- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வெங்காயம் சாதியு ண்டு பேதம் உண்டு
உண்ணுகிற உணவதனில் பேதமுண்டு
வாழுகிற இனங்களிலே பேதமுண்டு
ஆளுகிற மொழிகளிலே பேதமுண்டு
பிறந்த சக உத்தரங்களில் பேதமுண்டு
இருக்கிற ஆண்டவர்களிலே பேதமுண்டு
ஓதுகின்ற மறைகளிலும் பேதமுண்டு
மாது அவள் மூச்சினுள் ளும்
செயல்களிலும் பேதம் உண்டு -உலகில்
பைந்தமிழ் பேசுகின்ற ஓசையிலும் பேதமுண்டு
கூடிப் பிறந்தாலும் பேதமுண்டு
குலாவி மகிழ்தலிலும் பேதமுண்டு
வாஞ்சையுடன் அளிமுத்தம் பேதமுண்டு
ஆனால் !!!
பிறந்த சிசுவுக்கு பேதமில்லை
இறந்த சடலத்திற்கும் பேதமில்லை
பிறப்பாலும் இறப்பாலும் பேதம் காணா
மன்பதைகாள்!!
இடைதன்னில் எதற்கு நீர்
பேதம் கண்டீர் ?
எங்கிருந்து வந்தீர் ? இறந்தபின்
எங்கு தான் செல்வீர் ?
வாழுகின்ற நாட்களிலே மாந்தர்களை
அன்பாலே அரவணைத்து
இன்னல் நீக்கி ,
பாழாய்ப்போன இந்த நீசப் பிறவி தன்னில்
அறங்கள் செய்து, கண்டு களி
அருள்பெரும் சோதியை,
கண்டு களி
இறைவனைக் கண்டவர் விண்டிலர் ,
விண்டவர் கண்டிலர்
ஆதலால் ஏழையின் சிரிப்பில்
இறைவனை காண்பாய்
சாதிகள் பேதங்கள் பிரிவினை நீங்கி
இவ் வெங்காய (வெம் +காயம் ) உணர்சிகளை அடக்கி -உலகின்
பிறந்த உயிர்கள் எல்லாம் இறைவன் என்றெண்ணி
உள் இருக்கும் உன் மனதில்
இறைவனைத் தேடு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக