தேவதாசி என்பவர்கள் பெரும் கோயில்களில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் சிறுவயதில் நேர்ந்து விடப்பட்ட பெண்கள் ஆவர்.
இவர்கள் இறைவனுக்கு சேவை செய்யப் பிறந்தவர்கள் என்று கடவுளுக்கு திருமணம் செய்விக்கபட்டனர். இவர்கள் கடவுளை திருமணம் செய்தவர்களாதலால் நித்தியசுமங்கலியாக கருதபட்டனர். இவர்கள் கோயில் பணியாளர்களாக இருந்தனர். இந்த பெண்கள் ஆடல், பாடல் கலைகளில் நல்ல தேர்ச்சி பெற்று இருந்தனர். பெரும்பாலான தேவதாசிகள் சதிர் கச்சேரி என்னும் நடனக் கலைஞர்களாகவே இருந்தனர். இசை, நடனம் போன்றவற்றில் திறமை அற்றவர்கள், ஆர்வம் இல்லாதவர்கள் கோயிலை தூய்மை செய்தல், நீர் இறைத்தல், பூ கட்டுதல், மடப்பள்ளக்கு உதவுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் கோயில்களில் இருந்த இந்தப் பெண்கள் தேவதாசி, மாதங்கி, நாயகி, மாத்தம்மா, பசவி, சூலி மகள் , ஜோகினி, ஆடல் கணிகை, ருத்ர கணிகை, தளிச்சேரி பெண்டிர் என பல பெயர்களால் அழைக்கபட்டனர்.
நீதிக்கட்சியின் ஆட்சியில் பெரியாரின் ஆலோசனையின் பேரில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் முத்துலட்சுமி, தேவதாசி தடுப்புச் சட்டத்தை முன்மொழிந்தார்
. அவரது சட்டமன்ற உரையில் தேவதாசி முறை ஒழிப்பு குறித்து பேசிய போது "தேவதாசிகள் புனிதமானவர்கள். அவர்கள் கடவுளுக்குச் சேவை செய்யப் பிறந்தவர்கள். அவர்கள் அடுத்த பிறப்பில் சொர்க்கத்தில் பிறப்பார்கள்" என்று சத்தியமூர்த்தி பேசினார். அதற்குப் பதிலளித்த முத்துலட்சுமி, “தேவதாசிகள் சொர்க்கத்திற்குச் செல்வதாக இருந்தால் இனிமேல் சத்தியமூர்த்தி அவர்கள் தங்களது வீட்டுப்பெண்களைத் தேவதாசிகள் ஆக்கி அவர்கள் அடுத்த பிறவியில் சொர்க்கத்தில் பிறக்கலாமே" என்று பதிலுரை கூறியிருந்தார்.
தேவதாசி முறை 1930களுக்கு முன்பு வழமையாக இருந்தது. இந்த முறை கோயில் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாக இருந்தாலும், பின்னாட்களில் இவர்கள் கோயில்களை நிர்வகித்த அரசர், செல்வந்தர், நிலக்கிழார் உள்ளிட்ட மேல் வர்க்கத்தினர் முன்பு நடனமாட வைக்கப்பட்டதுடன்
அவர்களுடைய பாலியல் இச்சைகளுக்கு அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக இவ்வழக்கத்துக்கு 1920 முதல் இந்தியாவில் கடும் எதிர்ப்பு நிலவியது. இதன் காரணமாக 1947 ஆண்டில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
தேவதாசி என்பது வடமொழிச் சொல் என்கிறார்கள். கி.பி.ஆறாம் நூற்றாண்டில்தான் இந்த தேவதாசி முறை புழக்கத்தில் இருந்தது என்று சிலர் கூறினாலும், சிந்து சமவெளி நாகரிக காலத்திலும், அதற்கு முந்தைய வேத காலத்திலும் இந்த பழக்கம் நடைமுறையில் இருந்தது என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தேவதாசி என்று அழைக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவானார்கள்? அந்த வரலாற்றின் கரு எங்கு உற்பத்தியாகியது?
எல்லாமே கடைசியில் பெண்களை இழிவு படுத்துபவவாக அமைந்து விடுகின்றன .
பெண்களை தாயாகப் பார்ப்பவர்களும் உண்டு ,கணிகைகலாகப் பார்ப்பவர்களும் உண்டு .
ஆலயங்களில் இசை, நடனம் உள்ளிட்ட கலைகளின் வழியாக சேவையாற்றியவர்களே தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டனர். சமூகத்தில் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த பெண்கள் ஒரு பகுதி ஆண்களால் பாலியல் பொருளாக ஆக்கப்பட்டனர்
பழமையான காலத்திலேயே தேவதாசி முறை இருந்திருக்கிறது. இந்தியாவின் தொன்மை நாகரிகம் என்று கருதப்படும் சிந்து சமவெளி நாகரித்திலேயே நடனக்கலை முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. நாட்டியப் பெண்மணியை சித்தரிக்கும் மிகச்சிறிய வெண்கலச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆரியர்களின் ரிக் வேதத்திலும் கூட நடனமாதுகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உஷா என்ற ஆடல் அரசியை ரிக் வேதம் வர்ணிக்கிறது. அதன்பிறகு வந்த புராணங்களிலும் இந்த நடனமாது கதாபாத்திரம் வருகிறது.
தேவதாசி என்ற வார்த்தை பலவிதமாக பயன்படுகிறது. ஆந்திராவில் மாதங்கி என்றும் விலாசினி என்றும், கொங்கனியில் நாயகி என்று், மராட்டியத்தில் பாசவி என்றும், கர்நாடாகவில் சூலி, சானி எனவும், ஒடிஸாவில் மக எனவும், உத்தரப்பிரதேசத்தில் பாலினி எனவும் தேவதாசிகளை அழைக்கிறார்கள்
இதை அறியாத புலம் பெயர்ந்தோர் சிலர் தங்கள் பெண்களுக்கு மாதங்கி ,விலாசினி என்று பெயர் சூட்டுபவர்களும் உண்டு .
சைவ சமயக் குறவர்களில் முதன்மையான திருநாவுக்கரசரும் தேவதாசிகளை போற்றிப் பாடுகிறார். சுந்தரமூர்த்தி நாயனாரின் காதல் மனைவி பறவை நாச்சியார் ஒரு தேவதாசி என்கிறார்கள். இவர்கள் இருவரின் காதலுக்கு சிவபெருமான் தூது சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. தேவதாசிகளின் உயர்வான நிலைக்கு இதுவே சான்று
தேவதாசிகளில் இரண்டுவகை இருக்கிறார்கள். முதல்வகை பதியிலார் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் யாரையும் கணவனாக ஏற்காமல், இறைவனை மட்டுமே மனதில் நினைத்து வாழ்க்கையை நடத்துவார்கள். இவர்களுக்கு நித்ய சுமங்கலிகள் என்ற பெயரும் உண்டு. இரண்டாவது வகையினர் ருத்ர கன்னிகைகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இறைவனின் சன்னிதானத்தில் நாட்டியம் ஆடினாலும், தனது மனங்கவர்ந்த கணவன் ஒருவனோடு இல்லறம் நடத்தினார்கள். கணவனோடு வாழ்ந்தாலும், கணவன் இல்லாமல் வாழ்ந்தாலும் இவர்கள் மிகவும் ஒழுக்கமான வாழ்க்கையை நடத்தினார்கள். ஆனால், பிற்காலச் சமூகமே இவர்களை வேறு பாதைக்கு மாற்றியது
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களையே இப்போது தேவதாசி பரம்பரையினர் என்று இப்போது கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையில்லை.
பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பெண்களும் தேவதாசிகளாக இருந்திருக்கிறார்கள் என்று ஆதாரங்களுடன் சொல்கிறார்கள். ஆதி சமூகத்தில் குடும்பத்தில் மூத்த பெண்ணாக பிறக்கும் குழந்தையை கோவிலுக்கு அர்ப்பணித்துவிடும் பழக்கம் இருந்திருக்கிறது.
இந்தப் பழக்கம் அந்தணர், மறவர், வேளாளர் என்று சாதி வித்தியாசம் இல்லாமல் எல்லா மக்களிடத்தும் இருந்ததாக கூறுகிறார்கள்.
தேவதாசி பரம்பரையினர் எண்ணிக்கை அதிகரித்ததால் தங்களை ஒரு சமுதாயமாக அறிவித்துக் கொண்டதாக கருதவேண்டியுள்ளது .
ஆலயங்களில் தேவதாசிகளின் கடமை புனிதமானதாக கருதப்பட்டது. காலை, மாலை, உச்சிக்கால பூஜைகளில் இறைவன் முன் நாட்டியாஞ்சலி செய்வது இவர்களுடைய பணி. அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு மூர்த்தியை பள்ளியறைக்கு எடுத்துச் செல்லும்போதும், லாலி ஊஞ்சல், திருத்தாழ் அடைப்பு பாடல்களை பாட வேண்டும். ஒரு ஆலயத்தில் பல தேவதாசிகள் இருந்தால் முறை வைத்து பணி செய்தார்கள். ஆடல், பாடல் தெரியாத தேவதாசிகள் மாலை தொடுத்தல், பூஜை பாத்திரங்கள் சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளை செய்தார்கள்.
