வசம்பு காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; பசியுண்டாக்கும்; வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.
வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.
வசம்பைச்சுட்டு, கரியைத் தேனில் குழைத்து, குழந்தைகளின் நாக்கில் பூச, நன்றாகப் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்; குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, பேதி கட்டுப்படும்.
பாட்டி வைத்தியத்தில் இடம் பெறுவதும் இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாகவும் பயன்படுத்தலாம். வசம்பை அதிக அளவில் நீண்ட காலத்திற்கு உட்கொண்டால் கடுமையான வாந்தியையும், வயிற்றுக்குமட்டலையும் தூண்டும்.
வசம்புடன் மஞ்சளை வைத்து சிறிது நீர் தெளித்து மையாக அரைத்து தேள், பூரான், வண்டுக்கடிவாயில் பூசிவர விஷம் முறியும். கடுப்ப முற்றிலும் நீங்கும்.
தேங்காய் எண்ணெயில் வசம்பை பொடித்திட்டு, குப்பைமேனி சாறை சேர்த்து காய்ச்சி எண்ணெயை வடிகட்டி எடுத்து வைக்கவும். இந்த எண்ணெயை சிரங்கின் மீது தடவிவர சிரங்கு விரைவில் குணமாகும்.
வசம்புடன் பூண்டு வைத்து அரைத்து வெல்லத்துடன் சேர்த்துத் தின்றால் குடலில் உள்ள தீமை தரும் பூச்சிகள் மலத்துடன் வெளிப்படும்.
காய்கறிகளைத் தாக்கும் பலவிதமான பூச்சிகளையும் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 10 கிலோ தூவினால் போதும். பருத்தியில் அசுவினி, காய்ப்புழு ஆகியவற்றை கட்டுப்படுத்த 5 நாட்களுக்கு ஒரு முறை 10 கிலோ தூவினால் போதும். வீட்டுத்தோட்டங்கள், சிறிய செடிகள், பூந்தொட்டிகளுக்கு ஒரு கைபிடி (75-100 கிராம்) இலைப்பகுதி மற்றும் தண்டுப்பகுதிகளில் தூவலாம். பெரிய கொடிகள், மரங்களுக்கு 250 கிராம் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
மேலும் வீட்டு கழிப்பறை, குளியலறை, சமையல் அறைகளில் பூச்சியைக் கட்டுப்படுத்த இரவு 250 கிராம் தூவிவிட்டு காலையில் கழுவிவிட்டால் போதும்.வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.
மழை மற்றும் குளிர்காலங்களில் அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒன்றாக சளி அல்லது ஜலதோஷம் இருக்கிறது. வசம்பு ஜலதோஷ தொல்லைக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. கால் ஸ்பூன் அளவு வசம்பை வெந்நீரில் கலந்து பருகி வந்தால் ஜலதோஷம் மற்றும் தொண்டைகட்டு போன்றவை சீக்கிரத்தில் குணமாகும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், தலைமுடிகளை முறையாக பராமரிக்காதவர்களுக்கும் பொடுகு தொல்லை ஏற்படுவது வாடிக்கையானது தான். பொடுகு தொல்லைக்கு சிறந்த இயற்கை மருந்தாக வசம்பு இருக்கிறது. நசுக்கிய வசம்பு, சிறிதளவு வேப்பிலைகள் ஆகியவற்றை தேங்காய் எண்ணையில் கொதிக்க வைத்து, ஆற வைத்து அந்த எண்ணையை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை சீக்கிரம் குணமாகும்.
நாம் வசிக்கின்ற வீட்டின் தோட்டங்கள் மற்றும் வீட்டின் சுவர் இடுக்குகளில் பூரான், தேள், விஷ வண்டுகள் போன்றவை இருக்கின்றன. இவை சமயங்களில் நம்மை கடித்து விடுவதால் அவற்றின் விஷம் நமது உடலில் பரவிவிடுகிறது. வசம்பை நன்கு பொடி செய்து கடிபட்ட இடங்களில் வைப்பதாலும், கொதிக்க வைத்த நீரில் வசம்பை போட்டு காய்ச்சி பருகி வந்தாலும் உடலில் பூச்சிக்கடியினால் பரவிய விஷம் முறிந்துவிடும்.
வாதம் உடலில் அதிகரிக்கும் போது உடலின் மூட்டு பகுதிகள் அனைத்தும் விரைத்து கொண்டு, வலியை ஏற்படுத்த கூடியதாக இருக்கிறது. வாதத்தில் குறிப்பாக கீல்வாதம் எனப்படும் வாத நோய் மிகவும் கஷ்டங்களை கொடுக்க கூடியதாக இருக்கிறது. வசம்பை காசி கட்டியுடன் சேர்த்து சிறிது நீர்விட்டு நன்கு அரைத்து மூட்டு பகுதிகளில் தடவி வந்தால் வாதம், கீல்வாதம் போன்ற அனைத்து பிரச்னைகளும் குணமாகும்.
திக்குவாய் என்பது நாக்கு மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சிறிய பாதிப்பால் உண்டாகும் ஒரு பிரச்சனையாகும். இந்த திக்குவாய் பிரச்னையை தீர்க்க முறையான மருத்துவம் மற்றும் பேச்சு பயிற்சிகளை மேற்கொள்ளும் காலத்தில் வசம்பை நன்கு பொடி செய்து தேன் விட்டு குழைத்து திக்குவாய் பாதிப்பு கொண்டவர்களின் நாவில் தடவி வந்தால் திக்குவாய் குணமாக உதவும்.
வசம்புடன் திரிகடுகு, பெருங்காயம், அதிமதுரம், கடுக்காய் தோல், கருப்பு உப்பு ஆகியவற்றில் சிறிதளவு சேர்த்து, நன்கு இடித்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை பாலில் கலந்து காலை மாலை என இருவேளையும் காக்கை வலிப்பு ஏற்படுபவர்களுக்கு கொடுத்து வந்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். மன நிலை பாதிப்பு கொண்டவர்களுக்கு கொடுத்து வர சித்தம் தெளியும்.

கருத்துகள்
கருத்துரையிடுக