பொன்னாலை, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமம் மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒர் ஊர்.யாழ்ப்பாணக் கடலேரிக் கரையில் காரைநகரை நோக்கியபடி அமைந்துள்ள இந்த ஊர், யாழ்ப்பாணம்-மானிப்பாய்-காரைநகர் வீதி, யாழ்ப்பாணம்-பொன்னாலை-பருத்தித்துறை வீதி, வட்டுக்கோட்டை-மூளாய் வீதி என்பவற்றால் வரையறுக்கப்படும் பகுதிக்குள் ஏறத்தாழ அடங்குகிறது. சுழிபுரம், மூளாய், வட்டுக்கோட்டை என்னும் ஊர்கள் பொன்னாலையைச் சுற்றி அமைந்துள்ளன.

இது யாழ் நகரிலிருந்து 12கீ.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. பொன்னாலை வீதி, மாவடி வீதி என்னும் இரு முக்கிய வீதிகள் இக்கிராமத்தினை ஊடறுத்துச் செல்கின்றன.
அக் காலத்தில் இக் கிராமத்திலிருந்து வெற்றிலையும் சிறு தானியங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இக் கிராமத்தினைச் சேர்ந்த அன்பர் ஒருவரினால் வழங்கப்பட்ட ஓர் பெரிய மணி இன்றுவரை சிதம்பரத்தில் மூளாயின் பெயர்கூறி நிற்கின்றது.வயல்நிலைப் பரப்புக்கள் தோட்டங்கள் என்பன கிராமத்தின் வேளாண்மை விருத்தியை விளக்கி நிற்கின்றன. அவற்றிற்கு உணவூட்டும் குளங்கள் கேணிகள் என்பனவும் அழகிய காட்சிகள் ஆகும். பாரம்பரிய தொழிலான உழவுத் தொழிலை மேற்கொள்பவர்கள், கல்விமான்கள், கவிஞ்ஞர்கள், வைத்தியர்கள், இசைவல்லுனர்கள், சட்டத்துறைவல்லுனர்கள், சிற்பச்சித்திரத் திறனாளிகள், சித்த மருத்துவர்கள் என்று பல துறை அறிவும் அனுபவமும் பெற்றவர்கள் வாழும், வாழ்ந்த கிராமம் மூளாய் கிராமம்.
இங்கு சிவபிரானின் பெயரைத்தாங்கியுள்ள பித்தனை (பித்தன் அணையுமிடம்) என்ற மயானமும் உ ள்ளது.
வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் தொன்மையும் பல் சிறப்பும் பெற்ற கிராமமாக மூளாய்க் கிராமம் அமைந்துள்ளது. பல் வளம் கொழிக்கும் இக் கிராமத்தில் எம்மை வாழ்வாங்கு வாழவைக்கும் கல்விச் செல்வத்தை அள்ளி வழங்கும் சாலைகளாக மூளாய் சைவபிரகாச வித்தியாலயமும், மூளாய் அமெரிக்கன் மிஷன் அரச தமிழ்க் கலவன் பாடசாலையும், மூளாய் இந்து இளைஞர் மன்றத்தினால் நடாத்தப்படும் சிறுவர் பாடசாலையும், சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் பரிபாலன சபையால் நிர்வகிகப்படும் ஞானஒளி அறநெறிப் பாடசாலை என்பனவும் திகழ்கின்றன.
1908 ஆம் ஆண்டு ஸ்ரீமான் கந்தையபிள்ளை என்ற அன்பரினால் ஆரம்பிக்கப்பட்ட சைவபிரகாச அன்னை ஸ்தாபகரின் தூய உள்ளத்தின் சிந்தனைக்கமைவாக சைவமும் தமிழும் தழைத்தோங்க பல கல்விமான்களை உருவாக்கி சமூக வளர்ச்சிக்கு அடிகோலி வருகின்றது.
மூளாயில் 1908ஆம் ஆண்டில் ஸ்ரீமான் சி. கந்தையாபிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட யா / மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயம் . சித்தி விநாயகராலய மடத்திலே உருவாகிய இக்கல்விக்கூடம் 1912இல் ஓலைக் கொட்டிலில் உரிய இடத்திற்கு இடம்மாறி 1924இல் வைரக்கற்களினால் அமைக்கப்பட்ட குடாநாட்டுப் பாடசாலையாக வளர்ந்து இன்று மாடிக்கட்டிடம் கொண்ட வித்தியாலயமாகி நிற்கிறது .
சைவபிரகாச அன்னைக்கு அருகில் மூளாய் அமெரிக்கன் மிஷன் பாடசாலை .... ஆண்டிலிருந்து ஆரம்பநிலைப் பாடசாலையாக சிறுவர்களுக்கு இருக்கிறது
இந்தக் கிராமம் மூ ள் போன்று வடிவத்தில் இருப்பாதால் மூளாய் இருக்கிறது என்பர் .ஆனால் மூளை அறிவு மிக்க பல மேதாவிகளைக் கொண்டதாக இந்த ஊர் இருந்தது என்றும் கூறுவார் கள் .
என்னைப் பொறுத்தவரை மூலம் ஆக இருப்பது அந்த மண்ணே .புரிந்தவர்க்கு புரியட்டும்
மேலும்
ஆய் என்பது ஆயர் குல மன்னர்களையும் மற்றும் அவர்கள் ஆண்ட நாட்டையும் குறிக்கும் பெயர். கி.பி 866 ஆம் ஆண்டு ஆய்குல அரசன் ஸ்ரீவல்லபனின் பார்த்திவசேகரபுரச் சாசனம் மற்றும் பாலியத்துச் சாசனம் ஆகியவற்றின் வடமொழி பகுதியில் இவர்கள் சந்திர வம்ச யாதவ மரபினர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்
ஆய் சங்க கால சிற்றரசுகளில் ஒன்றாகும். ஆய் மன்னர்களை பற்றி பல இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கடைஏழு வள்ளல்களில் ஒருவராக ஆய் ஆண்டிரனை சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.ஆய் நாடு இன்றைய குமரிமுனை தொட்டு பொதியமலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி வடக்கில் திருவல்லா வரை பரவியிருந்தது.இதனை சங்ககால வேளீர் (ஆயர்) குல மன்னர்கள் ஆயக்குடியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். கி.பி 9ம் நூற்றாண்டில் சேர பேரரசர் சேரமான் பெருமாள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டதும் சேரப் பேரரசின் மைய அரசு வலுவிழந்த நிலையில், பிற்காலச் சோழர்களின் தொடர் படையெடுப்பை எதிர்கொள்ளவியலா நிலையிலும், வாரிசில்லா நிலையிலும் ஆய்நாடு வேணாட்டுடன் இணைந்தது. ஆய் நாட்டிற்கு தெற்கே வேணாடும், வடக்கே பாண்டியநாடும், மேற்கே சேரநாடும் அமைந்திருந்தது.
இவர்களின் ஆட்சியின் கீழ் தொ ல் புர மும் மூளாய் யும் இருந்ததாம்
ஆய் கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர் குல மன்னன் ஆவான் . இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர்.
ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்.இதனை இடைக்கழிநாட்டுநல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நிழல்திகழ்
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலஅமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும்
வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.புறநானூறு மட்டுமின்றி அகநானூறு,குறுந்தொகை மற்றும் சிறுபாணாற்றுப்படை முதலியவற்றிலும் இவரை பற்றிய மேலும் சில பாடல்கள் எழுதப்பட்டுள்ளன..இவர் தன்னை அண்டி வருபவர்களுக்கு,களிறுகளை பரிசாக அளிக்கும் கொடை குணம் கொண்டவர்.இதனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் இவரை பற்றி எழுதிய பாடல்களில் இருந்து அறியலாம்.
ஆய்-எயினன் அருள் உள்ளம் கொண்டவன். பறவைகளை பேணிப் பாதுகாத்துவந்தவன். இவன் ஆய் குடி என்னும் ஊரில் தோன்றிய மன்னர்களில் ஒருவன்.
இவனைப்போலவே அதிகன் என்பவனும், பறம்பு-நாட்டு அரசன் பாரியும் பறவைகளைப் பேணிப் புகலிடம் தந்தவர்கள். சோழ அரசன் சிபி புறாவின் உயிரைப் பாதுகாக்கத் தன் உடலையே பருந்துக்குத் தர முன்வந்தவன் என்பதை இங்கு நினைவுகூரலாம்.
புன்னாட்டை நன்னனிடமிருந்து மீட்டு அந்நாட்டு மக்கள் வேளிர்க்கே தருவதற்காக மிஞிலி என்பவனோடு வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் போரிட்டபோது மாண்டவன். இவன் போர்க்களத்தில் கிடந்தபோது இவன் வளர்த்த பறவைகள் வானில் வட்டமிட்டுப் பறந்து அவனுக்கு நிழல் செய்தனவாம்.
சங்ககாலத்திலேயே நன்னன் என்னும் பெயருடன் பல மன்னர்கள் ஆங்காங்கே ஆண்டுவந்தனர். அவர்கள் வேளிர் குடியைச் சேர்ந்தவர்கள். மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த நாடுகளில் அவர்கள் ஆண்ட நாடுகள் அமைந்திருந்தன.
மேலும் ஆய் என்பது தாய் ,இதனால் தான் ஆயர் என்ற பொருள் வந்தது
மேலும் மூ ள் என்பது அக்கினியை குறிக்கும் .இங்கு போர்புலம்பதி மகா காளியை வழி பட்டே போருக்கு செல்வர் .பாரம்பரிய தொழிலான உழவுத் தொழிலை மேற்கொள்பவர்கள், கல்விமான்கள், கவிஞர்கள், வைத்தியர்கள், இசைவல்லுனர்கள், சட்டத்துறைவல்லுனர்கள், சிற்பச்சித்திரத் திறனாளிகள், சித்த மருத்துவர்கள் என்று பல துறை அறிவும் அனுபவமும் பெற்றவர்கள் வாழும், வாழ்ந்த கிராமம் மூளாய் கிராமம்.ஆயர்கள் இங்கு நிறைய இருந்தார்கள் வேளாண்மை பெருகிய நேரம் அது /
அக்கினி மயமான அன்னை அங்கு உண்டு .அதனால் மூளாய் என்பது பொருந்தும் .ஏற்புடையது .
Ist möglicherweise ein Bild von steht, Tempel und außen

கருத்துகள்