ராஜாதிராஜ சோழன் காலத்தில் 1174ல் பணக்கார வணிகர் நான்கு ஏழைப் பெண்களை 700 தங்கக் காசுகளுக்கு வாங்கி திருவாளங்காடு கோவிலுக்கு அர்ப்பணம் செய்ததாக கல்வெட்டு இருக்கிறது. நாளடைவில், அரசர்களும், அவர்களுக்கு கீழான சிற்றரசர்களும், ஜமீன்தார்களும், பண்ணையார்களும் பல தேவதாசிகளை தங்களுடைய ஆசை நாயகிகளாக வைத்துக் கொண்டனர். அதுவே அவர்களுடைய பணச் செருக்கின் அடையாளமாக கருதப்படும் நிலையும் உருவானது.
பக்தியையும், பரதத்தையும், இசையயும் வளர்த்த தேவதாசிகளை தஞ்சை போன்ற நில உடமையாளர் ஆதிக்கம் நிறை பகுதிகளில் பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தினர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அவமானச் சின்னமாக கருதப்பட்டனர். பணக்கார வீடுகளில் விருந்தினர்களை சந்தோஷப்படுத்தவே பல ஏழைப் பெண்கள் பாலியல் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டனர்.
மனிதர்களின் வக்கிரபுத்தியால், தெய்வீகமாக கருதப்பட்ட தேவதாசிகளின் நிலைமை அவமானகரமான நிலைக்கு தள்ளப்பட்டது. வயதான தேவதாசிகள் பிச்சையெடுத்துப் பிழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்படிப்பட்ட அவமானகரமான சூழலில் சிக்கிய பெண்களை மீட்கத்தான் மூவலூர் ராமமிர்தம் அம்மையாரும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியும் சட்டபூர்வமாக முயற்சி செய்தனர். தேவதாசி முறையை பூண்டோடு ஒழித்துக்கட்ட சட்டமியற்ற வேண்டும் என்று அவர்கள் போராடினார்கள். பின்னர் ஜெயித்தார்கள் .
பழைய கால நாகரீகத்தில் சிறந்து விளங்கிய சுமேரிய, பாபிலோனிய நகரங்களில் நாட்டியமாடும் பெண்கள் வழிபாட்டு கூடங்களில் இறைபணிக்காக தங்களை அர்பணித்து கலை சேவை செய்ததாக ஆதாரங்கள் உள்ளன.
இவர்களின் பண்புகளை பற்றி கூறும் ஆகமங்கள் உடலாலும், மனதாலும் தூய்மை, சொல்லாலும் செயலிலும், அறிவிலும் பொறுமை, தோற்றத்தில் இளமை மென்மை, உடைவர்கள் என்று ரௌரவ ஆகமம் இலக்கணம் வகுத்து தருகிறது. பரத முனிவன் நாட்டிய சாஸ்திரம் வாஸ்த்தியணரின் காமசூத்திரம் மற்றும் வீராகமம் ஆகிய நூல்கள் தேவதாசிகளின் பெருமையை இன்றும் பறைசான்றுகிறது.
சைவ சமய குறவர்கள் என்று போற்றபடுகின்ற மூவரில் முதன்மையானவரான திருநாவுக்கரசர் சாமிகள்.
அருமணித்தடம் பூண் முலையரம்பையரொ டருளிப் பாடியர்
உமையிற்றொழுவர் உருத்திரபல் கணத்தார்.
என்று அழகு தமிழில் போற்றிபாடுகின்றார்.
கணவன் இல்லாமல் வாழ்ந்தாலும், கணவனோடு குடும்பம் நடத்தினாலும் ஒழுக்கம் தவறிய வாழ்க்கையை ஆரம்பகால தேவதாசிகள் மேற்கொள்ளவில்லை. பல தேவதாசிகளை விபசாரிகளாக மாற்றியது பிற்கால சமூகமே ஆகும்.
