே இவர்கள் பணியாற்றியமைக்காக கல்வெட்டு ஆவனங்கள் உறுதி செய்கின்றனர்.மறவர்களுடன் வெள்ளாள மக்களும் இங்கு குடியேற்றப்பட்டுள்ளனர்.இவர்கள் இங்கு காடுகளை அழித்து கழனியாக்கவும் நில அளவைகனக்கர்களாக பணியாற்றவும் தருவிக்கபட்டனர்.இது 12-ஆம் நூற்றாண்டு மாதோட்டத்தில் உள்ள சோழ கல்வெட்டு உறுதி செய்கிறது.
ஆதாரம்
1848 - P. 73. யாழ்ப்பாணச் சரித்திரம் பக். 3 (ஆ. முத்துத்தம்பி)
“தென்னாடு முத்துடைத்து” என ஒளவையாரால் புகழ்ந்து பாடப் பெற்ற நாடே பாண்டி நாடாகும். பாண்டிய மன்னர்க்குரிய செல்வங்களுள் முத்தே பிரதானமானது. முத்தாரமார்பனாய் பாண்டிய மன்னன் விளங்கினானென்று சிலப்பதிகாரம் கூறுகிறது. பாண்டி நாட்டின் கடல்படுதிரவியமான முத்துச் சிறப்பு தெளிவாகிறது.
dதமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும் பக். 9 (வண. ளு. ஞானப்பிரகாசர்) அலையும் கலையும் (டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை)
கி.மு ஆறாம் நூற்றாண்டில் சிங்கள மன்னனான விஜயன் பாண்டியன் புத்திரியை மனந்து இலங்கைக்கு வரும்போது, பாண்டி நாட்டிலிருந்து எழுநூறு மேன்குலச் சீடமாட்டிகளோடும், பதினெட்டுவரிசையான பரிவாரங்கனோடும், ஐந்து வரிசையான ஏவலர்களோடும் வந்துள்ளதாக மகாவம்சம் கூறுகிறது. uமதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் நூற்றுப்பதினாறு பேர்களாவர். இந்நூற் றுப்பதினாறு மன்னர்களும் மொத்தம் 1740 ஆண்டுகள் ஆணை செலுத்தியுள்ளார்கள். ^ஈழ நாட்டுடனும் பாண்டிய மன்னர்கள் பலமுறை போர் பொருதி வெற்றிவாகை சூடினர். ஆனால் இவர்களின் ஆளுகை வெகு காலம் நீடிக்கவில்லை. எனினும் முதலாம் புவனேகபாகு என்னும் சிங்கள அரசன் காலத்தில் பாண்டி இராச்சியத்தை ஆண்ட ஐவர் சகோதரரும், பெரும் வலிமைபடைத்த தமது மந்திரியை ஒரு பெருஞ்சேனையுடன் இலங்கைக்கனுப்பி நாடுநகர்களையும், கோட்டை கொத்தளங்களையும் பாழாக்கிப் புத்தருடைய தந்ததாதுவையும் மற்றும் செல்வங்களையும் கொள்ளையடித்துப் பாண்டி நாட்டுக்கு மீண்டு குலசேகர மன்னனுக்கு தந்ததாதுவை அளித்தனா.; (மகாவம்சம்) தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும் (வண. ளு. ஞானப்பிரகாசர்) ^யாழ்ப்பாண வைபவவிமர்சனம் (வண. ளு. ஞானப்பிரகாசர்) சடாவர்மன் முதலாம் சுந்தரபாண்டியன் (1251-1280) இலங்கை அரசனிடம் யானைத் திறை பெற்றுள்ளதாகவும் சிதம்பரக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. அக்கல்வெட்டுவருமாறு.
இச் சுந்தர பாண்டியன் ஈழத்து வேந்தனொருவன் திறை கொடுக்காதொழிந்த காரணத்தால் காலில் சங்கிலிபூட்டி வருத்தியதாகவும், சடவர்மன் இரண்டாம் வீரபாண்டியனும் இவ்வண்ணமே இலங்கையரசர்களிலிருவருள் ஒருவனைக் கொண்று அவனுடைய சேனை இரதம், சிங்காசனம், முடி முதலான சகல பொக்கிஷங்களையும் கைப்பற்றி, கோணமலையிலும், திரிகூடகிரி மலையிலும் பாண்டிய துவசங்களை நாட்டி, மற்ற அரசனிடம் யானைத்திறை கொண்டதாகவும் சாசனங்கள் கூறுகின்றன.
