Boa Senior
அகா-போ (Aka-Bo) அல்லது போ (Bo) எனப்படுவது அந்தமான் தீவுகளில், குறிப்பாக வடக்குப் பகுதியில் பேசப்பட்டு வந்த ஒரு பழமையானஇந்தியாவின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான போ மொழி இம்மொழி பேசுபவர்கள் இப்போது அருகி விட்டார்கள். போ மொழி பேசிய கடைசிப் பெண் பெப்ரவரி 2010 இல் அந்தமான் தீவுகளில்
Boa Senior
85 வது அகவையில் மறைந்தார்.
இம்மொழி இந்தியாவின் நிர்வாகத்தின் கீழுள்ள வடக்கு அந்தமானின் கிழக்கு மத்தியக் கரை, மற்றும் வடக்கு ரீஃப் தீவு ஆகியவற்றில் பேசப்பட்டு வந்திருக்கிறது.
போ மொழி உலகின் மிகப் பழமையான மொழி என்பதால் போவா சர் (Boa Sr) என்ற பெண்ணின் இறப்பு ஒரு குறிப்பிடத்தக்கதாகும். இவரின் இறப்பு மூலம் போ மொழி உலகின் பழமையான மொழி முற்றாக அழிந்து விட்டதாகக் கருத முடியும் என பேராசிரியர் அன்வித்தா அபி தெரிவித்தார்.
அந்தமான் மொழிகள்ள் ஆப்பிரிக்காவில் இருந்து தோற்றம் பெற்ற்றதாகக் கருதப்படுகிறது. இவற்றில் சில சுமார் 70,000 ஆண்டுகள் பழமையானதாகும்.
"போவாவின் பெற்றோர் இற்றந்த பின்னர் இவரே அம்மொழியின் கடைசிப் பேச்சாள ராக 30 முதல் 40 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறார்" என பேராசிரியர் அபி தெரிவித்தார்.
இப்பெண்மணி பொதுவாகத் தனிமையிலேயே வாழ்ந்து வந்தவரென்றும், ஏனைய மக்களுடன் கதைப்பதற்கு இவர் அந்தமானிய இந்தி மொழியைக் கற்க வேண்டியிருந்ததென்றும் அவர் தெரிவித்தார்.
இரண்டு மொழிகள் அந்தமான் தீவுகளில் அழிந்திருக்கின்றன ,
போரோ என்பவர் இறந்தபோது, அவருடைய மொழியான கோராவும் மறைந்துபோனது. இப்போது, போ மொழிக்கும் அதே நிலை ,
அப்போ தமிழ் மொழி ?
இளைஞர்கள் ஆங்கிலம் பேசுவதை நவ நாகரீகம் என்று நினைத்து தமிழ் அறிவு நூல்கள் மூன்று சகாப்தங்கள் கற்றுக் கொள்ளப் படவில்லை
எல்லோரும் தமிங்கிலம் பேசுவது பெருமை என நினைக்கிறார்கள்
டொச் தமிழ் ,டச் தமிழ் ,நோர் தமிழ் ,பிரெஞ்சு தமிழ் என்று 127தமிழ்கள் பேசப்படுகின்றன .இந்த சொற்கள் தமிழுக்குள் உள்வாங்கப்பட்டு தமிழ் தனது தொன்மையை இழ்ழ க்கமுன்பு விழித்துக்கொள்ளுங்கள்
போ மொழி பேசும் மக்கள், கடந்த 65 ஆயிரம் ஆண்டுகளாக அந்தமானில் வசித்துவந்த, உலகின் மிகப்பழமையான கலாசாரம் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். மாபெரும் அந்தமானிய மொழிகளாக பத்து மொழிகள் உள்ளன. இதில் போ-வும் ஒன்று.
அந்தப் பத்து மொழிகளையும் பேசுவோர் மொத்தமே 52 பேர்தான் இருக்கிறார்கள். அவர்களில், 2010 இல் இறந்த போவா ஸ்ரதான் மூத்தவராகக் கருதப்படுகிறார்.
