எங்கு நோக்கினும் மக்கள் திரள்

அவர் உள்ளம் எங்கும் உற்சாகக் கழல்
இருண்டு வந்த மேகம் போல்
திரண்டு சூழ்ந்து நின்றனர்
மேள தாள முழக்கங்கள்
ஊரை திரட்டி அழைத்தது
ஆம் தேர் வருகிறது
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
பழைய காலத்தில் இருந்தே அரசர்கள் குதிரை, யானை, தேர் முதலியவற்றில் ஏறி நகர வீதிகளில் உலாவருதல் வழமையாக இருந்துள்ளது. இதைப் பின்பற்றியே கடவுள்களையும் வாகனங்களில் ஏற்றி வீதியுலா வரச் செய்யும் வழக்கமும் ஏற்பட்டது எனலாம். சங்க இலக்கியங்களிலும், சங்கம் மருவிய காலத்து இலக்கியங்களிலும் தேர்கள் குறித்த செய்திகள் உள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் தேர்கள் புழக்கத்தில் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. சிலப்பதிகாரம் புத்த சமயத்தவரின் தேர்த் திருவிழா பற்றிக் குறிப்பிடுகின்றது. அக்காலத்துத் தேர்கள் எதுவும் இன்றுவரை நிலைத்து இருக்கவில்லை. இன்றுள்ள மிகப் பழைய தேர்கள் விஜயநகரக் காலத்தைச் சேர்ந்தவை.
((((வித்யாரண்யர் வழிகாட்டுதலின் படி, விஜயநகரப் பேரரசு 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப்பேரரசின் புகழ் பெற்றவர் கிருஷ்ணதேவராயர் ஆவார். இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந்நகரின் அழிபாடுகள் இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஹம்பியைச் சுற்றிலும் காணப்படுகின்றன. உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக ஹம்பி விளங்குகிறது.))))))
இப் பேரரசு தொடர்பான நினைவுச் சின்னங்கள் பல தென்னிந்தியா முழுவதும் பரவலாக உள்ளன. இவற்றுள் ஹம்பியில் உள்ளவை பெரிதும் புகழ் பெற்றவை. விஜயநகரக் கட்டிடக்கலைப் பாணி தென்னிந்தியக் கட்டிடக்கலையின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். பல பல நம்பிக்கைகள் மற்றும் நாட்டார் மரபுகளின் தொடர்புகள், இந்துக் கோயில் கட்டுமானங்களில் புதுமைகளைப் புகுத்தியது. இது முதலில் தக்காணத்திலும் பின்னர் திராவிடக் கட்டிடக்கலையிலும் ஏற்பட்டது. சமயச் சார்பற்ற கட்டிடங்களில் வட தக்காணத்துச் சுல்தானகக் கட்டிடக்கலையின் தாக்கங்கள் காணப்படுகின்றன.
இப்பேரரசு காலத்தில் தென்னிந்தியாவில் கலை, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி இலக்கியம், இந்துக் கோயில் கட்டிடக் கலை, இந்து சமயம், நீர் பாசன முறை, தொழில், வணிகம் சிறப்பு விளங்கியது.
இப்பேரரசு 1646 வரையில் நீடித்ததாயினும், 25 சனவரி 1565 அன்று தக்காணத்துச் சுல்தான்களுடன் நடைபெற்ற தலைகோட்டைச் சன்டைக்குப் பின்னர் விஜயநகரப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது.
விஜயநகர மன்னர்கள் தெலுங்கு மக்கள் ஆவார். போசாளப் பேரரசின் வீழ்ச்சியின் போது, இவர்கள் முதலில் காக்கத்தியர்களுடன் இணைந்து, அதன் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றினர்.
1294ல் தென்னிந்தியாவில் தில்லி சுல்தான் படைகள் தோற்ற போது, போசளப் பேரரசின் படைத்தலைவர் மூன்றாம் சிக்கய நாயக்கர் (1280–1300), தன்னை சிற்றரசனாக அறிவித்துக் கொண்டு தேவகிரி யாதவப் பேரரசை கைப்பற்றினார்.
