‘தாளி முருங்கைத் தழை தூதனம் பசலை

வானிலறு கீரையுநெய் வார்த்துண்ணில் – ஆளியென
விஞ்சுவார் போகத்தில் வீம்புரைத்த பெண்களெலாம்
கெஞ்சுவார் பின்வாங்கிக் கேள்…’
RRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR
தாளிக்கீரை (ஒரு வகைக் கொடி), முருங்கைக்கீரை, தூதுவேளை, பசலை, அறுகீரை ஆகியவற்றில், ஏதாவதொரு கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து, சிறிதளவு பசு நெய் சேர்த்து தினமும் காலையில் மட்டும் நாற்பது நாள்கள் உண்டு வந்தால், ஆண்மை கட்டுக்கடங்காமல் பெருகும். கணவன் மேல் குறை கண்டுபிடித்து வீம்பு பேசிவரும் மனைவி மனம் மாறிக் கொஞ்சவும், கெஞ்சவும் தொடங்குவார்.&&&&&&&&&&&&&&&&&&&
ஆண்மைப் பெருக்கி வணிகம்’ இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலகமெங்கும் கொடிகட்டிப் பறக்கிறது. பாலியல் குறித்த புரிதல் இல்லாமையே இதற்கு மூல காரணம். உலகில் ஆண்மைப் பெருக்கி மருந்துகள் தயாரிக்க, கோடிக்கணக்கான சிட்டுக்குருவிகள், லட்சக்கணக்கான காண்டாமிருகங்கள், புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம். நாளிதழ்கள், பருவ இதழ்கள், தொலைக்காட்சிகள்… என அனைத்திலும் வெளியாகும் ‘லாட்ஜ் வைத்தியர்கள்’ பற்றிய விளம்பரங்கள் மூலமாகவே இந்த வணிகம் எவ்வளவு செழிப்பாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆண்மைக்குறைவை மையமாக வைத்தே கடைவிரிக்கும் இதுபோன்ற வைத்தியர்களிடம் ஏமாந்தவர்கள் ஏராளம் உண்டு.
ஆண்மையைப் பெருக்க, நாமே சமைத்து உண்ணக்கூடிய மருந்து உணவுகள் ஏராளமாக உள்ளன. தவிர, பாரம்பர்ய சித்த மருத்துவத்தில் அமுக்கரா லேகியம், மகா பூரணாதி லேகியம், அயப்பூநாகச் செந்தூரம் முதலான உயர்ந்த மருந்துகள் பலவும் உள்ளன. இவற்றைத் தேர்ச்சிபெற்ற சித்தமருத்துவர்களின் பரிந்துரைகள் மூலம் நியாயமான விலையில் வாங்கிச் சாப்பிட்டுப் பயன்பெறலாம். ஆயிரக்கணக்கில் கொள்ளை அடிக்கும் மருத்துவர்களை நாட வேண்டிய அவசியம் இல்லை.
முருங்கை மரத்தின் பிசினை நிழலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அரைத் தேக்கரண்டியளவு பொடியை, அரைத் தேக்கரண்டி கற்கண்டுப் பொடியுடன் சேர்த்து தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால், விந்து கெட்டிப்படுவதோடு செயல்திறன் அதிகமுள்ள விந்தணுக்கள் உற்பத்தியாகும். அடிக்கடி சிறுநீர் கழியும் நோயும் குணமாகும்.
முருங்கை விதையை வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்தால் இனிப்பாக இருக்கும். இந்த முருங்கை விதை, அநேக லேகியங்களில் சேர்க்கப்படுகிறது. முருங்கை விதையைப் பாலில் ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால், விந்தணுக்களின் செயல்படுதிறன் அதிகரிக்கும். ஒரு கைப்பிடி அளவு முருங்கைப் பூக்களைப் பசும்பாலில் போட்டுக் காய்ச்சி இரவில் குடித்து வந்தால் ஆண்மை பெருகுவதோடு, போக நேரமும் அதிகரிக்கும்.
Keine Fotobeschreibung verfügbar.

கருத்துகள்