ஊருக்கும் கிராமத்துக்கும் பலர் விளக்கம் தெரியாமல்
கட்டுரைகள் எழுத்து கிறார்கள்
அதனால் உண்மையை உரக்க சொல்வோம்
சராசரிக் குடிமக்கள் வசித்த வாழ்விடம் ஊர் என்று அழைக்கப்பட்டது.
பிராமணர்கள் வசித்த வாழ்விடத்திற்கு கிராமம் என்று பெயர்.
இதனால் இணுவில் கிராமம் ஆனது
கோண்டாவில் ஊர் ஆனது
%%%%%%%%%%%%%%%
போர் இல்லாத இடமே இல்லை. காட்டிலே விலங்கொடு விலங்கு போராடுகின்றது. எளிய விலங்கை வலிய விலங்கு கொல்லுகின்றது. நீரிலே மீனோடு மீன் போராடுகின்றது. சிறிய மீன் பெரிய மீனுக்கு இரையாகின்றது. நாட்டிலே அரசும் அரசும் போராடுகின்றன; எளியவர் நாட்டை வலியவர் கவர்ந்து ஆளுகின்றனர். படை வலிமையுடைய நாடே சிறந்த நாடாக இன்று மதிக்கப்படுகின்றது.
முற்காலத்தில் தமிழ்நாட்டில் மலிந்திருந்தார்கள். அன்னார்,
"உச்சி மீது வான் இடிந்து
வீழு கின்ற போதினும்
அச்ச மில்லை அச்ச மில்லை
அக்ச மென்ப தில்லையே"
என்று பாடிக்கொண்டு போர்க்களம் செல்லும் பான்மையாளர். ஆண்களும் பெண்களும் வீரம் வாய்ந்து விளங்கினார்கள். இத் தகைய மறக்குடியில் தோன்றினாள், ஒரு மங்கை; தன் மனப்பான்மைக்கேற்ற வீரன் ஒருவனை மணந்து ஒரு வீரக்குழந்தையைப் பெற்றாள். அவள் தமையனும் ஒரு தீரன். இவர்கள் ஒரு குடும்பமாக இன்புற்று வாழ்ந்து வருகையில் நாட்டிலே பெரும் போர் மூண்டது. போர் முழக்கம் கேட்டபோது அம் மங்கையின் தமையன் போர்க்கோலம் பூண்டு அமர்க்களம் போந்தான்; கண்டோர் வியக்கக் கடும்போர் புரிந்தான்; மாலைப் பொழுதில் மார்பிலே அடிபட்டு இறந்தான். மறுநாட்காலையில் போர்ப்பறை மீண்டும் வீரரைப் போருக்கு அழைத்தது. உடனே, அம் மங்கையின் கணவன் போருக்குக் கிளம்பினான்; அமர்க்களம் புகுந்து அரும்போர் புரிந்தான்; செருக் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ்கொண்டான். பொழுது விடிந்தது. மறுபடியும் போர்ப்பறை முழங்கிற்று. மங்கை எழுந்தாள்; தன் குழந்தையை அழைத்தாள்; அவன் தலையில் எண்ணெய் தடவிச் சீவினாள்; வெளுத்து வைத்திருந்த ஆடையை விரித்து உடுத்தினாள்; வேலாயுதத்தைக் கையிலே கொடுத்து இளம் பாலனைப் போர்க்களத்திற்கு அனுப்பினாள். முதல் நாள் தமையன் இறந்தான் என்றும் தளராது , மறுநாள் கணவன் இறந்தான் என்றும் கலங்காது, தன் குடும்பத்திற்கு ஒரு மைந்தனே உள்ளான் என்றும் உணராது, இளம்பாலனைப் போருக்கு அனுப்பிய பெண்மணியின் வீரத்தை மாசாத்தியார் என்னும் பெண் புலவர் பாராட்டிப் பாடியுள்ளார்.
மற்றொரு வீரத்தாய் போர்க்களத்தில் தன் மகன் பகைவர்க்குப் புறங்காட்டி ஓடினான் என்று கேள்வியுற்றாள்; பொங்கி எழுந்தாள்; கொடிய வாளைக் கையிலே எடுத்தாள்; "என் மகன் போர்க் களத்தில் புறங்காட்டி ஓடினான் என்பது உண்மை யானால், அப் பேடிக்குப் பாலூட்டிய மார்பை இவ் வாளால் அறுப்பேன்" என்று வஞ்சினம் கூறிப் போர்க் களம் புகுந்தாள்; அங்கே பிணங்களிடையே நடந்து . சென்று தன் மகனது உடலைக் கண்டாள்; முகத்திலும் மார்பிலும் அடியுண்டு சிதைந்து கிடந்த அவ்வுடலைக் கண்ட நிலையில் அவனைப் பெற்றபோது அடைந்த இன்பத்தினும் பெரியதோர் இன்பம் உற்றாள்.
இனி, மற்றொரு போர்க்களத்தைக் காண்போம். கலிங்கம் என்னும் நாட்டின் மீது கருணாகரத் தொண்டைமான் படையெடுத்தான். ஆண்மை நிறைந்த வீரர்கள் அணியணியாகத் திரண்டு எழுந்தார்கள். போர்ப்பறை கேட்டுப் பொங்கி எழுந்த வீரன் ஒருவன், போர்க்கோலம் புனைந்து, தன் காதல் மனையாளிடம் விடை பெறச் சென்றான். வீரக்கோலத்தில் தன் கணவனைக் கண்ட மங்கை அவ் வழகைக் கண்ணால் பருகிக் களிப்புற்றாள்; தலைவனது பரந்த மார்பினைப் பார்த்தாள், நிமிர்ந்த தோள்களை நோக்கினாள்; அத் தோளில் அமைந்த வாளின் ஒளியைக் கண்டாள்; அளவிறந்த இன்பமும் பெருமையும் அடைந்து வீரக் கணவனுக்கு விடை கொடுத்து அனுப்பினாள்.
போர்க்களம் போந்த காதலன் மாற்றாரை வென்று விரைவில் வருவான் என்று அவன் சென்ற வழிமேல் விழிவைத்துக் காதலி காத்திருந்தாள். வீரன் மீண்டு வருவதாகக் குறித்திருந்த நாளில் வரவில்லை. மேல் ஒரு நாள் சென்றது. சில நாள் சென்றன. மனத்துயரம் பொறுக்கமாட்டாத மங்கை போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டாள். அங்கே கால்மாடு தலைமாடாக வீரர்கள் சாய்ந்து கிடந்தார்கள். அவர் உடம்பினின்று பாய்ந்த குருதி ஆறாக ஓடிற்று. முகத்திலும் தோளிலும் பசும்புண் பட்டுக் கிடந்தார் சிலர். மடிந்த வாயினராய் மாண்டு கிடந்தார் சிலர். இவ்வாறு விழுந்து கிடந்த வீரருள்ளே அம் மங்கை தன் கணவனைக் காணாது மயங்கினாள். அவன் என்னாயினன் என்று கேட்டறி வதற்கு அமர்க்களத்தில் யாருமில்லை. அந் நிலையில் வீரர் வணங்கும் தெய்வமாகிய பைரவியை வினவலுற்றாள்.
"பொருதடக்கை வாள்எங்கே? மணிமார் பெங்கே?
போர் முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத
பருவயிரத் தோள் எங்கே? எங்கே? என்று
பைரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்!'
"ஐயோ! தெய்வமே! என் கணவனுடைய வலிமை சான்ற கை எங்கே ? அக் கையிலமைந்த வாள் எங்கே? மாற்றார்க்கும் புறங்கொடாத மணி மார்பு எங்கே? எங்கே?” என்று மங்கை பைரவியைக் கேட்கின்றாள்.
இனிக் கடைசியாக நூற்றாண்டுகளுக்கு முன்னே தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வீரத் தியாகத்தைக் காண்போம்: பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரன் சேனைக்கும் மற்றொரு சேனைக்கும் பெரும்போர் நடந்தது. பாளையக்காரன் தம்பியாகிய ஊமைத்துரை என்பவன் அச் சேனையை எதிர்த்துப் போர் செய்தான். பகல் முழுவதும் போர் நிகழ்ந்தது. அந்திமாலை வந்தடைந்தபோது மாற்றார் சேனை வெற்றிபெற்று மீண்டது. பாளையக்காரன் சேனையில் பலர் விழுந்து கிடந்தார்கள். பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து போர்புரியச் சென்றிருந்த வீரன் ஒருவன் திரும்பிவரக் காணாத அவன் தாய் இருட்டிலே மகனைத் தேடப் புறப்பட்டாள்; போர்க்களத்தில் கிடந்த பிணங்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்தாள்; நெடுநேரம் தேடித் திரிந்து தன் மகனைக் கண்டாள். அவன் கொடுங் காயமடைந்து குற்றுயிராய்க் கிடந்தான். உயிரோடு தன் மகனைக் காணும் பேறு பெற்ற வீரத்தாய் மனங் குளிர்ந்து அவனை வீட்டுக்கு எடுத்துச் செல்ல விரும்பினாள். அப்போது அவ்வீரன், "தாயே! என்னை எடுத்துச் செல்வதனால் யாது பயன்? நம் படைத் தலைவராகிய ஊமைத்துரை, அதோ குற்றுயிராய்க் கிடக்கின்றார். அவரை எடுத்துக்கொண்டு போ. அவர் பிழைத்தால் நம் எல்லோருக்கும் நலமாகும்" என்று உருக்கமாக வேண்டினான். அவ் வுரை கேட்ட தாய் மனம் உருகினாள்; தன் மகனது அரும் பெரும் தியாகத்தை மெச்சினாள்; அவன் விரும்பியவாறே ஊமைத்துரையைக் கண்டு எடுத்துச் சென்று காப்பாற்றினாள்.
தனக்கென வந்த தண்ணீரைத் தன்னிலும் தாக முடைய ஒரு போர் வீரனுக்கு அளித்து அழியாப் புகழ் பெற்றான் ஓர் ஆங்கிலவீரன். அவ்வண்ணமே, தன்னுயிர் காக்க வந்த தாயைத் தலைவனிடம் அனுப்பி, அவனுயிரைக் காத்து, தன்னுயிர் துறந்த தமிழ் வீரன் தியாகமும் வியக்கத் தக்கதன்றோ? இத் தகைய வீரரைப் போற்றாதார் யாரே?
%%%%%%%%%%%%%%%%%%%%%%%
வில் என்றால் குளம் என்றும் பொருள் இணுவில் கோண்டாவில்
கொக்குவில் ,நந்தாவில் ,உடுவில் இங்கே குளங்கள் இருந்தன
உண்மைப் பொருளை பின்னர் தருகிறேன்
கோண்டா மாவட்டம் என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின்,75 மாவட்டங்களில் ஒன்று, இதன் தலைநகரம் கோண்டா நகரம் ஆகும்
இராமர் ஆண்டதும் கோசலை நாடு .அவரின் மகன் லவன் பின்னர் ஆண்டார் .கிருஷ்ணரின் மறுபிறப்பாக ராமரையும் புத்தரையும் இங்கு வணங்குவர்
புத்தசமயம் இலங்கையில் பஞ்ச சீலக் கொள்கையால் ஈர்ர்க்கப்பட்டு தமிழர்கள் பலர் புத்தமதத்துக்கு மாறினார் .இலங்கையில் இருந்த நாகர்கள் சிவவழி பாடு செய்பவர்கள் .இதில் ஒரு பகுதியினர் (நாகர்கள்) நாக விகாரைகளைக் கட்டி வழிபட ஆரம்பித்தனர் .இந்த சமயத்தில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்த ஆரியர்கள் கோண்டா தலை நகரில் இருந்து இலங்கையின் வடபகுதிக்கு வந்து பரவலாக்கினர் .இதே நேரம் .கோண்டா மொழி பேசும் ஒரு பகுதி தெலுங்கர்கள் நாட்டுக்குள் பரவினர் .கூடுதலாக தற்பொழுது கோண்டாவில் பகுதியை முத்தட்டாக பிரித்துக் கொண்டனர் .இப்பொழுதும் இந்த இடத்தை முத்தட்டு (மூன்று பிரிவுகள் )ம டம் என்று நையாண்டி பண்ணுவதுண்டு
இப்பொழுது கோண்டாவில் பகுதியில் பல கலாசார விழுமியங்கள் கலப்படமானதால் குரிசில் கள் அதாவது குறிச்சிக்கள் உண்டானது இன்றும் அப்பெயர்கள் நிலவுகின்றன .
நாளடைவில் எல்லோரும் சைவர்களாக இருந்த இந்த ஊர் மாமிச ம் உண்ணத் தலைப் பட்டாலும் சைவர்கள் பெரும் பான்மையாக இன்றும் உள்ளனர் .இங்கு கோண்டாவில் வடக்கு சாமுண்டாதேவி சமேத ஞானபைரவர் ஆலயம்
தில்லையம்பதி சிவகாமி அம்மன் கோயில்,
ஸ்ரீ சிவபூதராயர் கோயில்,
அற்புத நர்த்தன விநாயகர் கோயில்,
ஆசிமடம் அரசடி விநாயகர் கோயில்
கோண்டாவில் மேற்கு காளிகோவில் போன்ற விசேட ஆலயங்களும் உண்டு
ஈழத்து விஞ்ஞானியான விஜயவர்மன் இங்கே தான் அவதரித்தார்
இணுவில் நகரத்தில் இருந்து இடம் பெயர்ந்த பல இசைக் கலைஞர்கள் இங்கு வாழுகின்றனர்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சுன்னாகம் -வெண் நாகம்
ஆணைக் கோட்டை /பெரிய கோட்டை அரசனின் ஆணைப்படி jail
கட்டுடை -கண்ணீர்
மல்லாகம் - மல்லுக்கட்டி நிற்கும் ஆகம் அதாவது கொங்கைகள்
பலாலி -பல ஆலி -கண்ணீர்
இளவாலை -குயமரி குவனால் செதுக்கிய ம ரி /குமாரி குமரி
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
முடிவிலாதுறை சுன்னாகத்தான்
வழி
முந்தித் தாவடி கொக்குவில்
மீது வந்தடைய
ஓர் பெண் கொடிகாமத்தாள்
அசைந்து
ஆனைக் கோட்டை வழி
கட்டுடை
விட்டாள்
உடுவிலான் வர
பன்னாலையான்
மிக உருத்தனன்
கடம்புற்ற மல்லாகத்தில்
இடை விடாது எனை அணையென
பலாலி கண் சோர வந்தாள்
ஓர் இளவாலையே
^^^^^^^^^^^^^^^^^^^^
முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி
முடிவிலாதுறை = முடிவற்று உறைந்திருக்கும், அல்லது குடி கொண்டிருக்கும்
சுன்னாகம் = சுன் + நாகத்தான் = வெள்ளை மலை (இமய மலை = கைலயங்கிரி)
வழி = வழியில் வந்தவன்
இமயமலையில் முடிவிலாது குடி கொண்டிருப்பவனது வழியில் வந்தவனாகிய முருகன்,
முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்தடைய
முந்தித் தாவடி = முன்னே தாவி வரும்
கொக்குவில் மீது வந்தடைய
முன்னே தாவி வரும் குதிரையின் மீதேறி வந்து சேர, (மாவிட்டபுரத்தில் வீற்றிருக்கும் முருகன் குதிரையில் வருவாராம்).....
கொடிகாமத்தாள் ஆனைக்கோட்டை வழி கட்டுடை விட்டாள்
கொடி + காமத்தாள் = கொடி போன்றை இடையுடைய + ஆசை கொண்டவள்
ஆனைக் கோட்டை வழி = பெரிய கோட்டை போன்ற மார்பகம் வழி
கட்டுடை விட்டாள் = கண்ணீர் கட்டுடைந்து வழிய
நின்றாள்
மிகுந்த ஆசை கொண்ட, கொடிபோன்ற இடை உடைய பெண் கண்ணீரை, தன் பெரிய மார்பகங்களின் வழியாக கட்டுடைந்து சிதற விட்ட வண்ணம் சொல்கிறாள்......
உடுவிலான் வர பன்னாலையான் மிக உருத்தனன்
உடு = நட்சத்திரம் /நிலவு
பன்னாலை = கரும்பு
உருத்தனன் = தொல்லை கொடுத்தான்
நட்சத்திரம் / நிலவு வரும் நேரத்தில் கரும்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த தொல்லை கொடுக்கிறான்,
கடம்புற்ற மல்லாகத்தில் இடைவிடாது எனை அணையென
கடம்புற்ற = கடம்பு எனும் பூக்களாலான
மல்லாகத்தில் = மார்பகத்தில்
இடை விடாது = இடைவெளியெதுவுமில்லாது
எனை அணையென = என்னை அணைத்துக் கொள்ளென்று
கடம்பு பூக்களாலான மாலையணிந்த உனது மார்பகத்தில், இடைவெளி எதுவுமில்லாமல் என்னை அணைத்துக் கொள்ளென்று,
பலாலி கண் சோர வந்தாள் ஓர் இளவாலையே
பலாலி கண் = பல + ஆலி = பல கண்ணீர்த் துளிகள்
சோர = சொரிந்து
இளவாலை = இளம் வயதுடைய வாலைப் பெண் = குமரிப் பெண்
பல கண்ணீர்த் துளிகளை சொரிந்த வண்ணம் இறைஞ்சி நிற்கிறாள் அந்த இளம் வயதுள்ள குமரிப் பெண்.
^^^^^^^^^^^^^^^^^^^^^
முழுமையான அர்த்தம்: இமயமலையில் முடிவிலாது குடி கொண்டிருப்பவனது வழியில் வந்தவனாகிய முருகன், முன்னே தாவி வரும் குதிரையின் மீதேறி வந்து சேர, மிகுந்த ஆசை கொண்ட, கொடிபோன்ற இடை உடைய பெண் கண்ணீரை, தன் பெரிய மார்பகங்களின் வழியாக கட்டுடைந்து சிதற விட்ட வண்ணம் சொல்கிறாள்...... "நட்சத்திரம் / நிலவு வரும் நேரத்தில் கரும்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த தொல்லை கொடுக்கிறான், கடம்பு பூக்களாலான மாலையணிந்த உனது மார்பகத்தில், இடைவெளி எதுவுமில்லாமல் என்னை அணைத்துக் கொள்" என்று, பல கண்ணீர்த் துளிகளை சொரிந்த வண்ணம் இறைஞ்சி நிற்கிறாள் அந்த இளம் வயதுள்ள குமரிப் பெண்.
^%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
தாவடி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே.
இது கந்தரலங்காரம்
தாவளம் என்றால் ஓய்வு எடுக்கும் இடம்
.உடல் வலி குன்றி களைப்பாறும் இடம் .அதாவது தாவு என்பது மனத் தைரியம் குன்றி அடி சேருகின்ற நிலை தாவடி .
அதாவது போர் புரிந்து களைத்துப் போன பின்பு ஒரு கூடாரம் அமைத்து தங்குவார்கள் .அதாவது முகாம் என்று வைத்துக் கொள்ளுவோம்
வீரர்கள் தங்கும் பாசறை தாவடி என்பது தான் உண்மை
இலங்கை அரசன் ஸ்ரீ பரராஜ சேகரனும் .இணுவில் அரசன் செகராச சேகரனும் அவர்கள் தங்கள் போர் வீரர்கள் ஓய்வு செய்ய அமைக்கப்பட்ட இடமே தாவடியாகும்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%
கொக்கு என்றால் கரும்பு. இதனால் கொக்குவில் கரும்பு வில் என்று பொருள் படும். வில் என்பது சங்க காலத்தில் குளம் என்று பொருள். கொக்குவில் கொக்குகள் நிறைந்த குளம் உடைய ஊர் என்று பொருள் படும்.மாமரச்சோலை என்பதும் கொக்குவில் என்னும் பொருள்தான்.
இங்கு பல குளங்கள் இருந்தன .
பலர் அவற்றை அமுக்கி விட்டார்கள்
%%%%%%%%%%%%%%%%%%%%%
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப " என்பது திருவள்ளுவர் வாக்கு. இவற்றுள் காவியம், ஓவியம் முதலிய கலைகள் கற்பனை நயத்தால் இன்பம் பயக்கும். கற்பனை, நாட்டின் தன்மைக்குத் தக்கவாறு அமையும். வெப்பம் மிகுந்த நாட்டில் வசிப்பவர்கள் குளிர்மையை விரும்புவர். தமிழ்நாடு பெரும்பாலும் வெப்பமுள்ள நாடு. நீர் நிறைந்த ஆறுகளையும், நிழல் அமைந்த சோலை களையும் காவிய உலகத்திற் காணும் பொழுது நம் உள்ளம் குளிர்கின்றது. குளிர்மையில் உள்ள ஆசையால் அன்றோ நீரைத் தண்ணீர் என்கிறோம்; அன்பை ஈரம் என்கின்றோம்; ஆண்டவன் சேவடியைத் திருவடி நிழல் என்கின்றோம்? திருவடி நிழலின் இனிமையை உணர்த்துகின்றார் திருநாவுக்கரசர்.
''மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே !''
என்பது தேவாரத் திருப்பாட்டு.
வெப்பத்தால் வாடி வருந்துவோர் குளிர்மையைக் கண்டு இன்புறுதல் போன்று, பிறவித் துன்பத்தால் வருந்துவோர் ஆண்டவன் திருவடியை அடைந்து மகிழும் பெற்றியைப் பெரியோர்கள் அழகாகப் பாடியுள்ளார்கள். ஆண்டவன் அளிக்கும் பேரின்பம், கோடையிலே இளைப்பாற்றும் குளிர் பூஞ்சோலை யாகவும், ஓடையிலே ஊறுகின்ற தெள்ளிய நீராகவும், மேடையிலே வீசுகின்ற மெல்லிய தென்றலாகவும் ஒரு தமிழ்க் கவிஞரது கற்பனையிலே காட்சி தருகின்றது :
“கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே, தருநிழலே, நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீ ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே, சுகத்திலுறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா, பொதுவில்
ஆடுகின்ற அரசே, என் அலங்கல்அணிந் தருளே'
என்று பாடினார் இராமலிங்க அடிகளார்.