ஆதாரம் (1254-1257) uயாழ்ப்பாண வைபவவிமர்சனம் (வண. ளு. ஞானப்பிரகாசர்).
இந்த காலக்கட்டத்தில் இராமநாதபுரம் ஆண்ட சேதுபதியும்,யாழ்பானத்தை ஆண்ட ஆரிய சக்கரவர்த்தி என்ற குணவீராஆரியசிங்கணும் பாண்டியருக்கு குறுநிலை மன்னனாக பணியாற்றிமைக்கு சாண்றாக மாறவர்மன் குலசேகர பாண்டியன்(1268-1330) இராமநாதபுரம் கல்வெட்டுகளில் யாழ்பானத்தை ஆண்ட குணவீரசிங்கனின் பெயரும் சேதுபதிகளின் பெயரும் கானப்படுகின்றனர்.
வீரஞ் செறிந்த மறக்குடி மக்கள் இலங்கையிலும் பூர்வகாலந் தொட்டு நிலத்தரசர்களாய், குடிபதிகளாய் வாழ்ந்துள்ளனர். இவர்கள் பாண்டிய மன்னர்களுக்குப் போர்ப்பணி புரிந்தவர்கள் மாத்திரமல்ல, இம்மன்னர்களின் முத்துக் குளிப்புத் துறைகளுக்கும் காவலாளிகளாகவும் கடமை செய்துள்ளார். பாண்டியர்களின் தொடர்பு விஜயன் காலத்திற்கு முன்பிருந்தே இலங்கைக்கேற்பட்டுள்ளதென முன் அத்தியாயத்தில் கூறியுள்ளோம். மாதோட்டத்தில் ஆணைசெலுத்திய தமிழ் சிற்றரசர்கள் பாண்டியருக்கும் சோழருக்கும் திறை செலுத்தியும் வந்துள்ளார்கள். சிலகாலம் சோழரும் பாண்டியரும் நேரடியாகவும் மாதோட்டத்தை ஆண்டுமுள்ளனர்.
விஜயன் இலங்கை அரசனான பிற்பாடும் பாண்டியரும் பலமுறை படையெடுத்து இலங்கையைக் கைப்பற்றினர். இவர்களின் படையெழுச்சிக் காலத்தில் மறவர்களே சேனா வீரர்களாகக் கடமையாற்றினர். போர் முடிந்த பிற்பாடு ஒரு சில போர்வீரர்கள் தம் தாயகந் திரும்பாமல் யாழ்ப்பாணத்திலே தங்குவதற்கு விருப்பங் கொண்டனர். வேறுசிலர் வெற்றியீட் டிய சந்தோஷத்திற்காக மன்னர்களிடம் சன்மானமாக நிலங்களைப் பெற்றுங் குடிபுகுந்தனர். இன்னும் சில மறவர்களை யாழ்ப்பாண மன்னர்கள் தமக்குச் சேவகம் புரிவதற்காக இந்தியாவிலிருந்து நேரடியாகத் தருவித்துமுள்ளனர்.
யாழ்ப்பாண குணவீரசிங்கையாரியச் சக்கரவர்த்தி மதுரையரசனுக்குப் படைத்துணை யனுப்பிய சந்தோஷத்திற்காகப் பெருந்தொகைத் திரவியமும் கன்னடர் சிலரையும், சிவிகையார் சிலரையும், வில்லியர் சிலரையும் வேடர் சிலரையும் இத்துடன் மறவர் சிலரையும் அனுப்பிவைத்தாகவும், மறவரை மறவழன்புலவிலிருத்தினரெனவும் யாழ்ப்பாணச் சரித்திரங் கூறுகிறது.
சோழ, பாண்டிய அரசர்களும், அவர்களுக்குப் பின்பு சேது நாட்டு (இராமநாதபுரம்) அரசர்களும், பின் யாழ்ப்பாண அரசர்களும் முத்துக்குளித்தல், சங்கு குளித்தல் போன்ற தொழில்களை ஊக்குவித்து வந்தனர்.
