விளை நிலத்தைப் பாதுகாக்க மரம், செடி, கொடி போன்றவற்றால் அமைக்கும் வேலி உயிர் வேலி (Live Fencing) எனப்படுகிறது.அந்தந்த மண்ணுக்கும், சூழலுக்கும் ஏற்ப தகுந்த உயிர் வேலியை அமைக்க வேண்டும். வேலியில் முள் வேலியே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐந்தடுக்கு உயிர் வேலி வகைகளும் உண்டு. சரியான மழைக்காலங்களில் உயிர் வேலி அமைப்பதால் தொடக்கத்தில் மழை நீர் வழியாக உயிர் பிடித்து பின்னர் வறட்சியைத் தாங்கி, நீண்ட பலன் தரும் அரணாக உயிர்வேலி அமைகிறது

வேலி என்பது நமது நிலத்தை காக்கும்பொருட்டு உயிரற்ற கம்பியால் வேலி போடாமல் உயிருள்ள மரங்களால் வேலி அமைப்பதே உயிர்வேலி ஆகும். உயிர்வேலி அமைப்பதன் அவசியம் என்னவென்றால் விலங்குகளிடமிருந்தும் (நடப்பன, ஊர்வன) மனிதர்களிடமிருந்தும் நமது நிலத்தை காக்கும் பொருட்டு அமைக்கப்படுவது. மேலும் இந்த உயிர்வேலியானது மண் அரிப்பை தடுத்தும்,பண்ணையாளரின் அனுமதி இல்லாமல் வாயிலை தவிர வேறு வழியில் வெளி ஆட்கள் பண்ணையின் உள்ளே நுழைய இயலா வண்ணம் அமைந்த ஒரு முள் வேலியாகவும், பல உயிர்கள் வாழும் இடமாகவும், பல உயிர்களுக்கு உணவு கிடைக்கும் ஒரு உணவு தொழிற்சாலையாகவும், மனிதர்களின் பழத்தேவையை பூர்த்தி செய்யும் ஒரு உணவுக்காடாகவும், கால்நடைகளின் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் பசுந்தீவனமாகவும், விறகுக்காகவும், மரச்சாமான்களுக்காகவும், பசுந்தாள் உரத்திற்காகவும், பருத்தியின் மூலம் உடை தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்கு தேவைப்படும் மூலிகைகள் அடங்கிய மூலிகைக்காடாகவும் பயன்படுகிறது.முள் மரங்களான முள்கிழுவை, பரம்பை, இலந்தை, ஒத்தக்கள்ளி, கொடுக்காப் புளி, பனை மரம் வெள் வேல், குடை வேல் போன்றவற்றை வளர்க்கலாம்.
சவுண்டல், மலை வேம்பு, சவுக்கு, நுனா போன்ற நீள்குடை மரங்களை வளர்க்கலாம்.
கால்நடை தீவனங்களான அகத்தி, முள்முருங்கை, மலைக்கிழுவை, ஆமணக்கு ஆகியவற்றை வளர்க்கலாம்.
மூலிகைகளான பிரண்டை, முடக்கத்தான், நொச்சி, கோவக்கொடி அதோடு சூரை, பீர்க்கங்காய், பாகற்காய் என விவசாயிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப உயர் வேலிகள் அமைக்கலாம்.
இங்கே உயர் வெளிகளோ வேலிகளால் மறைக்கப் படுகிறது இதனால் உயர் வேலி என்றுமளைப்பர்
எனது கண்களில் பட்ட வேலிகள் பசுமையாகவே இருக்கின்றன
ஆடம்பரம் வந்த பின்பு மனிதன் வசதிகளை தேட ஆரம்பிக்கிறான் .மேற்கு நாடுகளின் வியாபார உத்தியை நம்பி தனது இயற்கையை மனிதன் இழந்து நிற்கிறான் .இதுவே இன்றைய நோய் பரவலுக்கு காரணம்
உங்கள் ஊரில் அன்று எத்தனை வே ப்ப மரங்கள் .இருந்தன
இலைகளை விசிறி அது காற்றில் அசையும் பொழுது உங்க ஊரில் நோய் வரவில்லை
இப்போ அந்த இயற்கை சுவாசத்தை இழந்து நிக்கின்றீர்களே ..நோய்கள் வராமல் என்ன செய்யும் /
அன்று இலங்கையில் முள் முருங்கை நின்றது கல்யாணப் பந்தக்கால் போடப் படும்
இப்போ சுகாதார சீரின்மையால் அந்த இனமே அழிந்து விட்டது
கொடிகள்ளி ,வாதநீர் ஆணி எங்கே ?
வாதநீர் ஆணிமர இலைகள் உடம்பில் வந்த வாதங்களைப்போக்கின ,இன்னும் பல எழுதலாம் .நேரமின்மை
ஆகவே இயற்கை முறைக்கு திரும்புங்கள்
Keine Fotobeschreibung verfügbar.

கருத்துகள்