நீர்வளமும் நிலவளமும் உடைய தமிழ் நாட்டில் பண்டைக்கால முதல் பயிர்த்தொழிலே சிறந்த தொழிலாகக் கருதப்பட்டு வருகின்றது. முற்காலத் தமிழர், தொழுதுண்டு வாழ விரும்பினார் அல்லர்; உழுதுண்டு வாழவே விரும்பினார்கள்; 'சீரைத் தேடின்
கலையும் கற்பனையும் ஏரைத் தேடு' என்றார் ஒரு புலவர். ஏர்த்தொழில் இனிது நடைபெறுவதற்கு மழை இன்றியமையாதது. தாய் முகங் காணாப் பிள்ளையும், மழை முகங்காணாப் பயிரும் செழிப்படைவதில்லை. ஆகவே, தமிழ்நாட்டார் வானத்திலே தவழும் மேகத்தையே நோக்கி வாழ்ந் தார்கள். ஓங்கி உயர்ந்த மலைகளில் மழை மேகம் தவழக் கண்டால் தமிழர் உள்ளம் தழைக்கும் ; கார்மேகத்தின் இடையே மின்னல் வீசக் கண்டால் அவர் உள்ளம் துள்ளி மகிழும். மழைக் குறிகளைக் கண்டு உழவர் அடையும் ஆனந்தக் களிப்பைத் தமிழ்ப் பாட்டிலே காணலாம்.
"ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதேகுறி - மலை
யாளமின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே
நேற்றுமின்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே - கேணி
நீர்ப்படுசொ றித்தவளை கூப்பிடுகுதே
சேற்றுநண்டு சேற்றில்வளை ஏற்றடைக்குதே - மழை
தேடியொரு கோடிவானம் பாடி யாடுதே
போற்றுதிரு மாலழகர்க் கேற்றமாம் பண்ணைச் - சேரிப்
புள்ளிப்பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே"
என்ற பாட்டு உழவர் உள்ளத்தைத் தெள்ளிதின் உணர்த்துகின்றது. வானத்திலே திரண்டு எழுந்து செல்லும் மழை மேகத்தை கார்மேகத்தைக் - கருணை யின் வடிவமாகக் கண்டு தமிழ்நாட்டார் போற்றி னார்கள்; கார்மேகமே உலகத்தைக் காக்கும் என்று கருதிக் கைதொழுதார்கள்; மன்னுயிரை யெல்லாம் காத்தருளும் தெய்வமாகிய திருமாலுக்கும் அவ் வண்ணத்தையே அமைத்தார்கள்; 'கருமுகில் வண்ணன், என் கண்ணன்' என்றார்கள். திருவேங்கடம் என்னும் திருப்பதி மலையில் அப் பெருமான் நின்றருளும் கோலத்தைக் கருமேகத்தின் வடிவாகவே காட்டுகின்றது சிலப்பதிகாரம்:
"வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவில் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையில் ஏந்திச்
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்”
என்பது சிலப்பதிகாரச் சித்திரம். கருமேகத்தின் வண்ணம் அருமையான வண்ணமாக, அழகான வண்ணமாகத் தமிழ்நாட்டார்க்குத் தோன்றிற்று. அதனாலேயே அழகுடைய மேகத்தை அவர்கள் 'எழிலி' என்னும் சொல்லாற் குறித்தார்கள். எழில் என்பது அழகு. எழில் வாய்ந்த பொருள் எழிலியாகும். திருவள்ளுவர் எழிலி என்ற சொல்லை இனிது எடுத்து
ஆள்கிறார்.
"நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின்'
என்பது திருக்குறள். இக் குறளின் கருத்தும் கற்பனையும் நன்கு அறியத்தக்கதாகும். நெடுங்கடலில் நீர் அதிகமாக உண்டு. ஆயினும் அந் நீரில் ஒரு துளியேனும் தாகந் தீர்த்தற்கு உதவாது. அக் கடலில் உள்ள நீரைக் கருணை வாய்ந்த மேகம் கவர்கின்றது; மழையாக மாநிலத் தார்க்குத் தருகின்றது. இத் தகைய அருளுடைய கார் மேகத்தை எழிலி என்றார் திருவள்ளுவர். இக்குறளின் கருத்தைப் பிற்காலத்துப் புலவர் ஒருவரே விரித்துரைத்து விளக்கியுள்ளார் :
“பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல் நீர் சென்று புயல்முகந்து
பொய்யாக் கொடுக்கும் பிறர்க்கு "
என்றார் நன்னெறி ஆசிரியர்.