இதன் பின்பு பாண்டியர் வீழ்ச்சியுற்ற காலக்கட்டத்தில் சிங்கை ஆரியன் பாண்டியன் மீதும் சேதுபதிகளின் மீதும் படையெடுத்து இருவரையும் வீழ்த்தி மதுரை பிடித்து பின்பு சேதுபதியையும் வீழ்த்தி "சேதுக்காவலன்" என்ற சிறப்பு பட்டம் சூடினான்.இதன் பிண்புகுணவீரசிங்கை ஆரியன் காலத்தில் இராமேஸ்வரக் கற்பக்கிரகத்தைக் கட்டுவதற்கு திரிகோணமலையிலிருந்து கொண்டவரப்பட்ட கற்களும் நெடுந்தீவு மார்க்கமாகவே கொண்டு செல்லப்பட்டது.குணவீரசிங்கை ஆரியன் காலத்தில் இராமேஸ்வரக் கற்பக்கிரகத்தைக் கட்டுவதற்கு திரிகோணமலையிலிருந்து கொண்டவரப்பட்ட கற்களும் நெடுந்தீவு மார்க்கமாகவே கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்பு சேதுக்காவலன் என்ற பெயரில் நந்தி ருபமும் கொண்ட நானயங்களை வெளியிட்டாண்.இதன் பின்பு சேதுபதி காத்த தேவரை விடுவித்து நாட்டை திரும்ப ஒப்படைத்தான் இவரது சேதுக்காவலன் நானயத்தில் ஒரு நந்தி,சங்கு,லிங்கம் காணப்படும்.காலம் 14-ஆம் நூற்றாண்டு.
இதன் பின்பு சேதுபதிகளும் தன் காலக்கட்டத்தில் சேதுக்காவலன் என்று வெளியிட்ட நாணயங்கள் காணப்படுகின்றன அவை இளம்பிறை(வளரி),கயல்மீன்,புலி கொண்ட நாணய அமைப்பை காணலாம்.காலம் 14-ஆம் நூற்றாண்டு. இந்த நானயம் புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே கண்டு பிடிக்க பட்டுள்ளது.பிற்கால சேதுபதிகள் நானயத்தில் கருட,அனுமன்,வளரி அமைப்பில் காணப்படும்.சேதுபதிகளுக்கும் யாழ்பாண அரசனுக்கும் சேதுக்காவலன் என்ற பட்டம் உண்டு இருவரும் வர்த்தக ரீதியாகவும் முத்துகுளித்தல் தொழில்கள் இரு ராஜ்ஜியத்திற்கும் பொதுவாக நடைப்பெற்றன.இருவரும் பாண்டியர் காலத்தில் செல்வாக்கு மிகுந்த சிற்றரசுகளாக திகழ்ந்ததாக யாழ்பாண் சரித்திரமும் இலங்கை வரலாறும் கூறுகின்றது. சேதுபதிகளின் நாணயங்கள் தமிழ்நாட்டிலும் யாழ்பாண அரசன்னின் நானயங்கள் இலங்கையிலும் கண்டெடுக்கபட்டு இன்று தொல்லில்யல் துறையில் உள்ளது.
சங்கிலி அரசன் காலத்தில் இராமநாதபுரத்திலிருந்து வந்த மறவர்கள் ஆதியில் மறவன் புலத்தில் குடியேறி, பின்பு பன்றியந்தாழ்வில் போய் தங்கியிருந்ததாகவும் யாழ்ப்பாண வைபமாலை கூறுகிறது.
இன்னும் “1048ம் ஆண்டு நல்லூரை ஆண்ட கூழங்கைச் சிங்கை ஆரியனுக்கு மறவர்களே படைவீரர்களாக இருந்தனர். இவர்களும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டவர் களேயாவர் இவர்கள் மறவகுலச் சத்திரியராவர். போரில்லாக்காலங்களில் கமஞ்செய்வதே இவர்களின் பிரதான தொழில். இவர்களின் குலரப்பெயர்களை அடிப்படையாகக்கொண்டே மறவராட்சியென அழைக்கப்பட்டு, மராட்சியெனத்திரிந்து, பின் வடமராட்சி, தென்மராட்சியென வழங்கப்படுவதாயிற்று. இவர்கள் வழிபடும் தெய்வம் ஐயை அல்லது துர்க்கை. சண்டைக்குத் தலைமைபூண்ட இப்பெண்தெய்வத்தையே மறவர் மாத்திரமன்றி தமிழ் அரசர்களும் வணங்கி வந்தனர். இதன் காரணமாகவே நல்லூரரசன் வீரமாகாளியம்மை கோயிலைத் தன் இராசதானியில் கட்டுவித்து வணங்கி வந்தான். மறவர் குடியேறிய பாகங்களிலெல்லாம் துர்க்கை கோவில்கள் ஸ்தாபிதமாயின. பருத்தித் துறை சாமுண்டியம்மை, வல்வை முத்துமாரியம்மை, இடைக்காடு மாதகல், அராலி, நயினாதீவு, நெடுந்தீவு முதலிய இடங்களிலுள்ள அம்மன் கோயில்களெல்லாம் இந்நோக்கமாகவே உண்டாயின.”
