சார் பொன் ராமநாதனே
புத்த மதம் லண்டன் இல் பரவ வழி வகுத்தவர் ?
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இங்கிலாந்தைச் சேர்ந்த அல்லன் பெல்லெத் (Charles Henry Allan Bennett - 1872-1923) 1900 ஆம் ஆண்டு ஆஸ்துமா நோயை குணப்படுத்துவதற்காக கிழக்காசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். முதலில் அவர் இலங்கையை வந்தடைந்ததும் பௌத்த மதத்தால் கவரப்பட்டார்.
சிறிது காலம் சேர் பொன்னம்பலம் இராமநாதனிடம் பணிபுரிந்திருக்கிறார். அவரிடமே யோகாசனம், தியானம் போன்றவற்றைக் கற்றுக்கொண்டார். அல்லன் கற்றதை பின்னர் இங்கிலாந்திலிருந்து வந்த அவரது நண்பர் அலீஸ்டருக்கு (Aleister Crowley)கற்றுக்கொடுத்தார். பிற்காலங்களில் அலீஸ்டர் உலகின் பிரபல மேஜிக்நிபுணராக வரலாற்றில் போற்றப்படுபவர். சேர் பொன்னம்பலம் இராமநாதனின் மைத்துனர் ஆனந்த குமாரசுவாமி.
ஆனந்த குமாரசுவாமியின் மனைவி ரதன் தேவியோடு அலீஸ்டர் (Ratan Devi Coomaraswamy) உறவு வைத்ததனால் ரதன் தேவி கர்ப்பமுற்று;
அதனால் பின்னர் ஆனந்த குமாரசுவாமி ரதன் தேவியை விவாகரத்து செய்த ஒரு பெரும் கதையுண்டு. அல்லன் பின்னர் பௌத்த துறவியாக மாறி தனது பெயரை ஆனந்த மெத்தாய தேரர் என்று பெயரை மாற்றிக்கொண்டார். பௌத்த பிக்குவாக மாறிய முதல் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் அவர்.
பின்னர் இங்கிலாந்துக்குச் சென்று தேரவாத பௌத்தத்தை அங்கு பரப்பத் தொடங்கினார். இன்னொரு வகையில் குறிப்பிடுவதாயின் இங்கிலாந்துக்கு பௌத்தம் பரப்பச் சென்ற முதல் பௌத்த மிஷனரி அவர்.

கருத்துகள்