கடந்த 1858-ம் ஆண்டு பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் கீழ் அந்தமான் வந்தபோது, 5 ஆயிரம் பழங்குடி மக்கள் இருந்தார்கள்.
பெரும்பாலோர் கொல்லப்பட்டார்கள்.
பலர், காலனி ஆட்சியாளர்களால் புண் ரப்பட்டார்கள்
கொணரப்பட்ட நோய்களால் இறந்துவிட்டார்கள். ஆக கற்பழிப்பு அடக்குமுறை எல்லா நாட்டிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது .அப்போ நீதி யை எங்கே தேட முடியும் ?
அடக்குமுறை மூலம் பழங்குடி மக்களை அமைதிப்படுத்த முயன்ற பிரிட்டிஷார், அது முடியாமல் போனதால், அவர்களைப் பிடித்து, அந்தமான் இல்லம் என்ற இடத்தில் வைத்து அவர்களை பெரும்பான்மை மக்களின் கலாசாரத்தைக் கற்றுக்கொடுக்க முயன்றார்கள். அந்த இல்லத்தில் 150 குழந்தைகள் பிறந்த போதிலும், இரண்டு வயதுக்கு மேல் யாரும் உயிர் பிழைக்கவில்லை. காரணம் மாற்றுக் கலப்புக்களை போ மொழி பேசுவோர் ஏற்றுக் கொள்ளவில்ல்லை .கத்தி வெட்டினால் அந்த வடு உடம்பில் தானே இருக்கும் .
போ மொழி பேசுவோர் கவரி மான் சாதிகள் .
மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்ந்தது இந்த சமுதாயம் .
தற்போது உயிருடன் வாழும் அந்தமான் பழங்குடி மக்கள், தஙகள் உணவு மற்றும் இருப்பிடத்துக்கு இந்திய அரசாங்கத்தையே நம்பியிருக்கிறார்கள்.ஆ னால் ,இந்தியாவை நம்பி ஏமாந்த பல இனங்கள் இந்தியாவிலும் உண்டு
கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டபோது, மரத்தின் மேல் ஏறி தன்னைக் காத்துக் கொள்ளும் அளவுக்கு உடல் பலத்தில் உறுதியானவர் போவா ஸ்ர.
போவா ஸ்ர இறந்ததன் மூலம், அந்த இனம் இப்போது, வெறும் நினைவாக மாறிவிட்டது
, அந்தமான் தீவில் உள்ள மற்ற பழங்குடி மொழிகளும் அவ்வாறு அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்
ஏன் என்றால் அந்தமானிலும் இன்னமும் ஒன்பது இனங்களும் ,அடக்கி ஆளும் இரு இனங்களும் இருக்கின்றன .
ஜேரு மற்றும் சாரே ஆகியமொழிகள் மிகச் சிலரால் பேசப்பட்டு அழியும் தருவாயில் உள்ளது
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆய்வாளர்
பேராசிரியை அன்வித்தா அபி இந்தப் படத்தில் இருக்கிறார் ,இவர் நான்கு மொழி அகராதிகளை இதுவரை வெளியிட்டு இருக்கிறார் .இதனால் அந்தமானின் மொழிகள் பற்றிய உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
சுனாமி தாக்கிய போது, ராட்சத அலைகள் எழும்பி தணிந்ததையும், அதன் தாக்கத்தையும் “போ” மொழியில் அவர் பாடி, வீடி யோவில் பதிவு செய்யப்பட்டது தான் “போ” மொழி வாழ்ந்ததற்கு சாட்சியாக உள்ளது
அந்த வீடியோ வை நான் தேடி வருகிறேன் .சில இங்கே தருகிறேன் https://youtu.be/_K3lrMphIHA
2010 ம் ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி கொச்சியைச் சேர்ந்த வில்லியம் ரொசாரியோ மரணமடைந்தார். அவரது மரணத்துடன் 15ம் நூற்றாண்டிலிருந்து கேர ளாவின் கொச்சி பகுதியில் பேசப்பட்டு வந்த “மலை யாள - போர்ச்சுகீஸ் க்ரியோல்” என்ற மொழி மரண மடைந்துவிட்டது. 400 ஆண்டுகளுக்கும் மேலாக, கொச்சியிலுள்ள கத்தோலிக்கர்களின் அடையாள மாக அம் மொழி திகழ்ந்தது.
