வீட்டுக்கு வீடு

வானொலிப் பெட்டிக்கருகே
ஆவலுடன் குழுமியிருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் உங்கள் அறிவிப்பாளன் K.S.ராஜாவின் அன்பு வணக்கம்!”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இவரது குடும்பம்
மனைவி ரூத்
மகள்: ஷர்மிலா,
மருமகன்: றெக்ஸ்
பேரன்: றிஷான்,ஷான்,
தங்கைமார்: சாரதா(மலேசியா), சுபா (இலங்கை)
தம்பி: சோமாஸ்கந்தராஜா(லண்டன்)
ராஜாவின் இயற்பெயர் ஸ்ரீஸ்கந்தராஜா. இவர் இலங்கையின் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த நடுத்தர வகுப்புக் குடும்பத்தில் இலங்கையின் மலையகத்தில் பதுளையில் பிறந்தார்.
யாழ்ப்பாணம் கொட்டடியில் வளர்ந்தார். தந்தை ஒரு மருத்துவர். தாயார் ஆசிரியை. தமக்கைமார் நால்வரும் மருத்துவர்கள்.
1966 இல் கொழும்பு ரோயல் கல்லூரியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அங்கு அவர் மாணவர் பேரவைத் தலைவராக இருந்து செயற்பட்டார்.
பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்திலும், பின்னர் இலண்டன் பல்கலைக்கழகத்திலும். கணிதம் மற்றும் வேதியியலில் பட்டம் பெற்றார்
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர், வானொலி ஆர்வத்தின் காரணமாக இலங்கை வானொலியில் பணியில் சேர்ந்தார்
இவர் இலங்கை வானொலியில் முன்னணி அறிவிப்பாளராக இருந்தபோது பல வானொலி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து நடத்தி வந்தார். இவரின் நிகழ்ச்சிகளுக்கு கடல் கடந்து தென்னிந்தியாவிலும் ரசிகர்கள் இருகின்றனர் .
1983 கறுப்பு யூலைக்குப் பிறகு இந்தியா சென்ற இவர் அப்போது அங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்து செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார். இந்நிலையில் இவர் 1994 செப்டம்பர் 3 அன்று இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது.. இவரது ‘நினைவு சமாதி’ கொழும்பு பொரல்லை மயானத்தில் உள்ளது.
எப்படி இந்த துறைக்கு வந்தீர்கள் __?என்ற கேள்வி
''சிலோன் யுனிவர்சிட்டியில் கொஞ்ச நாட்கள் புரொஃபஸராகப் பணியாற்றினேன். எக்ஸாம் கவுன்சிலிலும் நியமித்தார்கள். அப்போதெல்லாம் பி.ஹெச்டி. வாங்க வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன். 'ரேடியோவில் அறிவிப்பாளர் கேட்டு விளம்பரம் வந்திருக்கு. நீங்கதான் நன்றாகப் பேசறீங்களே. அப்ளை பண்ணுங்க’னு ஸ்டூடன்ட்ஸ் சொன்னாங்க.
அப்போதெல்லாம் பொதுவாக நாடகத்தில் பேசினவங்களைத்தான் தெரிவு செய்தார்கள். ஆனால், அறிவிப்பாளர் மயில்வாகனம் அவர்கள், எனது உச்சரிப்பினையும் குரல் வளத்தையும் கண்டுகொண்டு, என்னையே அந்தப் பணிக்கு நியமித்தார். எனது முன்னேற்றத்துக்கு அவருடைய உற்சாகமும் உறுதுணையும்தான் முக்கியக் காரணம்'' என்றார் ராஜா.
1970-ல் உங்களின் நுழைவுக்குப் பின், வானொலி ஒலிப்பரப்பில் ஏற்பட்ட மாறுதல்கள்பற்றி கூறுவீர்களா ?
