இணுவில் வீரமணி அய்யர்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த ம. த. நடராஜ ஐயர், சுந்தராம்பாள் தம்பதியினருக்கு 1931 அக்டோபர் 15 இல் இரண்டாவது புதல்வனாகப் பிறந்த வீரமணிஐயர், தனது சிறுவயதுக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், (தற்போதைய இணுவில் இந்துக் கல்லூரி) உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றார். அங்கு படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
1996 ஆம் ஆண்டு அவரது மனைவியார் ருக்மணி அம்மையார் காலமானார். என். வீரமணி ஐயர் 2003ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ந்திகதி யாழ்ப்பாணத்தில் காலமானார்.
கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக இந்தியா சென்ற இடத்தில், இசை, நடனம், நாடகம் என்பனவற்றால் கவரப்பட்டு, திருமதி ருக்மணிதேவி அருண்டேல் அவர்களிடம் பரதநாட்டியம்கற்றுக் கொண்டார் , எம். டி. ராமநாதன் இசை கற்றுக் கொண்டார் , பாபநாசம் சிவன் சாகித்ய குரு வானவரை தன இசைக் குருவாக ஏற்றார்
தாய்நாடு திரும்பி, தான் படித்த மானிப்பாய் இந்துக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணி புரிந்தார். சில ஆண்டுகளின் பின்னர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாகித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள்மீதான பாடல்களையும் இயற்றினார்.
72 மேளகர்த்தா இராகங்களிற்கும், 175 தாளங்களிற்கும் இன்னும் இதற்கு மேலாகவும் உருப்படிகளை ஆக்கியுள்ளார். பல இராகங்களின் பெயர்களை முத்திரையமைத்துப் பாடியுள்ளமை இவருடைய ஆக்கங்களின் சிறப்பம்சமாகும்.
கீதம், கீர்த்தனை, பதம், பல்லவி, வெண்பா முதலிய சகல வகை பாடற் துறைகளிலும் கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்ற வீரமணிஐயர் அவர்கள் பல கோவில்களுக்கு ஊஞ்சற்பாக்களும் இயற்றியுள்ளார். சமற்கிருதத்திலும் இவர் பாடல்கள் எழுதியுள்ளார்.
இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில், இணுவில் கந்தசுவாமி கோயில், இணுவில் சிவகாமி அம்மன்,மீது பாடிய பாடல்களின் (கீர்த்தனைகள்) தொகுப்புக்கள் மலேசியா வாசுதேவன், நித்தியஸ்ரீ, மகாநதி ஷோபனா ஆகியோரால் பாடப்பெற்று ஒலிப்பேழைகள், இறுவெட்டுக்களில் வெளிவந்துள்ளன.
`கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்...' என்று ஆரம்பிக்கும் ஆனந்த பைரவி இராகத்தைப் பல்லவியில் கொண்டமைந்து நான்கு இராகங்கள் முத்திரை அமைக்கப் பெற்ற இவரது இராகமாலிகை கீர்த்தனை தென்னிந்தியப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்களால் பாடப்பெற்று உலகப் பிரசித்தி பெற்றதாகும்.
கர்நாடக இசை, நடனம் ஆகிய இரண்டிலும் டிப்ளோமா (Diploma in Dance & Music) தகைமைகளைக் கொண்டிருந்த வீரமணிஐயர் அவர்கள் தனது அரச பணியின் நிறைவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
யாழ்ப்பாணத்தில் கொழும்புஸ்டூடியோ உரிமையாளர் திரு.அ. குகதாசன் அவர்களின் உதவியோடு இவர் பல புத்தங்களை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அந் நாட்களில் கலைத்துறைக்கும், அவற்றைப் புத்தகமாக அச்சிட உதவும் புளொகுகளை அமைத்து வந்த கொழும்பு ஸ்ரூடியோ, இவருக்குப் பேருதவிகள் புரிந்துள்ளது. அத்தோடு இவர் திரு அ.குகதாசன் அவர்களின் நெருங்கிய நண்பரும் ஆவார்.
இந்தியாவில் கற்றுக்கொண்டிருக்கும் வேளையில் தான் இவரது கலைவாழ்வில் பெரும் திருப்புமுனையான சம்பவம் நடந்தது.திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயம் மீது “மயிலைக்குறவஞ்சி” பாடினார்.
கபாலீஸ்வரரை தலைவராகவும் கற்பகாம்பாளை தலைவியாகவும் வைத்து பாடிய நூலின் முதல் பாடல் “கற்பகவல்லியின் நிற்பதங்கள்” என்ற பாடல் இவருக்கு பெரும் உலக புகழை ஈட்டித்தந்தது.ஆனந்தபைரவி இராகத்தில் அமைந்த இந்த இராகமாலிகை கீர்த்தனையை பிரபல தென்னிந்திய பாடகர் செளந்தரராஜன் அவர்கள் பாடினார்.இப்பாடல் வெளியீட்டில் தென்னிந்தியாவின் பிரபல இசைமேதைகள் இவரை பாராட்டி வாழ்த்தினர். பாபநாசம் சிவன் அவர்கள் இவ்வாறு பாராட்டை தெரிவித்தார் “மயிலைகுறவஞ்சி எனும் சிறிய நூலை இழைத்த அற்புத சிலந்தி நமது வீரமணி”.ஆலய நிர்வாகத்தினர் இப்பாடலை ஆலய கருங்கல்லில் “இப்பாடலை எழுதியவர் யாழ் மண்ணை சேர்ந்த வீரமணி ஐயர்” என இட்டனர். அன்று யாழ்மண்ணின் புகழ் தென்னிந்தியா முழுதும் இப்பாடல் மூலம் ஒலித்தது.இன்று இவ்வாலயத்திற்கு வரும் ஆயிரக்கணக்கானோர் இப்பாடலை பார்வையிட்டும் பாடியும் வருகின்றனர்.
பலாலி ஆசிரியர்கலாச்சாலையில் கற்பித்த காலத்தில் பக்கத்தில் தோட்டம் காணப்பட்டது.அங்கு வெங்காயச்செய்கையில் சில பெண்மணிகள் ஈடுபட்டு வந்தனர்.அவர்கள் வெங்காயம் விதைத்து அதை பிடுங்கி கூடையில் போட்டு தலையில் சுமந்து நடைபயிலும் காட்சி இவரை நன்றாக கவர ஒரு முறை அவர்களை பார்த்தவண்ணமே மனதுக்குள் பாடல்வரி எழுதி
மெட்டுப்போட்டபடி நடந்து சென்று மின்கம்பத்தில் மேதி நெற்றியில் சிறு காயத்தோடு வீடு திரும்பினாராம். அதன் பின் அப்பாடலை மாணவர்களுக்கு கற்பித்து மேடையேற்றி வெற்றியும் கண்டார்.இச்சம்பவம் இவர் கலைமேல் எவ்வளவு மயக்கம் கொண்டிருதார் எனபதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
“கற்பகவல்லி நின் பொற்பதங்கள்” என்னு பாடல் பாட ஒரு கதை உண்டு.
இவர் இந்தியாவிலே கற்றுக்கொண்டு இருந்தபோது தன் மேற்படிப்பிற்காக பணம் தேவைப்பட்டது.வழமையாக பணம் அனுப்பும் அண்ணனும் அனுப்பவில்லை.அடுத்தநாள் 12 மணிக்குள் பணம் செலுத்தி ஆக வேண்டும்.ல்லி
மிகவும் மனமுடைந்தவர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் மனமுருகி இயற்றிய பாடலே“கற்பகவல்லி நின் பொற்பதம்” ஆகும்.இந்த பாடலை கேட்ட பின் அய்யரின் திறமையை மெய்ச்சிகலாச்சேத்திரா ஆசிரியர்கள் இவருக்கு மேற்படிப்புகளை இலவசமாகவே கற்பித்தனாராம்.
ஒரு முறை ஒரு தலைப்பில் நான்கு கதைகள் எழுதவேண்டி சந்தர்ப்பம் ஏற்பட்டது.ஒரே தலைப்பில் நான்கு கதைகள் எழுதுவது என்பது இலகுவான காரியம் அல்ல.ஒருவாறு மூன்று கதைகள் எழுதிவிட்டார்.நான்காவது கதை நீண்டநேரம் ஜோசித்தும் வரவில்லைஉடனே வேட்டியை மடித்து “சண்டி கட்டு” கட்டிய படி ஜோசித்தவாறே பரராஜசேகரப்பிள்ளையார் ஆலய வீதியால் நடந்து சென்றார். வீதியில் சென்ற இளைஞன் “என்ன் ஐயா ஜோசனை” என்று கேட்ட “ஒண்டு இல்லையடா மோனே” என்று சொல்லி விட்டு உடனே வீடு திரும்பி நான்காவது கதையையும் எழுதி முடித்தாராம். அதன் பின் நான்கு கதைகளுக்கும் பரிசு கிடத்ததாம்.
மேலும் இவர் பேச்சிலே குறும்புதனமும்,குழந்தை தனமும் மிக்கவராக காணப்பட்டார்.அயல்வீட்டு சிறு பிள்ளைகளுக்கு இலவசமாக சங்கீத,நடன வகுப்புகள் கற்றுக்கொடுப்பார்.கிருஷ்ணரே இவருக்கு பிடித்த தெய்வமாகும். நெற்றியில் நாமத்துடன் கோவில் வீதியில் அடிக்கடி தென்படுவார். வைகுண்ட ஏகதசி வேளையில் இசைகச்சேரி செய்வார் ஆலயத்தில்.
மேலும் தன்னிடம் கற்கவரும் மாணவர்களை தன் பிள்ளை போல நினைத்து கல்விஊட்டுவார்.சிறுவர்,சிறுமியர் மீது அன்பாக பேசி பழகுவார்
ஒரு சிறிய மனவேதனை ஒன்று எப்போதும் பற்றியவண்ணம் உள்ளது. எத்தனையோ சாதனைகள் செய்து சரித்திரம் படைத்து விருதுகள் வாங்கி எம் மண்ணை பெருமைப்படவைத்த கலைஞனை நினைவுகூரும் விதமாக ஒரு மிகப்பெரிய கலைவிழா எடுக்கப்படுவதில்லை.ஆரம்பத்தில் ஒருமுறை நினைவுகூரல் இடம்பெற்று இருப்பினும் அதன் பின் இடம்பெறாதது மன்வேதனைக்குரியது. இந்தியாவில் தியாகராஜ ஆராதனை எவ்வளவு சிறப்பாக நடக்கின்றதோ அதே போல நம் மண்ணில் வீரமணி ஐயரையும் நாம் நினைவுகூரவோண்டும்.அவரின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவேண்டும் என அனைவரிடமும் தாழ்மையால கேட்டுக்கொள்கிறேன்.
எத்தனையோ புத்தி ஜீவிகளின் கலைஞர்களின் சரிதங்கள் புத்தகமாகவேனும் பதிப்பிக் கப்படல் வேண்டும்
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!(கற்பக வல்லி)
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
(கற்பக வல்லி)
ராகம் : ஆனந்த பைரவி
நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்
நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா!
(கற்பக வல்லி)
ராகம் : கல்யாணி
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்
நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!
