மூல நோய்

%%%%%%%%%%%%%%%%
மலச் சிக்கலாலும், மரபு வழியாகவும் தோன்றக் கூடியது
மூலம், என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்க்கூடியது.மலத் துளையின் உட்பகுதியில் சவ்வு படர்ந்து, மலம் கழிக்கும்போது மலக் குழாயின் உட்புறம் உள்ள தசைகள் உப்பி வெளிப்புறம் நீண்டு வரும். இதனால் மலம் வெளிப்படுதல் சிக்கலாகி இரத்தம் வெளியேறும்
மலத்துளையின் அருகில் சிறிது சதை வளர்ந்து தொங்கும். இப்பகுதியில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவதுடன், மலம் வெளியேறும்போது இரத்தமும் சிந்தும்.
உள் மூலம் முதிர்வதால் பவுத்திரம் தோண்றுகிறது. பவுத்திர நோய் தோன்றுகையில் மலத்துளையைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத சிறி சிறுகொப்புளங்கள் துளைகள் தோன்றி அதனின்று தூய்மையற்ற சீழ் வெளிவரும்.
பெருங்குடலின் அடிப்பகுதி மற்றும் மலப்புழையைச் சுற்றியுள்ள சுவர்களின் மென்மையான தசைகளுக்குள் பதிந்துள்ள ரத்த நாளங்களே மூலம் என்றும் ஆங்கிலத்தில் பைல்ஸ் என்றும் மனித உடற்கூறியியலில் அழைக்கப்படுகிறது. இந்த மூலங்களில், நாட்பட்ட உராய்வு, சீராய்ப்பு, அழற்சி ஏற்படுவதால், அவை வீக்கமடைந்து, ரத்தக்கசிவுடன் பெரியதாகும்போதுதான் மென்மையான தசைபோன்ற ஒன்று மலத்துவாரத்தின் உள்ளும் வெளியிலும் உருவாகி பிரச்னையை ஏற்படுத்துகின்றது. பெருங்குடலின் கடைசி பாகத்தில் (Rectum) இந்த அழுத்தம் அதிகமானால், ரத்தக் கசிவுடன் அழற்சி ஏற்படுகிறது. இந்த நிலை வந்த பின்புதான் அதை மூலநோய் (மூலத்தில் ஏற்பட்ட நோய்) என்று நாம் கூறுகிறோம்.
இது ஒரு நோய் அல்ல
ஹெமராய்ட்ஸ் (Hemorrhoids) அல்லது பைல்ஸ் (piles) என்று ஆங்கிலத்திலும் ,
மூலம் என்று தமிழிலும் நாம்கூறுகின்றோம்
பெருங்குடலில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தத்திற்கும், அழற்சிக்கும், நாட்பட்ட மலச்சிக்கல், நாட்பட்ட வயிற்றுப்போக்கு, அதிக எடை தூக்கும் வேலை செய்தல், கர்ப்பகாலம், மிகுந்த சிரமத்துடனும், அழுத்தத்துடனும் மலத்தை வெளியேற்றும் பழக்கம் போன்றவை காரணங்களாகின்றன. எந்த வயதிலும் வரக்கூடிய மூலநோய், வயதானவர்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. முதுமைப் பருவத்தில் உள்ளவர்களின் ரத்த நாளங்களில் ஏற்படும் பலவீனம், அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பது, மலம் கழிப்பதைத் தள்ளிப் போடுவது, உடல் பருமன், கல்லீரல் அழற்சி, நார்ச்சத்து குறைவான உணவு, அதிக கொழுப்புள்ள உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, உடலில் நீர் பற்றாக்குறை, குடல் சம்பந்தமான பிற நோய்கள், அதிக மன அழுத்தம், பொதுவாகவே குறைந்த நோய் எதிர்ப்புச் சக்தியுடன் உடல் மெலிந்து இருத்தல் போன்றவை மூலத்தை ஏற்படுத்தி விடுகிறது .
மலவாசல் அல்லது மலப்புழை என்று குதத்தை அழைக்கிறோம் .
மலப்புழையைச் சுற்றிலும் சிவந்திருத்தல், மலப்புழையில் லேசான மற்றும் அதிகமான வலி, மலம் வெளியேறும்போது வலி மற்றும் ரத்தக்கசிவு, குதத்தைச் சுற்றி வீக்கம், எரிச்சல், அரிப்பு, தொட்டு உணரக்கூடிய அளவில் வலியுடன்கூடிய சதை போன்ற சிறிய கட்டிகள் (அவை உறைந்துபோன ரத்தக் கட்டிகளாகும்),தோன்றும்
மலம் வெளியேறியபின் சளிபோன்ற திரவம் வடிதல் நடை பெரும் .
மலத்தின் அளவு குறையும்போது, குடலில் கழிவுகள் தேங்கி, மலத்தின் அளவு, வெளியேறும் இடைவெளி மற்றும் நேரம்; குறைந்து, இறுக்கமடைந்து, மிகுந்த சிரமத்துடன் வெளியேற்றப்படுகிறது.
போதுமான அளவு நார்ச்சத்து உணவுகளை உண்ணும்போது, கழிவுப்பொருட்கள் குடலின் வழியாக நகரும் நேரம் குறைக்கப்படுவதுடன், மலத்தின் அளவு அதிகரித்து, உடனுக்குடன் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.
தாவரங்களின் செல்களை இணைக்கும் பசை போன்ற பொருளான பெக்டின் (Pectin) கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆப்பிள் ஆகியவற்றில் இருக்கின்றது. கரையக்கூடிய தன்மையுள்ள இந்த நார்ச்சத்தானது, மலத்தை குழகுழப்புத் தன்மையுடன் மென்மையாக்கி, இறுகிய மலத்தைத் தவிர்த்து, பெருங்குடலிலும் மலக்குடலிலும் மலமும் நச்சும் தேங்காமல் இருப்பதற்கு உதவிபுரிகிறது.
கரையாத நார்ச்சத்தாகிய செல்லுலோஸ் (Cellulose) என்னும் பொருள் தவிடு நீக்காத கோதுமை, அரிசித் தவிடு, காய்களின் மென்மையான தோல், தோல் நீக்கப்படாத முழு பருப்பு வகைகள் ஆகியவற்றில் அதிகமாக காணப்படுகின்றன. இவை, குடலில் நீரை உறிஞ்சி, மலத்தின் அளவை அதிகப்படுத்தி, நச்சுப்பொருட்களை வடிகட்டி எளிதில் வெளியேற்றிவிடுகின்றன. இதனால், குடலின் சுவர்கள் சீராய்ப்பு இல்லாமல், மலப்புழை நரம்புகளும், ரத்தக்குழாய்களும் பாதுகாக்கப்படுகின்றன.
பச்சையான வெண்டைக்காய், தக்காளி, கேரட், முளைக்கட்டிய வெந்தயம், உளுந்து, கொண்டைக்கடலை
ஓட்ஸ், பார்லி, உளுந்து போன்ற பிசின் போன்ற திரவப்பொருள் அதிகமாக இருக்கும் உணவுகளில் ஒன்றையாவது தினமும் உண்ண வேண்டும்.
பல் துலக்கியவுடன், கொதிக்க வைத்து ஆறவைத்த வெதுவெதுப்பான நீரை ஒன்று அல்லது இரண்டு டம்ளர்கள் அளவில் பருக வேண்டும். இதனால் உணவுக்குழாய் முதல் மலக்குடல் வரையுள்ள வாயுக்களும் நச்சுக்களும் நீங்கப் பெறும்.
பொதுவாக வெறும் வயிற்றில் சுடச் சுட தேநீர் அருந்துவது இதற்காகவே .
தயிர் அல்லது மோரை தொடர்ச்சியாக பருகுவதால் எரிச்சலும் புண்களும் குறைக்கப்பட்டு, பெருங்குடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்கள் உருவாக்கப்பட்டு, நச்சுக்கள் நீங்கி குடல் சுத்தமடைவதால், உள் மூலத்தில் உள்ள சீராய்ப்புகள் குணமடையும்.
வீட்டில் சமைக்கப்படும் உணவில் காரம், புளிப்பு, உப்பு அதிகம் சேர்ப்பதையும் சூடான உணவுகளை அவசரமாக சாப்பிடுவதையும் தவிர்த்தல் நலம் ஆகும் .
மூலநோய் வந்ததும் கீரை சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்( காயங்களும், சீராய்ப்புகள், வலி அதிகமான இருப்பின்)
மூலநோய் ஓரளவு சுகமானவுடன் கீரை வகைகளை சாப்பிடலாம்
மூலநோய் இருப்பதை அறிந்தவுடன், பப்பாளிப்பழம், அத்திப்பழம் போன்றவற்றை தொடர்ச்சியாக உணவில் சேர்க்கவேண்டும்.
சிறிதளவு தேங்காயை அப்படியே மென்று சாப்பிடுவதும், தேங்காய்ப்பால் அருந்துவதும் வீக்கத்தையும் புண்ணையும் குணப்படுத்தும்.
சர்க்கரைவள்ளி, சோளக்குருத்து, எள், பாதாம், கேழ்வரகு போன்ற உணவுகள் எரிச்சலையும், புண்ணையும் குணப்படுத்தி வேதனையை குறைத்து விடும்
ஆனால்
மைதா, சோளமாவு போன்றவற்றையும் அவற்றில் செய்த உணவுப்பொருட்களையும் தவிர்க்கவேண்டும். சோடா மாவு மற்றும் ஈஸ்ட் சேர்த்து செய்யப்பட்ட பேக்கரி பொருட்களான பிரட், பிஸ்கட், கேக் வகைகளையும் பிற இனிப்பு வகைகளையும் தவிர்த்தால், பெருங்குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்கிருமிகள் காப்பாற்றப்படும். அதிக உப்பு சேர்த்த ஊறுகாய் வகைகள், வற்றல் மற்றும் இறைச்சி உணவுகளை உண்ணக்கூடாது. வினிகர், சோடியம் பென்சோயேட், அஜினோ மோட்டோ, சிட்ரிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் சேர்த்து பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட வற்றல் வகைகள், சாஸ் மற்றும் ஊறுகாய்களை அறவே தவிர்க்கவேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும், மூலநோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டு பாதுகாப்பாக இருப்பவர்களுக்கு, மீண்டும் சீராய்ப்புகளை ஏற்படுத்தி, மலச்சிக்கலுடன் மூலநோயை ஏற்படுத்திவிடும்.
கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக் குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் மூலநோய் வருகிறது.
ரத்தம் உறைய வைக்கும் மருந்தை மூலநோய் உள்ள இடத்தில் செலுத்தி, வீங்கியுள்ள ரத்தக்குழாயைச் சுருங்க வைப்பது இதன் செயல்முறை. முதல்நிலை மூலநோயாளிக்கு இது உதவுகிறது.
. வளையம் இடுதல்: இந்த முறையில், மூலநோய் உள்ள பகுதியைச் சுற்றி ஓர் இறுக்கமான ரப்பர் வளையத்தைப் பொருத்துகிறார்கள். இதனால் ரத்தக் குழாய்க்கு ரத்தம் வருவது தடைபட்டு, வீக்கம் சுருங்கி விடுகிறது. இரண்டாம்நிலை மூலநோய்க்கான சிகிச்சை இது.
திரவ நைட்ரஜனை மூலநோயின் மேல் வைத்தால் அதில் உள்ள ரத்தக் குழாய்கள் உறைந்து சுருங்கிவிடும். இதுவும் இரண்டாம் நிலை மூலத்துக்கு உதவுகிறது.
நாட்பட்ட மூலநோயில் வீக்கம் மிக அதிகமாக இருந்தால், அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுகிறார்கள். வெளிமூலம் மற்றும் 3,4ம் நிலை உள் மூலத்துக்கு இது நல்ல பலன் தருகிறது.
ஐ.ஆர்.சி. (IRC Infra Red Coagulation) என்ற கருவி மூலம் இது செய்யப்படுகிறது. இக்கருவி அகச்சிவப்புக் கதிர்களை உற்பத்தி செய்து, மூலநோய் உள்ள பகுதிக்கு அனுப்புகிறது. அப்போது அக்கதிர்கள் மூலத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை நிறுத்திவிடுவதால் வீக்கம் சுருங்கிவிடும். முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை மூலநோய் உள்ளவர்களுக்கு, இதயநோய் உள்ளவர்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு, மயக்க மருந்து கொடுக்க முடியாதநிலையில் உள்ளவர்களுக்கு இதுவரப்பிரசாதமாக உதவுகிறது.
லேசர் கதிர்களைச் செலுத்தி மூலநோயில் உள்ள திசுக்களை அழிப்பது இந்த சிகிச்சையின் செயல்முறை. ஆனால் இதற்கு ஆகும் பணச்செலவு அதிகம்.
ஸ்டேப்ளர் சிகிச்சை: ஸ்டேப்ளர் கருவி கொண்டு மூலநோயின் மேல்பகுதியை இறுக்கிவிட்டு, வீக்கமுள்ள பகுதியையும் அதை ஒட்டியுள்ள தசைப் பகுதியையும் வெட்டி எடுத்து தையல் போட்டுவிடுகிறார்கள். மூலநோய் முற்றியநிலையில் உள்ளவர்களுக்கும், முதியோருக்கும் இது நல்ல பலனைத் தருகிறது.
அருகம் புல்லை அரைத்து பசும் பாலைக் காய்ச்சி குடித்து வர மூலப் பிரச்சனையே இருக்காது
Manikkavasagar Vaitialingam

கருத்துகள்