இந்து சமய கோவில்களில் மட்டுமின்றி பௌத்த விஹாரங்களிலும், ஜெயின பள்ளிகளிலும் தேவதாசிகள் பணிபுரிந்தனர். குஜராத்திலுள்ள சோமநாதர் ஆலயத்தில் 1024-ம் வருடம் கஜினி முகமது படையெடுத்து வந்த போது 500-க்கு மேற்பட்ட தேவதாசிகள் பணிபுரிந்திருக்கின்றனர் இவர்களில் பலரை கஜினி முகமது கடத்திக் கொண்டு போய் கற்பழித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் ராஜராஜ சோழன் காலத்தில் நானூறு தேவதாசிகள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சுசிந்திரம், திருவண்ணாமலை, திருச்செந்தூர், போன்ற தமிழக பெரிய கோவில்களிலும் இலங்கையில் உள்ள தேவி நூவர ஆலயத்திலும், இந்தியாவில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் தேவதாசிகள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள தேவதாசிகள் நாட்டியத்திலும், இசையிலும் மட்டும் கைதேர்ந்தவர்களாக இருக்கவில்லை,
சிறந்த மொழி அறிஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள். தமிழ், சமஸ்கிருதம் உட்பட தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர், விநோதர மஞ்சரி என்ற நூலில் கவி சக்கரவர்த்தி கம்பன், ஸ்ரீ ரங்கத்தில் ராமாயணத்தை அரங்கேற்ற முற்பட்டபோது கோவில் அதிகாரிகள் உள்ளூர் புலவர்களின் சான்று கவி இருந்தால் தான் அனுமதி வழங்க இயலும் என்று கூறியபோது மீனாட்சி என்ற தேவதாசி சாற்று கவி வழங்கி ராமாயணம் அரங்கேற உதவி செய்ததாக கூறப்படுகிறது. தஞ்சாவூரில் விஜய ராகவன் நாயக்கர் ஆட்சி நடந்தபோது அரசவை நாட்டிய மணியாக இருந்த சந்திர ரேகா என்ற பெண் சிறந்த கவிஞராகவும் இருந்திருக்கிறார் பெங்களூரை சேர்ந்த நாகரத்தினம்மா அவர்கள் சமஸ்கிருத மாநாட்டிற்கு தலைமை ஏற்கின்ற அளவுக்கு புலமை பெற்றிருந்தார்கள்.
எல்லா தேவதாசி பெண்களும் செல்வ செழிப்புடனே வாழ்ந்திருக்கிறார்கள். தங்களிடமுள்ள செல்வத்தை சுயநலத்திற்காக மட்டும் பதுக்கி வைத்து கொள்ளவில்லை. தாங்கள் வாழ்ந்த பகுதிகளில் அன்னசத்திரங்கள் கட்டியுள்ளனர். பாசன வாய்கால்களை சீர்படுத்தி இருக்கிறார்கள். பல நூறு குளங்கள் தேவதாசிகளின் சொந்த செலவில் வெட்டப்பட்டு இருக்கிறது. ராஜமுந்திரிக்கு அருகிலுள்ள இருகொண்டா என்ற ஊரில் ஒரு லஷ்மி நரசிம்மர் ஆலயம், லஷ்மி என்ற தேவதாசியால் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டதாக ஆலயகல்வெட்டு பறைசான்றுகிறது. கி.பி. பதினொராம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவாவூர் ஆலய தேவதாசியான பறவைநாச்சியார் அம்மையார் நன்கொடையாக நாணூற்றி இருபத்தெட்டு முத்துக்கள், பல கோடி ரூபாய் மதிப்புடைய ஏழு ரத்தினங்கள் முப்பத்தியாறு வைரங்கள், 1500 சவரன் தங்க நகைகள் தியாகராஜர் ஆலயத்திற்கு கொடுத்ததாக கல்வெட்டு சான்று தருகிறது.
ஆசிய ஜோதி என்று உலகமக்கள் அனைவராலும் அழைக்கப்படும் அன்பே வடிவான கௌதம புத்தர் தனது இறுதிகாலத்தில் கடைசி தானமாக அமிரபாலி என்ற தேவதாசி பெண்ணிடம் இருந்தே மாந்தோப்பு ஒன்றினை பெற்று தனது சங்கத்தில் ஒன்றை நிறுவினார் என புகழ்பெற்ற சீன பயணியான யுவாங் சுவாங் தனது நூலில் குறிப்பிடுகிறார். டெல்லியில் இருந்து மாலிக்பூர் என்ற முரட்டு முகமதிய தளபதி ஸ்ரீரங்கத்தின் மீது படையெடுத்து அரங்கநாதர் விக்கரகத்தை சேதப்படுத்த முயன்ற போது அம்சலேகா என்ற தேவதாசி பெண் சாதுர்யமாக மலிக்காபூரை வழிமாற்றி விட்டதாகவும் இதே போலவே திப்பு சுல்தான் சிதம்பரத்தின் மீது படையெத்து நடராஜர் விக்கிரகத்தை அபகரிக்க வந்த போது அவனிடமிருந்து வைப்பி என்ற தேவதாசி பெண் பாதுகாத்ததாகவும் சரித்திரங்கள் சான்று பகிர்கின்றன. இப்படி தேவதாசிகளின் எத்தனையோ நற்செயல்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம்.
