கோவில்களில் பெயிண்ட் அடித்திருப்பார்கள்
கற்பூரம் கொளுத்த தற்பொழுது அனுமதிப்பது கிடையாது .ஆனால் எரிகின்ற கற்பூரப் புகை ஒரு கிருமி நாசினி
அதை சுவாசிப்பவர்களுக்கு பல நோய் நீங்குவது கண்கூடு
திருமணத்தடை உள்ளவர்கள் 36 கிராம்பு, 6 கற்பூரம், ஒரு ஸ்பூன் பச்சரிசி, ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள். இவைகளை ஒன்றாக வைத்து துர்க்கையம்மனுக்கு நைவேத்தியமாக படைத்து, மனதார திருமணத்தடை நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டால், எப்படிப்பட்ட தடையும் விரைவாக நீங்கும் என்று மலையாள சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாய்க்கிழமையும் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். தொடர்ந்து 11 வாரம் செய்தால் நல்ல பலன் உண்டு.
இந்த பரிகாரத்தை செய்வதற்கு நல்ல கற்பூரங்களை பயன்படுத்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மெழுகு கற்பூரம் வேண்டாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதிக கலப்படம் இல்லாத தரமான விளைவு கற்பூரத்தை பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். பூங்கற்பூரம் அல்லது கட்டி கற்பூரம் என்று சொல்லுவார்கள்
வெற்றிலை பாக்கை இறைவனுக்கு படைக்கும் போது எப்போதுமே வெற்றிலையின் நுனி பகுதி தெற்கு பக்கம் பார்த்தவாறு இருக்கக்கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் வீட்டு பூஜை அறையில் அல்லது கோவில்களில் வெற்றிலை பாக்கு இறைவனுக்குப் படைப்பதாக இருந்தால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள்.
பூசாரிகளை தவறு செய்ய விடாதீர்கள் .
மேலும்
தேங்காயை உடைத்து இறைவனுக்கு படைக்கும்போது தேங்காயில் இருக்கும் கண் மூடி, சுவாமிக்கு வலது பக்கம் தான் எப்போதுமே இருக்க வேண்டும். கண் இல்லாத அடி மூடியானது சுவாமிக்கு இடது பக்கம் இருக்க வேண்டும்.
‘சுவாமிக்கு வலதுபக்கம் கண் உள்ள மூடி இருக்க வேண்டும். சுவாமிக்கு இடது பக்கத்தில் அடி மூடியானது இருக்க வேண்டும்’. அதுவே நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து பார்த்தால், உங்களுடைய இடது பக்கம் கண் உள்ள தேங்காய் மூடி இருக்க வேண்டும். உங்களுடைய வலது பக்கம் கண் இல்லாத அடி மூடி இருக்க வேண்டும்
இறைவனுக்கு பஞ்ச பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைக்கும்போது, அந்த தண்ணீர் பஞ்ச பாத்திரத்தில் நிரம்ப இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீரை பஞ்ச பாத்திரத்தில் குறைவாக வைத்து சுவாமிக்கு பூஜை செய்ய வேண்டாம்.
உங்களுடைய வீட்டில் தீபம் ஏற்றுவதற்கு முன்பு பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை கீழே கொட்டிவிட்டு, அதில் புதியதாக தண்ணீரை நிரப்பி தான் பூஜை அறையில் தீபம் ஏற்றவேண்டும். அதுதான் நம்முடைய குடும்பத்திற்கு நல்லதும் கூட.
சாஸ்திரங்கள் சொல்லும் சின்ன சின்ன விஷயங்களை உங்களுடைய வீட்டில் கடைபிடித்து வந்தாலே போதும். குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் ஊரில் மகிழ்ச்சி நிலவும் .
எக்காரணம் கொண்டும் தவறு நடக்க விடாதீர்கள்
➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽
பச்சை கற்பூரம் தெய்வீக தன்மை மட்டுமின்றி மருத்துவ குணமும் மிக்கது. பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுவது பல்வேறு நன்மைகளை நமக்கு அருளச் செய்கிறது.
