எழுத்தாளர் பார்த்தசாரதி
%%%%%%%%%%%%%%%%%%%%%
""அறிவாளிகள் சுயமரியாதை காரணமாகத் தட்டத் தயங்குகிற கதவுகளை முட்டாள்கள் உடைத்துக்கொண்டு உள்ளே போய் உட்கார்வதுதான் இன்று நாட்டின் அவலம்'' என்பன போன்ற அவரது வரிகள், அன்றைய காலத்தை விடவும் இன்று இன்னும் அதிகமாகப் பொருந்துகின்றன.
தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்
பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். கல்கி இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். .
1965 இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக தீபம் என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார்.
1979ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினமணிக் கதிர் வார இதழுக்கும் கலைக்கதிர் இதழுக்கும் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார்
, விருதுநகர் மாவட்டம் , சிவகாசி வட்டத்தில் உள்ள நரிக்குடி என்னும் சிற்றூரில் 1932 மார்கழி 18 ஆம் நாள் பிறந்தார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து படித்து பண்டிதர் பட்டம் பெற்றார். 1977 - 1979 ஆம் ஆண்டுகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் முனைவர் தி. முத்துகண்ணப்பரை வழிகாட்டியாகக்கொண்டு பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தார். 1987ஆம் ஆண்டில் ஆய்வேட்டை சமர்பித்தார். ஆனால் அப்பட்டத்தை வாங்காமலேயே மறைந்துவிட்டார்
அப்போதில்
ரஷ்யா, இங்கிலாந்து, போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற பல நாடுகளுக்குச் சென்று வந்தார்..அதனால் புதுஉலகம் கண்டேன்
ஏழுநாடுகளில் எட்டு வாரங்கள் என்று எழுதி மகிழ்ந்தவர்
சமுதாய வீதி என்னும் நெடுங்கதைக்காக சாகித்ய அகாதமி பரிசு
துளசி மாடம் என்னும் நெடுங்கதைக்காக ராஜா சர் அண்ணாமலை பரிசு
தமிழ்நாடு பரிசு
கம்பராமாயணத் தத்துவக் கடல்போன்ற தகை சார் விருதுகளைப் பெற்றுக் கொண்டவர் .
இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த காமராஜருக்கும் அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது இதனால் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. பழம் தலைவர்கள் காமராஜர் தலைமையில் சிண்டிகேட் என்னும் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியில் இயங்கினர். நா. பார்த்தசாரதி அக்கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். அக்கட்சியை ஆதரித்து பொதுக்கூட்டங்களில் சொற்பொழிவாற்றிவந்தார் அச்சமயம் தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் என்னும் சிற்றூரில் காவல்துறை சார்பு ஆய்வாளரால்(இன்ஸ்பெக்டர் ) தாக்கப்பட்டார். அந்நிகழ்வு அக்கால சட்டமன்றத்தில் விவாதப் பொருளாக மாறியது.
குறிஞ்சி மலர்
பொன் விலங்கு
நிசப்த சங்கீதம்
கபாடபுரம்
சாயங்கால மேகங்கள்
மணிபல்லவம் பருவம் : 1 2 3 4 5
ஆத்மாவின் ராகங்கள்
ராணி மங்கம்மாள்
சமுதாய வீதி
துளசி மாடம்
பாண்டிமாதேவி
நித்திலவல்லி
வஞ்சிமாநகரம்
சத்தியவெள்ளம்
வெற்றி முழக்கம்
சுந்தரக்கனவுகள்
நெஞ்சக்கனல்
பிறந்த மண்
நெற்றிக் கண்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
நிசப்த சங்கீதம்
அநுக்கிரகா
சுலபா
முள்வேலிகள்
புதுமுகம்
மூலக்கனல்
மலைச் சிகரம்
பொய் முகங்கள்
பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது
கற்சுவர்கள்
நினைவின் நிழல்கள்
மூவரை வென்றான்
நீல நயனங்கள்
மனக் கண்
கோபுர தீபம்
அனிச்ச மலர்
பட்டுப் பூச்சி
மகாத்மாவைத் தேடிஎன்பன இவரால் எழுதப்பட்ட நாவல்கள் ஆகும் .
நா.பா.வின் சிறுகதைகள்
தமிழ் இலக்கியக் கதைகள்
மணிவண்ணன் கவிதைகள்,மொழியின் வழியே கட்டுரை ,
மணிவண்ணன் தலையங்கங்கள்
மணிவண்ணன் பதில்கள்,
மணிபல்லவம் (சரித்திர நாவல்)-1
மணிபல்லவம் (சரித்திர நாவல்)-2
மணிபல்லவம் (சரித்திர நாவல்)-3
மணிபல்லவம் (சரித்திர நாவல்)-4
மணிபல்லவம் (சரித்திர நாவல்)-5
ஆத்மாவின் ராகங்கள்
Aatmana Aalap-(GUJARATHI)
JINDAGINA RANGA ANEKA-(GUJARATHI)
குறிஞ்சி மலர்
மகாபாரதம் அறத்தின் குரல்
மூலக்கனல்
முள்வேலிகள் (சிறுநாவல்)
நா.பார்த்தசாரதி-சிறுகதைகள்-1
நா.பார்த்தசாரதி-சிறுகதைகள்-2
நெஞ்சக்கனல்
நெற்றிக்கண்
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
பாண்டிமாதேவி (சரித்திர நாவல்)
பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்
பொன்விலங்கு
சத்திய வெள்ளம்
வஞ்சிமா நகரம் (சரித்திர நாவல்)
மூவரை வென்றான்
மொழியின் வழியே
பிறந்த மண்
பொய்முகங்கள்
புதிய பார்வை
புறநானூற்றுச் சிறுகதைகள்
இராணி மங்கம்மாள் (சரித்திர நாவல்)
சமுதாய வீதி
சாயங்கால மேகங்கள்
சிந்தனை மேடை
சுலபா
SWAPN-SURAKHI - GUJARATI (KURIJJIMALAR)
தமிழ் இலக்கியக் கதைகள்
திறனாய்வுச் செல்வம்
THITHALI
துளசிமாடம்
TULSI CHAURA
வெற்றி முழக்கம்
YEH GALI BIKAU NAHIN
அனிச்ச மலர்
அநுக்கிரகா
பூமியின் புன்னகை
புத்த ஞாயிறு
சிந்தனைவளம்
தீபம்
கலித்தொகை பரிபாடல் காட்சிகள்
கபாடபுரம்
கற்சுவர்கள் என்பன இவரின் புகழை பறை சாற்றும்
சிறுகதைகள், குறுநாவல்கள் அடங்கிய தொகுதிகள் உட்பட மொத்தம் 93 நூல்களை எழுதியுள்ளார். ‘பொய் முகங்கள்’, ‘முள்வேலிகள்’, ‘சுதந்திரக் கனவுகள்’, ‘குறிஞ்சி மலர்’, ‘பொன்விலங்கு’, ‘துளசி மாடம்’, ‘மணிபல்லவம்’, ‘நித்திலவல்லி’, ‘பாண்டிமாதேவி’, ‘ராணி மங்கம்மாள்’ உள்ளிட்ட இவரது நாவல்கள் குறிப்பிடத்தக்கவை.‘குறிஞ்சிமலர்’ நாவலில் வரும் அரவிந்தன், பூரணி கதாபாத்திரங்களின் பெயர்களை வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் அளவுக்கு இப்பாத்திரங்கள் புகழ்பெற்றன. தனக்கு கடிதம் எழுதும் வாசகர்களுக்கு தன் கைப்பட உடனடியாக கடிதம் எழுதும் வழக்கம் கொண்டவர்.
இவரது படைப்புகளில் சுயமுன்னேற்றச் சிந்தனைகள், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் மிகுந்திருக்கும். இவரது பல நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இவரது குறிஞ்சி மலர், பொன் விலங்கு ஆகிய கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாக வெளிவந்தன.
காமராஜர் தலைமையிலான ‘ஸ்தாபன காங்கிரஸ்’ கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். இவர் சிறந்த பேச்சாளரும்கூட. இலக்கியம், அரசியல் என்ற இரு துறைகளிலும் தன் பேச்சாற்றலால் முத்திரை பதித்தார். சாகித்ய அகாடமி விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் 1983-ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பரிசு, கம்பராமாயணத் தத்துவக் கடல் விருது உட்பட பல பரிசுகள், விருதுகளைப் பெற்றவர்.
இவர் உள்ளம் கவர்ந்த சிறந்த பேச்சாளரும் கூட. தற்கால இலக்கியம், அரசியல் ஆகிய இரு துறைகளிலும் தம் பேச்சாற்றலால் முத்திரை பதித்தார். அக்காலகட்டத்தில் சோ, ஜெயகாந்தன் ஆகியோரோடு நா.பா.வும் ஸ்தாபன காங்கிரஸ் மேடைகளில் பேசினார். காமராஜ் எந்த அளவு நா.பா.வைக் கவர்ந்தார் என்றால், தமது "சத்தியவெள்ளம்' என்ற நாவலில் அவரை ராமராஜ் என்ற பெயரில் பாத்திரமாக ஆக்கும் அளவு.
காமராஜ் காலமானதும் பெருந்தலைவரின் அட்டைப்படம் தீபத்தை அலங்கரித்தது. "இலக்கியப் பத்திரிகை அட்டையில் அரசியல் தலைவரின் படமா?' என்று தூய இலக்கியவாதிகள் சிலர் கேள்வி கேட்டபோது, ""பெருந்தலைவரே ஓர் இலக்கியம்தான்'' என்று நா.பா. பதில் சொன்னார். காலப்போக்கில் புலவர் கீரனைப்போல் ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டும் என்பதும் அவரது திட்டங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால், காலம் கைகூடுவதற்குள் காலன் முந்திக் கொண்டான்.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். இறுதிவரை நடுத்தரக் குடும்ப மனிதராகவே வாழ்ந்து மறைந்தார். பொருளாதார இடர்ப்பாடுகள் வரத்தான் செய்தன. ஆனால், எழுத்தைப் பொறுத்தவரை சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த பெருந்தகை அவர். பொருளாதாரச் சங்கடங்கள் நேர்ந்த காலங்களில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதுபோலவே புதிய நாவல் எழுதத் தொடங்கினால், சென்னை தி.நகர் அகத்தியர் கோயிலுக்குச் சென்று அகத்தியரை வழிபட்டு வருவதும் அவரது வழக்கம்ஆக இருந்துள்ளது .
"பழந்தமிழர் கட்டிடக்கலையும் நகரமைப்பும்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். டாக்டர் தி.முத்து கண்ணப்பர்தான் அவரின் நெறியாளர். ஆய்வேட்டை சமர்ப்பித்தும், நேர்காணலில் கலந்துகொள்ள வாய்ப்பின்றி அது என்று நிகழவிருந்ததோ அன்று காலமானார். முனைவர் பட்டம் பெறும் முன்பே அமரர் பட்டம் பெறும்படி நேர்ந்தது அவரது துரதிர்ஷ்டம்.
அன்றைய "அமுதசுரபி' ஆசிரியர் விக்கிரமன் கேட்டுக் கொண்டபடி, தம் சுயசரிதையை அமுதசுரபிக்காக எழுதும்போது, எழுதிய பேனா எழுதியபடியே கையிலிருக்க, 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி அவர் உயிர் பிரிந்தது..உயிர் பிரியும் பொழுது வயது 55.
"ஞானியாரடிகள் மன்றம்' என்ற அமைப்பின் மூலமாக அவரது பரம ரசிகரான அ.நா. பாலகிருஷ்ணன், நா.பா. மறைவிற்குப் பின், பல்லாண்டுகள் ஆண்டுதோறும் நினைவுக் கூட்டம் நடத்தினார். ஒரு ரசிகர் தம் சொந்தச் செலவில் ஆண்டுதோறும் நினைவுக் கூட்டம் நடத்துவது என்பதும்கூட அவரது எழுத்தின் பெருமைதான்.
இன்றும் பல இலக்கிய அன்பர்கள் தங்கள் குழந்தைகளை அரவிந்தன் என்றும் பூரணி என்றும் கூப்பிடுகிறார்கள். நா.பா. காலமாகவில்லை. இன்றைய அரவிந்தன்களிடமும் பூரணிகளிடமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
நா.பா.வின் தனித்தன்மை அவரது எழில் கொஞ்சும் நடைதான். "அவள் பார்வையே ஒரு பேச்சாக இருந்தது என்றால், அவள் பேச்சில் ஒரு பார்வையும் இருந்தது' என்பதுபோல வார்த்தைகளை மடக்கிப்போட்டு அழகிய வாக்கியங்களை அவரால் எழுத முடிந்தது. கதாநாயகியின் பாதங்களில் மருதோன்றிச் சுவடு தென்பட்டதைப் பற்றிச் சொல்லும்போது, ""சிவப்பு மையால் அடிக்கோடிட்டதுபோல'' என்று எழுதினார் அவர். அழகிய கையெழுத்தைப் பற்றி எழுதும்போது, ""தேர்ந்து பழகிய கை பூத்தொடுத்த மாதிரி'' என்று எழுதினார். இப்படி இதுவரை யாரும் சொல்லாத புத்தம் புதிய உவமைகளை எழுதும் அவரது ரசனை மிகுந்த மனம் பலரையும் கவர்ந்தது.
அவர் நாவல்களின் இடையே எழுதிய வாக்கியங்கள் அந்த இடத்தில் மட்டும் பொருந்துவதோடு நிற்காமல் தனியே எடுத்துப் பார்த்தாலும் உயர்ந்த சிந்தனைகளைத் தாங்கிய பொன்மொழிகளாக விளங்கின. அவற்றை அந்தந்த அத்தியாயங்களின் முகப்பில் கட்டம் கட்டி வெளியிடும் பழக்கத்தை அவர் மேற்கொண்டார். நாவல்கள் புத்தகமானபோதும் அத்தகைய வரிகள் அத்தியாய முகப்பில் இருக்கவேண்டும் என்பதில் அக்கறை செலுத்தினார்.
அவரது எழுத்துகள் லட்சியவாதம் சார்ந்தவை. யதார்த்தமாக எழுதுவது ஒருபோக்கு என்றால், லட்சியக் கதை மாந்தர்களைப் படைப்பது இன்னொரு வகைப் போக்கு என்று அவர் கருதினார். தண்டியலங்காரக் காப்பிய மரபில், தன்னேரில்லாத் தலைவனையும் தலைவியையும்தான் அவர் படைத்தார். அவரது லட்சியவாதப் போக்கு பற்றி விமர்சனங்கள் எழுந்தபோது, ""கம்பராமாயணம் லட்சியவாதம் சார்ந்ததுதானே! கம்பராமாயணம் காலத்தை வென்று நிற்பது போலவே என் இலக்கியங்களும் நிற்கும்'' என்பதாக அவர் பதில் சொன்னார்.
அவரது எழுத்து இளைஞர்கள் பலரையும் ஈர்க்க முக்கியக் காரணம், அவற்றில் தென்பட்ட சுயமுன்னேற்றச் சிந்தனைகள். அவரது எழுத்தைப் படித்தால் ஒரு மில்லி மீட்டராவது மனம் மேம்படும் என்று நம்பியே இளைஞர்கள் அவர் எழுத்தைக் கொண்டாடினார்கள். "குறிஞ்சிமலர்' தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்டபோது, அதில் அரவிந்தனாக நடித்த இன்றைய துணை முதல்வர் ஸ்டாலின், அந்தத் தொடரில் நடித்ததால் தன் மனம் மென்மைப்பட்டதாகக் கூறி மகிழ்ந்தார்.
(அன்று அரவிந்தனாக நடித்த ஸ்டாலினுக்கு இன்று தமிழ் பேசமுடியவில்லையே ...!!! .பார்த்தசாரதிக்கு இன்னும் இவரால் ஏதும் செய்யப்பட்டதா என்றால் தெரியவில்லை )
பழந்தமிழைக் கசடறக் கற்றுப் "பண்டிதர்' பட்டம் பெற்றவர். அவருக்குக் கொடுக்கப்பட்ட விருதுகளில் ஒன்று "கம்பராமாயணத் தத்துவக் கடல்' என்பது. கல்வி கற்க வயதே இல்லை என்ற கருத்துடைய நா.பா., இறுதி நாள் வரை கல்வி கற்றார். தம் 45 வயதுக்குமேல் பச்சையப்பன் கல்லூரியில் மாலை வகுப்பில் சேர்ந்து தமிழ் எம்.ஏ. பட்டம் பெற்றார். "என்பது மகிழ்ச்சி அல்லவா ?
மேலும் முதல்வர் ஸ்டாலின் பார்த்தசாரதி யின் அரவிந்தனாக இருந்தவர்
இவர் குறு(ரூ) தட்சணையாக என்ன கொடுப்பார் என்று பார்ப்போம்
அமரிக்காவில் ‘குறிஞ்சி மலர்’ என்ற மாத இதழ் 1985 ஏப்ரலில் தொடங்கிச் சில காலம் வெற்றிகரமாய் நடந்தது. அதன் முதல் இதழில் நா.பா. வும் , பேராசிரியர் ஹார்ஜ் ஹார்ட்டும் கடிதங்கள் எழுதி இதழுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். நா.பா. வின் குறிஞ்சி மலர் நாவலை அவர் அனுமதியுடன் மாதா மாதம் மீண்டும் வெளியிடத் தொடங்கியது அந்த இதழ். அந்த முதல் இதழுக்காக ஒரு விசேஷக் கட்டுரையையும் கொடுத்திருந்தார் அந்தக் கடிதம் இத்துடன் இணைக்கிறேன்
கருத்துகள்
கருத்துரையிடுக