மலையிலே மழை பொழிந்து வெள்ளம் பொங்கி எழுகின்றது; அருவியாய் விழுகின்றது; ஆறாகப் பாய்கின்றது. ஆற்று நீர், கால்களிலும் ஏரிகளிலும் நிறைந்து பயிர் பச்சைகளையும் செடிகொடிகளையும் வளர்க்கின்றது. இளங் குழந்தையைப் பாலூட்டி வளர்க்கும் தாய்போல் பசும் பயிர்களை நீரூட்டி வளர்ப்பது நீதியாகும். ஆதலால், நதியைத் தாயாகவும், நிலத்தைக் குழந்தையாகவும் புலவர்கள் புனைந் துரைப்பாராயினர். சோழ நாட்டை ஊட்டி வளர்ப்பது காவேரியாறு. அந் நதியின் பெருமையாலேயே "சோழவள நாடு சோறுடைத்து" என்று கவிகள் புகழ் வாராயினர். செழுஞ் சோலைகளின் இடையே அழகுற நடந்து செல்லும் காவிரியாற்றைச் சிலப்பதிகாரம் இசைப்பாட்டால் வாழ்த்துகின்றது :
''வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி"
என்பது சிலப்பதிகாரத்தின் வாழ்த்து. இன்னும் பாண்டி நாட்டின் சிறந்த நதியாகிய வையையைப் "புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி " என்றும், "பொய்யாக் குலக்கொடி" என்றும் இளங்கோவடிகள் புகழ்ந்துரைத்தார். ஆற்றுப் பெருக்கற்ற காலத்தும் ஊற்றுப் பெருக் கால் உலகூட்டும் வையையின் கருணை வாழ்த்துதற் குரியதன்றோ?
ஆற்று நீராலும் மழைநீராலும் உணவுப் பொருள் களை விளைவிக்கின்ற உழவரைத் தமிழ்நாடு பாராட்டி மகிழ்ந்தது. 'உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்துங்கோல்' என்று பாடினார் கம்பர். இக் கருத்தை மனத்திற் கொண்டு, "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்" என்றார் பாரதியார்.
அக் காலத்தில் உழவருக்கு இருந்த பெருமை, திருவள்ளுவர் முதலாய தலைமைப் புலவர்கள் வழங்கியுள்ள கற்பனைகளாலும் விளங்கும். வில்லெடுத்துப் போர் செய்யும் வீரனை 'வில்லேர் உழவன்' என்றும் சொல்லாற்றல் வாய்ந்த கவிஞனைச் 'சொல்லேர் உழவன்' என்றும் குறித்தார் திருவள்ளுவர்.
"வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை"
என்பது திருக்குறள். வேற்படை தாங்கிய வீரனை 'அயில் உழவன்' என்றார் சிந்தாமணி ஆசிரியர்; வாளேந்திய வீரனை 'வாள் உழவன்' என்றார்கள். எனவே, வீரரையும் புலவரையும் உழவராகக் கண்ட பெருமை பண்டைத் தமிழ் நாட்டுக்குரியது.
இயற்கையோடு கலந்து வாழ்ந்த தமிழரின் பெருமை சில கற்பனைகளால் சிறந்து விளங்குகின்றது. நல்ல நிறமும் நறுமணமும் உடைய மலர்கள் எக் காலத்தும் மாந்தர்க்கு இன்பம் தருவனவாகும். தமிழ் நாட்டார்க்குச் சிறப்பாக மலர்களில் மிகுந்த விருப்பம் இருந்ததாகத் தெரிகின்றது. பூக்களில் தலைமை வாய்ந்தது, தாமரை. இப் பூவைப் பாடாத கவிஞர் இல்லை. தண்ணீர் நிறைந்த குளம் முதலிய இடங்களில் தாமரை காணப்படும். தாமரையால் அழகு பெற்ற குளங்களின் கோலத்தைக் காவியங்களிற் காணலாம். காலைப் பொழுதில் தாமரை மலரும்; மாலைப் பொழுதிற் குவியும். இவ் வியற்கைக் காட்சியால் விளைந்த கற்பனைகள் பலவாகும். காலையில் கதிரவன் தோன்றும் பொழுது தாமரை இதழ் விரிந்து இன்புறுகின்றது. மாலையில் கதிரவன் மறையும் பொழுது இதழ் குவிந்து ஒடுங்குகின்றது. ஆதலால், கதிரவன் காதலன்; தாமரை காதலி' என்று கவிஞர் கற்பனை செய்வாராயினர். இக் கற்பனையின் பயனாகத் தாமரை நாயகன் என்னும் பெயர் சூரியனுக்கு அமைந்தது.
இன்னும், பூவின் பல பருவங்களைத் தமிழ் நூல்களிற் காணலாம். அரும்பு, முதற் பருவம் ; முகை, அடுத்த பருவம்; போது, அதற்கடுத்த பருவம்; போது விரிந்த நிலையில் மலராகும். இந்நான்கு பருவங்களில் மூன்றைத் திருவள்ளுவர் ஒரு பாட்டிலே குறித்துள்ளார்.
"காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந் நோய்"
என்ற குறளில் அரும்பு, போது, மலர் என்னும் மூன்று பருவங்கள் முறையாகக் குறிக்கப்பட்டுள்ளன.
மென்மையும் அழகும் வாய்ந்த பூவிற்கு நிகராகப் பெண்களைக் கருதினர் தமிழ்நாட்டுக் கவிஞர். இதனாலேயே 'பூவை' என்னும் பெயர் பெண்ணுக்கு அமைவதாயிற்று. பூவிற்குப் பல பருவங்களை வகுத்தவாறு பெண்ணுக்கும் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை முதலிய பருவங்களைப் புலவர்கள் வகுத்தார்கள். இல் வாழ்க்கையே பெண்களுக்கு நல்வாழ்க்கை. அவ்வாழ்க்கையில் தலைப்படும்பொழுது பெண்மை மணக்கின்றது; சிறந்த இன்பம் பயக்கின்றது. ஆதலால், கல்யாணம் என்னும் மங்கலத்தை 'மணம்' என்று அறிந்தோர் கூறுவாராயினர். எனவே, பூவின் தன்மைக்கும் பெண்ணின் நீர்மைக்கும் உள்ள ஒற்றுமையாலேயே மணம் என்ற சொல் கல்யாணத்தைக் குறிப்பதாயிற்று.
இயற்கையான நிகழ்ச்சிகளில் சிறந்த உணர்ச்சி களைக் கற்பிக்கும் முறை கவிகளிடம் உண்டு. அயோத்தி மாநகரில் ஒரு தீமை நிகழ்ந்துவிட்டது. எல்லோர்க்கும் இனியவனாகிய இராமன் நாட்டை விட்டுக் காட்டுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. தலைமகன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கைகேயி வற்புறுத்தினாள். மன்னவனாகிய தசரதன் கைகேயியின் கொடுமையைப் பொறுக்க மாட்டாது மண்மேல் மயங்கி விழுந்தான். இஃது இராப்பொழுதில் மாளிகையில் நிகழ்ந்தது. இந்தக் கொடுமையை அயோத்தியில் உள்ள கோழிகள் அறிந்தன; மனங் கலங்கின; 'ஊரார் எல்லாம் இதை அறியாமல் உறங்குகின்றார்களே' என்று ஏங்கின; துன்பம் பொறுக்கமாட்டாமல் இரு சிறகாலும் வயிற்றில் அறைந்து கொண்டன; 'குய்யோ முறையோ' என்று கூவி ஊராரையெல்லாம் அழைத்தன என்று கவிஞர் கூறுகின்றார் :
"எண்த ருங்கடை சென்ற யாமம்
இயம்பு கின்ற ஏழையால்
வண்டு தங்கிய தொங்கல் மார்பன்
மயங்கி விம்மிய வாறெல்லாம்
கண்டு நெஞ்சு கலங்கி அஞ்சிறை
யான காமர் துணைக்கரம்
கொண்டு தம்வயி றெற்றி எற்றி
விளிப்ப போன்றன கோழியே"
என்பது கம்பர் பாட்டு. விடியுமுன்னே சிறகடித்துக் கூவுகின்ற கோழியின் செய்கையில் சோகத்தை ஊட்டிக் காட்டினார் கவிஞர்.
காலையிற் கூவும் கோழியின் குரல், கேட்போர் மனோபாவத்திற் கேற்றவாறு அமைகின்றது. முருக பக்தர் ஒருவர் கோழியின் குரலைக் கேட்கின்றார். கோழி முருகனுக்கு உகந்த பொருள்களுள் ஒன்று. அது முருகன் கொடியிலே நின்று கூவும் பெருமை வாய்ந்தது. ஆதலால், கோழியின் குரல் வெறுங் கூக்குரல் அன்று; தெய்வம் மணக்கும் குரல் என்று அவ் வடியார்க்குத் தோன்றுகிறது. 'கொக்கறுகோ, கொக்கறுகோ' என்று கூவும் கோழியின் கருத்தை அவர் விளக்குகின்றார். கொக்கு என்பது மாமரம். மாறுபட்ட சூரன் மாமரமாகி நின்றான். அவனை அறுத்தார் முருகப் பெருமான். ஆதலால், கொக்கறுத்த கோமானாகிய முருகனையே கோழி புகழ்ந்து போற்றுகின்றது என்று அப் பெரியார் கூறுகின்றார். ஆகவே, கலைகளில் உள்ள கற்பனை, நாட்டின் இயல்பிற்கும், கலைவாணரது மனோபாவத்திற்கும் ஏற்றவாறு அமையும் என்னும் உண்மை நன்கு விளங்குவதாகும்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
கருத்துகள்
கருத்துரையிடுக