கற்பூரத்துக்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை உண்டு. எனவே, ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை கட்டி குபேர மூலையில் வைத்து வழிபட்டு வந்தால் வீட்டில் நிரந்தரமாக செல்வம் தங்கியிருக்கும்.
வீட்டில் பணத்தை வைக்கும் பெட்டி, பீரோவில் பச்சைக் கற்பூரத்தை ஒரு துணியில் கட்டிப் போட்டு வைத்தால் பணப் பிரச்னை வராது என்பது நம்பிக்கை. இப்படி செய்வதால் செல்வம் மேலும் மேலும் பெருகும். பீரோ, பெட்டி மட்டுமின்றி பர்சில் கூட கற்பூரத்தை வைத்துக்கொள்ளலாம்.
நம் வீட்டை, நம்மைச் சுற்றியுள்ள அனைத்து கெட்ட சக்தியையும் அழித்து, நேர்மறை சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் பச்சை கற்பூரத்துக்கு உண்டு.
பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்து வந்தால் வீட்டில் நிம்மதி நிலைக்கும். இதுநாள் வரை இருந்து வந்த நிம்மதியின்மை, அமைதியின்மை உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும்.
காலை நேரத்தில் பச்சைக் கற்பூரத்தை எரித்து பூஜை செய்வதன் மூலம் துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை சக்தி அழிக்கப்படும். மேலும் கற்பூரத்தின் வாசனை காற்றை சுத்தப்படுத்தி, அன்றைய நாள் முழுவதும் நாம் புத்துணர்வுடன் இருக்கச் செய்யும்.
பச்சைக் கற்பூரம் ஒரு சிறந்த கெட்ட நுண்ணுயிர் கொல்லியாகும். பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிரிகளை இது அழிக்கிறது. டைஃபாய்டு, அம்மை வந்தவர்களுக்கு பச்சை கற்பூர வாசதனையை காட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.
தீபாராதனை ஒளியில் இறைவனின் திருவுருவம் நம் கண்களுக்கு பிரகாசமாக தெரிகிறது அல்லவா.?
மனதில் பக்தி ஒளிரும் போது தான் இறைவனை தரிசிக்க முடியும் என்பது தான் பொருள். வாசனைகள் ஒன்று சேர்ந்த பொருள் கற்பூரம். இதனை ஏற்றி இறைவனுக்கு முன் காட்டி எரிய விடும் போது நமது உணர்வுகளை பற்றும் வாசனைகள் எரிந்து உருவம் அழிந்து போகிறது என்பதையே பாவனையாக காண்கிறோம்.
மூலஸ்தானம் என்கிற கருவறை எப்போதும் இருட்டாக இருக்கும் பகுதி காற்றும் ஒளியும் வெளியிலிருந்து அங்கே செல்ல முடியாது பிற எண்ணங்களுக்கு இடம் தராத நம்முடைய உள்மனதை இந்த கர்ப்பகிரகம் பிரதிபலிக்கிறது. அதில் உறையும் இறைவன் சாதாரணமாக நமக்கு புலப்படுவது இல்லை. நடை திறந்து. திரை விலகி. மணி ஓசையுடன் தீபாராதனை நடைபெறும் போது இருள் நிறைந்த மூலஸ்தானத்தில் தூய்மையான ஒளிபரப்பில் இறைவனை நாம் காண்கிறோம்.
அது போலவே ஞானம் பிரகாசிக்கும் போதும் நம் உள்ளத்தில் அறியாமை இருள் மறைந்து உள்ளே ஒளிரும் இறைவனின் தரிசனம் நமக்கு கிட்டும் என்பதையே தீபாராதனை மூலம் நமக்கு சொல்லப்படும் செய்தி.கற்பூரம் தன்னை முற்றிலும் அழித்து கொண்டு விடுகிறது. பூரணமாய் கரைந்து போய்விடுகிறது. அதைப்போலவே இறைவன் முன் நம்மை நாம் பூரணமாக கரைந்து போய்விட வேண்டும்.
