சிரித்திரன்
%%%%%%%%%%
பலரின் வேண்டுகோளுக்கு இணங்கவே எனது கட்டுரை சுருக்கப்படுகிறது
%%%%%%%%%%%%%
கரவெட்டியில் பிறந்த சிவஞானசுந்தரத்தின் தந்தை இலங்கையின் முதலாவது அஞ்சல் மாஅதிபர் வி. கே. சிற்றம்பலம். சுந்தரைக் கட்டிடக்கலை கற்பதற்கு இந்தியாவுக்கு அனுப்பினார் தந்தை. தந்தையின் விருப்புக்கு மாறாக அங்கு கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டு ஒரு கேலிச்சித்திர விற்பன்னராக நாடு திரும்பினார். ஆரம்பத்தில் தினகரன், வீரகேசரி, மித்திரன் நாளிதழ்களில் கேலிச் சித்திரங்கள் வரைய ஆரம்பித்தார். அன்றைய தினகரனில் வெளிவந்த சவாரித்தம்பர் கார்ட்டூன் மிகப் புகழ் பெற்றது.
சுமார் 45 ஆண்டுகளாக இலங்கையில் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்தியவர். பல்லாயிரக்கணக்கான சித்திரங்களைத் தீட்டியுள்ளார். அவர் 1964 ஆம் ஆண்டில் தொடங்கிய சிரித்திரன் என்ற மாத இதழ் அவரது மறைவு வரை ஏறத்தாழ 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.
மார்ச் 3, 1924 இல் பிறந்து மார்ச் 3, 1996 இல் மறைந்த அவர் சிந்தனையாளர்
கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள சென் பெனடிக்ற் மாவத்தையில் பல சிரமங்களுக்கு இடையில் 1964 இல் சிரித்திரனை வெளியிடத் தொடங்கினார். ஏழு ஆண்டுகள் கொழும்பில் இயங்கிய பின்பு யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் இருந்து வெளியிட்டார். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைச் சிரித்திரனில் பதிப்பித்தார்.
1987 ஆம் ஆண்டில் இந்திய அமைதிப் படையினருடன் நிகழ்ந்த போரின் போது இடம்பெற்ற சம்பவங்களில் சிரித்திரன் அச்சகத்தின் சொத்துகள், அச்சகப் பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. அத்துடன் அவரைப் பாரிசவாத நோய் பற்றிக் கொண்டது. வலது கரம் இயங்க மறுத்த நிலையில் இடது கரத்தால் எழுதி மீண்டும் சிரித்திரன் இதழை வெளியிட்டு வந்தார். 1995 மூன்றாம் ஈழப்போரின் போது இடம்பெற்ற வலிகாம இடப்பெயர்வின் போது மீண்டும் கடுமையான நோய்க்கு ஆளானார். வடமராட்சியிலேயே 1996 மார்ச் 3 ஆம் நாள் காலமானார். மிகக் குறுகிய காலத்தில் அவரது மனைவியும் காலமானார்
மைனர் மச்சான்”“மகுடி”
போன்ற இவரது பார்வையில் சமுதாயக் கண்ணோட்டம் இருந்தது
முதலில் கொழும்பில் இருந்து வெளிவந்த தினகரனில் கார்டுநிஸ்ட் ஆக இருந்து , அதில் வெளிவந்துகொண்டிருந்த சவாரித்தம்பர் கார்ட்டூன் மிகப் புகழ் பெற்றதால் , தானாகவே ஒரு பத்திரிகை ஆரம்பித்து இருக்கிறார் . அவரது கார்ட்டூன் நாயகர்களனைவரும் சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான், மெயில் வாகனத்தா ர் , எல்லாரும் அவர் பிறந்து வளர்ந்த சொந்தக்கிராமமான கரவெட்டியில் அவர் அன்றாடம் சந்திக்கும் உண்மைப்பாத்திரங்கள் .
யாழ்ப்பாணத்தில் சிரித்திரன் பிரவுன் வீதியில் இருந்தபொழுது ......
அதன் பொருளாதார சிக்கல் நேரங்களில் கைகொடுத்தது மில்க்வைற் சவுக்கரக் கொம்பனி நிறுவனம் நடத்திய க கனகராசா அவர்கள் !
மில்க்வைற் கனகராசா : "சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்கள் ஒரு நிறைமனிதன். தனது அறிவையோ ஆற்றலையோ அவர் குறிப்பிட்ட வட்டத்திற்குள் குறுக்கி விடவில்லை. அவர் நல்லவற்றைச் சிந்தித்தார். நல்லவற்றைச் செய்தார். நகைச்சுவை மூலம் நல்லவற்றை மக்கள் மனத்தில் ஆழப்பதிய வைத்தார். எமது பணிகளில் எம்முடன் இணைந்து வாழவைக்கும் வன்னிப் பிரதேசத்தில் பனம் விதைகளை விதைப்பதில் அவர் காட்டிய ஆர்வமும் கொண்ட பெருமிதமும் எமது நெஞ்சில் என்றுமே பசுமையாக நிறைந்து நிற்கும். இன்று நிமிர்ந்து நிற்கும் மரங்கள் சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களையும் மறக்க மாட்டா." என்று சொல்லியிருக் கின் றார் !
சிரித்திரனில் ஆரம்பகால எழுத்தாளர்கள் தர்மு (சுவைத்திரள் ஆசிரியர்),அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப் , யாழ் நங்கை, காசி ஆனந்தனின் இலட்சியத் தாகம் மிகுந்த மாத்திரைக் கதைகள் அதில்குடாரப்பூர் சிவா "நடுநிசி" என்ற மர்மக்கதையை எழுதியிருகுறார் .
மாஸ்டர் சிவலிங்கத்தின் விண்ணுலகத்திலே சிறுவர் கதை, அ. ந. கந்தசாமியின் கதைகள் . மலையகப் படைப்பாளி ராகுலனின் "ஒய்யப்பங் கங்காணி" . செங்கை ஆழியானின்" ஆச்சி பயணம் போகிறாள்" , " கொத்தியின் காதல்" ,, எல்லாம் அதிலவந்தன ,இலங்கையில் புதுக்கவிதையை அறிமுகப் படுத்தி ஜனரஞ்சகப் படுத்திய பெருமை நிச்சயம் சிரித்திரனுக்குண்டு
ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில் ,கவிதைகளுடன் அதற்கேற்ப சிறிய படங்களும் வரைந்து திக்குவல்லை கமால், ராதேயன், பூநகரி மரியதாஸ் (தனுஜா) இப்படிப் பலர் சிரித்திரனில் புதுக்கவிதைகள் எழுதியிருகிறார்கள்
சிரித்திரன் சுந்தரின் மனைவி தான் அவரோட முதல் வாசகி, ரசிகை , ஓர் ஆழமான ரசிகை. அவருடைய ஒத்துழைப்பும் பின்னணியும் சிரித்திரன் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகித்தது
. அதிகம் பேசாது நிறையச் சாதித்தவர் சுந்தர். தனது சித்திரங்களை கார்ட்டூன் என்று அழைப்பதில்லை, அவற்றைக் கருத்தூண்கள் என்றே அழைத்தார். அவர் நல்லவற்றைச் செய்து அவற்றை நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் ஆழப்பதிய வைத்தார்.
சிந்தனைச் சிறப்பாலும், கேலிச் சித்திரங்கள், கருத்தோவியங்கள் போன்ற படைப்புகளாலும் ஈழத்துத் தமிழிலக்கியத்தில் சிரித்திரன் சஞ்சிகை தனக்கென தனியிடத்தை நிலைநிறுத்தியது . 'மகுடி பதில்கள்' என்று சுந்தர் எழுதிய கேள்வி பதில்கள் அதன் சமகால பத்திரிகை உலகில் பலராலும் விவாதிக்கப்பட்டது.
இது தமிழ்நாடு வரையில் ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதுபலருக்குத் தெரியாது .
நீண்ட பாரம்பரியம் கொண்டிருந்த நிறுவனங்களும் , இதழ்களும் , நூல்களும் கோலோச்சிக் கொண்டிருந்த தமிழ்நாட்டில் நமது சிரித்திரன் விரும்பி வாங்கப்பட்டு இருந்ததும் , முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெருவிருப்ப நூல் தொகுப்பினுள் பங்கேற்றுக் கொண்டதும் நாம் இன்றுவரை பெருமை கொள்ள கூடிய நினைவுகள் ஆகும்.
சிரித்திரன் இதழ் Centre for Creativity and Innovation நிறுவனத்தால் மீள்பதிப்பிக்கப்பட்டு 2021 சனவரி தொடக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து உலகெங்கும் கிடைக்க கூடிய வகையில் அச்சுப்பிரதியாக வெளியிடப்பட்டு வருகின்றது.
இலங்கையில் புதுக்கவிதையை முன்தள்ளி ஜனரஞ்சகப் படுத்திய பெருமை நிச்சயம் சிரித்திரனுக்குண்டு. கவிதைகளுடன் அதற்கேற்ப சிறிய படங்களும் வரைந்து பிரசுரிப்பார்.
சுந்தர் எஸ்.ஆர்.கனகசபையின் ஆகர்ஷிப்பால் சுயமாக கீறத் தொடங்கியவர். பம்பாயில் சேர்.ஜெ.ஜெ.ஸ்கூல் ஒப் ஆட்ஸ் இல் பயின்றவர். “லோக்சத்த” என்ற மராட்டிய பத்திரிகையிலும் ஆங்கில பத்திரிகைகளான “பிளிட்ஸ்” “கொஞ்ச்” என்பவற்றிலும் இலங்கையின் பெரும்பாலான தமிழ் பத்திரிகையிலும் இவர் காட்டூண்களை கீறியிருக்கிறார். இந்தியாவில் இருந்த காலங்களில் றாஜாராம் என்பவரிடம் உருவ ஓவிய வரைபிலும் சார்க்கோல் வரைபிலும் பயிற்சி பெற்றார். இந்திய சுதந்திர போராட்ட காலத்திலும் இந்து முஸ்லீம் கலவரங்களின் போதும் அரசியல் காட்டூண்களை கீறியுள்ளார்.
ஆறு தசாப்தங்களுக்கு முன் சிறப்பான நகைச்சுவை துணுக்குகள்,கருத்தாழம் மிக்க ஓவியங்கள்,சமூக வெளிப்பாடாகிய சிந்தனை கருத்துக்கள் ஊடாக மக்கள் மத்தியில் இடம்பிடித்த சிரித்திரன் சஞ்சிகையின் மீள் வரவு பலருக்கும் மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





கருத்துகள்
கருத்துரையிடுக