தைராய்டு பிரச்சனை பற்றி தெளிவின்மையால்
இருப்பவர்க்கே இந்தப் பதிவு
%%%%%%%%%%%%%%%%%%%%%
நமது உடலில் கழுத்து பகுதியில் இருக்கும் எண்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகள் தான்
தைராய்டு பிரச்சனை என்று அழைக்கப்படுகிறது.. ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் அதிகமாக இந்த பிரச்சனை வருகிறது. கழுத்தில் பட்டாம்பூச்சி போல் இருக்கும் தைராய்டு சுரப்பியின்சுரப்பில் மாற்றம் உண்டாகும் போது ஏற்படும் பிரச்சனை தான் தைராய்டு என்றழைக்கப்படுகிறது.
தைராய்டில் இரண்டு வகை உண்டு இந்த சுரப்பு குறைவாக இருந்தால் அது ஹைப்போ தைராய்டு ,
அதிகமாக சுரப்பதை ஹைப்பர் தைராய்டு என்றும் அழைக்கிறார்கள்.
கேடயச்சுரப்பியின் உயிரணுக்கள் ஆரம்பகால அயோடைடு செறிவாக்கும் செரிமானமண்டலச் உயிரணுக்களிலிருந்து பரிணமித்திருக்கின்றன. ஆதிகால உயிரினம் கடலில் வாழ்ந்ததால் அவைகளுக்கு அயோடைடைச் செறிவுபடுத்தி வைக்கும் உயிரணுக்கள் தேவைப்பட்டிருக்கின்றது. இந்த அயோடைடு ஆக்சிசனேற்ற எதிர்ப்பியாகச் செயல்பட்டிருக்கிறது. பின்னாளில் உயிர்கள் கடல்நீரை விட்டு நன்னீருக்கு வந்தபோது அவற்றுக்கு அயோடைடு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதைச் சரிசெய்யத் தங்கள் ஆதிகால அயோடைடு செறிவாக்கும் செல்களைப் பயன்படுத்தின. அடுத்ததாக தைராக்சின் இயக்குநீரை வெப்பஉருவாக்குதலுக்கும் பயன்படுத்த துவங்கின.
தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் உடலின் இயக்கத்தில் மிகவும் முக்கியபங்கு வகிக்கிறது. .உடலுக்கு போதிய அயோடின் சத்து இருந்தால் தைராய்டு சுரப்பும் சீராக இருக்கும். அயோடின் பற்றாகுறை ஏற்படும் போது தைராய்டு பிரச்சனை சந்திக்கிறார்கள்.
ஆண்களை விட பெண்கள் அதிகம் இப்பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள். உலக அளவில் பெண்கள்10 சதவீதத்தினர் தைராய்டு பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள். அயோடின் சத்து குறைபாடும் , பரம்பரை காரணமாகவும் இந்த பிரச்சனை வருகிறது. ஆரம்பநிலையில் இதை கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்தவும் முடியும். அப்படியே தைராய்டு பிரச்சனைக்கு மாத்திரைகள் எடுத்துகொண்டாலும் அவை பக்கவிளைவுகளை உண்டாக்காது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு பெண் பிள்ளைகளும் வாழ்நாளில் பூப்படைதல் முதல் மெனோபாஸ் வரை பல ஹார்மோன் மாற்றங்களை சந்திக்கிறார்கள். இந்த தருணத்தில் தைராய்டு சுரப்பிலும் மாற்றங்களை சந்திக்கிறார்கள்
மாதவிடாய் பிரச்சனைகள், ஒழுங்கற்ற மாதவிடாய் , கருமுட்டையில் நீர் கட்டிகள், கழுத்தில் வீக்கம் இருந்தால் தான் தைராய்டு என்று நினைத்துகொள்வார்கள். ஆனால் தைராய்டு எல்லோருக்கும் எல்லா அறிகுறிகளையும் உணர்த்தாது. எந்தவிதமான அறிகுறியும் இல்லாமலும் உடலில் நீடித்திருக்கும். மாதவிடாய் பிரச்சனையை நிச்சயம் உணர்த்தும் என்பதால் இது குறித்து கவனமாக இருப்பது நல்லது. பருவமடைவது முதல், கர்ப்பக்காலம், பிரசவக்காலம், குழந்தைபேறுக்கு பிறகு, 40 வயதை கடந்த பிறகு என்று எப்போது வேண்டுமானாலும் இந்த பிரச்சனை வரலாம்.
தைராய்டு சுரப்பு குறைவாக இருக்கும் போது மாதவிடாய் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. தைராய்டு பிரச்சனை கருமுட்டை வளர்ச்சியில் குறைபடை உண்டாக்கும். தைராய்டு நேரங்களில் கருத்தரிக்கும் போது தைராய்டு சுரப்பு குறைவு அதிகரிக்கும் போது கருச்சிதைவு நேரிடலாம் அதே போன்று கர்ப்பக்காலம் முழுவதும் கூட இவை தொடரும் போது குறைபிரசவம் உண்டாகலாம். பாதிப்பு அதிகப்படியாக இருந்தால் குழந்தை இறக்கவும் வாய்ப்புண்டு. அதனால் தான் திருமணத்துக்கு பின்பு கருத்தருக்க விரும்பும் பெண்கள் மருத்துவரை அணுகி உடனடியாக ஆலோசனை பெற வேண்டும். தைராய்டு பிரச்சனை இருந்தால் உரிய சிகிச்சையின் மூலம் இதை சரி செய்ய முடியும் என்பதுவும் உண்மை
அல்லது பாட்டியின் பரம்பரை உணவை ஒழுங்காக உண்ணவும்
.
மருத்துவர்கள் இரத்த பரிசோதனையும் அதனுடன் TSH பரிசோதனையும் செய்து தைராய்டு எந்த அளவில் இருக்கிறது என்பதை கண்டறிவார்கள். பிறகு இந்த பிரச்சனை உங்கள் கருத்தருப்பில் சிக்கலை உண்டாக்ககூடியதாக இருந்தால் அதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பார்கள். தைராய்டு சீராக சுரக்க மாத்திரைகள் பரிந்துரைப்பார்கள். தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனையுடன் மாத்திரைகள் உட்கொண்ட உடன் இரண்டு மாதங்களில் மீண்டும் பரிசோதனை செய்து தைராய்டு சுரப்பு சீராக இருக்கிறதா என்பதை உறுதி செய்து படிப்படியாக மாத்திரைகள் அளவையும் தேவைப்பட்டால் நிறுத்திவிடுவார்கள்.
நீங்கள் கருத்தரித்த பிறகும் இந்த பரிசோதனை செய்யப்படும். சில பெண்கள் கருத்தரித்த காலங்களில் தைராய்டு குறைவு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் கர்ப்பக்கால பரிசோதனையில் தைராய்டு பரிசோதனையும் அவசியமாக்கப்பட்டுள்ளது. தைராய்டு பிரச்சனை இருக்கும் பெண் மாத்திரைகள் எடுக்காத பட்சத்தில் அவை கருச்சிதைவையோ கருவின் மூளை வளர்ச்சியையோ பாதித்துவிடும். தைராய்டு பயப்பட வேண்டியதில்லை. தைராய்டு பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு குழந்தை பிறக்காது என்பதும் உண்மையல்ல. ஆனால் தைராய்டு பரிசோதனை செய்து தைராக்ஸின் சுரப்பு குறைவாக இருந்தால் முறையான சிகிச்சையின் மூலம் நீங்கள் தைராய்டு சுரப்பை சீராக்கலாம். மருத்துவரின் ஆலோசனையோடு பாதுகாப்பாக குழந்தையையும் பெற்றெடுக்கலாம்.
மேலும் தைரோய்டு குறைபாடு உள்ளவர்களின் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாகச் சேர்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானது போல் காட்டுகிறது.
தைரோய்டு பிரச்சினைக்காக தைரோக்சின் சிகிச்சையை தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைரோய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு.
அதே நேரத்தில் கொழுப்புச் சத்து காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும்.
அவர்களுக்கு தைரோய்டு உள்ளதாக நினைத்து தைரோக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும்
குழந்தையின்மைக்கும் தைரோய்டு காரணமாக சொல்லப்படுகிறது
தைரோய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.
தைரோய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைரோய்டு எதிர் அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும். இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நல குறைப்பாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைரோய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை
ஹைப்போ தைராய்டுஎன்றால்
உடல் எடை கூடுவது, முடி உதிர்வு, மலச்சிக்கல் பிரச்சனை இருப்பது, சீரற்ற மாதவிடாய், உடல் மனம் சோர்வு, நினைவுத் திறன் மங்கி இருப்பது, எப்போதும் களைப்பாக இருப்பது. சுரப்பி சரியாக செயல்படாமல் இருக்கும் போது கழுத்துபகுதி வீக்கமடைவது இவை தவிர சிலருக்கு மூட்டு வலிகளையும் உண்டாக்கும். சிலருக்கு எப்போதும் தூக்கம் வந்துகொண்டே இருக்கும். சருமத்தில் வறட்சியை உண்டாக்கும். குரல்களிலும் மாற்றம் இருக்கும்.
தைராய்டு அதிகமாகும் போது தொண்டை பகுதியில் வீக்கமும் எரிச்சலும் ஏற்பட்டு உணவை விழுங்குவதிலும் சிரமமாக இருக்கும். அதனால் மேற்கண்ட அறிகுறிகளைத் தொடர்ச்சியாக கண்டதும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வதுநல்லது
காசுக்காக உழைக்கும் வைத்தியர்கள் இருப்பதால் கவனமாக இருங்கள் .
தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கும் உணவு வகைகளைப் பார்த்து எடுத்துகொள்வது நல்லது. அசைவம் சாப்பிடுபவர்கள் உப்பு நீரில் வளரும் கடல் உணவுகளை அதிகம் எடுத்துகொள்வதன் மூலம் தேவையான அயோடின் சத்து கிடைக்கிறது. இந்த அயோடின் மிகுந் திருக்கும் உப்பை போதுமான அளவு எடுத்துகொள்ள வலியுறுத்துவதும் இதற்காகவே.
தைராய்டு சுரப்பி சீராக செயல்பட உதவும் மற்றொரு பொருள் செலினியம் ஆகும். இவை காய்கறிகள், இறைச்சி, கால்சி யம் நிறைந்த பால் போன்றவற்றில் இருக்கிறது. பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றையும் தொடர்ந்து எடுத்து கொள்வது நல்லது. இந்த வகை உணவுகள் டி 4 என்னும் ஹார்மோனை டி3 ஹார்மோனாக மாற்றும் இராசயனத் பொருள் இதில் உள்ளது.
தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கால்சியம் நிறைந்த பால் சேர்க்கலாம். அதே நேரம் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும். செரிமானத்தைக் கடினப்படுத்தும் பேக்கரி உணவுகள் செரிமானத்தை மட்டுமல்லாமல் தைராய்டு சுரப்பையும் பாதிக்கும். அதனால் இயன்றவரை இந்த வகையான பொருள்களைத் தவிர்ப்பது தைராய்டு சுரப்பில் பாதிப்பை உண்டாக்காது.
கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருக்கும் உண வுகள்,
எண்ணெயில் பொரி த்த உணவுகள், சாட்வகைகள், அதிக மசாலாக்கள் அனைத்தும் தைராய்டு சுரப்புக்கு இடை யூறை உண்டாக்கும்.
மதுபானப் பழக்கத்தைக் கொண்டிருக்கும் பெண்கள் தைராய்டு பிரச்சனைக்கு பிறகு அதை முற்றிலும் தவிர்க்க வேண் டும். இவை தைராய்டு சுரப்பில் ஏற்ற தாழ்வுகளை உண்டாக்கி உங்களிற்கு பிரச்சனை ஆகி விடும்
தைராய்டு என்பது முன் கழுத்து மேல் பகுதியில் வண்ணத்து பூச்சி போல் ஒரு சுரப்பி இருக்கும் அதுதான் தைராய்டு சுரப்பி என்று சொல்வார்கள். இந்த தைராய்டு சுரப்பி நம் உடலுக்கு தேவையான பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றது. அது மட்டுமின்றி நம் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளை கட்டுப்படுத்துவதும், இயக்கத்தை தூண்டக்கூடியதும் இந்த தைராய்டு சுரப்பி தான். இந்த தைராய்டு சுரப்பி பெருபாலும் பாதிப்படைவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அதிகப்படியான மன அழுத்தம், முறையற்ற உணவு பழக்கங்கள், உடலுழைப்பில்லாத வாழ்கை முறை, அயோடின் பற்றாக்குறை, உள்ளுறுப்புகளில் ஏற்படும் சிலவகையான பாதிப்புகள் மற்றும் மரபு ரீதியான காரணங்களினால் இந்த தைராய்டு சுரப்பி பெரும்பாலும் பாதிப்படைகின்றது
விளக்கமாக சொல்வதானால்
கேடயச் சுரப்பி அல்லது தைராய்டுச் சுரப்பி (Thyroid gland) என்பது உடலில் உள்ள மிகப்பெரிய அகச்சுரப்பிகளுள் ஒன்று. இச்சுரப்பி இரண்டு கதுப்புகளைக் கொண்டது. இக்கதுப்புகள் மூச்சுக்குழலின் மேல் பகுதியில் இரு பக்கங்களிலும் உள்ளன. இக்கதுப்புகள் குறுகிய இஸ்துமஸ்(isthmus) எனும் தைராய்டு திசுவினால் இணைக்கப்படுகின்றது. இது கேடயக் குருத்தெலும்புக்கு கீழே மோதிரவுருக் குருத்தெலும்பின் மட்டத்தில் அமைந்துள்ளது. இதன் எடை 20 கிராம்
இச் சுரப்பி நீரில்
தைராக்சின் (T3), நான்கு அயோடோ தைரோனைன் (T4) மற்றும் கால்சிடோனின் ஆகிய இயக்குநீர்கள் கேடயச் சுரப்பியால் சுரக்கப்படுகின்றன. தைராக்சின் வளர்சிதை மாற்றத்தை நெறிப்படுத்துவதுடன், உடலின் பிற தொகுதிகளின் வளர்ச்சியையும், செயற்பாட்டு வீதத்தையும் பாதிக்கின்றது. (T3), (T4) ஆகிய இரு வளரூக்கிகளிலும் அயடீன் முக்கிய கூறாக உள்ளது. கால்சிடோனின் உடலில் கால்சியச் சமநிலையைப் பேண உதவுகின்றது.
உடலில் தைராய்டு சுரப்பு குறைவாக இருப்பதை பல அறிகுறிகளை வைத்து கண்டுகொள்ளலாம். ஒரு பெண் தங்கள் உடலில் சோர்வை உணர்ந்தால் அதிலும் தொடர்ந்து உணர்ந்தால் அவர்கள் உடலில் தைராய்டு சுரப்பு குறைகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகளில் ஒன்றாக சொல்லலாம். இதனால் சுறுசுறுப்புத்தன்மையும் குறையும்.
இந்த பாதிப்பு இருக்கும் போது அவர்களால் வெயிலையும் தாங்கமுடியாது. குளிரையும் தாங்க முடியாது. வெப்பநிலைக்கு ஏற்ப உடல் மாறுவது சிரமம் உண்டாகும். உடல் எடை திடீரென்று அதிகரிக்கும். சிலருக்கு கால்களில் வீக்கம் உண்டாகும். இன்னும் சில பெண்களுக்கு குரலில் பெண் தன்மை இருக்காது. முடி உதிர்வையும் உணரலாம்.சில பெண்களுக்கு புருவ முடி கூட உதிரும். சருமம் வறண்டு இருக்கும்.உணவு சீராக எடுத்தாலும் மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டாகும்.
தைராய்டு சுரப்பியில் இரண்டு விதமான பிரச்சனைகளை சந்தித்தாலும் தைராய்டு குறைவாக சுரப்பதுதான் பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. வெகு சிலருக்கு மூளையில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியில் உண்டாகும் குறைபாட்டாலும் இவை உண்டாகிறது. ஹைப்போதைராய்டு பிரச்சனை என்று சொல்லகூடிய இந்த பாதிப்பை சிறுவயது பெண் பிள்ளைகளுக்கு இருந்தால் பூப்ப்ப்படைவது கூடபிந்திப் போகிறது.
மாதவிடாய் காலம், கர்ப்பக்காலாம், பிரசவக்காலம், பிரசவத்துக்கு பிறகு என்று ஒவ்வொரு காலங்களிலும் தைராய்டு சுரப்பு பெண்களுக்கு அவசியமாகிறது. பெண்கள் பூப்படைந்த காலம் முதல் கருமுட்டையின் வளர்ச்சி சீராக இருக்க ஹார்மோன் சுரப்பு அவசியம். அப்படி ஹார்மோன் செயல்பட வேண்டுமென்றால் தைராய்டு சுரப்பும் சீராக இருக்க வேண்டும்.
தைராய்டு சுரப்பியில் இருந்து சுரக்கும் ஹார்மோன்களின் அளவு குறைவாக இருந்தால் இவற்றை மருத்துவர்கள் ஹைபோ தைராய்டு என்பார்கள்.
ஒருவருக்கு ஹைபோ தைராய்டு இருக்கின்றது என்றால் அவர்களுக்கு உடல் எடை அதிக பருமனாக இருக்கும். என்னதான் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் உடல் எடையை குறைக்க முடியாது.
சாதாரணமாக ஒருவருக்கு இதய துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்க வேண்டும். ஆனால் இந்த ஹைபோ தைராய்டு இருப்பவர்களுக்கு இதய துடிப்பானது குறைவாக இருக்கும்.
ஹைபோ தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு அதிக சோர்வு, வேலை செய்வதில் அதிக ஆர்வமின்மை போன்றவைகளாக இருக்கும்.
முறையற்ற மாதவிடாய் பிரச்சனை இருக்கும்.
இந்த தைராய்டு பிரச்சனையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிப்படைகின்றன. பொதுவாக பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை வந்துவிட்டது என்றால் அவர்களுக்கு அதிகப்படியான முடி உதிர்வு பிரச்சனை இருக்கும்.
அதேபோல் ஒருவருக்கு தைராய்டு பிரச்சனை இருக்கிறது என்றால் அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். அதாவது மலம் கெட்டியாக இறுக்கி வெளியேறுவது, இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிப்பது போன்ற பிரச்சனை இருக்கும்.
தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிக குளிர் உணர்வாக இருக்கும் என்பதால் இவர்களுடைய உள்ளங்கால் மற்றும் உள்ளங்கை இரண்டும் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும். மேலும் சரும தோள்கள் வறண்டு காணப்படும்.
அதேபோல் இந்த தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு பாலுணர்வுகளில் அதிகநாட்டம் இருக்காது.
எப்பொழுதும் தூங்கிக்கொண்டே இருப்பார்கள், அதிக ஞயாபக மறதியாக இருக்கும், கன்னங்கள் இரன்டும் உப்பி காணப்படும், மேலும் இவர்களுக்கு கழுத்து பகுதியில் அதிகம் சதை தொங்கும்.
இதுபோன்ற அறிகுறிகள் அனைத்தும் ஒருவருக்கு ஹைபோ தைராய்டு இருப்பதற்கான அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகள் தவிர இரத்தத்தில் T3, T4 என்று சொல்லக்கூடிய தைராய்டு ஹார்மோன்கள் குறைவாகவும், TSH என்று சொல்லக்கூடிய Thyroid -stimulating hormone அதிகமாக இருக்கும்.
மேலும் ஹைபர் தைராய்டுஎன்னும் பொழுது தைராய்டு சுரப்பிகளில் இருந்து சுரக்கக்கூடிய ஹேராய்டு ஹார்மோன்களின் அளவு அளவுக்கு அதிகமாக சுரந்தால் அவற்றை ஹைபர் தைராய்டுஆகும்
ஒருவருக்கு ஹைபர் தைராய்டு இருக்கிறது என்றால் அவர்களது உடல் எடை மிகவும் மெலிந்து காணப்படும். இவர்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவர்களால் உடல் எடையை அதிகரிக்க முடியாது.
இவர்களுக்கு இதய துடிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.
ஹைபர் தைராய்டு ஒருவருக்கு இருக்கிறது என்றால் அவர்களுக்கு அதிகளவு பயம், பதற்றம், கை நடுக்கம் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கும். அதேபோல் அதிகப்படியாக இவர்கள் கோபம்படுவார்கள்.
மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அதாவது இவர்களுக்கு மாதவிடாய் தள்ளி வருவது அல்லது வராமலே இருப்பது போன்ற பிரச்னைகள் இருக்கும்.
ஒருவருக்கு ஹைபர் தைராய்டு பிரச்சனை இருக்கிறது என்றால் அவர்கள் அடிக்கடி நிறுநீர் மற்றும் மலம் கழித்து கொண்டே இருப்பார்கள். மேலும் தூக்கமின்மை, செரிமான பிரச்சனை, உடல் எப்பொழுது அதிக வெப்பமாக இருப்பது போன்ற பாதிப்புகள் இருக்கும்.
சாப்பிட்ட பின்பும் அதிக பசி உணர்வாக இருப்பது போன்ற அறிகுறிகள் அனைத்த்தும் ஒருவருக்கு ஹைபர் தைராய்டு பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகளாகும்.
அதேபோல் இவர்களுக்கு TSH என்று சொல்லக்கூடிய Thyroid-stimulating hormone குறைவாகவும், T3, T4 என்று சொல்லக்கூடிய தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாகவும் காணப்படும்.
ஒரு ஆணுக்கு ஹைப்போ தைராய்டு இருந்தால், அது பல்வேறு அறிகுறிகளான சீரற்ற இதய துடிப்பு, தாங்க முடியாத உடல் சூடு, களைப்பு மற்றும் தூங்குவதில் சிரமம் போன்றவை தெரியும். சிலருக்கு உடல் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் இடையூறால் வேகமான எடை இழப்பு அல்லது உடல் பருமனை அனுபவிக்கக்கூடும்.
இயற்கையான உணவே மருந்து என்பது உங்களுக்குத் தெரியும்
உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை(செங்கண்ணா ப்பழம் ) அதிகம் சாப்பிட்டால், தைராய்டில் (Thyroid Problem) இருந்து குணமாகலாம்.
ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது. எனவே தைராய்டு குணமாக நினைப்பவர்கள் ஸ்ட்ராபெர்ரி பழத்தை அதிகளவு உண்டு வந்தால் கட்டாயம் தைராய்டு பிரச்சனை (thyroid treatment) சரியாகிவிடும்.
செலினியம் குறைபாடும் தைராய்டு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே செலினியம் அதிகம் உள்ள காளானை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
காளானை அதிகளவு உண்டுவர தைராய்டு பிரச்சனை (Thyroid Problem) சரியாகிவிடும்.
செலினியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று. இந்த பூண்டு தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கும் சிறந்தது.
தைராய்டு குணமாக (Thyroid Problem) பூண்டை அதிகளவு உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
பூண்டு என்பது உள்ளி ஆகும்
பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின், புரோட்டீன், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது.
எனவே அவற்றில் ஒன்றான பசலைக் கீரையை அதிகம் சாப்பிட்டால், தைராய்டு குணமாக்கும் (thyroid treatment) சிறந்த ஒன்றாக விளங்குகிறது..
மாட்டிறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பு குறைவாக உள்ள மாட்டிறைச்சியை சாப்பிடுவது சிறந்தது.
இறைச்சி உணவுகளை அதிகம் விரும்புபவர்கள் கொழுப்பு குறைவாக உள்ள மாட்டிறைச்சியை உட்கொள்ளுங்கள்.
முட்டை மற்றும் பால் பொருட்கள் தைராய்டு சுரப்பிக்கு மிகவும் (thyroid treatment) ஆரோக்கியமானது.
இத்தகைய உணவுகளில் கால்சியம் மட்டுமின்றி, அதிகப்படியான அளவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் உள்ளது.
தானியங்களில் ப்ரௌன் அரிசி, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.
சிவப்புப் பச்சை அரிசி மிக மிக நல்லது
ப்ராக்கோலி : காய்கறியை தினமும் சாப்பிட்டால், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இதனால் தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்
தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. முக்கியமாக இந்த உணவை தைராய்டு பிரச்சனையால்பாதிக்கப்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி வாழ்க
Manikkavasagar Vaitialingam



கருத்துகள்
கருத்துரையிடுக