'சாதாரண பொதுமக்களுக்கும் நிலையத்துக்கும் மிகுதியான உறவினை ஏற்படுத்தும் புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினேன். பி.பி.சி-யில் 'ஹீட்பரேட்’ (இசை அணித் தேர்வு) - நிகழ்ச்சி யினை முதன்முதலாக அறிமுகப்படுத்தினேன். 'இசைச் செல்வம்’ நிகழ்ச்சிகூட அதைப் பின்பற்றி அமைக்கப்பட்டதுதான்.
நான் அமைக்கும் 'திரை விருந்து’ நிகழ்ச்சி யினைத் தயாரிப்பாளர் பாலாஜி அவர்கள் மிகவும் பாராட்டியிருக்கிறார். நடிகர் திலகம் அவர்களும் அவருடைய துணைவியாரும் 'ஹீட் பரேட்’ நிகழ்ச்சியினை மிகவும் ரசித்துக் கேட்ப தாகக் கூறியிருக்கிறார்கள்.
மாணவ - மாணவியருக்காக நடத்தப்படும் 'பொது அறிவுக் களஞ்சியம்’ நிகழ்ச்சி, மக்களிடையே மிகுதியான வரவேற்பு. 1981-ல் இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளே அரசுத் தேர்வுக்கு மிகுதியாக வந்திருந்தன. ''தொலைபேசி மூலம் உரையாடும் 'உங்கள் விருப்ப நிகழ்ச்சி’க்கும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு'' அமோகமாக இருந்தது .என்றார்
புதுமை என்றாலே எதிர்ப்புகள் இருக்குமல்லவா
ஆரம்பத்தில், வழக்க மான ஒலிப்பதிவு முறைக்கு எதிராகச் செயல் படுகிறேன் என்று சொல்லி, முழுமையாக இடையூறு செய்தார்கள். ஆனால், ரசிகர்களின் ஏராளமான கடிதங்கள், அதிகாரிகளின் மனத்தை மாற்றிவிட்டு, என்னையும் விருப்பம்போல் செயல்படவைத்துவிட்டது!''
நான் எழுச்சிப் பாடல்களாக ஒலிபரப்பி னேன். உடன் இருப்பவர்களே பொறாமையினால் காட்டிக்கொடுத்துவிட்டார்கள். பின் என்ன, இடைநிறுத்தம் செய்துவிட்டார்கள். ராணுவத் தினரிடம் சித்ரவதை. நான்கு மாதக்கஷ்டம். அதைத் தொடர்ந்து வட இலங்கை நோக்கிப் பயணமாகிவிட்டேன். யாழ்ப்பாணம் குடா நாடு முழுமையாகப் போராளிகளின் கட்டுப்பாட் டில் இருப்பதால், பிரச்னை எதுவும்
இருக்கவி ல்லை.
என்றார்
நீயா?" திரைப்படத்தில் ஒரு காட்சியில் மனித உருவில் வந்த சிறீப்ரியா இறுதியில் இறக்கும் தறுவாயில் இப்படி கதறுவார்... “ராஜா என்னை விட்டுப்போயிடாதீங்க ராஜா” .. ஆனால், நம் கே.எஸ் ராஜா, உடனே இடையில் வந்து, "இல்லை நேயர்களே..! உங்கள் ராஜா இன்று விடைபெறும் நேரம் வந்துவிட்டது..மீண்டும் அடுத்தவாரம் உங்களை சந்திக்கின்றேன்" என்று கூறி நேயர்களிடமிருந்து விடைபெற்று அந்த விளம்பரதாரர் நிகழ்ச்சியை நிறைவு செய்வார்...
வேகமான, கம்பீரமான தன் குரலில், தமிழை மிகத் தெளிவாக உச்சரித்து தமிழர்களை வசீகரப்படுத்தியவர்.
இவர்
புவனலோசினி
சில்வஸ்டர் பாலசுப்ரமணியம்
பரராசசிங்கம்
மயில்வாகனன்
ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்
ஜோக்கிம் பெர்னாண்டோ
ஆகியோருடன் கடமை செய்தவர் ,இனக்கலவரத்தின் பின் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ளமாடி வீடு
ராஜாவின் இருப்பிடம் ஆனது
இலங்கையில்
1970, 80களில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவைகளில் இந்த வாசகத்திற்கு இருந்த மதிப்பே தனி!
இவர் பேசுவதில் சொக்கிப்போன ரசிகர்கள், இவரின் குரலுக்காகவும் சொல்லுக்காகவும் ரேடியோவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பார்கள்.
இலங்கை வானொலியின் கூட்டு ஸ்தாபனம் என்கிற அறிவிப்பே அத்தனை அழகு.அன்றைக்கு மக்களின் மனம் கவர்ந்த பாடல்களைக் கேட்க பேருதவி செய்தது, இலங்கை வானொலி நிலையம்தான்.
‘உங்கள் நண்பன் கே.எஸ்.ராஜா’ என்று அவர் அறிவிப்பதற்கு ரேடியோ பக்கத்திலிருந்து கைத்தட்டுவார்கள் ரசிகர்கள். ‘நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்’ என்கிற சிவாஜி நடித்த ‘ராஜா’ படத்தில் இருந்து பாடல் ஒலிபரப்பாகும். அந்தப் பாட்டில் ‘ராஜா’ என்று பெண் குரல் ஒலிக்கும். ‘ஆம்… உங்கள் நண்பன் கே.எஸ்.ராஜா’ என்று அறிவிப்பு வர, பித்துப்பிடித்துப் போனார்கள் வானொலி ரசிகர்கள். மதுரக்குரல் மன்னன் என்று அழைத்தார்கள் இவரை. அறிவிப்பாளர்களின் அரசன் என்று புகழ்ந்தார்கள்.
” இது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவை” என்று அவர் அறிவிக்கும் பாணியே வித்தியாசமானதாக இருக்கும் . அவரது நிகழ்ச்சிகளில் விறுவிறுப்பும் சுவாரசியமும் கொடிகட்டி பறக்கும் .
நிகழ்ச்சியின் இடையில் நேரத்தை அறிவிக்கும் போது கூட , ஏதோ ஒரு திரைப்படப் பாடலின் இடையில் வரும் , “ஹலோ இப்ப என்ன டைம்?” என்ற பி சுசீலாவின் குரலை மட்டும் ஒலிபரப்பி விட்டு , அதன் பின் கே.எஸ்.ராஜா தன் குரலில் நேரத்தை அறிவிப்பார் .
நிகழ்ச்சியை முடிக்கும் போது “மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது கே எஸ்” என்று மட்டும் சொல்லிவிட்டு “ராஜா” படத்தின் , ” நீ வர வேண்டும் என எதிர்பார்த்தேன்” பாடலில் , டிஎம்எஸ்ஸின் குரலில் வரும் “ராஜா..” என்ற வார்த்தையை மட்டும் ஒலிபரப்பி நிகழ்ச்சியை முடிப்பார் .
இப்படி விறுவிறுப்பாக நிகழ்ச்சிகளை வழங்கி கொண்டிருந்த இவருடைய குரல் , திடீரென்று வானொலியில் கேட்காமலே போனது. அதன் பின் பத்திரிகைகளில் கே.எஸ்.ராஜா புலிகளுக்கு ஆதரவானவர் என்று இலங்கை அரசு வேலையை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது .
“என் விருப்பம்” என்ற நிகழ்ச்சியை வழங்கி அதில் “உத்தமன்” படப் பாடலான , “கேளாய் மகனே” என்ற பாடலை முதல் பாடலாக ஒலிக்க விட்டார் .
நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருந்த எல்லோரும் அதிர்ந்து போய் கேட்டுக்கொண்டு இருந்தார்கள் ; ஏன் என்றால் அது இலங்கை அரசால் அப்போது தடை செய்யப்பட்டிருந்த பாடல் .
காரணம் அந்தப் பாடலின் இடையில் வரும் , “கொள்ளும்கொள்கையில் குரங்காக , கொடுமையைக் கண்டால் புலியாக ” என்ற வார்த்தைகள் ; புலி என்ற வார்த்தை வந்தாலே , அந்த பாடல் தடை செய்யப்பட்டுவிடும்.
ஆனாலும் இந்தப் பாடலை ஒலிக்க விட்ட கே.எஸ். ராஜா , புலி என்ற வார்த்தை வருவதற்கு முன்னதாகவே பாடலை நிறுத்தி விட்டார்.
குறும்பு களில் அவர் மன்னன்னாக இருந்தார்
தன் நிகழ்ச்சியை முடிக்கும்போது ,”நீயா” படத்தில் ஸ்ரீபிரியாவின் குரலில் , “என்னை விட்டுட்டு போறீங்களா ராஜா?”என ஒலிபரப்பி விட்டு ,
உடனே கே.எஸ்.ராஜா அசத்தலான குரலில் சொல்வார் :
“போக மாட்டேன்… அடுத்த வாரம் மீண்டும் சந்திப்பேன்.
அது வரை உங்களிடமிருந்து விடை பெறுவது கே.எஸ். ராஜா”
ஆனால் கடைசியில் எவரிடமும் சொல்லாமலே விடை பெற்றுப் போய் விட்டார் கே.எஸ்.ராஜா !
ஞாயிறன்று பகல் 1.30க்கு எழுபதுகளின் இறுதியில் 'இசைத் தேர்தல்" என்ற பாடல்களைத் தரப்படுத்தும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இப்பாடல்தான் முதலிடத்திற்கு வரும் என பந்தயம் கட்டி, ஆவலுடன் தமிழகமே காத்திருந்தது அந்த காலம். "இளமை ஊஞ்சலாடுகிறது" படத்தில் வரும் "என்னடி மீனாட்சி" பாடல் ஓராண்டுக்கும் மேலாக முதலிடத்தில் இருந்தது.
இவ் வானொலி நிலையத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும், அறிவிப்பாளர்களுக்கும் இருந்த கற்பனைத்திறன் அலாதியானது.நிகழ்ச்சித் தயாரிப்பை பொறுத்தவரை பாட்டுக்கு பாட்டு, ஒரு நிமிடம் தமிழ், அன்றும் இன்றும் போன்ற , இன்றும் பல்வேறு கல்லூரி விழாக்களிலும், தொலைக் காட்சி சானலிலும் பார்க்கும் நிகழ்ச்சிக்களை உருவாக்கியவர்கள் இவர்கள்.
கே.எஸ். ராஜா "திரைவிருந்து" என்ற இலங்கையில் ஓடும் திரைப்பட விளம்பர நிகழ்ச்சியை நடத்துவார்.
கம்பீரக் குரல், மின்னல் வேகம், வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான தெளிவான உச்சரிப்பு...... வார இறுதி நாட்களை வானொலிக்கருகே கட்டிப் போட்ட வித்தகர் K.S.ராஜா!
"அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது" என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பாணத்தை காது வழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா!
இலங்கை வானொலி கேட்டாலே தமிழ் வளரும் அந்த அளவுக்கு திட்டமிடல் அன்று இருந்தது
குறிப்பிட்டு சொல்வதானால்
நெஞ்சில் நிறைந்தவை, பொங்கும் பூம்புனல் – மாலை 5 மணிக்கு – இந்த நிகழ்ச்சியின் தொடக்க இசை மறக்க முடியாதது, நேயர் விருப்பம் – சங்களா மங்களா என்ற பெயர் அடிக்கடி வரும், ஒரு படப்பாடல்கள், பாட்டும் பதமும், இசையும் கதையும், இந்திப்பாடல்கள் – மதியம் 1.30-க்கு, விவசாயிகள் விருப்பம். சனி மற்றும் ஞாயிறுகளில் “திரை விருந்து” – பாசமலர் அடிக்கடி ஒலிபரப்புவார்கள் – பெண்கள் விசும்பி விசும்பி அழுது கொண்டிருப்பார்கள், பார்த்திருக்கிறேன். நல்ல தமிழ் கேட்போம் நிகழ்ச்சியில் அநேகமாக சிவாஜியின் பழைய படத்திலிருந்து எதாவது ஒலிச்சித்திரம் இருக்கும். ஜெமினி கணேசன் பாட்டு வாத்தியாராக நடிக்கும் ஒரு ஒலிச்சித்திரம் மிகவும் பிரபலம்.அடிக்கடி ஒலி பரப்புவார்கள். படம் ஞாபகமில்லை. சாயங்காலம் 5.30-க்கு “பிறந்தநாள் இன்று பிறந்தநாள். நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்” என்று டி.எம்.எஸ் ஆரம்பித்து விடுவார் – அதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகழ்ச்சி. காலையில் சிறிதுநேரம் பக்திப் பாடல்கள். இரவில் கொஞ்சம் கர்நாடக இசை. இரவு 9 மணிக்கு “இரவின் மடியி-லோடு தூங்க வைப்பார்கள். நடு நடுவே விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள், செய்திகள், பொப்பிசைப் பாடல்கள். தேர்ந்தெடுத்த பாடல்கள். மிகப் பழைய பாடல் கூட ஒலிபரப்புவார்கள். A.M. ராஜா, ஜிக்கி பாடல்கள் நிறைய போடுவார்கள்.
பாட்டை நேசித்த தமிழ் உலகில், பாடல்களை நமக்காக ஒலிபரப்பிய ரேடியோவை அப்படிக் காதலித்தார்கள், கடந்த தலைமுறைக்காரர்கள்!
யாழ்ப்பாணத்தில் ராஜா திரையரங்கில் கலைஞரின் வசனத்தில் ஜெய்சங்கர், எம்.ஆர். ராதா நடித்த ‘வண்டிக்காரன் மகன்’ ஓடிக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சிறீதர் திரையரங்கில் எம். ஜி. ஆரின் ‘மீனவ நண்பனும்’ ஓடிக்கொண்டிருக்கிறது. திரைவிருந்து நிகழ்ச்சியில் இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து கே.எஸ். ராஜா நிகழ்ச்சி செய்தார். நிகழ்ச்சி முடியும் தருவாயில் ராஜா ஓர் ஒட்டு வேலையைச் செய்வார். முதலில் வண்டிக்காரன் மகனிலிருந்து எம். ஆர். ராதாவின் குரல் “ஏய்! சுட்டுவிடுவேன்… சுட்டுவிடுவேன்” என்றொலிக்கும். அந்த இடத்தில் கே.எஸ். ராஜா அதை அப்படியே நிறுத்தி மீனவ நண்பனிலிருந்து எம். ஜி.ஆரின் குரலை ஒலிபரப்புவார். “அய்யா பெரியவரே, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் துப்பாக்கிச் சூடுபட்ட அனுபவம் எனக்கு ஏற்கனவேயுண்டு” என்று எம்.ஜி.ஆர் சொல்வார்.
நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்த திரையரங்குகளை எல்லாம் ராஜா காற்றலைகளில் அறிமுகப்படுத்தி வைத்தார். “செல்லமஹால் கொட்டாஞ்சேனை - சமந்தா தெமட்டகொட - ராஜி திருமலை - ஈஸ்வரி வாழைச்சேனை - சிறீதர் யாழ்நகர் வெண்திரைகளில் இன்றே பார்த்து மகிழுங்கள் ‘ஹாய் பேபி’ புகழ் கமலஹாஸன், ‘ஸ்ரைல் நடிகர்’ ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய தேவர் பிலிம்ஸின் ‘தாயில்லாமல் நானில்லை’, பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்! பார்க்காதவர்கள் பார்க்கத் துடிக்கிறார்கள்!!” என்று சடுதியில் ஏறியும் இறங்கியும் குழைந்தும் கொஞ்சியும் வரும் ராஜாவின் குரலைக் கேளாதோர்தான் ......................தம் மழலை சொல் இனிதென்பர்.
கொழும்பில் இடம்பெற்ற அசம்பாவித செயல் ஒன்றின்மூலம் கே.எஸ்.ராஜா அவர்கள் இந்த உலகை விட்டு பிரிந்திருந்தாலும், கோடான கோடி தமிழ் வானொலி நேயர்களின் மனதில் இன்றும் அவரது நினைவுகளும், அவரது மதுரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.
Manikkavasagar Vaitialingam

கருத்துகள்