(இது பற்றி பிறிதொரு பகுதியில் விரிவாகத் தருகிறேன் )
கோவில் சொத்தைக் கொள்ளை அடிப்போருக்கு அன்றைய காலத்தில் யானைக் காலில் மிதிபட விடுவர் .கற்பழி ப்போருக்கு உறுப்புக்களை சிதைத்து விடுவார்கள் துளுவ சாளுவ அரசு பற்றி எழுதவேண்டி வருவதால் இது பற்றியும் பிறிதொரு நிலையில் விளக்கம் தருகிறேன்
கொடியேற்றம் முதல் தீர்த்தத் திருவிழா வரை கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் திருவிழாக்களின் தத்துவங்கள் குறித்துச் சைவ நூல்களில்படித்திருப்பீர்கள் . இத் திருவிழாக்கள், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய இறைவனின் ஐந்தொழில்களைக் குறிக்கின்றன என்பது கருத்து. இதன்படி தேர்த்திருவிழா அழித்தல் தொழிலைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது
தேரின் பல்வேறு உறுப்புக்களும் அண்டத்திலும், இவ்வுலகத்திலும் உள்ள பல்வேறு அம்சங்களைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகிறது. இத்தகைய தேரில் எறிச் சென்றே தேவர்களைக் காப்பதற்காகச் சிவன் அசுரர்களின் மூன்று நகரங்களை அழித்தான் என்னும் தொன்மஅதாவது புராதன க் கதையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தேரோட்டம் நடக்காத காலங்களில் தேரை நிறுத்தி வைத்திருக்கும் இடத்தைத் தேர் நிலை அல்லது தேர் முட்டி என்று குறிப்பிடுவர்.
தேர்கள் உச்சி முதல் சில்லுகள் வரை மரத்தினால் செய்யப்பட்டு நிரந்தரமான அலங்காரங்களுடன் இருப்பது உண்டு. இவை "சித்திரத்தேர்" என அழைக்கப்படுகின்றன.
வேறு சில தேர்கள் நிலையில் இருக்கும் போது அலங்காரங்கள் இல்லாமல் எளிய நிலையில் இருக்கும். தேரோட்டம் துவங்கும் மாதத்தில் தேரைத் தூய்மைப்படுத்தி, செப்பனிட்டு கட்டி வைப்பர்.இதனைக் கட்டுத்தேர் என்றழைப்பர்
((குஞ்சங்கள் கொண்டு தேர் அலங்காரம் செய்யப்படும்.மேலும் . வாழை மரங்கள், அழகிய வண்ணக்கொடிகள், பல்வேறு சிற்பங்கள் என்பன கொண்டு தேர் அலங்காரம் செய்யப்படும். பீடத்துக்குக் கீழேயுள்ள பகுதி மட்டும் நிரந்தரமாக அமைக்கப்பட்ட தேர்களும் உள்ளன. மேற்பகுதி தேர்த் திருவிழாவுக்கு முன்னர் கட்டி அலங்காரம் செய்யப்படும். இவற்றைக் "கட்டுத்தேர்" என்பர்.)))
பெரிய கயிறுகள் தேரில் இணைக்கப்படும், அவற்றை "வடம்" என்று கூறுவர். இவ்வடத்தைப் பற்றி இழுத்துச் செல்வதை "வடம் பிடித்தல்" என்பர்.
கோவிலைச் சுற்றி தேர் செல்லக்கூடிய அளவு அகலமான வீதி அமைந்த இடங்கள் ரத வீதிகள் என்று அழைக்கப்படும்.
. தேரோட்டத்தன்று இறைவன் எழுந்தருளிய எழில்மிகு தேரை வடம் பிடித்து ஊர்மக்கள் யாவரும், அந்த ரதவீதிகளில் தேரை இழுத்து வருவர்.இறைவனின் திருநாமத்தைச் சொல்லி தேர் இழுப்பவர்களுக்கு நீர்மோர், பானகம், தண்ணீர் என வழங்க பந்தல்கள் அமைக்கப் பெற்றுஇருக்கும் .மேல ரத வீதி, கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி என கோவிலின் நாற்புறமும் உள்ள ரத வீதிகளைக் கடந்து திரும்பவும் தேர் தன் நிலை வந்து அடையும் வரை உள்ள நிலை தேரோட்டம் எனப்படும் .
கோயில்களில் தேர் வீதியுலா வரும்போது, அதற்கு முன்னே நாதசுவரம், தவில் ஆகிய இசைக் கருவிகளை வாசித்துக்கொண்டு கலைஞர்கள் வருவர்.
கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், காவடியாட்டம் போன்ற ஆட்டங்களும் நிகழ்வது உண்டு.
தேருக்குப் பின்னே அடியார்கள் திருமுறைகளை இசையுடன் பஜனை பாடி வருவது வழக்கம்.
தமிழகத்தில் கிருத்தவ சமயத் தேவாலயங்கள் சிலவற்றில் சமயம் தொடர்பு உடையனவாகவோ அல்லது அம்மரபினைப் பின்பற்றியவையாகவோ அமையும் சடங்குகளில் ஒன்றாக தேரோட்டம் அமைகிறது
வேளாங்கண்ணி மாதா கோவில் தமிழகத்துக் கத்தோலிக்கத் திருச்சபைகளில் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். இத்திருச்சபைச் சடங்குகளில் இலத்தீன் மொழி பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும், பக்திச் செயற்பாடுகள் இந்து சமயத்தினை ஒத்துள்ளதைக் காணலாம்.
இங்கு, திருவிழாக்களின் போது மரத்தாலான தேரில் வேளாங்கன்னி மாதாவின் மரச் சிற்பம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாக உள்ளது. இத்தேரில் இயேசு நாதரின் வாழ்க்கை மற்றும் விவிலியத் தொடர்பான கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடியிலுள்ள பனிமயமாதா கோயிலிலும் தேர்த்திருவிழா நடத்தப் பெறுகிறது. இக்கோயில் தேர்த்திருவிழாதான் கிறித்தவ மதத்தின் சார்பாக நடைபெற்ற உலகின் முதல் தேர்த் திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.
முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த நெட்டையான பல்லக்கில், உருவம் நிறுத்தி வைக்க ஒரு இடமும் பக்கத்தில் ஒரு இருக்கையும் மட்டும் இருக்கும். உருவத்தை இறக்கி வைப்பவர்களும், பல்லக்குத் தூக்குபவர்களும், ஜாதித் தலைவருடன் இரவு முழுவதும் உபவாசம், ஆராதனையில் கழிப்பர்.
அதிகாலை மிகவும் பக்தி வணக்கத்துடன், பாவப் பரிகாரச் செபம் படித்தபின் உருவம் இறக்கப்பட்டு பல்லக்கினுள் வைக்கப்படும். ஜாதித் தலைவர் இருக்கையில் அமர்ந்து உருவத்தைப் பிடித்துக் கொள்ள, மாதாவின் பாடலுடன்குறைந்தது அறுவர் சுமந்தபடி பல்லக்கு தேரைச் சென்றடையும்.
தேருக்கடியில் மிகவும் பக்தி ஆசாரத்துடுன் உருவம் இறக்கி வைக்கப்பட்டு, குருவானவர் மந்திரித்தபின் தேரின் மீது ஏற்றி வைக்கப்படும்.
பரதகுலச் சிற்றரசன், நல்முத்துகள் கலந்த மலர்களை அன்னை மீது தெளிப்பார். அதிகாலையில் பலிபூசை நிறைவேறியபின், தேரின் வடத்தை பரதகுல ஜாதித்தலைவர் தொட்டுக் கொடுத்து, தனது மந்திரி, பிரதானிகளாகிய அடப்பன்மார் மற்றும் ஊர்த் தலைவர்களிடம் அளிப்பார்.
மக்கள் வடத்தை மரியே, மாதாவே எனும் வானைப் பிளக்கும் வாசகத்துடன் தேர் இழுத்துச் செல்வர்.
யானை மீது பாண்டியரின் மீன் கொடி தாரை தப்பட்டையுடன் முன் செல்ல அதனைத் தொடர்ந்து பரதவர்களின் சின்னம் பொறித்த மீதி 20 கொடிகளும், கேடயம், குடை, குடைச் சுருட்டி, அசை கம்பு, முரபு, பரிசை போன்ற விருதுகள் கொண்ட குழு அணிவகுத்துச் செல்லும். இருபக்கமும் குதிரை வீரர்களும் வருவர். 1926-ம் ஆண்டு வரையில் இப்படித்தான் தேர் இழுக்கப்பட்டு வந்திருக்கிறது.இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இத்தேர்ப்பவனி சற்று மாற்றப்பட்டுவித்தியாசமாகின்றது
தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், வடுகர்பேட்டை எனும் ஊரிலுள்ள கிறித்தவ தேவாலயத்திற்கான தேரில் இயேசு பெருமான் வாழ்க்கையை விவரிக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன
தேர்
இந்து மதத்தில் மட்டுமில்லாமல், பவுத்தம் போன்ற மதங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் புத்த சமயக் கடவுளான அருகனுக்குத் தேர் இருந்ததாகக் குறிப்பு இடம் பெற்றுள்ளது. எனவே கோயில் தேர் என்பது பவுத்த, சமண சமயங்களுக்கு உரியதாக இருந்து இந்து சமயத்திலும் அது பின்பற்றப்பட்டு வந்துள்ளது .
மரத் தேர்களின் அடிப்படையில்தான் கற்தேர்கள் என்னும் ஒற்றைக்கல் ரதங்கள், பல்லவர்களால் மாமல்ல புரத்திலும், பாண்டியர்களால் கழுகு மலையிலும் அமைக்கப்பட்டன.
சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் தேர்கள் அக்காலத்தில் இருந்தமைக்கான செய்திகள் உள்ளன. அவை நெடுந்தேர், பொற்றேர், கொடிஞ்சி நெடுந்தேர், கொடித்தேர், அணிகொள்தேர் என்று பலவகையான பெயர்கள் தேர்களுக்கு வழங்கப்பட்டன. சிலப்பதிகாரம் புத்தக் கடவுளுக்கு என்று தேர்த்திருவிழா நடைபெற்றதைக் குறிப்பிடுகிறது.
இப்பொழுது உள்ள தேர்கள்
விசயநகர நாயக்கர் ஆட்சிக் காலத்தில் செய்விக்கப்பட்டவை. கீழே சிற்றின்பக் காட்சிகள் .பொறிக்கப்பட்டு இருக்கும்.
தேர்கள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கனமான சக்கரங்களைக் கொண்டவையாகும். இவற்றின் மூன்று பக்கங்களிலும் இறையுருவங்களும், புராணக்கதைத் தொகுதிகளைக் காட்டும் சிற்பத் தொகுதிகளும், மிருகங்கள், செடி கொடிகள் ஆகியவற்றின் உருவங்களும், ஆங்காங்கே பக்தர்கள் மற்றும் அருள் கொடையாளிகளின் உருவங்களும் செதுக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.
தேரின் அமைப்பைப் பொறுத்தவரை அது கோயில் விமானத்தின் அமைப்பைப் பிரதிபலிப்பதாகவே அமைகிறது. இத்தேர் சதுரம், அறுகோணம், பதின்கோணம், பன்னிரண்டுகோணம், வட்டம், நீள்வட்டம், நீள் சதுரம், எண்கோணம், முட்டை வடிவம் என ஒன்பது வகைகளில் அமைக்கப்படுகிறது
இத்தேர் செய்பவர்களை சிற்ப ஆசாரியர் என்றே அழைப்பர் .ஆசாரமானவர்கள் .பூண் நூல் அணிந்து இறையன்பு கொண்டவர்களாக இருந்தார்கள் .
இன்றா ஆசாரியர்கள் நிலை? தேவாரம் இசைக்காமல் சினிமாப் பாட்டைக் கேட்டுக் கொண்டு வீண் வார்த்தைகள் பேசிக் கொண்டே தொழில் செய்கிறார்கள்
மானசாரம் என்ற நூல் தேரில் இடம்பெற வேண்டிய உருவங்கள் இவை என சிங்கம், யானை, முதலை, பூதகணம், யக்சி, நாகம், பிரம்மா, விஷ்ணு, சண்முகன், சரஸ்வதி, கணபதி, துர்க்கை, தேவதை, சிறு தெய்வங்கள், அரசன், அர்ச்சகர்கள், பிராமணர், பக்தர்கள், துவாரபாலகர், கின்னரர், நாகர், கருடன் போன்றவற்றைக் கூறுகிறது .இது சிற்ப ஆசாரியரிடமே இருக்கிறது .
தேரின் அச்சுப் பகுதியில் கணபதி, முருகன், பூத கணங்கள் ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தேர்களின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றனர். தேர்களில் அதிட்டானப் பகுதிகளில் இந்து சமயத் தொன்மக் கதைகளும், மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைச் சித்திரிக்கும் செய்திகளும், சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும். தேரின் பீடத்தில் நாட்டியப் பெண்கள், இசைக் கருவிகளை மீட்டுவோர், அட்டதிக் பாலகர்கள், கஜலட்சுமி ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
தேர்த் திருவிழா என்பது பலதரப்பட்ட மக்களை ஒன்று சேர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. ஊர்கூடித் தேர் இழுத்தால் தான் தேர்த் திருவிழாவினைக் கொண்டாட முடியும். இது ஒற்றுமையை மறைமுகமாக வலியுறுத்தும் விழா என்று கூட கொள்ளலாம்.அதாவது பெரியவர் சிறியவர் என்ற அகந்தை அழிக்கும் விழா இது .
இதனால் தேர் அழித்தலைக் குறிக்கிறது
. இலங்கையிலும் இந்துக் கோயில்களில் இடம்பெறும் ஆண்டுத் திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழாவாக இது அமைகின்றது. கோயில்களைப் பொறுத்துப் 10 நாட்கள் முதல் 25 நாட்கள் வரை பல நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய திருவிழாக்களில் இறுதியான தீர்த்தத் திருவிழாவுக்கு முதல் நாள் தேரோட்டத் திருவிழா இடம்பெறுவது வழக்கம். இத்திருவிழாவில் ஒன்று, மூன்று அல்லது ஐந்து தேர்கள் இடம்பெறுவது உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்கள் இடம்பெறும் போது கோயிலின் தலைமைக் கடவுளுக்குப் பெரிய தேரும், பிற கடவுளருக்கு முக்கியத்துவத்தில் அடிப்படையில் சிறிய தேர்களும் இருக்கும்.
ஓளவையார் தேர் செய்ய வல்லவர்கள் பற்றி தனது ஒரு பாடலில், “… வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த காலன்னோனே” என்று பதிவு செய்கிறார்.
தச்சு தொழில் என்பது உண்மை அது சாதி அல்ல
இது போலவே சிறுபாணாற்றுப்படையில்,
புருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி
உருவ வான்மதி ஊர்கொண்டாங்கு
கூருளி பொருத வடுவாழ் நோன்குறட்
ஆரஞ் சூழ்ந்த வயில் வாய் நேமியொடு
என்று தேர் செய்யும் முறையை சங்கப்புலவர்கள் அருமையாகப் பதிவு செய்துள்லார்கள் .
பரிபாடலில் சிவபெருமான் முப்புரம் அழிக்க, பூமியாகிய தேரில் வேதக்குதிரைகள் பூட்டி நான்முகச்சாரதியுடன் மேரு மலையை வில்லாகவும் ஆதிசேஷனை நாணாகவும் கொண்டு சிரிப்பால் எரித்தழித்தமை குறிப்பிடப்படுகின்றமை சங்ககாலத்திலேயே வேத புராண மரபுடன் தமிழிலக்கியம் பின்னிப்பிணைந்திருந்தது என்பதையும் செம்மொழித் திறனையும் அக்காலத்தில் தேர்த்திறன் பற்றியிருந்த எண்ணப்பாங்கையும் வெளிக்காட்டுகிறது.
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ
வேத மாபூண் வையத் தேரூர்ந்து
நாக நாணும் மலை வில்லாக
முவகை யாரெயில் ஓரழல் அம்பின் முனிய
மாதிரம் அழலவெய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான் ,
திருமந்திரத்தில்
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மலக் காரியம்
அப்புரம் எய்தமை ஆரறிவாரே
என்கிறார்.
இலங்கையில் அழித்தல் தொழிலை வெளிப்படுத்தும் தேர்த்திருவிழாவில் புதுமணத்தம்பதியர் கலந்து கொள்ளக் கூடாது என்றோர் மூடநம்பிக்கை சாதாரண மக்களிடம் புரையோடிப் போயிருக்கிறது
. ஆனால் அழித்தல் என்பது மும்மலங்களாகிய எம்மிடமுள்ள கெட்ட ஆணவாதி மலங்களையே என்பது நினைவில் கொள்ள வேண்டியது அவசியம் .
கடலில் செல்லும் நீராவிப் படகுகள் ‘அக்னிரதம்’ என்று அழைக்கப்பட்டன என்ற கருத்தும் உண்டு. பிரம்மாவின் தேரை ‘வைராஜம்’ என்றும் வருணனின் தேரை ‘மானிகம்’ என்றும் இந்திரனின் தேரை ‘திரிவிஷ்டபம்’ என்றும் வழங்குவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
புராணமரபில் சிவபெருமான் திரிபுரங்களை எரிக்க எழுந்தருளிய தேருக்கும்
இராவணன் மற்றும் குபேரனுடைய புஷ்பகவிமானம் என்ற ஆகாசரதத்திற்கும் அதிக முக்கியத்துவம் உண்டு.
திருநாவுக்கரசர் பெருமான் தமது தேவாரத்தில்
பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினொட்டெட்டு மற்றுங்
கரக்கோயில் கடிபொழில் சூழ் ஞாழற்கோயில்
கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே
என்கிறார் .
தேரை ஆக்கவல்லவர் ஸ்தபதி எனப்படுவார். திராவிட உத்தரமட்டம் மற்றும் முகபத்திரம் முதலிய கலை மரபுகள் இவற்றுக்கு உண்டு. பார்விதானம், உபபீடம், அதிஷ்டானம், கமலாகார பண்டிகை நராசனமட்டம், தேவாசனமட்டம், உபசித்தூர்மட்டம் போன்ற அங்கங்கள் இறைவனின் இருக்கைப்பகுதிக்குக் கீழும் இருக்கைப்பகுதியில் தேர்ச்சாரதி தேர்க்குதிரைகள் மற்றும் பவளக்கால்களும் மணிமண்டபமும் மேல்விதானம் யாளிகளாலும் சிம்மங்களாலும் தாங்கப்பெறுவதாய் முகபத்திரமடக்கை முதலிய அம்சங்களுடனும் அமைக்கப்படுவதைக் காணலாம்.
தேரின் அச்சிலிருந்த பீடம் வரையான பாகங்களை ஆரக்கால் உருள் (சில்லு- சக்கரம்) கிடுகு (தேர்த்தட்டைச் சுற்றி அமைக்கப்படும் மரச்சட்டகம்- நிகண்டு) என்றெல்லாம் அழைப்பர். பீடப்பகுதியிலுள்ள தாமரை மொட்டு வடிவிலுள்ள அமைப்பை ‘கூவிரம்’ என்றும் தேரின் நுகக்காலையும் சிகரத்தையும் இணைக்கும் பகுதியை ‘கொடிஞ்சி’ என்றும் தேரின் வெளிப்பாகத்து நீண்டமேல் வளைவை ‘கொடுங்கை’ என்றும் தேரை அலங்கரிக்கக் கட்டும் சீலையை ‘தேர்ச்சீலை’ என்றும் தேரின் நடுவிடம் தேர்த்தட்டு அல்லது ‘தேர்த்தளம்’ என்றும் சில நிகண்டுகளில் ‘நாப்பண்’ என்றும் அழைப்பர்.
தேரின் மேற்றட்டைச் சுற்றியுள்ள மரக்கைப்பிடிச்சுவர் ‘பாகர்’ என்றும் தேரின் நடுவிலுள்ள பீடம் ‘பார்‘ என்றும் ‘வேதிகை’ என்றும் தேரில் ஏறுவதற்காக அமைக்கப்பட்ட மேடையை ‘பிரம்பு’ அல்லது ‘தேர்முட்டி’ என்றும் அழைப்பர். இதை வடமொழியில் ‘ரதாரோஹணமண்டபம்’ என்பதும் குறிப்பிட வேண்டியது. இது போலவே தேர்ச்சில்லை ‘தேர்வட்டை’ என்றும் குறிப்பிடப்படுகின்றது.
சக்கரங்கள் – தசவாயுக்கள்
முதலாம் அடுக்கு – கீழண்டம்
அச்சு – மூலாதாரம்
அதன் மேலே – சுவாதிஷ்டானம்
அதன் மேலே – மணிபூரகம் – நாபித்தானம்
பீடம் – அநாகதம் – ஹிருதயஸ்தானம் – பகவான் எழுந்தருளும் இடம்
மேலே – விசுத்தி –கழுத்துப்பகுதி
32 குத்துக்கால்கள் – 32 தத்துவங்கள்
மேலே – ஆஞ்ஞா
முடிப்பகுதி – பிரம்மரந்திரம் – சஹஸ்ரகமலம்
என்பது பற்றிய விளக்கம்
கோவில் பிராமணர்களுக்கு அவசியமானது .சிலருக்கு தெரியாமல் இருக்கிறது
.
ஒரு தேர் முறைப்படி நிகழுமானால் மாதம் மும்மாரி பொழியும் ,இது வேத உண்மை .
இறைவனை நோக்கி ஆலயத்திற்கு மக்கள் வருவதே வழக்கம். ஆனால் தோத்திருவிழாவில் மக்களை நோக்கி இறைவன் வருவதை அவதானிக்கலாம். கி.பி 5-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீனயாத்திரிகனான பாஹியன் என்பவனும் தனது குறிப்பில் இத்தேர் விழா பற்றிக் கூறியுள்ளான்.
தோத்திருவிழாவில் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக அவர்களுக்குப் பெரியோர் வழங்கும் காசினை ‘தேர்க்காசு’ என்று வழங்குவதனூடாக ஆலயத் தேர்விழா ஒரு பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளதை அவதானிக்கலாம். இது போலவே தனது மாப்பிள்ளைக்கு இவ்விழாவை ஒட்டி மாமனார் அளிக்கும் சன்மானம் ‘தேரடிச்சம்பாவனை’ என்றும் கூறப்படும். தேரோடும் வீதியில் இடத்திற்கிடம் அதனை நிறுத்தி வைக்கவும் அதனை திசை திருப்பவும் தேர்ச்சில்லிற்கு ‘முட்டுக்கட்டை’ இடுவர். இதனைச் சறுக்குக்கட்டை என்றும் கூறுவதுண்டு. இது போலவே “தேர் நிலைக்கு வந்து விட்டது” என்பது ஒரு பெருங்காரியத்தை நிறைவு செய்ததைக் குறிக்கும்
அதாவது தேர்முட்டிக்கு வந்து விட்டது என்பதாகும்
நினைத்து பார்க்கிறேன்
கோயில் திருவிழாவை
பத்து நாள் திருவிழாவில்
படாத பாடு பட்டத்தை ...!!!
முதல் நாள் திருவிழாவிற்கு
குளித்து திருநீறணிந்து
பக்திப்பழமாய் சென்றேன்
பார்ப்பவர்கள்
கண் படுமளவிற்கு....!!!
இரண்டாம் நாள் திருவிழாவில்
நண்பர்களுடன் கோயில் வீதி
முழுவதும் ஓடித்திரிவதே வேலை
பார்ப்பவர்கள் எல்லோரும்
திட்டும் வரை ....!!!
மூன்றாம் நாள் திருவிழாவில்
மூண்டது சண்டை நண்பர்கள்
மத்தியில் - கூட்டத்துக்குள்
மறைந்து விளையாட்டு ....!!!
நாளாம் நாள் திருவிழாவில்
நாலாதிசையும் காரணமில்லாது
அலைந்து திரிவேன் ...!!!
ஐந்தாம் நாள் திருவிழாவில்
சேர்த்துவைத்த காசை
செலவளித்து விட்டு
வெறும் கையோடு இருப்பேன் ...!!!
ஆறாம் நாள் திருவிழாவை
ஆறுதலான நாளாக கருதி
வீட்டிலேயே இருந்து விடுவேன் ...!!!
காத்திருப்பேன்
தேர் திருவிழாவை -அப்பாவின்
ஆசீர் வாதத்துடன் செல்வதற்கு
அப்பாவும் படியளர்ப்பார்
அம்மாவும் படியளப்பா ....!!!
தேர் திருவிழா இறைவனின்
அழித்தல் தொழிற்பாடாம்
அழித்துவிடுவோம்
முன்னர் ஏற்பட்ட
நண்பர் பகையையும்
கொண்டு சென்ற காசையும் ...!!!
காலம் தான் மாறினாலும்
அந்த நினைவுகள் -காலம் காலமாய்
திருவிழா வரும் போது
வந்து கொண்டெ இருக்கிறது ...!!!
என்ற கவிதை நினைவுக்கு வந்தது
மேலும் விளக்கங்கள் அடுத்த பதிவில் தருகிறேன்
Ist möglicherweise ein Bild von Tempel und außen

கருத்துகள்