“ரெமோ” என்ற மொழி ஒரிசா மாநிலத்திலுள்ள ‘போண்டா’ என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் களால் பேசப்படுகிறது. தற்போது இம்மொழியை பேசுவோர் 5000 பேர் மட்டுமே. இந்த இனமக்கள் தற் போது ‘ஓரியா’ மொழியை பேசத் துவங்கி விட்ட நிலையில் வெகு விரைவில் இந்த மொழி (ரெமோ) மறைந்து விடும்.
பே சப்படாவிட்டால் (.மொழி சுத்தமாக ,பிறமொழிக் கலப்பற்று )எதுவும் அழிந்து விடும்
தமிழ் மொழி பற்றி இளைய சந்ததியினர் சிந்திக்க வேண்டும்
2,473 மொழிகள் இதில் அழியும் அபாயத்தில் உள்ளன . இந்தியாவில் 1950க்குப் பின்னர் 5 மொழிகள் அழிந்துவிட்டன. 42 மொழிகள் கிட்டத் தட்ட அழியும் நிலையில் உள்ளன. 63 மொழிகள் நிச்ச யம் அழிந்துவிடும் என்ற பட்டியலிலும், 82 மொழி கள் அழியும் அபாயம் உள்ளவை
இது unesco என்ற நிறுவனம் கூறிய புள்ளிவிபரம் .
மேலும் பொதுவாக இன மக்கள் பேசுகின்ற பல மொழிகள் ‘தாய்மொழி’ என்று கருதப்பட்டு அதிகாரபூர்வமாக “மொழி” என்ற வரையறைக்குள் வருவதில்லை. இது தவிர நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் அன் றாட வாழ்க்கைத் தேவைகளையொட்டியும் பொரு ளாதார நிர்ப்பந்தங்களினாலும், அந்தந்த மாநிலத்தில் அரசு மொழியாகக் கருதப்படும் மொழியை கற்று பேசவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேலை நிமித்தம், குடி பெயர்வு அதிகரித்துள்ள சூழலில், குறைவான எண்ணிக்கையில் உள்ள மக்கள் பேசு கின்ற மொழிகள் சிறிது, சிறிதாக மறைந்து விடு கின்றன..இதுவே இன்றைய இலங்கைத்தமிழரின் புலம் பெயர்வுகளினால் அறியக் கிடைக்கிறது .இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் தமிழுக்கும் அதே நிலை புலம்பெயர் நாடுகளில் ,ஏற்பட வாய்ப்புண்டு
சினிமா ஊடகங்கள் மட்டுமே தற்பொழுது கூடிய ஆதிக்கம் செலுத்துகிறது .இவை இது பற்றி சிந்தித்தால் மட்டுமே மொழி வாழும் ,இன்றேல் அழிந்து விடும்
மொழிகளை பாதுகாப்பதன் மூலமே அந்தந்தப் பகுதியில் தோன்றி, வளர்ந்துள்ள பழக்க வழக்கங் களையும், அறிவியலையும் பாதுகாக்க முடியும். எடுத்துக்காட்டாக, அந்தமானில் மறைந்த போவா சீனியருக்கு அப்பகுதியிலுள்ள செடி, கொடிகள், இலைகள், பழங்கள் என அனைத்தின் மருத்துவ பயன்பாடுகள் பற்றி நன்கு தெரியும்.
இவர் மறைவுக்குப் பின் அந்த நாட்டு கை வைத்தியங்கள் எழுதப்படாமல் அழிந்து விட்டது
விபரங்கள் நீள்வதால் சுருக்கிக் கொள்கிறேன்
நீங்கள் சிந்திக்கா விட்டால் தமிழ் மொழியின் அழிவும் வெகு தூரத்தில் இல்லை
கருத்துகள்
கருத்துரையிடுக