பாசம் என்பதும் உறவு என்பதும் ஒன்றுடன் ஒன்று . தொடர்பு உடையது .

அன்பு என்பது தொடர்பு இல்லாத ஒன்றை தேடிக் கண்டுபிடித்து அதன்மேல் அளவில்லாத பற்று வைப்பது அன்பு என்பதாகும்..
ஆணோ பெண்ணோ திருமணம் செய்யும் வரையில் தாய் தந்தை மீது பாசம் வைத்துள்ளோம் அதற்கு இரத்தபாச உறவு என்று பெயர்
திருமணம் முடிந்தவுடன் ஆணும் பெண்ணும் உடல் இன்பத்தை அனுபவித்தபின் கணவன் மனைவி அதிக பாசம் கொள்கின்றனர் .தாய் தந்தைப் பாசத்தை தள்ளி வைத்து விடுகின்றார்கள் .அங்கே அன்பு என்பது இல்லை.
மனைவி ஒன்றை விரும்புகின்றார் .கணவன் ஒன்றை விரும்புகின்றார் .இரண்டு பேருக்கும் வேறு வேறு எண்ணங்கள் உருவாகின்றன.
மனைவி காரில் போகவேண்டும் என்று விரும்புகின்றார்.கணவன் நமக்கு அவ்வளவு வசதி இல்லை அப்படியும் வாங்கினால் பின்னால் நமக்குத்தான் பணக்கஷ்டம் வரும் வேண்டாம் என்கின்றார்.
இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு வருகின்றது.உடல் ரீதியான இன்பத்தில் பாசம் இருந்தாலும்.மன ரீதியான வெறுப்பு உண்டாகின்றது.
வெறுப்பு என்பது வரும்போது பாசம் சோகமாக மாறுகின்றது.சோகம் பிரிவினையான எண்ணங்களை உண்டாக்குகின்றது.அதனால் இருவருடைய மனமும் வேதனை அடைகின்றது.இதனால் வாழ்க்கையில் வேறுபாடும் துன்பமும் நிம்மதி இல்லா சூழலும் உருவாகின்றது.
எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும்..இதுபோன்ற பல பிரச்சனைகள் எண்ணங்களுக்கு நேர்மாறாக வரும்போது தீர்வு என்ற முறையில்
மூளைக்கு அதிக வேலைக் கொடுத்து வாழ்நாள் முழுவதும் துன்பத்திலே ஆழ்ந்து விடுகின்றோம்.
இவைதான் பாசம் என்பதும் உறவு என்பதும் ஆகும் .
இதனால் வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி இல்லாமல் வாழ்ந்து அழிந்து விடுகின்றோம்.
அன்பு யாரிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி இயற்கையாக நிகழும் ஒரு தொடர்பு. இனம் மதம் மொழி தோஷ பாகுபாடு இன்றி நம்மையே அறியாமல் மனதில் தோன்றும். உதாரணமாக சுயநலமற்ற நண்பர்கள் அமைவது.
சுயநலத்தினால் தான் பாசம் என்ற மோகம் ஏற்படுகிறது. அதேசமயம் அந்த மனிதரின் தொடர்பு துன்பம் தருவதாகவோ, நம் மகிழ்ச்சிக்குத் தடையாகவோ இருந்துவிட்டால் மனதில் அவர் மீது வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது.
பிறகு அவரிடமிருந்து விலகிச் செல்கிறான். அவன் எனக்குரியவன், அவனால் எனக்கு உதவி கிடைக்கும் என்று நினைக்கும் போது பாசம் வளர்கிறது. தனக்குரியவர்களாகவும், உற்றார், உறவினர் எனப் பாசத்தை வளர்கிறான். ஆனால் உண்மை என்ன?
தன்னுடைய தேகமே தன்னை விட்டுப் போய்விடும் எனும் போது அடுத்தவர் மேல் வைக்கும் பாசம் எவ்வகையில் உண்மையாகும்?
அப்போது உறவுகள் பொய்யா? என்ற கேள்வி எழலாம். பாசத்தை அடிப்படையாகக் கொண்ட உறவுகள் பொய்யே தவிர அன்பினால் தோன்றிய உறவு உண்மையானது. அன்பினால் பிணைக்கப்பட்ட உறவு உன்னதமானது.
பாசம் என்பது சுயநலமே தவிர அன்பு என்பது சுயநலமற்றது. பாசம் என்பது அன்பாகப் பரிமளிக்க வேண்டும்
பாசம் என்பது தேங்கியிருக்கும் நீரைப் போன்றது. அன்பு என்பது பிரவாகம் போன்றது. ஒரு நதியில் நீரோட்டம் இல்லாதபோது தண்ணீர் ஆங்காங்கே தேங்கியிருக்கும். அதனைக் குட்டை என்று அழைப்பார்கள். ஆனால், மீண்டும் நதி பெருக்கெடுத்து ஓடும்போது தேங்கியிருக்கும் தண்ணீரும் பிரவாகத்தில் கலந்து தன் இயல்பை மாற்றிக் கொள்ளும்.
அன்பு என்பதில் பாசமும் உண்டு. ஆனால் அது ஒரு இடத்தில் தேங்கி நின்றுவிடாது. ஒரு நதிக்கரையில் வாழும் அனைத்து மக்களும் அந்த நதியால் பயனை அடைவதைப் போல உள்ளத்தில் அன்பு ஊற்றெடுக்கும் ஒருவரால் இந்த உலகமே பயனை அடையும்.
நாம் அழிந்துபோகும் பாசத்தை உறவை விரும்பாமல் என்றும் அழியாத அன்பை இறைவன் மேல் வைத்து நெருக்கம் கொண்டால் நம்முடைய வாழ்க்கை ஒளிமயமாய் விளங்கும்.
குடும்ப அமைதிக்கு கடவுள் உண்டோ இல்லையோ என்று வியாக்கியானம் செய்யாமல்
கடவுள் உண்டென்று நினைத்து இது பாவம் இது புண்ணியம் என்று வரையறை செய்து இதை சட்டமாக மதித்து வாழ்ந்து பார் .
உன் இல்லம் மகிழ்சியில் திளைக்கும்
நதியின் நோக்கம் பரந்து விரிந்த கடலில் சங்கமம் ஆவதைப் போல அன்பின் நோக்கமும் அன்பே உருவான கடலைப் போன்ற இறைவனைச் சென்று சேர்வதுதான். பாசம் என்ற பற்றை அறுத்து நம்மை அன்பு மயமாக மாற்றுபவர் ஈசன். அன்பு வேறு சிவம் வேறல்ல.. அன்பே சிவம்!!
"அன்பு சிவம் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிகிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமென்று அமர்ந்திருந்தாரே."
இன்று பெருகி வரும் மன அழுத்தம் ,பொருளாதார நெருக்கம் ,சந்தேகம் போன்றன பாசம் அன்பு என்பதைப் புரிந்து கொள்ளாமல் எதையும் உடல் ரீதியாகக் கருதி ,முடிவெடுப்பது குடும்பங்களில் பிரச்சனை உருவாக வலி/வழி வகுக்கிறது
கணவனும் மனைவியும் தங்களைக் குடும்பம் ஆக நினைக்க வேண்டும்
தங்கள் தங்கள் பெற்றோர் அழுத்தங்களை தங்களுக்குள் திணிக்காமல் சீர் தூக்கிப் பார்க்கும் எண்ணம் கொண்டால் மட்டுமே .குடும்பக் கொலைகள் தவிர்க்கப் படும்
அன்பே சிவம் என்று கூறி
தீர்ப்புக்களை உங்களின் கரங்களில் விட்டு விடுகிறேன்
கை கூப்பி ஒற்றுமையாக வாழுங்கள்

கருத்துகள்