கோயிலில் தினமும் நடைபெறும் வழிபாட்டின்போது முருகனைப் பற்றி பாடல் பாடுவதும் சுவாமி வீதியுலாவின்போது நடனமாடுவதுமே இவரது பிரதானப் பணியாக இருந்துள்ளது. அதோடு பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மாசி மகம், தைப்பூசம் போன்ற திருவிழாக் காலங்களில் கும்மி, கோலாட்டம் என சதிர் ஆட்டம் களைகட்டும். அசைவு, அலாரிப்பு, ஜதீஸ்வரம், சங்கராபரணம், தில்லானா, பதம், நோட்டீஸ்வரம் போன்று ஒவ்வொரு பிரிவுகளையும் கற்று, அதில் கைத்தேர்ந்தவர்களையே கோயிலுக்கு மன்னர்கள் முன்னிலையில் அரங்கேற்றுவார்கள். காலப்போக்கில் தேவதாசிகளாக இருந்தவர்கள் மறைய, அவர்களால் நிழ்த்தப்பட்ட கலையும் மறைந்தது.
1930 ஆம் ஆண்டு, முத்துலட்சுமி ரெட்டி இந்தச் சட்ட முன்வரைவை சென்னை சட்டமன்ற மேலவையில் முன்மொழிந்தார். இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். காங்கிரசில் ராஜாஜிக்கு போட்டியான சத்திய மூர்த்தி அய்யர், “இன்றைக்கு தேவதாசி முறையை ஒழிக்கச் சொல்வீர்களானால் நாளைக்கு பார்ப்பனர்களை அர்ச்சகராக்குவதையும் எதிர்க்கலாம். தேவதாசிகளை ஒழித்துவிட்டால் பகவானின் புண்ணிய காரியங்களை யார் செய்வார்” என்று வாதிட்டார்.
“பகவானுடைய புண்ணியத்தை இதுவரை எங்கள் குலப் பெண்கள் பெற்றுவந்தனர். வேண்டுமானால் இனி அவரது (சத்திய மூர்த்தி அய்யர்) இனப்பெண்கள் அந்த புண்ணியத்தை ஏற்றுக்கொள்ளட்டுமே? அது என்ன எங்கள் குலத்திற்கே ஏகபோக காப்பிரைட்டா?” என்று திருப்பிக் கேட்டார் முத்துலட்சுமி ரெட்டி.
ஆனால் இது தற்பொழுது நடை பெற்று விட்டது
பெண் சமூகத்தை விபசாரத்துக்குத் தயார் செய்துவைத்திருப்பது இந்நாட்டு ஆண் சமூகத்தின் மிருக இச்சைக்குதக்க சான்றாக இருக்கிறது. பகுத்தறிவும் நாகரீகமும் வளர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தேவதாசி முறையை ஒழிப்பது சாஸ்திர விரோதம், சட்ட விரோதம், கலை விரோதம் என்று கூக்குரல் கிளப்பும் சாஸ்திரிகளும், தலைவர்களும் இருப்பது மானக்கேடாகும். தேவதாசி முறைக்கு அடிப்படையாக இருக்கும் கடவுள், மதம், ஸ்மிருதி, ஆகமம், புராணம் ஆகியவைகளை முதலில் ஒழிக்க வேண்டும். இவைகளை ஒழித்து விட்டால் தேவதாசிக் கூட்டம் இருப்பதற்கே நியாயமிருக்காது
கி.பி. 900, பல கல்வெட்டுகளில் தேவர் அடியார்கள் எனப்படும் தேவதாசிகள் பெருமான் கோயிலில் கலைகளை காத்து வந்தவர்கள் என்றும். நடனம் மற்றும் பாடல்கள் இயற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர் என்றும் பல கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன.
கி.பி. 1230 கி.பி 1230-40-க்கு இடைப்பட்ட காலத்தில், இப்போது மகாராஷ்டிரா என அழைக்கபப்டும் நிலத்தை ஆண்ட மன்னன் ராகவாச்சாரியார் தனது குறிப்புகளில் தேவதாசி என குறிபிடப்பட்டுள்ள தகவல்கள் தான் தேவதாசிகளின் தொடக்கமாக கருதப்பட்டு வருகிறது.
கோயில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள்தான் தேவதாசிகள் என்றழைக்கப்படும் தேவரடியார்கள். பக்தி இலக்கியம் கோலோச்சிய ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இவர்கள் சமூகத்தினரால் மரியாதையாகப் பார்க்கப்பட்டனர். காலப்போக்கில் அந்த மரபின் வழி வந்தவர்களுக்குப் போதிய அங்கீகாரமும் கவனிப்பும் இல்லாமல், தேவதாசிகள் என்பவர்கள் மிகக்கீழ்த்தரமாகச் சித்தரிக்கப்பட்டனர்.தேவதாசி கள் சட்டம் வந்த பின்னரே
மக்கள் படிப்படியாக பரதம் கற்று நாடியப் பேரொளி களாக மின்னுகிறார்கள்
ஒரு காலத்தில் மதிப்பு மிக்கவர்களாக இருந்த இவர்கள். காலமாற்றத்தால் வசதி படைத்தவர்களின் இச்சையை தீர்பவர்களாக மாறிப்போயினர்.
சங்க இலக்கியங்கள் கலையறிந்த பெண்களை பதியிலாள், மாணிக்கம், தளிச்சேரி, பெண்டுகள் என்று அடையாளப்படுத்துகின்றன. இந்த வார்த்தைகளின் அர்த்தம் எல்லா வகையிலும் அந்தப் பெண்களை பெருமைப்படுத்துவதாகவே இருப்பதாக அறிஞர்கள் கூறியுள்ளனர். சைவ மற்றும் வைணவ மதங்களில் உள்ள ஆகமங்கள் இத்தகைய பெண்களை ருத்ர கன்னிகைகள் என்றே குறிப்பிடுகின்றன. இவர்கள் உடலாலும், மனதாலும் தூய்மையானவர்கள், சொல் மற்றும் செயலில் அறிவு மற்றும் பொறுமை உடையவர்கள். தோற்றத்தில் இளமையும் மென்மையும் உடையவர்கள் என்று தெரிவிக்கிறது.
சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்புவரை பட்டர்களைப் போலவே தேவதாசிகளும் கருவறைவரை சென்று வந்தனர். இதற்கான ஆதாரங்கள், திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலும், திருவாரூர் தியாகராஜர் ஆலயத்திலும் இருக் கிறது. புத்த, சமண துறவிகளின் பள்ளிகளிலும் தேவதாசிகள் பணிபுரிந்துள்ளனர். புத்தரேகூட தனது இறுதிக் காலத்தில் அமிராபாலி என்ற தேவதாசியிடம் மாந்தோப்பு ஒன்றை தானமாகப் பெற்று சங்கம் நிறுவ பயன்படுத்தியதாக யுவான் சுவாங் குறிப்புகளில் உள்ளது.
ஒரு ஆலயத்தில் பணிபுரியும் தேவதாசி இறந்துவிட்டால் அவளது உடலை ஆலய மூல மூர்த்திக்கு போர்த்தப்படும் புனித ஆடையை போர்த்தியே எடுத்துச் செல்வார்கள். அன்று முழுவதும் ஆலய வழிபாடு நிறுத்தப்படும். மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் முன், ஆலயத்தின் ராஜகோபுரத்தின் முன் சிறிது நேரம் ஊர்வலம் நிறுத்தப்படும். தேவதாசிகள் ஒழுக்கமற்றவர்களாக இருந்திருந்தால் இத்தகைய மரியாதைக்கு அன்றைய சமூகம் ஒப்புக்கொண்டிருக்குமா?
ஊர்வலம் சென்று திரும்பும் உற்சவ மூர்த்திக்கு கண் திருஷ்டி கழிக்கும் உரிமை தேவதாசிக்கு வழங்கப்பட்டது.
சிலப்பதிகாரத்தில் மாதவியின் நேர்மைத்திறம், அவளுடைய மகள் மணிமேகலையின் துறவறம் போன்றவை சிறப்பு மிகுந்தவை
சிறப்பு வாய்ந்த தேவதாசி முறை பின்னர் ஏன் அவமானச் சின்னமானது? தேவதாசி பரம்பரையில் ஒழுக்கக்கேடு திடீரென வந்துவிடவில்லை. ஆதியில் மூத்த மகளை தேவதாசியாக நேர்ந்து விடும் பழக்கம் இருந்தது. ஆனால், பிற்காலத்தில் சற்று வசதி வந்தபிறகு, மூத்த மகளை தேவதாசியாக்க விரும்பாத சிலர் வேறு ஒரு பெண்ணை விலைக்கு வாங்கி தேவதாசியாக நேர்ந்து விடும் பழக்கம் தொடங்கியது.
இப்படிப்பட்ட குறுக்குப் புத்திகளுக்கு வளைந்து கொடுக்கிற வகையில் அன்றைக்கும் சட்டமும் சமூக வழக்கமும் மாறிப்போனது. வசதியற்ற பெண்ணை விலைக்கு வாங்கலாம் என்ற நிலை உருவானபிறகு, இறைவன் முன் மட்டுமே நடனமாட வேண்டிய தேவதாசி அரசன் முன்னும் ஆடலாம் என்ற நிலையும் எளிதாக அறிமுகமாகிவிட்டது.
ஒரு ஆலயத்தில் பணிபுரியும் தேவதாசி இறந்துவிட்டால் அவள் உடலை சாதாரண துணியால் மூடமாட்டார்கள். ஆலய மூல மூர்த்திக்கு போற்றப்பட்ட புனித ஆடை மரியாதையுடன் கொண்டு வந்து அவள் உடல் மீது போர்த்தப்படும். அன்று முழுவதும் ஆலய வழிபாடு நிறுத்தி வைக்கப்படும். இறுதி ஊர்வலத்திற்கு எடுத்து செல்லப்படும் அவளது உடல் கோவிலின் ராஜகோபுரத்தின் முன்னால் சிறிது நேரம் நின்றே மயானத்திற்கு கொண்டு செல்லப்படும். சாதாரண மனிதர்களுக்கு கிடைக்காத பெரும் பேராகிய ஆலய நெருப்பு எடுத்து செல்லப்பட்டே அவள் சிதை எறியூட்டப்படும். உடலின் அழகை விலைகூறி விற்கும் விலை மகள்ளாக அவர்கள் வாழ்ந்திருந்தால் இத்தகைய மரியாதை அவர்களுக்கு எப்படி கிடைக்கும்? அல்லது இந்த மரியாதையை வழங்குவதற்கு பொதுமக்கள் எப்படி அனுமதிப்பார்கள்? என்பதை சிந்தித்து பார்த்தால் தேவதாசிகளின் சமூக அந்தஸ்து எத்தகையது என்பது புரியும்.
கோவில் திருவிழாக்ககளில் வீதி உலா வருகின்ற உற்சவ மூர்த்திக்கு கண் திருஷ்டி கழிக்கும் சிறப்பு தேவதாசிக்கு அக்கால சமூகம் வழங்கியிருந்தது. அது மட்டுமல்ல அரசன் ஒருவன் புதிதாக மூடி சூட்டிக்கொள்ளும் சடங்கின் போது தேவதாசி வீட்டு வாசல் மண்ணெடுத்து வந்து அரசனின் இடுப்பில் பூசூம் வழக்கமும் இருந்தது. சகுண சாஸ்திரமும் கூட தேவதாசியை நேருக்கு நேராக பார்ப்பது மங்களகரமான செயல் என்று வர்ணனை செய்கிறது.
ஒழுக்க கெட்ட வாழ்க்கை வாழ்வதை இன்றைய சமுதாயம் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது அக்காலத்திய சமுதாயம் தேவதாசிகள் ஒழுக்க கெட்டவர்களாக இருந்திருந்தால் ஏற்று இருக்குமா? ஏற்றுதான் இத்தகைய சிறப்பை அவர்களுக்கு கொடுத்து இருக்குமா? கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மிலிந்த பஞ்ஞ என்ற பாலிமொழி நூல் கற்பு ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய இந்துமதி என்ற தேவதாசி பெண் கங்கையின் போக்கையே தனது சாபத்தால் மாற்றினாள் என்று கூறுகிறது. சிலப்பதிகாரத்தில் வருகின்ற மாதவியின் கற்பு திறமும், அவள் மகள் மணிமேகலையின் துறவற சிறப்பும் நாம் அறிந்ததே, இவ்வளவு சிறப்பு மிக்க தேவதாசி பரம்பரை இழிவு மிகுந்ததாக அவமான சின்னமாக எப்போது ஆனது எப்படி ஆனது?
தஞ்சாவூர் போன்ற நில உடமையாளர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்த பகுதிகளில் பல தேவதாசிகள் வலுகட்டாயமாக பாலியல் தொழிலாளிகளாக ஆக்கப்பட்டனர். பாலியல் தொழிலில் ஈடுபட்ட மற்றவர்களும் கூட தங்களை தேவதாசிகள் என்று அழைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால் தேவதாசிகளுக்கு பிறந்த பல குழந்தைகள் சமுதாயத்தால் அவமான சின்னங்கள் என்று பட்டம் கட்டி கொடுமைபடுத்தப்பட்டனர்.
இது மட்டுமல்ல பல பணக்கார வீடுகளில் விருந்தினர்களை மகிழ்விப்பதற்காகவே பல ஏழை பெண்கள் கொத்தடிமையாக்கப்பட்டு
பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாயினர்.
வயதான நோய்வாய்ப்பட்ட தேவதாசிகள் பிச்சையெடுத்து பிழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். உன்னதமாக தெய்வீக மரபு என்பது மனிதனின் வக்கிர புத்தியால் சீரழிந்து சமுதாய அவமானமாக ஆகிப்போன நிலையில் அதை முற்றிலும் ஒழித்து கட்ட 1947-ம் வருடம் தமிழ்நாடு அரசு தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது.
மிக நீண்டகாலமாக தெய்வீகத்திற்கும் ஆடல் கலைக்கும் அருந்தொண்டாற்றிய ஒரு மரபு தனது கீழ்மையை தானே தாங்காமல் தன் கதையை முடித்து கொண்டது
தேவதாசி என்ற சமூகம் இல்லாவிட்டால் இன்று பரத நாட்டியம் என்ற கலையே முற்றிலும் அழிந்து போயிருக்கும். அவர்கள் ஆடிய சதிர், என்ற பரதமே ஈ.கிருஷ்ண ஐயர், ருக்மணி தேவி அருண்டேல் போன்றோரால் செம்மைபடுத்தபட்டு இன்று நம் கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமை தந்து கொண்டிருக்கிறது. இன்று பரத நாட்டிய கலையில் உச்சத்தில் இருக்கும் கலைஞர்கள் சீர்காழி செல்லம் அம்மனி சகோதிரிகள், தஞ்சாவூர் சாரதாம்மாள், காரைக்கால் சாரதா அம்மாள், திருவாரூர் ஜானம், மதுராந்தகம் கெஜதாம்மாள், திருவாளபுத்துர் கல்யாணி, பந்தநல்லூர் தங்கச்சி, திருவாரூர் கமலம், மயிலாப்பூர் கௌரி திருநெல்வேலி முத்துரத்தினத்தம்மாள், கும்பாகோணம் பானுமதி, தஞ்சாவூர் பாலசரஸ்வதி, மட்டுமல்லா லஷ்மி நாராயணி, பெண்டில்லா சத்ய பாமா, துக்கிராலா மாணிக்கம், எண்டமுரி ராமரத்தினம், காளஹஸ்தி ராஜம்மா, திருமுழுடலூர் சுந்தரம்மா, கோலார் நாகரத்தினம் பெங்களூர் சந்திரவதனா போன்யோருக்கு மறக்காமல் அஞ்சலி செலுத்த வேண்டும்.
அதே போல தேவதாசி பரம்பரை தடை செய்யப்படுவதற்கு காரணமாகயிருந்த கலாநிதி முத்துலட்சுமி ரெட்டி அம்மையார், மூவதூர் செல்வி ராமதீர்த்தம்மாள் போன்றோர்கள் போற்றி வணங்கப்பட வேண்டியவர்கள்.
இறைபக்திக்காகவும், கலைசேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்த பெண்ணினத்தை அவர்கள் சராசரியான குடும்ப வாழ்க்கை வாழாமல் ஒருவித அர்பணிப்பு வாழ்க்கையை வாழ்ந்ததினால் அர்ப்ப மனதுடைய சில ஆதிக்க ஆண் சக்தி தங்களது குறுகிய மன விகாரங்களுக்காக பயன்படுத்தியதினால் போற்ற தக்க மரபு அவமான சின்னமாக முடிந்து போய்விட்டது. ஆனாலும் ஒரு உண்மையை அழுத்தி சொல்ல வேண்டும் தேவதாசி பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் அல்ல,
சொந்தப் பெண்டிரை விடுத்து மாற்றான் தோட்டத்து பெண்களை போகப் பொருளாக்க த துடிக்கும் ஆண்கள் வாழுகின்ற பூமி இது .
காதலிப்பதாகக் கூறி பெண்களை ஏமாற்றுவதும் .பாலியல் சேட்டைகள் மலிந்த இந்த நாட்டில் எல்லோரும் தேவதாசிகளாக நினைக்கும் கேடு கெட்ட சமூகம் வாழுகிற பூமி ஆக மாறிக் கொண்டிருக்கிறது .
சினிமாவில் பெண்களை போகப் பொருளாக பாடல் காட்சிகளில் பயன் படுத்துவதால் வக்கிர எண்ணங்கள் தலை தூக்கும் பூமி இது .
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையை கொளுத்துவோம்
வைய வாழ்வு தன்னிலெந்த
வகையினும் நமக்குள்ளே
தாதரென்ற நிலைமை மாறி
ஆண்களோடு பெண்களும்
சரி நிகர் சமானமாக
வாழ்வமிந்த நாட்டிலே
Manikkavasagar Vaitialingam


கருத்துகள்
கருத்துரையிடுக