இறைவனுக்கு அவன் தந்த அனைத்தையும் அர்ப்பணித்து தன்னையே ஆத்ம சமர்ப்பணம் செய்வதே கற்பூர தீப ஆராதனையும் அதனை கண்களில் ஒற்றிக்கொண்டு இறைவனது திருவடியில் விழுந்து வழங்கும் நிகழ்வும் நமக்கு உணர்த்துகின்றன.
கற்பூர தீபம் எரியத் தொடங்கிய நேரம்முதல் அது குளிரும் நேரம் வரை இறைவனது சிலைகளில் படங்கள் முதலிய இறைத் தொடர்பான அனைத்துப் பொருள்களிலும் தெய்வ சாநித்யம் உச்சநிலையில் விளங்குகிறது. அந்தக் குறிப்பிட்ட சில நொடிகளில் மனப்பூர்வமாக இறைவழிபாடு செய்யக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.
தீப ஆராதனையின் போது காற்றால் மோதப்பட்டோ அல்லது எதோ ஒரு காரணத்தாலோ தீபம் அணைந்துவிட்டால் உடனே வேறு கற்பூரத்துண்டுகளை வைத்து எரித்து, மீண்டும் தீப ஆராதனை காட்ட வேண்டும். வாயால் ஊதித் தீபத்தை அணைக்கக்கூடாது. கற்பூர தீபத்தை அணைத்துச் சத்யம் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அதை மீறவே கூடாது.
கற்பூர தீப ஆராதனையின்போது இறைவனுக்குச் சூட்டிய மலர் கீழே விழுவதும், பல்லி குரல் கொடுப்பதும், மற்றவர்கள் எதேச்சையாக பேசும் நல்ல சொற்களைக் கேட்பதும், இறைவன் திருமுன் வைத்திருக்கும் எலுமிச்சம்பழம் உங்களுக்கு முன் உருண்டு வருவதும் மங்களமாகும்.
கற்பூர தீபம் இடையில் நிற்காமல் முழுமையாக எரிந்து தானே அடங்கவேண்டும். பிரகாசமாக வலஞ்சுழித்து எரிவது மிகவும் நல்லது. தீபம் நடுங்கக்கூடாது. ஆராதனை முடியும்வரை எரியக் கூடிய அளவுக்குப் போதிய கற்பூரத்தை ஆரத்தியில் நிரப்புவது மிக முக்கியம்.
கற்பூரம் கடைசிவரை எரிந்து போகும். எதுவும் மிஞ்சாது. மனிதன் இறந்த பிறகும் இதே நிலைதான். எஞ்சும் .
உனது சாம்பல்கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டப்படுகிறது. எனவே இந்த தத்துவத்தின் படி எதுவுமே மிச்சமில்லாமல் நம்மை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதே இதன் தத்துவம்.
அதேப்போல் கருவறையிலிருக்கும் இறைமூர்த்தம் கல்லினால் வடிக்கப்பட்டது. பலவித அபிஷேகங்கள் செய்வதால் நாளடைவில் சிலாரூபம் அடர்கருமை நிறத்துக்கு மாறிடும். இறைவனின் அழகை முழுமையாய் கண்டு ரசிக்கவே கற்பூர ஒளி காட்டப்படுகிறது.
கற்பூர வெளிச்சத்தில் இறைவனின் அழகு தெள்ளத்தெளிவாய் தெரியும். அதேப்போல், கற்பூரம் எரிந்துமுடிந்தவுடன்
காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அதுபோல ஒளியாகிய ஞானாக்கினியில் நமது அறியாமை எரிக்கப்பட்டு மறைந்து விடு வதை கற்பூர தரிசனம் நமக்கு உணர்த்துகிறது.
கடவுள் இருக்கும் அறையைக் கருவறை என்று சொல்லுகிறோம். கற்சுவரின் மத்தியில் கொலுவிருக்கும் இறைவனின் திருமேனியும் கல்லினால் செய்திருப்பதால் கரிய நிறத்துடனேயே இருக்கிறது.
வெளிச்சத்தைக் காட்டி கடவுளை முழுமையாகத் தரிசிப்பதற்கு கற்பூர ஒளி நமக்கு உதவுகிறது என்பது பொதுவான விளக்கம். ஆனால் பூரணமான அருள்சக்தி ஒளிவடிவில் இருப்பதால், அந்த ஒளியைக் கற்பூரத்தின் பிரகாசத்தில் காண்கிறோம்.
அதே சமயத்தில் இறைவனது திருமேனியை அங்கம் அங்கமாகத் தரிசிக்கவும் முடிகிறது. மேலும் கற்பூரத்தின் சுடர் அணைந்தவுடன் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அதுபோல ஒளியாகிய ஞானாக் கினியில் நமது அறியாமை எரிக்கப்பட்டு மறைந்து விடுவதை கற்பூர தரிசனம் நமக்கு உணர்த்துகிறது.
மனிதன் தனது வாழ்வில் மூன்று விதமான கர்மவினைகளை அனுபவிக்கின்றான். அவை சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாமிய கர்மம்.
இதில் சஞ்சித கர்மம் என்பது ஒரு கரு உருவாகும் பொழுதே அதனுடன் சேர்ந்து உருவாவதாகும். அதாவது தாய், தந்தை, அவரது முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களில் இருந்தும், இந்த ஆத்மா பல ஜென்மங்களில் செய்த பாவ புண்ணியங்களிலிருந்தும் உருவாகும் கர்மவினைகளாகும்.
பிராப்த கர்மம் என்பது ஒரு ஆத்மா பல ஜென்மங்களாக செய்த பாவ புண்ணியங்கள் மூலம் இந்த பிறவியில் கிடைக்கும் நன்மை தீமைகளாகும். இந்த கர்மாவால் கிடைக்கும் பலனை இந்த பிறவியில் தான் அனுபவிக்க வேண்டும்.
ஆகாமிய கர்மம் என்பது மேற்கூறிய கர்மவினைகளை கழிப்பதற்காக இப்பிறவியில் செய்யக் கூடிய பரிகாரங்கள் மூலமும் பிறருக்கு செய்யக்கூடிய தானங்கள் மூலமும் கிடைக்கப்பெறும் பலன்களாகும்.
இவற்றிலிருந்து விடுபட சில பரிகாரங்களையும், வழிபாடுகளையும் முறையாக செய்திடவேண்டும்.
தானத்தில் எல்லாம் சிறந்த தானம் அன்னதானம் என்று அனைவரும் அறிந்ததே. வாய் வாழ்த்த விட்டாலும் வயிறு வாழ்த்தும் என்பது அன்ன தானத்தின் சிறப்பை கூறும் பழமொழி. இதற்கேற்ப மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவை தானமாக கொடுப்பது சிறந்த பலனை கொடுக்கும்.
எள்ளெண்ணையுடன் பச்சைக் கற்பூரம் விளகேற்று வது அல்லது வாழை மரத்துக்கு தாலி கட்டுவது நல்லது .
பரம்பொருள் ஒன்றே, பல அல்ல, ஒன்றிலிருந்து மற்றொன்று ஒளிர்கிறது என்பதைக் காட்டுவதற்காக ஏக கற்பூர தீபம் ஏற்றப்படும்.
இந்த கற்பூரதீபத்திலிருந்து தீபம் எடுத்துச்செல்லப்பட்டுமற்ற திரிகள் ஒளிர்வு ஏற்றப்படும் .
ஆனால் விழாக்களில் மெழு கு வர்த்தி ஏற்றப்பட்டு திரிகளில் ஒளிர்வு ஏற்படுத்தப்படுவது தான் இப்பொழுது நடை பெறுகிறது .இது தவறு .
Manikkavasagar Vaitialingam
தொடரும் நான்காம் பாகம்

கருத்துகள்
கருத்துரையிடுக