இவ்வித ஏதுக்களைக் அடிப்படையாகக் கொண்டு மறவர்கள் யாழ்ப்பாணத்தில் பலபாகங்களிலும் குடியேறியுள்ளது நிச்சயமென்பதை முடிவுகட்டலாம். இவர்கள் குடியேறிய ஒரு சிலஇடங்களில் தற்போது இக்குலத்தவர்கள் இல்லாவிடினும் இவர்களின் குலப்பெயர் களைக் கொண்ட கிரமங்களான மறவன்புலம், மறவன்காடு, மறவனோடை, மறவன்பிட்டி இன்றும் இருப்பதை நாம் அறியலாம்.
இவர்களின் குடியேற்றம் மாதோட்டத்திலுமுண்டு. மாதோட்டப் பகுதியில் மறவர்களின் நாமத்தோடு அநேகம் காணிகளும், கிராமங்களும் இருக்கின்றன. அடம்பனுக்கருகில் மறத்திகன்னாட்டி என்னும் ஓர் கிராமம் இருப்பதையும், அங்கு ஏராள மான மறவர்கள் இன்றும் நிலத்தரசர்களாயிருந்து வருவது இதற்கோர் எடுத்துக்காட்டாகும். பூநகரியிலும் இக்குலத்தவர்கள் சீவிக்கின்றார்கள்.
மறவர்கள் உயர்வான சத்திரியகுலத்தவர்களான படியால் மேன் குடிமக்கள் எவ்வித அச்ச ஆசவமின்றி சம்பந்தம் செய்ததினால் காலகதியில் இவர்களின் குலம் கருகிப் போயிருக்கலாமெனவும் யூகிக்க இடமுண்டு.
மாதோட்டத்திலும், யாழ்ப்பாணப் பகுதியிலும் மறவர்களின் நாமங்களைக் கொண்ட காணிகள், தோட்டங்கள், வயல்கள் விளங்குமாப்போன்று நெடுந்தீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நயினாதீவு, லைடன்தீவு முதலாந் தீவுகளிலும் பலபல இடங்கள் செறிந்து விளங்குவதினால் இங்கும் இவர்களின் குடியேற்றம் இருந்திருப்பது உண்மையேயாகும். அதிலும் விசேஷமாக நெடுந்தீவில் இவர்கள் நிச்சயம் குடிபுகுந்திருப்பதற்குப் பலபல காரணங்களுமுண்டு.
நெடுந்தீவு இந்தியாவுக்கு வெகு சமீபமாயிருப்பதாலும், அதிலும் பாண்டி நாட்டின் கிராமங்களான, இராமநாதபுரம், திருநெல்வேலி, தஞ்சாவூர், கோடிக்கரை, தனுஷ்கோடி, அக்காமடம், தங்கச்சிமடம், வல்லை முதலான கிராமங்கள் இருபது மைல் தூர வித்தியாசத்திலே அமைந்துள்ளதாலும், வல்வை ஓர் பிரசித்தம் வாய்ந்த கடற்றுறையாக விளங்கியதினாலும், வல்லையிலும் மேற்கூறிய கிராமங்களிலும் பெருந்தொகையான மறவர்கள் வாழ்ந்தமையாலும், மறவர்கள் வெகு இலகுவாக நெடுந்தீவில் வந்து தங்குவதற்கும், குடிபதியாய் வாழ்வதற்கும், வாய்ப்பிருக்கிறது. மேலே சுட்டிக்காட்டிய ஒரு சில சரித்திரக்குறிப்புக்களும், கட்டுரைகளும் நெடுந்தீவில் மறவர்கள் வாழ்ந்தனர் என்ற உண்மையையும் இந்தீவின் பண்டைக்காலப் பெருமையையும் தெளிவாக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக