இருளர் (Irulas) எனப்படுவோர் தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்திலும், கேரளத்திலும் வசிக்கும் பழங்குடியினர் ஆவர். இவர்கள் காடு சார்ந்த வாழ்வியலுக்கு பழக்கப்பட்டவர்கள். குறிப்பாக பாம்பு, எலி போன்றவற்றை பிடிப்பதில் கைதேந்தவர்கள். இவர்களின் சமுதாயப் படிநிலை மிகவும் தாழ்த்தப்பட்ட ஒன்றாகும். ஆகையால் இவர்கள் பழங்குடியினர் (Scheduled Tribe) என இந்திய அரசால் அடையாளப் படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களது எண்ணிக்கை தோராயமாக 25,000 நபர்கள் என கணித்துள்ளனர். இவர்களின் மொழி வழக்கு இருளா மொழி என்றும் கூறப்படுகிறது.

நல்லாக இருந்த ஒரு இனம் .ஒதுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு விட்டார்கள் .இவர்களின் குல தெய்வம் கண்ணி அம்மன் .அங்கயர்கன்னிதான் அவள் .
இருளர் என்பது தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் இருண்ட மக்கள் என்று பொருள்படும், இது இருள் என்ற மூல வார்த்தையிலிருந்து பெறப்படுகிறது. இது இருண்ட (கருமை) தோல் நிறத்தைக் குறிக்கிறது.
இவர்களின் பிறப்பு பற்றி இவர்கள் நடுவில் உள்ள நம்பிக்கை; மல்லன்- மல்லி ஆகிய தெய்வங்கள் உலகைச் சுற்றிப் பார்க்கக் கிளம்புகிறார்கள். கிழவி மலை என்னும் மலைக் குகையினுள் ஒலி கேட்டு இரு தெய்வங்களும் குகை வாசலையடைந்து பார்த்தபோது குரலுக்குரிய இருவரை அறிகிறார்கள். நிர்வாணமாய் ஒரு ஆணும் ஒரு பெண்ணும், அந்த ஆணின் பெயர் கொடுவன் மற்றும் பெண்ணின் பெயர் சம்பி ஆகும். நீங்கள் இனி கணவனும், மனைவியும் என்று மறைந்தன தெய்வங்கள். இவ்வழி பல இணைகள் பல்கிப் பெருகி குப்பிலிகா, ஆறுமூப்பு, செமக் காரர்கள், கரட்டி குலம், ஊஞ்சகுலம், வெள்ளக் குலம், குறுநகர் குலம், தேவனெ குலம், கொடுவே குலம், சம்பகுலம்... எனப் பனிரெண்டு குலங்களாகப் பல்கிப் பெருகிய இருளர் இனம். இதுவே தங்கள் இனத்தின் தோற்றம் குறித்து இருளர்கள் மதிக்கும் தொன்மம் (வரலாறு )ஆகும்.
இவர்களின் தற்கால வாழ்வியல் சூழல் கேள்விக்கிடமாகவும் பெரும் மாற்றங்களுக்கு உட்பட்டும் நிற்கின்றது. காடு, சாதி சார்ந்த வாழ்வியலை மீறி நவீன பொது வாழ்வியலுடன் தங்கள் தனித்துவத்தையும் பேணி இணைவது இவர்களுக்கு சவாலாக அமைகின்றது.
சங்க இலக்கியங்களில் தொகுக்கப்பட்டிருக்கும் குறிஞ்சித்திணைப் பாடல்களின் இலக்கியத் தரத்திற்குக் குறையாத சில பாடல்கள் அவர்களிடமிருந்தே பெறப்பட்டன .
தமிழகத்திலும் இந்தியத் துணைக் கண்டத்தின் பல பகுதிகளிலும் சில நூற்றாண்டுக் காலமாகப் பழங்குடியின மக்கள் தம் வாழ்விடங்களுக்கும் வாழ்வாதாரங்களுக்குமாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே நிகழ்ந்து வரும் ஈவு இரக்கமற்ற ஒடுக்குமுறைகள் நம்மை வெட்கப்பட வைக்கத்தக்கவை.
அரசர்கள், ஜமீந்தார்கள், விதேசிகள், சுதேசிகள், வந்தேறிகள்... எனக் காலம் காலமாய் அந்தப் பழங்குடி மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். இப்போது சமகால நாகரீக அரசியல், ஜனநாயகம் சுமக்கும் அரசாங்கம், இடதுசாரிச் சிந்தனை சுமக்கும் அரசாங்கம்... என எத்தனையோ மாற்றங்கள் வந்தபின்னும் அவர்களின் துயரம் தீர்ந்துவிடவில்லை.
கால மாற்றத்தில் அம்மக்களின் அகவெளியில் நிகழும் மாற்றங்கள், வறுமை அறியாதவர்கள் வந்தேறி களின் சூழ்ச்சியால் தம் வாழ்வாதாரமான நிலத்தின் மீதான உரிமையை இழந்து உணவுக்காக பிறர் வருகையை எதிர்பார்க்கும் இழிநிலைக்குத் தள்ளப் பட்டு விட்டார்கள் பின்னர்
“காலம் காலமாக ஒன்றாக இருந்த இருளர்கள் மன்னனின் கட்டளையின் பேரில் காடுகளை அழிக்கவும் அங்கே படைகளைக் கட்டவும் ஆரம்பித் தார்கள். வேட்டுவர் ஒ இருளர் சச்சரவுகள் நாளடைவில் பெரும் சண்டைகளாக மாறின. சின்னச் சின்னச் சலுகைகளுக்காக தாங்கள் உரிமை பாராட்டிய மண்ணின் இண்டு இடுக்குகளை விரல் நுனியில் வைத்திருந்த வேடர்கள், வேறு வழியின்றி சோழர்களின் படைகளில் சேர்ந்து சேவகம் புரியத் தொடங்கினர். வேடர்களின் பாம்புச் சின்னம் பொறித்த மரங்களில் புலிக் கொடி பறக்க ஆரம்பித்தது”
வனங்களில் பெருகிய இருளர் இன மக்களின் வாழ்வியல் சடங்குகள், நட்பு, காமம், காதல், மகிழ்ச்சி, வெற்றிதோல்வி, துன்பம், வன்மம், பகை, ஏமாற்றம், திருமண விதிகள், முரண்கள், மீறல்கள், சமரசங்கள், பகைவரை எதிர்த்தல், போரிட்டு மடிதல், பகைவரின் கை ஆளாய் மாறுதல், நம்பிக்கையின் அடியாக நிகழும் நற்பயன்கள், தீமைகள் கலைகள், சாகசங்கள், கட்டுமீறிச் செய்தல், பெண்ணுரிமை, வேளாண்மையில் இம்மக்களின் உழைப்பு அநியாயமாக ஏமாற்றப்படுதல், புலம் பெயர்தல்... என மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட பழங்குடி இனத்தின் வரலாறு சோகமானது. இயற்கையின் ஒத்திசைவுடன் சூழல் பரா மரிப்பைக் கடவுளுக்கு நிகராக மதித்துப் பேணி வருகிற இம்மக்களின் வாழ்வுச் சுதந்திரத்தை அழிக்கிற அத்துமீறல்களை எக்காலத்திலுமே அரசமைப்புகள் கண்டுகொள்வதில்லை;
ங்களின் உபரியைப் பெருக்கிக்கொள் வதற்காக தம் முகவர்களின் தந்திரங்களோடும் வன்முறையாலும் இப்பழங்குடியினரை வாழ் விடங்களைவிட்டு விரட்டியடித்த கொடுமை
சொல்லி மாளாது
உலகில் எந்த ஒரு மூலையிலும் ஒரு இனம் இன்னொரு இனத்தை அழிக்க முற்படுகிறது .
இருளர் இனம் தம் இலக்கியத்தை வாய்மொழி இலக்கியமாக்கியே பாது காத்து வந்திருக்கிறார்கள்
பழங்குடியின இருளர்களின் வாழ்க்கை கொத்தடிமைகளாக செங்கல் சூளையில் கருகுவது நமக்கு எத்தனை பேருக்கு தெரியும்? கரும்பு வெட்ட அழைத்து சென்று குறைந்த கூலி கொடுத்து இடை தரகர்கள், இருளர்களின் உழைப்பை அட்டையாக உறிஞ்சுவதும், வாழும் இடங்களில் விலங்குகளுக்குள்ள சமத்துவம் கூட இல்லாமல் ஆற்றோரத்திலும், ஒதுக்கு புறத்திலும் மாட்டு கொட்டகைக்கும் கீழாக வீடு கட்டி வாழும் இருளர் இன மக்களை இன்றும் குற்றப் பரம்பரையாக கருதி போலீசார் வேட்டையாடுவது சகஜமான சம்பவமே .
வீரப்பனை பிடிக்கிறேன் என்று தேவாரம் தலைமையிலான அதிரடி படை போலீசார் மலைவாழ் மக்களை வேட்டையாடியதும் பெண்களை பாலியல் வன்முறை செய்ததும் நீதிபதி சதாசிவம் கமிஷன் முன்பு வாக்குமூலங்களாக நிருபிக்கப்பட்ட பிறகும் எத்தனை போலீசார் தண்டிக்கப்பட்டார்கள்?
அவர்களுக்கு பதவி உயர்வுகளையும் பணம் வீட்டுமனை என மக்கள் வரிபணத்தை சன் மானங்களாக வாரி வழங்கியவர்தான் ஜெயா. 1992-ல் வாச்சாத்தியில் வனத்துறை, காவல்துறை, வருவாய்துறை அனைரும் சேர்ந்து காட்டு மிராண்டி தனமாக பெற்ற தாய்மார்கள் கண் முன்பாகவே 13 வயது பள்ளி சிறுமி உட்பட 18 இளம் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்முறை செய்தார்கள்.
ஆடு, மாடு, கோழிகள் உட்பட இவர்களின் உடமைகளை கொள்ளையடித்ததோடு உணவு தானியங்களை தீ வைத்து கொளுத்தியும், குடிநீர் கிணற்றில் மண்ணெண்ணெயை கொட்டியும் நாசப்படுத்தினர்.
15 நாட்களுக்கு பிறகே இச்சம்பவம் வெளி உலகிற்கு தெரிந்தது. 19 ஆண்டுகள் இழுத்தடித்துஅனைவரும் குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்
சிதம்பரம் பத்மினி வழக்காகட்டும், அந்தியூர் விஜயா வழக்காகட்டும், திண்டிவனம் ரீட்டாமேரி வழக்காகட்டும், போலீசோ, அரசோ நீதிமான்களாக நின்று விசாரணை செய்து குற்றவாளி போலீசாரை தண்டிக்கவில்லை. மனித உரிமை அமைப்புகள், பழங்குடியின பாதுகாப்பு சங்கங்கள், இடதுசாரி கட்சிகள், புரட்சிகர அமைப்புகள் என அனைவரும் இறங்கி போராடியதுடன், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தின் படிகட்டுகளில் ஏறி, இறங்கியதால் பெற்ற தீர்ப்புகள். இவை அனைத்திலும் ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் குற்றவாளி போலீசாரை பாதுகாக்கவே செய்தனர்.
ஆனால் திரு ஸ்டாலின் கருணாநிதி அப்படியல்ல .
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகிலுள்ள தி.மண்டபம் கிராமத்தில் திருட்டு வழக்கு ஒன்றில் காசி என்பவரை விசாரிக்க சென்ற போது அவர் மட்டும் அல்லாது ஐந்து பெண்கள் உட்பட உறவினர்கள் அனைவரையும் இரவில் வேனில் திருக்கோவிலூர் போலீசார் ஏற்றி சென்று ஆண்களை காவல் நிலையத்தில் அடைத்துவிட்டு 4 பெண்களை இரவு 12 மணியளவில் அருகில் உள்ள தைலத்தோப்பில் காவல்துறையினர் பாலியல் வன்முறை செய்துள்ளனர். என்பது ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள் .
திருட்டு வழக்கை விசாரிக்க சென்ற போலீசார் பாதிக்கப்பட்ட பெண்கள் வீட்டிலிருந்து அவர்களின் சொத்தான 10 பவுன் நகை, பணம் ரூபாய் 2000, 4 செல்போன் அதன் சார்ஜர் என அனைத்தையும் திருடியுள்ளனர்.
இரவில் பெண்களை கைது செய்ய கூடாது, பெண்களை விசாரிக்கும் போதும் கைது செய்யும் போதும் பெண் போலீசார் கூட இருக்க வேண்டும் போன்ற நீதிமன்ற உத்திரவுகளை எல்லாம்
போலீசார் மதிப்பதில்லை.
எங்கு திருட்டு நடந்தாலும் குற்றவாளியை கண்டுபிடிக்க வக்கற்ற போலீஸ் இருளர்கள் மீது பொய் வழக்கு போடுவதையே தொழிலாக கொண்டுள்ளது.
சில காவல்துறையினர் அதிகார திமிரோடு இருளர் பெண்கள் பெரிய அழகியா? பாலியல் வன்முறை நடக்க வாய்பில்லை என வக்கிரமாக பேசுகின்றனர். நடக்காத குற்றத்திற்கா தமிழக அரசு 5 லட்சம் இழப்பீடு கொடுத்தது ?
திருக்கோவிலூர் போலீசார் இரவு12 மணிக்கு தைல மரத்தோப்பில் வீட்டு ஆண்களை லாக்கப்பில் போட்டு விட்டு 3 மாத கர்ப்பிணி உட்பட 4 பெண்களை கும்பலாக பாலியல் வன்முறை செய்து விட்டு அதிகாலை அவர்கள் வீட்டில் கொண்டு வந்து விடுகிறார்கள் என்றால் திடீரென எதிர்பாராமல் போலீசு செய்யவில்லை. கிரிமினல் மயமான போலீசு துறையின் வெளிபட்ட சீழ்கட்டிகள்தான் மண்டபம் பாலியல் வன்முறை..
அன்று
கிரிமினல் மயமான போலீசை வைத்துதான் தலித்துக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரை கொல்ல முடியும். விலைவாசி உயர்வுக்கு எதிராக போராடும் மக்களை ஒடுக்கவும், சிறையில் அடைக்கவும் முடியும். எதிர்ப்பு குரல் கொடுக்கும் வேலையிழந்த மக்கள் நலப்பணியாளரை ஒடுக்கமுடியும். விசாரணை என்ற பெயரில் சாதாரண மக்களை, லாக்-அப் கொலை செய்து ஏனைய மக்களை அச்சுறுத்த முடியும். சட்டம், நியாயம், நீதி, என்று பாராமல் கடி என்றால் கடிப்பதற்கும் பிடி என்றால் பிடிப்பதற்கும், குற்றவாளி போலீசாரை பாதுகாப்பதும், கிரிமினல் மயமான போலீசும்தான்அரசியல் செய்ய அவசியமாக இருந்திருக்கிறது .
சரி இருளர் யார் என்று பார்ப்போம்
கார் மேக வண்ணன் கண்ணனின் வம்சம் .சிவ வழிபாடு செய்த இயக்கர்கள் அதாவது தமிழர்கள் .
ஆதி தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களில் தங்கள் வாழ்க்கையை மேற்கொண்டனர் என்பது உலகறிந்த வரலாறு. இந்த ஐவகை நிலங்களில் முல்லை நிலமான காடும் காடு சார்ந்த பகுதிகளில், வாழ்ந்த ஆதி தமிழ் குடும்பங்கள் தான் இந்த இருளர் இனம் என்று கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு இயற்கை மாற்றங்களாலும், வாழ்தல் வேண்டியும் தென்னிந்திய மாநிலங்களில் உள்ள காடுகளில் பரவலாக வாழ்ந்து வந்தவர், பின்பு காட்டை விட்டு மருத நில மக்கள் வாழும் நிலப்பகுதியில் வந்து வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தஞ்சை, செஞ்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களிலும் இன்னும் பிற பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் சமுதாயப்படிநிலை மிகத்தாழ்த்தப்பட்ட ஒன்றாகும். ஆகையால் இன்று இவர்கள் பட்டியல்வகுப்பினர் என அரசால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் தற்கால வாழ்வியல் சூழல் கேள்விக்கிடமாகவும், பெரும் மாற்றங்களுக்கு உட்பட்டும் நிற்கிறது. காடு, சாதி சார்ந்த வாழ்வியலை மீறி நவீன பொது வாழ்வியலுடன் தங்கள் தனித்துவத்தையும் பேணி இணைவது இவர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது.
இவர்கள் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு மொழிகளையே அதிகம் பேசுகின்றனர். இவர்களின் மொழி வழக்கு இருளர் மொழிவழக்கு என்றும் கூறப்படுகிறது. இம்மக்களில் எவரும் தங்கள் முன்னோர்களைப் பற்றியும், தங்களின் கலாச்சாரம், பண்பாடு பற்றியும் எழுதி வைத்ததில்லை. காரணம், இவர்கள் பேசும் இருளர் மொழிக்கு எழுத்து வடிவமே இல்லை. உலகில் பழங்குடியினர் பேசும் மொழிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை இன்று உயிர்ப்போடு இல்லை. காரணம் தோற்றுப் போனவர்களின் மொழி யாக நிற்கிறது
பாசிமணி விற்றே களவிய தொடர்பவர்கள் உண்டு இப்படியான சூழலில் இவர்களின் வாழ்க்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த நடிகர் சூர்யாவுக்கும் .தமிழக் முதல்வர் கரூ ஸ்டாலின் அவர்களுக்கும் தலை தாழ்த்துவோம் .
இன்று கிடைத்த தகவல்களின் படி இருளர் சமூகத்துக்கு ஆதார் அட்டை வழங்கி கல்வி மின்சாரம் வீடுகளை அளிக்கிறார் முதல்வர் .
அதே நேரம் இலங்கை அகதிகளுக்கும் இதே உதவியை வழங்கி கை தூக்கி விடுகிறார் ஸ்டாலின் .
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படம் இருளர் இன மக்களின் வாழ்க்கை பற்றி பேசியது. இந்த படத்தை பார்த்து முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ந்து போனார். இதை தொடர்ந்து சூர்யா, இருளர் இன மக்களின் மேம்பாட்டுக்காக ஒரு கோடி ரூபாய் தமிழக அரசிடம் கொடுத்தார்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் வசித்துவரும் நரிக்குறவர், இருளர் மக்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு அவர்களுக்கு தீபாவளி திருநாளையொட்டி வேட்டி சேலைகள் வழங்கினார். இதற்கு சூர்யா தனது டுவிட்டரில் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பதிவில் எழுதியிருப்பதாவது: தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது.
மேலும் எளிய மக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களை பிரமிக்க வைக்கிறது. இந்த தீபாவளி திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய முதல்வர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி, என பதிவிட்டுள்ளார்.
பழங்குடியினர், நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. மேலும், ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் 252 பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இப்பகுதியில் இருக்கும் மக்கள் நீண்ட நாட்களாக தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று போராடிவந்தனர். இந்நிலையில், அங்குள்ள 81 குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கினார்.
மேலும், அவர்களுக்கு பழங்குடியினர், நரிக்குறவர் மற்றும் இருளர் ஆகிய சாதி சான்றிதழ்களையும் வழங்கினார். இவர்களுக்கு சுயதொழில் பயிற்சி திட்டம் மற்றும் கடன் உதவியும் வழங்கப்பட்டது. அதேபோல், பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அங்கன்வாடி மற்றும் வகுப்பறைகள் கட்டித்தருவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் அடிப்படை வசதியான, சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்டவற்றையும் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பூஞ்சேரி பகுதியில் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது, அஸ்வினி எனும் நரிக்குறவர் பெண் வீட்டிற்குச் சென்று அவரிடம் கலந்துரையாடினார். சமீபத்தில், கோயில் அன்னதானத்தில் இருக்கை மறுக்கப்பட்டு,அதுகுறித்து அஸ்வினி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலானது. அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அவருடன் அமர்ந்து கோயில் அன்னதானத்தைச் சாப்பிட்டார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பூஞ்சேரியில் உள்ள 81 பழங்குடியினர் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய 81 குடும்பத்தில் அஸ்வினியின் குடும்பம் ஒன்று.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டுச் சென்றார். இந்நிகழ்வின் போது, அஸ்வினியும் அவரது குழந்தையும் முதலமைச்சரின் காலில் விழ முயன்றனர். அப்போது அவர்களைத் தடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “காலில் எல்லாம் விழக்கூடாது” என்று தெரிவித்தார்.

Manikkavasagar Vaitialingam

கருத்துகள்