(கற்பக வல்லி)
ராகம் : பாகேஸ்ரீ
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா!
(கற்பக வல்லி)
ராகம் : ரஞ்சனி
அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் – அருள்
தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா!
(கற்பக வல்லி)
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இணுவிலில் ஆரியசக்கரவர்த்திகள் ஆண்டபொழுது பேராயிரவன் என்பவனும் அவனது பரிபாலனச சேனைகளும் வேளாளர்களும் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற பின்னரே இணுவில் இணையில்லாத ஒரு இடமாக மலர்ந்தது
இங்கு உள்ள குளமானது அதனை சுற்றி வளர்ந்த மூங்கில் சோலைகளும் இணுவிலுக்கு அணிசேர்த்தன .
மழை காலத்தில் சேகரிக்கப்பட்ட நீரே இங்கு நிலத்தடி நீர் சுரக்க ஆதாரமானது . இந்தக் குளத்தருகே திருப்பூர் மங்கலத்தை அடுத்த பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட வலையபாளையம் -வண்ணாங்காடு பகுதியில் இருந்து பலர் இங்கு தொடர்பில் வியாபார நிமித்தம் வந்து சென்றிருக்கிறார்கள்
இதே நேரம் திருப்பூர் பள்ளடத்துக்கு அண்மையில் மண்ணாங்காடுஎன்ற இடத்தில் இருந்து விற்பன்னர்கள் வந்திருக்கிறார்கள்.காரைக்குடியில் இருந்து செட்டிகள் செட்டிமார்கள் வந்திருக்கிறார்கள் .இவை யாவும் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் சிறப்பு இராசதானியாக இணுவில் இருந்த பொழுது வந்தார்கள் சென்றார்கள் தங்கினார்கள் போனார்கள் வாழ்ந்தார்கள் .
இவை யாவும் கேள்வி ஞானமே அன்றி,ஆதாரம் கிடையாது
மேலும் மூங்கில் காடுகள் கூட்டமாக வட்டமாக இருந்த இடத்தை வட்டு இணு வில் என்று அழைத்தார்கள் என்றும் அறிகிறேன்
இது தான் வட்டுவினியோ அறிகிலேன்
பருத்திக்கு பின்னல் என்ற பெயர் இருந்தது இணுவிலில் பருத்தி நிறைய அடைத்து வெளி போட்டு வேலி க்குள் விளை வித்தார்கள் என்றும் அறிந்தேன் இதனை பருத்தியடைப்பு என்று சொன்னார்களோ அதுவும் அறிகிலேன்
ஆனாலும் இணுவிலில் பின்னல் என்கிற குருச்சி உண்டு
வை .கா சிற்றம்பலப் புலவருக்கும் எனக்கும் நட்பு ரீதியாக அன்னியோன்னியம் நிறைய இருந்தது .
அத்தகவல்களும் பல அறிவு சார்ந்த ஊர்கள் பற்றிய தகவல்கள் நாளடைவில் இவையும் இங்கே பகிர்வேன் .சிலவற்றை நேரடியாக எழுத முடியாது
13 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை யாழ்ப்பாணத்தை ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்தினர் ஆண்டனர். இவர்கள் பரராசசேகரன், செகராசசேகரன் என்னும் சிம்மாசனப் பெயர்களை மாறிமாறி வைத்துக்கொண்டனர். இவர்களில் பரராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரைக் கொண்ட ஒரு மன்னனின் பெயராலேயே இக்கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு பரராசசேகரப் பிள்ளையார் என்றும், கோயில் பரராசசேகரப் பிள்ளையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. இந்த மன்னன் பெயரால் இல்கோயிலுக்குப் பெயர் வந்ததற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. அம்மன்னன் இக்கோயிலைக் கட்டுவித்ததால் அப்பெயர் ஏற்பட்டது என்றும், அவன் வணங்கிவந்த கோயில் ஆதலால் அவன் பெயரால் கோயில் அழைக்கப்பட்டது என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. ஆரியச் சக்கரவர்த்திகளின் மற்றச் சிம்மாசனப் பெயரைக் கொண்ட செகராசசேகரப் பிள்ளையார் கோயிலும் இணுவிலில் இருப்பது குறிப்பிடத் தக்கது.இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் இலங்கை, யாழ் மாவட்டத்தில் இணுவில் தெற்கிலுள்ள மடத்துவாசலில் அமைந்துள்ளது. இக் கோயில் காங்கேசந்துறை வீதியில், யாழ்ப்பாண நகரத்தில் இருந்து ஏறத்தாழ 7 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இணுவில் சந்தியில் இருந்து மேற்கு நோக்கி மானிப்பாய்க்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ளது. போத்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தை 1620 ஆம் ஆண்டில் கைப்பற்றுவதற்குமுன் அதை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் தோற்றம் பெற்றதாகக் கருதப்படும் இந்தக் கோயில் யாழ்ப்பாணத்தில் உள்ள மிகவும் பழைய கோயில்களுள் ஒன்று.
13 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை யாழ்ப்பாணத்தை ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்தினர் ஆண்டனர். இவர்கள் பரராசசேகரன், செகராசசேகரன் என்னும் சிம்மாசனப் பெயர்களை மாறிமாறி வைத்துக்கொண்டனர். இவர்களில் பரராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரைக் கொண்ட ஒரு மன்னனின் பெயராலேயே இக்கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு பரராசசேகரப் பிள்ளையார் என்றும், கோயில் பரராசசேகரப் பிள்ளையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. இந்த மன்னன் பெயரால் இல்கோயிலுக்குப் பெயர் வந்ததற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. அம்மன்னன் இக்கோயிலைக் கட்டுவித்ததால் அப்பெயர் ஏற்பட்டது என்றும், அவன் வணங்கிவந்த கோயில் ஆதலால் அவன் பெயரால் கோயில் அழைக்கப்பட்டது என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. ஆரியச் சக்கரவர்த்திகளின் மற்றச் சிம்மாசனப் பெயரைக் கொண்ட செகராசசேகரப் பிள்ளையார் கோயிலும் இணுவிலில் இருப்பது குறிப்பிடத் தக்கது.
ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தவரின் ஆட்சி 1240களில் இருந்து 1620 வரை ஏறத்தாழ 380 ஆண்டுகள் நிலைத்திருந்தது
ஆரியச் சக்கரவர்த்தி வம்ச ஆட்சியின் தொடக்க காலத்திலேயே இணுவில் ஒரு முக்கியமான ஊராக இருந்ததுடன் அரசரின் பிரதிநிதி ஒருவரும் அங்கு இருந்ததாக யாழ்ப்பாண வைபமாலை கூறுகிறது. இதனால், இணுவில் 13 ஆம் நூற்றாண்டிலேயே அரசத் தொடர்புள்ள ஊராக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.
யாழ்ப்பாண அரசர் காலத்தில் இக்கோயிலை அண்டி ஒரு மடம் இருந்தது. கோயிலுக்கு வருபவர்கள் இதைப் பயன்படுத்தி வந்தனர். யாழ்ப்பாணத்தைப் போத்துக்கேயர் கைப்பற்றியபின்னர் இராச்சியத்தில் இருந்த எல்லா இந்துக் கோயில்களையும் இடித்தனர். அவ்வேளை இக் கோயிலில் இருந்த பிள்ளையார் சிலையை ஒழித்து வைத்த மக்கள் அக்கட்டிடத்தை ஒரு மடம் எனக்கூறியதால் அக்கட்டிடத்தைப் போத்துக்கேயர் இடிக்காமல் விட்டனர்
போத்துக்கேயருக்குப் பின்னர் வந்த ஒல்லாந்தரும் தமது 138 ஆண்டுக்கால ஆட்சியில் சைவ வழிபாட்டுக்கு இடமளிக்கவில்லை. இறுதிக் காலத்தில் சில ஆண்டுகள் அவர்களது கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்பட்டபோது ஆங்காங்கே கோயில்களும் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் பரராசசேகரப் பிள்ளையார் கோயிலிலும் வழிபாடுகள் தொடங்கியிருக்கக்கூடும். ஆங்கிலேயர் 1796ல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் வழிபாட்டுச் சுதந்திரம் கிடைத்தது. 1800களில் பழைய கோயில் கட்டிடம் திருத்தப்பட்டுக் குடமுழுக்கும் இடம்பெற்றது இக்காலத்தில், கருவறையுடன், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றையும் கொண்டிருந்த இக்கோயில் சிறியதாக இருந்தது. அக்காலப்பகுதியில் பூசைகள் ஒழுங்காக நடைபெற்று வந்ததுடன், திருவிழாக்களும் இடம்பெற்றது
1928 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் திருத்த வேலைகளும், புதிய கட்டிடவேலைகளும் இடம்பெற்றன. 1939ல் குடமுழுக்கும் செய்யப்பட்டது. இதன் பின்னரும் பல தடவைகள் திருப்பணி வேலைகள் இடம்பெற்றுக் கோயில் விரிவாக்கப்பட்டது. தற்போது பல மண்டபங்கள், இராசகோபுரம், மணிமண்டபம் என்பவற்றைக் கொண்டதாக இக்கோயில் விளங்குகிறது.
இப்பொழுது மிக கலை நுட்பங்களைக் கொண்ட ஆலயமாக உணர்கிறேன்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஜாதகக் கணிப்புக்களும் வித்தியாசப்படுவது என்ன எனில் சூரிய உதயத்தை சரியாகாக் கணக்கிட்டால் மட்டுமே சாதகம் எழுத வேண்டும் இப்ப உங்களின் நாட்டில் பிள்ளை பிறந்தால் அங்குள்ள சூரிய உதயத்துக்கு ஜாதகம் எழுதவேண்டுமே தவிர
இலங்கையிலோ இந்தியாவிலோ கணக்கை போடக் கூடாது
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தமிழ் தேதி: சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரையும் உள்ள காலமாகும்.
ஆங்கிலத் தேதி: இரவு 12 மணி தொடக்கம் மறுநாள் இரவு 12 மணி வரையும் உள்ள 24 மணித்தியாலங்களைக் குறிக்கும்.
இஸ்லாமிய தேதி: சூரிய அஸ்தமனம் முதல் மறுநாள் சூரிய அஸ்தமனம் வரை உள்ள காலப் பகுதியாகும்.
"அவமா" : ஒரு தினத்தில் மூன்று திதிகள் சம்பந்தப்பட்டால் அன்று "அவமா" அழைக்கப்படும்.
திரிதினஸ்புருக்: ஒரு திதி மூன்று நாட்கள் சம்பந்தப்பட்டு இருந்தால் அது "திரிதினஸ்புருக்" என்று அழைக்கப்படும்.
இராசிகள்-12:
1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம்,
4. கர்க்கடகம், 5. சிம்மம், 6. கன்னி,
7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு,
10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பன.
வான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ள போதும்; அவற்றுள் சிலவே பூமியின் Zodiac எனப்படும் இராசி மண்டல வலயத்தில் (சுற்றுப்பாதைக்குள்) அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன. இவ் ராசி மண்டல வலயத்தினுள் 27 நட்சத்திர கூட்டங்கள் அமைந்துள்ளதாக கணிக்கப்பெற்றுள்ளன. இந்த 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் (3.33 பாகை) 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியும் ஒன்பது நட்சத்திர பாதங்களை (2 1/4 நட்சத்திரங்களை) கொண்டனவாக அமைந்துள்ளது.
நட்சத்திரங்கள் - 27:
1. அஸ்வினி, 2. பரணி, 3. கார்த்திகை,
4. ரோகினி, 5. மிருகசீரிஷம், 6. திருவாதரை,
7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம்,
10. மகம், 11. பூரம், 12. உத்திரம்,
13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. ஸ்வாதி,
16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை,
19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம்,
22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம்,
25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.
நட்சத்திரங்களும் ராசிகளும்:
சோதிட கணிப்பின் படி; பூமியில் பட்டிபோல் சுற்றியுள்ள (கற்பனையான) இராசி மண்டல வலயம்; பூமி சூரியனைச் சுற்றும் போது இராசி மண்டல வலயத்தில் உள்ள ஏதோ ஒரு ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்கின்றன. சந்திரன் ஒரு குறிப்பிட்ட தினத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் எந்த நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் சஞ்சரிக்கிறாரோ அதுவே அப்போதய நட்சத்திரமும் அதன் பாதமும் என சோதிடம் கூறுகின்றது.
சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ-ராசியிலும், வைகாசி மாதத்தில் ரிஷப-ராசியிலும் சஞ்சரிக்கிறார். இப்படியே ஒவ்வொரு தமிழ் மாதமும் அடுத்துள்ள ஒவ்வொரு ராசியில் சஞ்சரித்து, தொடர்ந்து 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார். ஜோதிட கணிப்பின் படி சூரியன் தனது சுற்றை மேஷராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆரம்பித்து மீனராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தை கடந்து செல்ல (12-ராசிகளையும் சுற்றிவர) 365.25 நாட்கள் எடுக்கின்றது.
Zodiac எனப்படும் இராசி மண்டல வலயம் நீள் வட்டத்தின் அமைப்பை கொண்டதனால் ஒருவருடைய ஜாதக-குறிப்பு கணிக்கும் போது நீள்வட்டமாக வரைதல் வழக்கமாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் இவ் வழக்கம் திரிபுற்று தற்போது நீள் சதுரமாக வரையப்படுகிறது. ஜாதக-குறிப்பு என்பது சிசு பிறந்த தற்பரையில் பேரண்டத்தின் கோசர (கிரக) நிலையையும், லக்கினத்தையும் குறிப்பதாகும்.
பூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக "/ல" என குறிக்கப்பட்டிருக்கும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப்படுகின்றது.
நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.
அத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.
அதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடியதாக "அதிர்ஷ்டக் கற்களை" பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் "உச்சம்" பெற்றதாக கணிக்கப்பெறுகின்றது. இதை "கிரக வலிமை" என்பார்கள்.
ஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் "உயிர்க் காந்தம்" (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.
வேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின் வினைப் பயன்களை அனுபவிக்க கூடியதான கிரகங்களின் நிலை ஏற்படும் பொழுது ஒரு சிசு பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது. அந்த உயிக் காந்தப் புலத்தின் தன்மையை எடுத்துக் காட்டுவதெ எமது ஜாதகக்-குறிப்பு என்று கூறலாம்.
விளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளி யின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.
மேலும், வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும்.
அது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனை ஜாதக-குறிப்பின் அடிப்படையில் கணித்துக் கூறுவதே சோதிட சாஸ்திரமாகும்.
கிரகங்கள் எல்லாம் தத்தமக்கென வித்தியாசமான வேகத்தினைக் கொண்டுள்ளதால் சூரியனை சுற்றிவர வித்தியாசமான காலத்தை எடுக்கின்றன. இராசி மண்டல வலயத்தில் உள்ள 27 நட்சத்திரங்களையும் ஒரு முறை சுற்றிவர சந்திரன் சுமார் 29.53 நாட்களும்; புதன்-88 நாட்களும்; சுக்கிரன்-225 நாட்களும்; சூரியன்-365.25 நாட்களும் (அதாவது பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம்); செவ்வாய்-687 நாட்களும்; வியாழன் -11.86 வருடங்களும்; ராகு-18 வருடங்களும்; கேது-18 வருடங்களும்; சனி-29.46 வருடங்களும் எடுக்கின்றன.
"அசுவினி" நட்சத்திரம் இராசிச் சக்கரத்தின் முதல் இராசியான "மேடம்"திலும், "ரேவதி" நட்சத்திரம் கடைசி இராசி யான "மீனம்" திலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நில-நிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம்.
இராசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கின்றது. சூரியனும், சந்திரனும் ஒவ்வொரு ராசிக்கு அதிபதி (உரிமைக்காரன்) ஆவார்கள். ஆனால் மற்றைய கிரகங்கள் 5ம் இரண்டு இரண்டு ராசிகளுக்கு அதிபதியாகின்றனர். ராகு கேதுக்களுக்கு சொந்த ராசிகள் இல்லை. அவர்கள் எந்தவீட்டில் நிற்கிறார்களோ அந்த ராசிக்கு அவர்கள் அதிபதியாகின்றனர்.
சூரியன் விண்மீன்: சிம்ம-ராசிக்கு அதிபதியாவார்.
சந்திரன் கிரகம்: கடகம்-ராசிக்கு அதிபதியாவார்.
செவ்வாய் கிரகம்: மேஷம்-ராசிக்கும், விருட்சிகம்-ராசிக்கும் அதிபதியாவார்.
புதன் கிரகம்: மிதுனம்-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் அதிபதியாவார்.
குரு கிரகம்: மீனம்-ராசிக்கும், தனு-ராசிக்கும் அதிபதியாவார்.
சுக்கிரன் கிரகம்: ரிஷபம்-ராசிக்கும், துலாம்-ராசிக்கும் அதிபதியாவார்.
சனி கிரகம்: மகரம்-ராசிக்கும், கும்பம்-ராசிக்கும் அதிபதியாவார்.
ஒருவருடைய ஜாதக-குறிப்பில்; அவர் பிறந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த ராசிகளில் நின்றனவோ அதனை குறித்திருப்பார்கள். அவைகள் தங்கள் சொந்த ராசிகளில் இருந்து விலகி வேறு ராசிகளிலும், சில சமயங்களில் சொந்த ராசிகளிலும் இருக்கலாம். அவை சிசு பிறந்த நேரத்தின் கோசரநிலையாகும்.
ஆகவே; நாம் ஒருவருடைய ஜாதக குறிப்பைப் பார்த்து பலன் அறிய முற்படும் பொழுது கிரகங்களின் மூன்று நிலைகள் கவனிக்கப்படுகின்றன்.
முதலாவதாக அவற்றின் சொந்த (உரிய) இருப்பிடம்;
இரண்டாவதாக சிசு பிறக்கும் போது கிரகங்களின் (கோசர நிலை) இருப்பிடம் (ஜாதக குறிப்பில் உள்ளவை);
மூன்றாவதாக தற்போதைய இருப்பிடம் (தற்போதைய கோசர-நிலை) என்பனவாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சோதிட வாய்பாடு உடன் சில தேவையான விளக்கங்கள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
60 தற்பரை = 1 வினாடி
60 வினாடி = 1 நாளிகை
60 நாளிகை = 1 நாள்
365 நாள் + 15 நாளிகை + 31 விநாடி + 15 தற்பரை = 1 சௌர வருஷம்
60 வினாடி = 1 நாழிகை
60 நாழிகை = 1 நாள்
2 1/2 நாழிகை = 1 மணி
2 1/2 வினாடி = 1 நிமிஷம்
ஒரு நாள் : 60 நாழிகை (24 மணி)
ஒரு நாழிகை : 60 விநாழிகை
ஒரு விநாழிகை :60 லிப்தம்
ஒரு லிப்தம் : 60 விலிப்தம்
ஒரு விலிப்தம் : 60 பரா
ஒரு பரா : 60 தத்பரா
சந்திரன் இராசி மண்டல வலயத்தை சுற்றி வரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் எந்த நட்சத்திரத்தின் மேல் நகர்கின்றதோ அப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்திற்குரிய நட்சத்திரமாக கொள்ளப்படுகின்றது.
சாத்திரத்தில்
கரணம் என்பது திதியில் பாதியாகும். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ, 2. பாலவ, 3. கெலவ, 4. தைதூலை, 5. கரசை, 6. வணிசை, 7. பத்தரை, 8. சகுனி, 9. சதுஷ்பாதம், 10. நாகவம், 11. கிம்ஸ்துக்னம்.
இன்றைக்கு என்ன திதி என்று பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். அதை எப்படிக் கணக்கிடுவது, அதன் உபயோகம் என்ன என்பது பற்றியும் அறிய வேண்டியது அவசியம்
இரு வகையான யோகங்கள் பஞ்சாங்கத்தில் குறிக்கப்படுகின்றன. முதலாவது சூரியனும், சந்திரனும் சம்பந்தப்பட்டது.
அதாவது வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும்.
இன்னும் சற்று விளக்கமாகக் கூறப்போனால் சூரியன், சந்திரனின் ஸ்புடங்களையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும்
. இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை " நாம யோகம்" என்பார்கள். அவையாவன:
1.விஷ்கம்பம், 2.ப்ரீதி, 3.ஆயுஷ்மான், 4.சௌபாக்யம், 5.சோபனம், 6.அதிகண்டம், 7. சுகர்மம், 8. திருதி, 9.சூலம், 10.கண்டம், 11.விருதி, 12.துருவம், 13. வியாகாதம், 4. ஹர்ஷணம், 15. வஜ்ரம், 16. சித்தி, 17.வியதிபாதம், 18. வரீயான், 19.பரீகம், 20. சிவம், 21. சித்தம், 22. சாத்தீயம், 23. சுபம், 24.சுப்ரம், 25.பிராம்யம், 26.ஐந்திரம், 27. வைதிருதி.
மற்ற யோகம் சுபாசுப யோகம்;
சித்த யோகமும் அமிர்த யோகமும் சுபகருமங்களுக்கு உரிய சுப யோகங்களாகும்.
மரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம், திரிபுஷ்கர யோகம் எனபன சுப கருமங்களுக்கு விலக்கப்படும் அசுப யோகங்களாகும்.
நக்ஷ்த்திராத்தையும், கிழமையையும் வைத்தும் யோகம் கணக்கிடப்படுகிறது. இன்ன இன்ன கிழமைகளில் இந்த இந்த நக்ஷ்த்திரங்கள் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது.
உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நக்ஷ்த்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும்.
ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நக்ஷ்த்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும்.
சௌர வருஷம்: சூரியன் மேடராசியின் ஆரம்ப நட்சத்திரத்திரமான அஸ்வினியில் பிரவேசிக்கும் காலம் முதல் மீனராசியின் கடைசி நட்சத்திரமான ரேவதியை விட்டு நீங்கும் காலத்தைக் குறிக்கும் (Sidereal revolution of Earth round the Sun). இக்காலப்பகுதி; சராசரியாக 365 நாள், 15 நாடி, 23 வினாடிகளைக் கொண்டதாகும்.
சாயன வருஷம்: சூரியன் மேஷாயன விஷூவத்தில் பிரவேசித்து திரும்ப மேஷாயன விஷூவத்தை வந்தடையும் காலத்தைக் குறிப்பதாகும் Tropical revolution of Earth round the Sun. இக் காலப்பகுதி; 365 நாள், 14 நாடி, 32 வினாடிகளைக் கொண்டதாகும்.
சாந்திர வருஷம்: சௌரவருஷப்பிறபிற்கு முன் அதனை அடுத்து ஆரம்பிக்கும் பூர்வபக்கப் பிரதமை முதல் அடுத்த சௌர வருஷப்பிறபுக்கு முன் நிகழும் அமாவாசை முடியவுள்ள காலத்தைக் குறிப்பது. இக் காலப் பகுதி சுமார் 354 நாட்கள் கொண்டது.
சௌர மாதங்கள்: மேடம் முதல் மீனம் ஈறாகவுள்ள பன்னிரண்டு ராசிகளிலும் சூரியன் சஞ்சரிக்கும் சித்திரை முதல் பங்குனி வரையான 12 காலப் பிரிவுகளாகும். பகல் மானத்துள் சங்கிராந்தி நிகழ்ந்தால் அன்றும்; இரவு நிகழுமாயின் மறுநாளும் மாதப்பிறப்பாக கொள்ளப்படும்.
சாந்திர மாதங்கள்: பூர்வப்க்க பிரதமை தொடக்கம் அமாவாசைமுடியும்வரை உள்ள சைத்திரம் முதல் பாற்குண்ம் வரையான 12 காலப் பிரிவுகளாகும். மூன்று சௌர வருஷத்தில் 37 சாந்திர மாதங்கள் நிகழும். அதனால் சௌரமானத்துடன் சாந்திரமானம் இணங்கிச் செல்லும் பொருட்டு ஓர் சௌரமாதத்தில் இரண்டு அமாவாசை நிகழ இடையில் வரும் சாந்திரமாதம் "அதிகமாதம்" என் நீக்கப்படும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஏழு ஸ்வரங்களுக்கும் ஏழு தீவுகள் இறைவனால் படைக்கப்பட்டன .இதை சப்த தீவுகள் என்று அழைக்கப்பட்டனர்
^^^^^^^^^^^^^^^^^^^^^^
அவை பின்வருமாறு
அனலைதீவு
எழுவைதீவு
காரைதீவு
நயினாதீவு
புங்குடுதீவு
மண்டைதீவு
வேலணை
இலங்கு கை என்பது இலங்கை ஆகியது
புங்குடுதீவு அதாவது பொன் கொ டு தீவு என்று அழைக்கப்பட்ட இத்தீவுகள்
தனக்குள் ஐந்து பிரிவுகளைக் கொண்டவை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இறுப்பிட்டி
குறிகாட்டுவான்
பெருங்காடு
மடத்துவெளி
ஊரதீவு
%%%%%%%%%%%%%%%%%%%%%
களபூமி
காரைநகர்
கோவளம்
தங்கோடை என்கிற நான்கு பிரிவுகளை காரை தீவு தன்னகத்தே கொண்டது
இங்கு பல முட்செடிகள் இருந்தன அவற்றை காரை முட்செடி என்று அழைப்பர் .நாளடைவில் சுண்ணாம்பு காரை வீடுகள் உண்டானதால்இப்படி அழைத்ததாகவும் கூறுகிறார்கள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அல்லைப்பிட்டி
ஊர்காவற்றுறை (காவலூர்)
கரம்பொன்
சரவணை
சுருவில்
நாரந்தனை பரித்தியடைப்பு
புளியங்கூடல்
மண்கும்பான்
வேலணை
சாட்டி
தம்பட்டி
என்கிற பன்னிரண்டு பகுதிகளைக் கொண்டது தான்
வேலணை என்கிறதீவு .பன்னிருகை யனாகிய ஆறு திருமுகநின் பெயர்களை மறை பொருளாகக் கொண்டு இருக்கின்றன இவை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நெடுந்தீவு தனக்குள் பதின்மூன்று பகுதிகளைக் கொண்டது
ஆலங்கேணி
களபூமி
காரைநகர்
குந்துவாடி
கோவளம்
சாமித்தோட்டமுனை
தங்கோடை
தீர்த்தக்கரை
நெடுந்தீவு
பெரியான்துறை
பூமுனை
மாவலித்துறை
வெள்ளை
எவன் இந்த தீவை தனக்குள் ஆட்சிப் படுத்துகிறானோ .அவனே உலகை ஆளுவான்
என்று நெடுமால் கூறியதாக எங்கோ ஒரு நாள் வாசித்தது இன்றும் ஞாபகத்தில் உள்ளது .அந்த ஆதாரம் இல்லாததால் என்னால் எழுத முடியவில்லை .இது பொன் விளையும் பூமி என்கிறார்கள் ஆன்றோர்கள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நயினார் தீவு இது மணிபல்லவம் .மணிமேகலை வாழ்ந்த இடம்
நாகர்கள் தங்களுக்குள் மதம் மாறி புத்தமதத்தை தழுவிய பொழுது இங்கே நாக விகாரைகளை கட்டினர்
இங்கிருந்து பல நாக விகாரைகள் கந்தர் ஓடை .மாதகல் போன்ற இடங்களில் நாகர்களால் அமைக்கப்பட்டதாம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மண்டை தீவு மூலிகைத் தீவு என்ற ளைக்கப்பட்டது .பல கல்விமான்களை தந்த ஊர்
ஆதாரங்கள் சொற்பமாகவே கிடைக்கப்பெற்றன
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பஞ்சாங்கம் என்பது சைவர்களின் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை எனலாம். பஞ்சாங்கம் என்பது (பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம் ) ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். இக் காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும், சோதிடக் கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது.
பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூர்ய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது
வாரம்
திதி
கரணம்
நட்சத்திரம்
யோகம் இவை தான் பஞ்ச அங்கங்கள்
திதி என்பது சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து வரையான வளர்பிறைக் காலத்தில் 15 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். இவ்விரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டிருக்கின்றன. சுக்கில பட்சத்தில் வரும் 14 திதிப் பெயர்களே கிருஷ்ண பட்சத்திலும் வருகின்றன, அதன் 30 பெயர்களும் வருமாறு:
1 அமாவாசை 16. பூரணை
2. பிரதமை 17. பிரதமை
3. துதியை 18. துதியை
4. திருதியை 19. திருதியை
5. சதுர்த்தி 20. சதுர்த்தி
6. பஞ்சமி 21. பஞ்சமி
7. சஷ்டி 22. சஷ்டி
8. சப்தமி 23. சப்தமி
9. அட்டமி 24. அட்டமி
10. நவமி 25. நவமி
11. தசமி 26. தசமி
12. ஏகாதசி 27. ஏகாதசி
13. துவாதசி 28. துவாதசி
14. திரயோதசி 29. திரயோதசி
15. சதுர்த்தசி 30. சதுர்த்தசி
ரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.
11 கரணப் பெயர்களும் வருமாறு:
பவம்
பாலவம்
கௌலவம்
சைதுளை
கரசை
வனசை
பத்திரை
சகுனி
சதுஷ்பாதம்
நாகவம்
கிமிஸ்துக்கினம் ஆகும்
நட்சத்திரங்கள் என்பது ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது.
சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர்.
யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20' அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும். எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20' அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் "தின யோகம்", "நித்திய யோகம்", "சூரிய சித்தாந்த யோகம்" போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது சோதிடம்..
1. விஷ்கம்பம் 10. கண்டம் 19. பரிகம்
2. பிரீதி 11. விருதி 20. சிவம்
3. ஆயுஷ்மான் 12. துருவம் 21. சித்தம்
4. சௌபாக்கியம் 13. வியாகதம் 22. சாத்தீயம்
5. சோபனம் 14. அரிசணம் 23. சுபம்
6. அதிகண்டம் 15. வச்சிரம் 24. சுப்பிரம்
7. சுகர்மம் 16. சித்தி 25. பிராமியம்
8. திருதி 17. வியாதிபாதம் 26. ஐந்திரம்
9. சூலம் 18. வரியான் 27. வைதிருதி
யோகத்தின் வரைவிலக்கணத்துக்கு அமைய, ஒரு குறித்த நேரத்தில் என்ன யோகம் என்பதைக் கணிப்பதற்குப் பின்வரும் சூத்திரம் பயன்படுகிறது:
(சூரியனின்_இருப்பிடம் + சந்திரனின்_இருப்பிடம்) / 13° 20'
இதில் கிடைக்கும் ஈவு, விஷ்கம்பத்தின் தொடக்கத்தில் இருந்து கடந்து போன யோகங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். எனவே அடுத்த யோகமே குறித்த நேரத்தில் இருக்கும் யோகம் ஆகும். மீதம் அடுத்த யோகத்தில் கடந்த கோண அளவைக் குறிக்கும்.
சூரியனின் இயக்கத்தை அடைப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. இதிலும் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. 1 சௌர வருஷ முறை
2 சாயன வருஷ முறை
ஞாயிறு இயக்கம் தொடங்குவது மேஷ ராசியின் முதல் நட்சத்திரத்திரமான அஸ்வினியில் பிரவேசிக்கும் காலம் முடிவது மீனராசியின் கடைசி நட்சத்திரமான ரேவதி. தொடக்கம் மற்றும் முடிவு ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் வருடம் ஆகும் (Sidereal revolution of Earth round the Sun). ஒவ்வொரு இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் (சித்திரை முதல் பங்குனி வரை சௌர மாதம் ஆகும். சௌரமான முறையில் ஒரு வருடம் என்பது சராசரியாக 365 நாள், 15 நாடி, 23 வினாடிகளைக் கொண்டதாகும். பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: தமிழ் நாடு, பஞ்சாப், ஹரியானா, ஒரிசா, மேற்கு வங்கம்
மேலும்
சூரியன் மேஷாயன விஷூவத்தில் பிரவேசித்து திரும்ப மேஷாயன விஷூவத்தை வந்தடையும் காலம சாயன வருஷம் என்று அழைக்கப்படுகிறது. (Tropical revolution of Earth round the சன்). சாயன வருஷம் என்பது 365 நாள், 14 நாடி, 32 வினாடிகளைக் கொண்டதாகும். பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: கேரளா (பஞ்சாங்கம்: கொல்லம் ஆண்டு)
சந்திரனின் இயக்கத்தை அடைப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன்பு வரும் பூர்வபக்ஷ பிரதமை திதி தொடங்கி அடுத்த சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன் வரும் அமாவாசை முடியவுள்ள ஒரு ஆண்டு காலத்தைக் குறிப்பது சந்திரமான முறை எனப்படும். இம்முறையில் ஒரு வருடம் என்பது சுமார் 354 நாட்கள் கொண்டது. பூர்வப்க்ஷ பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள சைத்திரம் முதல் பாற்குண்ம் வரையான 12 காலப் பிரிவுகள் சந்திர மாதங்களாகும். பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: ஆந்திரப் பிரதேசம் (தெலுங்கு பஞ்சாங்கம்), கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் (கார்த்திக ஷுக்லாதி பஞ்சாங்கம்)
சக வருட பஞ்சாங்கம்
பசலி வருஷ பஞ்சாங்கம்:
கலியுகாப்தம் பஞ்சாங்கம்
விக்கிரம வருஷம்
மகா வீரர் வருஷம்என்பவை பற்றி பிறிதொரு தருணம் பழகுவோம்
தமிழர்களும்
திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பெளர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். தமிழக அரசு கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.
திருக்கணித பஞ்சாங்கம் சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். அனைத்து கிரகங்களும் தங்களுக்கு உள்ள இழுப்பு விசையால் சந்திரனை தங்களை நோக்கி இழுக்கின்றன. சந்திரனுக்கு ஈர்ப்பு விசை குறைவென்பதால் மற்ற கிரகங்கள் அதனை இழுப்பதால் சந்திரன் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவதுண்டு.
திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் முறைக்கு முறை வெளிவருகிறது. திருக்கணிதப் பஞ்சாங்கள்: ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம், வாசன் சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம், ஆதவன் திருக்கனிதப் பஞ்சாங்கம், குமரன் திருக்கணித பஞ்சாங்கம், பாலன் திருக்கணித பஞ்சாங்கம், ராஷ்ட்ரீய பஞ்சாங்கம், சபரி சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம். என்பவை புகழ்பெற்ற திருக்கணித பஞ்சாங்க புத்தகங்களாகும்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிசிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம்என்றும் இருக்கிறது .
வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும்.
தமிழ் நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது. தமிழ் நாட்டில பற்பல வாக்கியப் பஞ்சாங்கங்கள் வெளியிடப்படுகின்றன: ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம், ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்க புத்தகங்களாகும்.
இலங்கையில் இரகுநாத அய்யர் பரம்பரையினர் வாக்கிய பஞ்சாங்கத்தையே கடைப் பிடிக்கிறார்கள்
மட்டுவில் திருக்கணித பஞ்சாங்கமே உண்டு
திதேஶ்ச ஶ்ரியமாப்நோதி வாராத் ஆயுஷ்ய வர்தனம்
நக்ஷத்ராத் ஹரதே பாபம் யோகாத் ரோக நிவாரணம்
கரணாத் கார்ய ஸித்திஶ்ச பஞ்சாங்க பலமுத்தமம்
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்தவுடன் இன்று என்ன திதி என்று அறிவதால், செல்வம் பெருகும்.
கிழமையை அறிவதால் ஆயுள் வளரும். நட்சத்திரம் அறிவதால் பாபங்களில் சிறிது குறையும். யோகம் அறிவதால் ரோகம் விலகும். கரணம் அறிவதால் காரியம் ஸித்தியாகும். ஆகவேதான் ஒவ்வொரு நாளும் காலையில் பஞ்சாங்க விபரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
இவற்றில் வானசாஸ்திர அடிப்படையில் (நவ)கிரகங்களின் சஞ்சாரம் கணக்கிடப்பட்டு வெளியிடப்படுகின்றன.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
முக்கால் = ¾ (மூன்றின் கீழ் நான்கு)
முன்-அரை = ½ (ஒன்றின் கீழ் இரண்டு)
அக்-காலரைக்கால் = 3/8 (மூன்றின் கீழ் எட்டு)
இருமா = 1/10 (ஒன்றின் கீழ் பத்து)
மாகாணி = 1/16; வீசம் (ஒன்றின் கீழ் பதினாறு)
ஒரு மா = 1/20 (ஒன்றின் கீழ் இருபது)
இரண்டு காலகளும் வலுவிழந்து, கோல் ஊன்றி நடப்பதற்கு முன், தலை முடியின் முன் புறம் நரை தோன்றும் முன், அந்தக் காலனைக் கண்டு அஞ்சி நடுங்குவதற்கு முன், விக்கல் எடுத்து இருமி உயிர் போகும் முன், மரணமடைந்து சுடுகாட்டுக்குப் போகும் முன், காஞ்சி மாநகரில், எழுந்தருளியுள்ள ஏகாம்பரனை இன்றே நீ வணங்குவாய் மானிடனே !என்பது உங்களுக்குப் புரியவில்லையா ?
மேலே உள்ள பின்னங்களை வைத்து உண்டான பாடல் இது
தமிழின் சிறப்பு இது தான்
முக்காலுக்கு ஏகாமுன்
முன்நரையில் வீழாமுன்
அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமுன்
- விக்கி
இருமாமுன்
மாகாணிக்கு ஏகாமுன்
கச்சி
ஒருமாவின் கீழரை இன்று
ஓது.
முக்காலுக்கு ஏகாமுன் முன்நரையில் வீழாமுன்
அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக்கு ஏகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரை இன்று ஓது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நல்லூர் சின்னத்தம்பிப் புலவரும்
இணுவில் சின்னத்தம்பிப் புலவரும்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சின்னத்தம்பிப் புலவரின் தந்தை வில்லவராய முதலியார் நல்லூரில் அக்காலத்திலே செல்வத்தாலும் ஈகையாலும் சிறந்து விளங்கியர். கூழங்கைத் தம்பிரான் இவரது வீட்டிலே இராக்காலத்திலே வித்தியாகாலட்சேபஞ் செய்து வந்தனர். சின்னத்தம்பிப் புலவர், தம்பிரான் காலக்ஷேபத்தின் பொருட்டுப் படித்துப் பொருள் சொல்லி வந்த பாட்டுக்களையெல்லாம் ஏழு வயதளவில் அவதானம் பண்ணி உடனே அவ்வாறே ஒப்பித்து வந்தனர். ஒருநாள் அப்புத்திரனார் வீதியிலே நின்று விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு புலவர் வில்லவராய முதலியார் வீடு எங்கேயென்று வினாவ, அப்புத்திரனார் அவரைப் பார்த்து,
பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்
நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரபை
வீசுபுகழ் நல்லூரான் வில்லவ ராயன்றன்
வாசலிடைக் கொன்றை மரம்.
என்று கூறினர். அதுகேட்ட புலவர் அவரை மெச்சி இச்சிறு பருவத்தே இத்துணைச் சிறந்த கவியினாலே விடை கூறிய நீ வரகவியாதல் வேண்டுமென ஆசி கூறிச் சென்றாராம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^
இணுவில் சின்னத்தம்பிப் புலவர் யாழ்ப்பாணம் இணுவிலில் கி.பி. 18 ஆம் நூற்றண்டில் வாழ்ந்தவர். இலக்கியத்திற் பல புதுமைகளைப் புகுத்தி பஞ்சவன்னத் தூது என்னும் தூது சிற்றிலக்கிய வடிவத்தை ஆக்கியவர். இது தவிர 'இணுவைச் சிவகாமசுந்தரி பதிகம்', 'இளந்தாரி புராணம்', 'சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்', 'நொண்டி நாடகம்', 'கோவலன் நாடகம்', அனிருத்த நாடகம்' ஆகியவற்றையும் பாடியுள்ளார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இணுவிலான் என்றால் கிழங்கு தின்னி என்பார்கள்
உடல் வலிமைக்குப் பெயர்போனது
ஆண்மை பெருக்கி
தினமும் உண்பதால் ஆண்மை பெருகும்
இதனால் தான் இணுவில் ஆண்கள் கட்டுமஸ்தான தேக வாகு கொண்டவர்கள் .அதிகமாக உண்டால் கழுத்தின் பின்னே பெரிய கட்டி வளர்ந்து காளை மாடுக்கு இருப்பது போல இருக்கும்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அமேசானை பிறப்பிடமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டில் கேரளாவில் போர்துகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
கேரளாவில் இருந்து இணுவிலுக்கு இடம் பெயர்ந்தோர் பலர் .அதனால் இணுவிலில் மரவள்ளிக் கிழங்கு புகையிலை உற்பத்திப் பொருட்கள் ஆகின
செய்வினை சூனியம் ,மாந்திரீக சாத்திர வல்லுனர்கள் வளர்ந்தார்கள்
தற்காலத்தில் உணவுக்காகப் பயிரிடப்படும் மரவள்ளி, ம. எசுக்கியூலெண்டா தாவர இனத்தின் துணை இனமான பிளபெலிபோலியா என்னும் காட்டு மரவள்ளி இனத்திலிருந்தே உருவானதாகக் கருதப்படுகின்றது. இக் காட்டுவகையின் வீட்டுப் பயிராக்கம் ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு உள்ளாகவே தொடங்கியது. கிமு 6,600 காலப் பகுதியைச் சேர்ந்த, மெக்சிக்கோ குடாவின் தாழ்நிலப் பகுதியில் அமைந்துள்ள சான் ஆண்ட்ரெசு தொல்லியல் களத்தில் மரவள்ளி மகரந்தப்பொடி காணப்பட்டது. எல் சல்வடோர் நாட்டில் உள்ள 1,400 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாயன் காலத்துத் தொல்லியல் களமான ஜோயா டி செரனில் மரவள்ளிப் பயிர்செய்கை குறித்த நேரடியான சான்றுகள் கிடைத்துள்ளன. தென்னமெரிக்காவின் வடக்குப் பகுதி, நடு அமெரிக்காவின் தெற்குப் பகுதி, கரிபியப் பகுதி ஆகியவற்றை எசுப்பானியர்கள் ஆக்கிரமித்த காலத்துக்கு முன்பே, மரவள்ளி, அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக ஆகிவிட்டது. போத்துக்கேய, எசுப்பானியக் குடியேற்றவாதக் காலங்களிலும், இப் பகுதியில் மரவள்ளிச் செய்கை தொடர்ந்து நடைபெற்றது. கொலம்பசின் காலத்துக்கு முற்பட்ட அமெரிக்காக் கண்டத்தில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக விளங்கிய மரவள்ளி அவர்களின் தாயக ஓவியங்களிலும் இடம்பெற்றது. மோச்சே மக்கள் தமது மட்பாண்டங்களில் மரவள்ளியை வரைந்தனர்.
மரவள்ளிக் கிழங்கு பெரிய அளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயிராகும். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மில்லியன் மக்கள் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இக்கிழங்கிலிருந்து சுமார் 300 கிலோ கலோரி ஆற்றல் பெறலாம். வளரும் நாடுகளில் மரவள்ளிக் கிழங்கு மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வாணிகப் பயிராகவும் உள்ளது.
உலகின் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் மட்டும் 6% உற்பத்தி செய்யப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி செய்யும் மற்ற சில நாடுகள் பிரேசில்,கொலம்பியா, வெனின்சுலா, கியூபா, போர்ட்டோ ரிகோ, ஹைதி, டொமினிக்கன் குடியரசு, மேற்கிந்தியத் தீவுகள், நைஜீரியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகும்.
உலகெங்கும் சுமார் 15.7 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு சராசரி 10 டன்கள் மரவள்ளிக் கிழங்கு வீதம் 158 மில்லியன் டன்கள் உற்பத்தியாகிறது. மரவள்ளி கிழங்கு பயிரிடப்படும் கண்டங்களில் 51.44 மில்லியன் ஹெக்டேர் அளவில் ஆப்பிரிக்கா முதல் இடத்திலும், ஆசியா 3.97 மில்லியன் ஹெக்டேர் அளவில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
உலகளவில் மரவள்ளிக் கிழங்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் 57%-ம் (சுமார் 95 நாடுகளில்) ஆசியாவில் 25%-ம் விளைவிக்கப்படுகிறது. மண் வளம் போன்ற எவ்விதமான வேளாண் சூழலையும் தாங்கி வளரக்கூடிய பயிராதலால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் குறிப்பாக, ஆப்பிரிக்கா,அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் ஒரு முதன்மைப் பயிராக மரவள்ளிக் கிழங்கு விளங்குகிறது.
மரவள்ளிக் கிழங்கு (Tapioca Cassava) என்பது கிழங்கு வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவுப் பொருள் ஜவ்வரிசி ஆகும்.
manioakஎன்பதும் இது தான் .casava என்பதும் இது தான்
பல கசனோவாக்களைஉருவாக்கும் பெருமை கொண்டது
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
மந்திரம் பொய்யானால்......,
"பாம்பை பாரு"..*
*மருந்து தான் பொய்யானால்......,
" வாணம் பாரு"..*
*சாஸ்திரம் பொய்யானால்.....,
"கிரகணம் பாரு"....*
*சாமிதான் பொய்யானால்....,
" சாணம் பாரு"..*
இதுதான். ...,
"நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்".....!!.
இதற்கான விளக்கம்:
மந்திரம் பொய்யானால்.....,
பாம்பை பாரு....!!
"மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால்".......,
படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக......,
" மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்".....!!
பயப்பட வேண்டாம்....!!
"மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்ல விட்டு"......,
நீங்கள் தள்ளி நின்று இதைப் பார்க்கலாம்.....!!
மருந்து தான் பொய்யானால்.....,
வாணம் பாரு:*
வாணவேடிக்கை
```````````````````````````` "பட்டாசுகளுக்குள் இருக்கும் மருந்து"....,
"அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று"......,
" வண்ண கோலங்கள் காண்பிக்கிறது"......!!
சாதாரண மருந்து....,
என நாம் நினைத்தால்....,
அதன் சக்தியை தெரிந்து கொள்ள.......,
" வாணவேடிக்கையை பாருங்கள்".....,
என்பது தான் இதன் பொருள்.
சாஸ்திரம் தான் பொய்யானால்.......,
கிரகணம் பாரு:
"ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட"......,
பஞ்சாங்கத்தில்....., முன்கூட்டியே......,
பௌர்ணமி,
அமாவாசை,
கிரகண காலகட்டங்கள்,
நட்சத்திர சுழற்சி
போன்றவை
இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்பு அடைகிறார்கள்.
எனவே...
"ஜோதிடம் பொய் கிடையாது".....!!
அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து......,
" பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்".....,
என்பது அதன் பொருள்....!!
சாமிதான் பொய்யானால்....,
சாணம் பாரு:
இது ரொம்ப சுவாரசியமான விஷயம்.
கிராமங்களில் பசு சாணத்தை எடுத்து....,
"அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள்"......!!
இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப் போட்டு விடுவார்கள்.
அதில் தான் ஆச்சரியம்.
"விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது".....!!
மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்திலும்.......,
" கரையான் குடியேறி, அதை சாப்பிடும்"....!!
'விநாயகர்' என்று....
" நாம் உருவேற்றி விட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது"...... !!
இதில் இருந்து கடவுள் இருப்பதை.......,
" பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம்"......,
என்பது தான் இந்த பழமொழியின் கருத்து.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அப்பொழுது எனக்கு ஆறு வயது இருக்கும் .சோ என்று இரவு முழுதும் காத்து அடித்தது .வெளியில் மழை அடங்கி தூவானம் கொட்டி கொண்டு இருந்தது .இரவு முழுதும் காய்ச்சலினால் அவதிப்பட்டு இருக்கிறேன்
விடிய அப்பா உடுவில் மான்ஸ் பாடசாலைக்கு சென்று விட்டார்
அம்மா என்னை அழைத்துக் கொண்டு இணுவில் ஆஸ்பத்திரிக்கு (டிஸ்பென்சாரி) பக்கத்தால் கூட்டிக்கொண்டு செல்கிறார்
பிரபல வைத்தியர் செல்லப்பா அவர் தான் எங்களின் குடும்ப வைத்தியர்
அவர் நாடி பிடித்து கை மருந்து கொடுப்பார்
போகும் வழியில் மின்சாரக் கம்பி அறுந்து கிடந்ததை யாரும் பார்க்கவில்லை .எண்ணியும் பாராமல் என்னையும் சிவாராசா என்பவரையும் மின்சாரம் பற்றிக் கொண்டது
தீப்பற்றிக் கொண்ட உடம்பு .யாரும் உதவிக்கு இல்லை
எங்கிருந்தோ வந்த ஒரு புண்ணியவான் கோடரிப் பிடியால் என் நெஞ்சில் அடிக்க கீழே சுருண்டு விழுந்தேன் .இது ஆஸ்பத்திரிக்கு முன்னால் நடந்தது
உள்ளிருந்த வைத்தியர்கள் சொன்னார்களாம் முடிந்து விட்டது .தூக்கி செல்லுங்கள் என்று ,
ஓரத்தில் இழுத்துசென்று அம்மா எனது நெஞ்சில் அடித்துப் புரண்டு அழுதிருக்கிறார் .மயக்கம் தெளிந்த என்னை தூக்கிக் கொண்டு செல்லப்பா பரிகாரியிடம் ஓடுகிறார்
என்னை தொழில் அனைத்து எடுத்துச்சென்ற பரிகாரியார் எனது காற்சட்டையை கழற்றி என் விதைகளை சோதி த்தித்தார்
உன் வம்சத்துக்கு பிழை போகவில்லை .இவன் இனி கருப்பாகவே இருப்பான் இனி ஆயுளுக்கு பயமில்லை என்று மருந்து கொடுத்தார் .மூன்று மண்டல மருந்து தருகிறேன் என்று எனக்கு மருந்து தந்து என்னைக் கொஞ்சி அனுப்பியது இன்றும் நினைவில் இருக்கின்றது
%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இரக்கம், துக்கம், சோகம், வலி, துன்பம் முதலிய உணர்ச்சிகளை தம்மால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஓலமிடுவது ஆதிமனிதன் காடுகளில் திரிந்த போதிலிருந்தே தொடரும் உள்ளுணர்வின் தாக்கம் ஆகும். இது அனைத்து கலாச்சாரங்களிலும் இன்றைக்கும் தொடரும் வழமை.
அதாவது ஐய..கோ!!!!!!
அல்லது ஐயோ என்றால் என்ன ?
அய்யா என்பது ஆண்டவனையும் கோ என்பது கோ மகனாகிய
அரசனையும் குறிக்கிறது
கோமகனே அய்யனே என்று அலறுவது
இனி கூறிப்பாருங்கள்
ஐ யோ ...........அய்யகோ
புரிகிறதா ?
தமிழன் எந்தச் சொல்லையும் காரணமின்றி கூறவில்லை
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஒருவர்பொதுவாக ஒரு ஏமாற்றுக்காரராய் இருந்து, தான்நல்லவர் என்று பாசாங்கு செய்வார்.
இவர்களை டுபாக்கூர் என்று அழைப்பார்கள் (இது தமிழ் அல்ல )
துபாஷ் என்றால் மொழி பெயர்ப்பு செய்பவர்
இவர்களை கிழக்கிந்தியக் கம்பனியார் அப்படி அழைத்தார்கள்
கோர்’ என்றால் (இந்தி / உருது )மொழியில்
இவர்கள் பொய் சொல்பவர்கள் என்று தான் பொருள்
இந்த துபாஷ் சொல் கோர் என்னும் சொல்லுடன் சேர்ந்து துபாகூர் என தமிழில் பயன்படுத்தப்பட்டது.
மேலும் துபாஷ் என்பது ஆங்கில dubash என்னும் சொல்லின் திரிபு.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாக
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சேர நாட்டில் அரசு வீற்றிருந்த செங்குட்டுவன் ஒரு நாள் பெரியாற்றங்கரையின் மணற்பரப்பிலே உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தான். அம் மன்னன் தம்பியாகிய இளங்கோவும், மதுரைத் தமிழ்ப் புலவராகிய சாத்தனாரும் உடன் இருந்தார்கள். அப்பொழுது மலைநாட்டுக் குறவர்கள் திரண்டு போந்து, சேரனை மனமார வாழ்த்தி, 'மன்னர் மன்னா! நினது மலைநாட்டில் என்றும் கண்டறியாத ஒரு காட்சியை இன்று கண்டோம். வாடிய முகத்தோடு, ஒரு மாது மலைமேல் ஏறி வேங்கை மரத்தின் கீழ் வந்து நின்றாள். ஒரு விமானம் விண்ணினின்றும் இறங்கிற்று. அவள் அவ் விமானத்திலேறி எம் கண் காண விண்ணுலகம் சென்றாள். அவள் எந்நாட்டாளோ? யார் மகளோ? அறியோம்' என்று கூறித் தொழுது நின்றார்கள். அது கேட்ட மன்னனும் இளங்கோவும் வியப்பும் திகைப்பும் உற்றார்கள். அந் நிலையில் மதுரைச் சாத்தனார், 'அரசே! அந் நல்லாள் வரலாற்றை நான் அறிவேன். அவள் சோழநாட்டுப் புகார் நகரத்திலே பிறந்தவள்; கண்ணகி என்னும் பெயருடையாள்; செல்வப் பெருங் குடியிற் பிறந்தும், முன்வினைப் பயனால் அவ்வூரை விட்டுத் தன் கணவனோடு மதுரையை அடைந்தாள். அங்கு அரண்மனைச் சிலம்பைக் களவாடிய கள்வன் என்று அரசன் ஆணையால் காவலாளர் அவள் கணவனைக் கொன்றார்கள். கணவனை யிழந்த மாது கொதித் தெழுந்து, பாண்டியன் முன்னே சென்று தன் கணவன் குற்றவாளியல்லன் என்று நிரூபித்தாள். அவள் சீற்றத்தால் மன்னனும் மடிந்தான், மதுரையும் எரிந்தது' என்று சொல்லி முடித்தார்.
அக் கதையைக் கேட்ட இருவர் உள்ளமும் உருகின. கவியரசராகிய இளங்கோ அக் கதையின் மூலமாகச் சில சிறந்த உண்மைகளை உலகத்தார்க்கு உணர்த்தலாமே என்று எண்ணினார். நீதி தவறிய அரசரை அறமே . ஒறுக்கும் என்பது ஓர் உண்மை. கற்புடைய மாதரை விண்ணுலகும் மண்ணுலகும் போற்றும் என்பது மற்றோர் உண்மை. வினையின் பயன் விளைந்தே தீரும் என்பது பிறிதோர் உண்மை. இம் மூன்று உண்மைகளும் கண்ணகியின் கதையில் அமைந்திருத்தலால், இளங்கோ அக் கதையைக்கொண்டு ஒரு காவியம் இயற்றக் கருதினார்.
"அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாக
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்"
என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுமாற்றால் இளங்கோவின் மனத்தில் அமைந்த கொள்கை இனிது விளங்குகின்றது. கண்ணகியின் சிலம்பு காரணமாகவே கதை விளைந்ததாதலின் சிலப்பதிகாரம் என்று இளங்கோவடிகள் அக் காவியத்திற்குப் பெயரிட்டார்.
இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் தமிழ்த்தாயின் கழுத்தில் இலங்கும் மணியாரமாகும் என்று கற்றறிந்தோர் கூறுவர். அக் காவியம் கற்போர் மனத்தை அள்ளும் திறம் வாய்ந்ததென்று கட்டுரைத்தார் பாரதியார். "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ் நாடு" என்பது புனைந்துரையன்று; பொருளுரையே.
இத் தகைய காவியத்திலமைந்த நயங்களிற் சிலவற்றைக் காண்போம் : கண்ணகியை மணந்து இன்புற்ற கோவலன், நலமெல்லாம் ஒருங்கே வாய்ந்த அந் நங்கையை நோக்கி,
"மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
அரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
மலையிடைப் பிறவா மணியே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ
தாழிருங் கூந்தல் தையால் நின்னை"
என்று கூறும் கட்டுரையி லமைந்த காதற்சுவை நம் உள்ளத்தைக் கவர்கின்றதன்றோ?
தமிழ் வளர்த்த பாண்டியனுக்குரிய வைகை ஆற்றை, "புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி வையை என்ற பொய்யாக் குலக்கொடி" என்று இளங்கோவடிகள் போற்றும் பொழுது நம் செவியில் இன்பத் தேன் வந்து பாய்கின்றதன்றோ? இன்னும் சோழநாட்டை வளநாடாக்கிய காவேரியாற்றை,
"பூவார் சோலை மயிலால் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி"
என்று அவர் வாழ்த்தும்பொழுது நம்முள்ளம் குளிர்கின்றதன்றோ?
இனி, மதுரையம்பதியிலே கணவனைப் பறிகொடுத்த கண்ணகி, தலைவிரி கோலமாக நின்றுகொண்டு,
"மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்
பட்டாங்கில் யானுமோர் பத்தினியே யாமாகில்
ஓட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையையும்"
என்று வஞ்சினம் கூறும்பொழுது நம் நெஞ்சத்தில் வீரம் பொங்குகின்றதன்றோ? சுருங்கச் சொல்லின், காவியத்தில் அமைதற்குரிய சுவைகள் எல்லாம் சிலப்பதிகாரத்தில் செவ்வையாக அமைந்திருக்கின்றன. ஆதலால், சிலம்பின் செல்வம் தமிழ் நாட்டுச் செல்வங்களுள் சிறந்த செல்வமாகும். கண்ணகி, மூன்று தமிழ் நாட்டுக்கும் உரிய பொருளாக விளங்குகின்றாள்.' சோழ நாட்டிலே பிறந்து பாண்டி நாட்டிலே கற்பின் பெருமையை நிறுவி, சேர நாட்டிலே தெய்விகமுற்ற கண்ணகியின் பெருமை தென்னாட்டிலுள்ள முந்நாடு களுக்கும் உரியதன்றோ? இதனாலேயே மதுரைச் சாத்தனார் இளங்கோவடிகளை நோக்கி,
"முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுக”
என்று வேண்டிக்கொண்டார். எனவே, மூன்று தமிழ் நாட்டின் தன்மையும், மூன்று முடிமன்னர் செம்மையும் ஒருங்கே சிலப்பதிகாரத்திற் காணலாம். மேலும் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழின் சிறப்பையும் சிலப்பதிகாரத்தால் அறியலாம். செஞ்சொற் களஞ்சியமாகிய அக் காவியத்தில் சிந்தைக்கினிய செவ்விய தமிழ் நடையுண்டு; செவிக்கினிய இசைப் பாட்டு உண்டு; கண்ணுக்கினிய கூத்துண்டு. ஆகவே, முத்தமிழ் இன்பம் நுகர விரும்பும் வித்தகர்க்குச் சிலப்பதிகாரமே சிறந்த விருந்தாகும்.
இன்னும் எக் காலத்திற்கும் எந் நாட்டிற்கும் பொதுவாகிய மாதர் கற்பும், மன்னர் நீதியும் சிலப்பதிகாரத்தில் நன்கு விளக்கப்படுகின்றன.
"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மையுண் டாகப் பெறின்"
என்று திருவள்ளுவர் அருளிய உண்மைக்குச் சிலப்பதிகாரமே சிறந்த சான்று. கற்பெனும் திண்மையே கண்ணகியின் வடிவம். அவ் வீரவடிவமே சேரன் செங்குட்டுவன் உள்ளத்தைக் கவர்ந்தது. கண்ணகிக்கு வீரக்கல் நாட்டி வழிபட விரும்பினான் சேரன் ; விண்ணளாவிய இமயமலையிற் போந்து சிலை எடுத்தான்; கங்கையாற்றில் நீராட்டினான்; தலை நகராகிய வஞ்சி மாநகரத்தில் கொண்டுவந்து அச் சிலையை நிறுவித் திருவிழாக் கொண்டாடினான். அத் திருவிழாவைக் காண வந்திருந்த பிற நாட்டுப் பெருவேந்தர், தம் நாடுகளிலும் பத்தினித் தெய்வத்தை வழிபடத் தொடங்கினார்கள். இவ்வாறு, பத்தினி வழிபாடு பாரத நாட்டிற் பரவியது. "கற்புக்கடம் பூண்ட இத் தெய்வமல்லது பொற்புடைத்தெய்வம் யாம் கண்டிலம்" என்ற வாக்கு மெய்யாயிற்று.
வீரக்கற்பு வாய்ந்த கண்ணகியின் கதையால் ஓர் அரசியல் உண்மையும் விளங்குகின்றது. நெறி தவறிய அரசனை அறமே ஒறுக்கும் என்னும் உண்மையைப் பாண்டியன் வரலாறு காட்டுகின்றது. அரண்மனைச் சிலம்பைக் களவாடிய கள்வன் அகப்பட்டான் என்று பொற்கொல்லன் சொல்லிய சொல்லை ஆராய்ந்து . பாராது, உண்மையை விசாரித்து அறியாது, 'அக் கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டுவருக' என்று பணித்தான் பாண்டியன். அரசன் ஆணையால் தன் கணவன் இறந்தான் என்றறிந்த கண்ணகி சீறி எழுந்தாள்; 'தீ வேந்தன் தனைக்கண்டு இத் திறம் . கேட்பேன்' என்று புறப்பட்டாள்; கருங்கூந்தல் விரிந்து . கிடக்க, கண்கள் கண்ணீர் வடிக்க, கையில் ஒற்றைச் சிலம்பேந்திக் காவலன் முன்னே தோன்றினாள்; கோவலனிடமிருந்த சிலம்பு அரண்மனைச் சிலம்பன்று, தன் சிலம்பே எனப் பாண்டியன் திடுக்கிடப் பேசினாள்; அச் சிலம்பை உடைத்துத் தன் வழக்கை மெய்ப்பித்தாள். அந் நிலையில் மன்னவன் கை சோர்ந்து, மெய் சோர்ந்தான்;
"தாழ்ந்த குடையன், தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன் !
மன்பதை காக்கும் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது; கெடுக என் ஆயுள்”
என மயங்கி விழுந்து மாண்டான். இங்ஙனம் கண்ணகிக்குச் செய்த தவறு காரணமாக உயிர் துறந்த மன்னவனை,
"தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணினீர்
கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ'
என்று நல்லார் வாழ்த்தினார்கள். ஆகவே, மாநிலம் காக்கும் மன்னவனை நீதி வழுவாத நெறி முறையே காக்கும் என்னும் அரசியற் கொள்கை சிலப்பதிகாரத் தால் உணர்த்தப்படுகின்றது. இத்தகைய செஞ்சொற் காவியத்தைத் தமிழுலகிற்குத் தந்த வஞ்சிக் கோவை நெஞ்சார வாழ்த்துவோமாக!
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
கற்றவர்க்கு சிறப்பு
^^^^^^^^^^^^^^^^^
பாண்டியருள் நெடுஞ்செழியன் என்னும் பெயருடைய வேந்தர் பலர்
இருந்திருத்தலின், அவரின் வேறுபடுத்தற்கு இவனைச் சான்றோர்
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என இவனது வென்றிச்செயலை
யெடுத்தோதிச் சிறப்பித்துள்ளனர். ஆரியப்படை யென்பது வடவாரிய
நாட்டுப்படைவீரர்களையாகும். தென்குமரிக்குத் தெற்கிலிருந்த தமிழகம்
கடல் கோட்படவே, பாண்டியரும் சோழரும் சேரரும் “இடஞ் சிறிதென்னும்
ஊக்கம்துரப்ப” நிலம் வேண்டி வடபுலத்தே முன்னேறிச் சென்று
கொண்டிருக்கையில், வடவாரியரும் தென்பகுதி நோக்கி வந்த
வண்ணமிருந்தனர். அங்ஙனம் வருவாரைக் கற்சிறைபோலத் தாங்கி
நிற்றலும், அடிவீழ்ந்து புகலடைத்தோரைப் பேணி யோம்புதலும் தமிழ்
மூவேந்தருடைய செயல்களாயின. ஆதலாற்றான் பண்டைத் தமிழ் நூல்கள்,
தமிழ்க் கருத்துக்கள் பலவாகவும் வடவாரியக் கருத்துக்கள் சிலவாகவும்
கொண்டுள்ளன. தமிழ்க் கருத்துக்களே நிறைந்திருந்த இலக்கணங்களும்
இலக்கியங்களும் குறிக்கொண்டு தேடியழிக்கப்பட்டன. வடவாரியக் கருத்துக்கள்
சிலவாகவாயினும் உடைய பழந்தமிழ் நூல்களே உளவாயின. இப்போதுள்ள
சங்க இலக்கியங்கள் நூற்றுக்கு மூன்று விழுக்காடேனும் வடவாரியக்
கருத்துக்களை யுடையவா யிருத்தலாற்றான் நிலை பேறு பெற்றன.
அடைக்கலம் புக்கு உட்பகையாய்ப் புறத்தே வெளிப்படா தொழுகினோ
ரொழிய, வெளிப்படையாய்ப் பொரவந்த ஆரியப்படையினை வஞ்சியாது
பொருது வெற்றி கொண்ட மாண்பினால் இந்நெடுஞ்செழியன் “ஆரியப்படை
கடந்த நெடுஞ்செழியனாய்”விளங்க லுற்றான். கோவலனைக் கொலைபுரிந்த
பாண்டியன் நெடுஞ்செழியனையும் இளங்கோவடிகள், “வடவாரியர் படை
கடந்து, தென்றமிழ்நா டொருங்கு காணப், புரைதீர் கற்பின் தேவி
தன்னுடன், அரைசுகட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்”என்பர்.
இவ்வேந்தனது நாடு நானிலத் தைந்திணை வளமும் பெருகவுடைய
தாயினும், கல்வி வளம் பெறாதாயின், சீரழியு மென்பதைத் தெளிய
வுணர்ந்தான். நாட்டுமக்கள் கல்வியறிவுடையராதல் வேண்டி, “கல்வி
வழங்கும் ஆசிரியனுக்கு உற்றவிடத் துதவுதல் வேண்டும்; வேண்டுமளவிற்கு
மிகவே அவற்குப் பொருள் வழங்குதல் வேண்டும்; மிக்க பொருள்
கொடுத்தவழியும் ஆசிரியனை வழிபடுதற்கு வெறுப்படைதலாகாது;
இவ்வாறெல்லாம் செய்து கல்வி கற்பது நன்று எனத் தொடங்கி
இப்பாட்டின்கண், கல்வியில்லாற்குத் தான் பிறந்த குடும்பத்திலே தன்னைப்
பெற்ற தாயாலும் சிறப்பளிக்கப்படமாட்டாது என்றும், அவன் நாட்டு அரசு
முறையும் கல்வியறிவுடையோனையே துணையாகக் கொள்ளுமே தவிரக்
கல்லாதானை யேலாதென்றும், கற்றோன் கீழ்நிலையில் பிறந்தானாயினும்,
அவற்குத் தலைமை யுண்டாகும்; மேல்நிலையிற் பிறந்தோனும்
அக்கீழ்ப்பிறந்தான் தலைமையிற்றான் அக் கல்விகுறித்து வழிபட்டொழுக
வேண்டுமென்றும், இவ்வாற்றால் குடும்பமும் சமுதாயமும் அரசியலும்
யாவையும் கல்வி நலத்தால் சிறப்படைதலால் கற்றல் நன்று என்றும்
வற்புறுத்தியுள்ளான்.
உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே
பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே
உற்றுழி உதவியும் - தன் ஆசிரியருக்கு ஓர் ஊறு பாடு
உற்றவிடத்து அது தீர்த்தற்கு உவந்து உதவியும்; உறுபொருள்
கொடுத்தும் - மிக்க பொருளைக் கொடுத்தும்;
பிற்றை நிலை முனியாது
கற்றல் நன்று - வழிபாட்டு நிலைமையை வெறாது கற்றல் ஒருவருக்கு
அழகிது;
பிறப்பு ஓரன்ன உடன்வயிற்றுள்ளும் - அதற்கு என்னோ
காரணமெனின், பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு வயிற்றுப்
பிறந்தோருள்ளும்;
சிறப்பின் பாலால் - கல்வி விசேடத்தால்;
தாயும்
மனம் திரியும் - தாயும் மனம் வேறுபடும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ
ருள்ளும் - ஒரு குடியின் கட்பிறந்த பலருள்ளே;
மூத்தோன் வருக
என்னாது-; அவருள் அறிவுடையோன் ஆறு - அவருள்
அறிவுடையோன் சென்ற நெறியே;
அரசும் செல்லும் - அரசனும்
செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் வேறுபாடு
தெரியப்பட்ட நாற்குலத்துள்ளும்;
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் -
கீழ்க்குலத்துள் ஒருவன் கற்பின்;
மேற்பால் ஒருவனும் அவன்கட்
படும்- மேற்குலத்துளொருவனும் இவன் கீழ்க்குலத்தானென்று பாராது
கல்விப் பொருட்டு அவனிடத்தே சென்று வழிபடுவனாதலான்
உற்றுழி யுதவுக என்றும், உறு பொருள் கொடுக்க என்றும்
அறிவுறுத்தவன், “பிற்றை நிலைமுனியாது கற்க”என்றது, இவ்விரண்டும்
செய்தவழித் தன்பால் உயர்வும் இவற்றைப் பெறும் ஆசிரியன்பால் தாழ்வும்
உண்டாதலால் அவ்வுயர்வுவழித் தோன்றும் மானம் ஆசிரியன் ஆணைவழி
நின்று தாழ்ந்து கேட்டற்குத் தடை செய்யும்; அதனால் கல்வியறிவு நன்கு
பெறப்படாமையோடு மாணாக்கர்க்குக் கடைமைநிலையும் உண்டாதலால், அம்
மானம் அறநெறிப்பட்ட மானமாகாதென விலக்கிப் “பிற்றைநிலை முனியாது
கற்க”என்றான். ஆசிரியற்கு உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்
மாணாக்கன் பொருணிலையில் உயர்ந்தானாயினும், அவ்வுயர்வை
மனங்கொள்ளாது பணிவுடையனாதல் அறமாதலாலும், பணிவிலனாதல்
அறத்துக்கு மாறாதலாலும், செல்வ மாணாக்கன் ஆசிரியன் பால்
பணிவிலனாகும் மானம் “அறநெறிப்பட்ட மானமாகா’ தாயிற்று. கல்வி
பயிலும் மாணாக்கன் தன் ஆசிரியனுக்கு ஓரளவு பொருள் கொடுத்தற்குக்
கடமைப்பட்டவனே. உரிய அளவு பொருள் கொடுத்தலின், ஆசிரியனுக்கு
ஊறுபாடுற்றவிடத்து உதவுதல் வேண்டா எனக் கருதற்க என்றற்கு “உற்றுழி
யுதவியும்”என்றும், உரிய அளவினும் மிகைபடவே தருக என்பான்,
“உறுபொருள் கொடுத்தும்” என்றும் கூறினான் ஊற்றுழி யுதவுதல்
எல்லார்க்கும் பொதுவாய் அறமாதலின் அதனை முதலிலும், உறுபொருள்
கொடுத்தல் செல்வமுடையார்க்கே இயல்வதாகலின், அச்சிறப்புப்பற்றி
அதனைப் பின் வைத்தும் மொழிந்தான். இக்காலக் கல்வித் துறையில்
இவ்வுணர்வு அறவே யில்லாதொழிந்தமையின், ஆசிரியர்களை
அடிமைகளாகக் கருதி யல்லற்படுத்தும் கீழ்மைப் பண்புடைய செல்வமாக்கள்
கல்வித் துறைகட்குத் தலைவர்களாகத் தோன்றி, நாட்டு மக்களின் நல்லறிவை
முளையிலே கெடுத்து, அவரிடையே ஒருமை யுணர்வும் சீர்த்த புலமையும்
உண்டாகாவாறு செய்துவிட்டதை இக்கால நிலை யெடுத்துக் காட்டுகிறது.
உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் கல்வி பயிலும் மாணாக்கற்குப்
பிற்றைநிலை எற்றுக்கு வேண்டுவது? ஒருவர்பால் அரிய பொருளொன்று
உளதாயின் அதனைப் பெற முயல்வோர் அவர்க்கு உற்றுழி யுதவி அவர்
அன்பைப்பெற முயல்வர்; அன்புளதானாலன்றி அருமையுடைய பொருளைக்
கொடுத்தற்கு அவர்க்கு மனமுண்டாகாது. அல்லதூஉம், அவ்வரிய பொருள்
விலைகொடுத்துப் பெறற்பாலதாயின், அதன் விலையினும் மிக்க
பொருளைக்கொடுத்துப் பெற முயல்வர். இஃது என்றும் காணக்கூடிய உலகியல்
நிகழ்ச்சி. ஆசிரியன்பால் உள்ள பொருளோ, அவன் மனங் கனிந்து ‘வழங்குதல்
வேண்டு’ மெனத் தானே விழைந்து கொடுத்தாலன்றி, வேறு எவ்வகையாலும்
எத்திறத்தாராலும் பெறக்கூடியதன்று. இதனைக் கொங்கு வேளிர், “அரசின்
ஆகாது ஆணையின் ஆகாது”என்றது ஈண்டு நினைவு கூரத்தக்கது. அன்பும்
வழிபாடுமே ஆசிரியன்பாலுள்ள அறிவுச் செல்வத்தைப் பெறுதற்கு
வாயிலாவன. ஆனதுபற்றியே இப்பாண்டியன், “உற்றுழி யுதவியும்
உறுபொருள் கொடுத்தும்”அன்பு செய்க; “பிற்றைநிலை முனியாது”வழிபடுக
என்று எடுத்த எடுப்பிலேயே வற்புறுத்தினான். திருவள்ளுவரும் “உடையார்
முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்”உயர்ந்தோர் என்றும், அவ்வாறு
“கல்லாதவர் கடையரே”என்றும் கூறினார். பெற்ற தாய்க்குத் தன் வயிற்றிற்
பிறந்த பிள்ளை எத்துணைப் பொலிவற்றிருப்பினும் மனவெறுப்புண்டாகாது;
திருவள்ளுவர், “ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்”என்பது காண்க.
அத்தகைய தாயும் தன் மகன் கல்வியில்லாமையாற் கடையனானா னென்பது
காண அருவருப்புக் கொள்வளென்பான். “தாயும் மனம் திரியும்”என்றான்.
“தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து, மன்னுயிர்க்கெல்லாம் இனிது”
என்பது, பெற்றோர்க்கும் கற்றோர்க்கும் நோக்கமாதலின், மாநிலத்து
மன்னுயிர்க் கின்ப வாழ்வு வழங்கும் அரசு முறை அறிவுடையோனையே
நோக்கி யியங்கும் என்பான், “அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்”
என்றான். அறிவுடையோன், “படை வேண்டுவழி வாளுதவலும், வினை
வேண்டுவழி அறிவுதவலும்”கடன் என்பதை வடநெடுந்தத்தனார்
உரைத்தவாற்றால் இனிதறியலாம். பார்ப்பார் அரசர் வணிகர் வேளாளரென்ற
நால்வகையினையும், “நாற்பால்”என்றான். இது வடவாரியப் பகுப்பு முறை.
தமிழகத்தில் தமிழ் மக்களிடையே இப் பாகுபாடு இன்றும் கிடையாது;
என்றும் இருந்ததில்லை வடவாரிய நூல்களையடிப்படையாகக்
கொண்டெழுந்த “இந்து லா”(Hindu Law) வில் மட்டில் இருக்கிறது.
வேளாளர் கீழ்ப்பாலாராயின், அவர்க்குரிய தொழிலான உழவு உயர்
தொழிலாகத் திருவள்ளுவர் முதலாய சான்றோர்களால் உயர்த்துக் காட்டப்பட
மாட்டாது. கல்வியறிவு நாற்பாலார்க்கும் பொதுவாதலின், அறிஞனை இப்
பாற்பாகுபாடு கட்டுப்படுத்தா தென்றற்கு, “கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பாலொருவனும் அவன்கட் படுமே”என்றான். “கீழ்ப்பா லொருவன்
கற்பின்”என்றாற்போல “மேற்பா லொருவன் கல்லா னாயின் அவனும்”
என்னாது, “மேற்பா லொருவனும்”என்றும், உரைகாரர், “மேற்குலத்துள்
ஒருவனும்”என்றும் கூறியது, மேற்பாலா னொருவன் கற்றவனாயினும்,
கீழ்ப்பாலொருவன் கற்றுத் தலைவனாயின், அவன்பாற் சென்று
வழிபடுதற்குரியன் என்பதை வற்புறுத்துகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக