இந்துக்களுக்கு கற்பூரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அனைத்து கோவில்களிலும் கற்பூரமானது கடவுளுக்கு படைக்கப்படும் ஒரு புனிதப்பொருளாக கருதப்படுகிறது. வெண்மையான வாசனை மிகுந்த இந்த கற்பூரம் புளிப்பு சுவை கொண்டது. இதன் நறுமணம் பல மூக்குசுவாசப் பிரச்சினைகளை குணப்படுத்தக்கூடியது.

கற்பூரம் சினமொன் கம்போரா என்ற மரத்திலிருந்து கிடைக்கிறது. இது பல வழிகளில் உபயோகமாக இருக்கிறது. குறிப்பாக வலி நிவாரணி மற்றும் சளி மருந்துகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கற்பூர மரத்தின் எண்ணெயில் இருந்து கிடைக்கும் எண்ணெயும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது.சருமத்தின் மீது இது எதிர் எரிச்சலூட்டும் தன்மை கொண்டது. அதனால் இது வலி மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இது சருமத்தின் மீது நரம்புகளை தூண்டி உணர்வின்மையை ஏற்படுத்துகிறது, இதனால் வலி மற்றும் வீக்கம் குறைகிறது. மேலும் சருமம் சிவப்பாவதையும் தடுக்கிறது
பெரும்பாலனவர்கள் சந்திக்கும் ஒரு சரும பிரச்சினை அரிப்பு மற்றும் சருமம் சிவந்து போவதாகும். கற்பூரம் சருமத்தின் மீது உள்ள துளைகள் அடைப்பதுடன் அரிப்பு மற்றும் சிவப்பு சருமத்தை தடுக்கும். இதனை பயன்படுத்துவதும் மிகவும் எளிது, நீரில் சிறிது கற்பூர எண்ணெயை கலந்து அதனை பாதிக்கப்பட்ட இடத்தின் மீது தடவுங்கள்.
நகங்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றுகள் அல்லது Onychomycosis போன்ற நோய்களுக்கு பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் தேவைப்படும். ஆனால் வேப்போரப் தயாரிக்கும்போது கற்பூர எண்ணெய் அதில் கலக்கும்போது அது பூஞ்சைகளை விரைவாக குணமாக்க உதவும். ட்ரைக்கோபைட்டானால் ஏற்படும் Onychomycosis ஸை குணப்படுத்த உதவுகிறது.
சருமத்தில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்த கற்பூரம் பயன்படுகிறது. வலி மற்றும் வீக்கம் இரண்டும் எக்ஸிமா நோயின் அறிகுறிகளாகும். கற்பூரம் பல லோஷன்களிலும், களிம்புகளிலும் எக்ஸிமா நோயை குணப்படுத்த உதவுகிறது.
குளிக்கும் நீரில் கற்பூர எண்ணெயை கலந்து குளிப்பது தலைவலி மற்றும் பேன் தொல்லையிலிருந்து உங்களை பாதுகாக்கும். கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து தூங்கும் முன் தலையில் தேய்த்துக்கொள்ளவும். காலையில் ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். இதன்மூலம் பேன்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கும்.
கற்பூர எண்ணெயை தலையில் தடவுவது உங்கள் முடியை மென்மையாக மாற்றுவதோடு முடிவளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. நீங்கள் வழக்கமாக உபயோகிக்கும் எண்ணெயுடன் சிறிது கற்பூர எண்ணெயையும் சேர்த்து தலையில் தடவுங்கள். இது தலைப்பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடிவளச்சியை அதிகரிக்கும்.
கற்பூரம் எனும் சொல்லின் ஆங்கிலச் சொல்லான Camphor எனும் சொல் , பிரெஞ்சு சொல்லான camphre என்பதிலிருந்து வந்தது.
இந்த பிரெஞ்சு சொல் இடைக்கால லத்தீன் சொல்லான camfora என்பதிலிருந்தும், அதே போல அரபிய சொல்லான kafur என்பதிலிருந்தும், சம்ஸ்கிருத சொல்லான கற்பூரி லிருந்தும் பெறப்படுகிறது.
இந்தோனேசிய தீவானசுமத்ராவின் பாருஸ் என்ற மேற்கு கடலோர துறைமுகத்திற்கு அயல்நாட்டு வர்த்தகர்கள் கற்பூரம் வாங்க வருவர். அதனால் மலேய் மொழியில் அது kapur Barus ஆக ஆனது. இஸ்லாமிற்கு முந்தைய காலத்திலேயே அரேபியாவில் கற்பூரம் அறியப்பட்டிருந்தது. அது குரானின் 76:5 வாசகத்தின் படி பழரசங்களில் சுவையூட்டியாக இருந்துள்ளது. ஒன்பதாம் நுற்றாண்டில், அராபிய இரசாயனவாதியான அல்-கிண்டி (Al-Kindi) (ஐரோப்பாவில் அல்கிண்டூஸ் என அறியப்படுபவர்). கற்பூரத்தின் தயாரிப்பிற்கு முற்கால சமையல்முறைக் குறிப்புக்களை அவரது Kitab Kimiya' al-'Itr (நறுமணத் தைலத்தின் இரசாயனவாதப் புத்தகம்) என்ற புத்தகத்தில் வழங்கியிருந்தார்
19 ஆம் நூற்றாண்டில் நைட்ரிக் அமிலத்துடன் கற்பூரம் பிராணவாயு ஏற்றப்பட்டு கற்பூர அமிலமாக்கப்படுமென்பது அறியப்பட்டிருந்தது. ஹால்லர் (Haller) மற்றும் பிளாங்க் (Blanc) ஒரு கற்பூர அமிலத்திலிருந்து, கற்பூரத்தின் ஒரு பகுதி இரசாயன இணைச்சேர்கையை வெளியிட்டனர், அது அதன் வடிவமைப்பை விளக்கினாலும் அதனை நிரூபிக்கவில்லை. 1903 ஆம் ஆண்டில், முதல்முறையாக முழுமையான காம்போரிக் அமிலத்திற்கான மொத்த இணைச்சேர்க்கை குஸ்டாஃப் கோம்ஃபாவினால் வெளியிடப்பட்டது. அதன் துவக்க பொருட்கள் டிதில் ஆக்ஸ்லேட் மற்று 3,3-டைமெத்தில்பெண்டானியோக் அமிலங்களாகும், அவை க்ளேசியன் தன்மை மாற்றத்தால் எதிர்வினைக்கு உள்ளாக்கப்பட்டு டைகெடொகாம்போரீக் அமிலத்தைக் கொடுக்கிறது. மிதிலேஷன் மிதில் அயோடைடு மற்றும்சிக்கலான குறைப்பு வழிமுறையுடன் காம்போரிக் அமிலத்தை உற்பத்திச் செய்தது. பின்னர் ஒரு குறுகிய காலத்தில் வில்லியம் பெர்கின் மற்றொரு இணைச்சேர்க்கையை வெளியிட்டார்.முன்னதாக,சில கரிமக் கூட்டிணைப்புக்கள் (யூரியா போன்றது) ஒரு கருத்துருவ நிரூபணமாக ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக இணைச்சேர்க்கை செய்யப்பட்டன.ஆனால் இயற்கைப் பொருளான கற்பூரம் உலகம் முழுவதும் தேவைப்படும் பற்றாக்குறைப் பொருளாகும். கோம்பா இதனை உணர்ந்து கற்பூரத்தின் தொழிற்சாலை உற்பத்தியை பின்லாந்து நாட்டின் டைனியோன்கோஸ்கியில் 1907 ஆம் ஆண்டில் துவங்கினார்.
கற்பூரம் ஏராளமாக ஊசியிலை மரங்களின் எண்ணெய்களில் உள்ள α-பைனேனேவிலிருந்தும் தயாரிக்கப்படலாம்,மற்றும் இரசாயனச் சாற்றின் உபபொருளான டெர்ஃபைண்டென்னிலிருந்து வடிகட்டப்படுகிறது. கரைப்பானாக அசெடிக் அமிலத்துடனும், வலுவான அமிலத்தால் இயைபு ஊக்கியாக α-பைனெனெ உடனடியாக காம்பீனாக மறு ஏற்பாட்டிற்கு உட்படுத்தப்படுகிறது, அது மீண்டும் வாக்னர்-மீர்வீன் மறு ஏற்பாட்டிற்கு உட்பட்டு ஐசோபார்னியில் கேஷனில் செல்கிறது, அது அசிடேட்டினால் ஐசோபர்னியில் அசிடேட்டினை அளிக்க கைக்கொள்ளப்படுகிறது. ஹைட்ரோலிசிஸ்சை ஐசோபர்னியோலாக மாறுவதன் தொடர்ச்சியாக டிஹைட்ரெஜெனேஷன் கற்பூரத்தைக் கொடுக்கிறது.
கற்பூரம் ருமிகளை அழிக்கும் ஆற்றல் படைத்தது. கற்பூரம் எரியும் போது அதனுடைய புகை காற்றில் கலந்து பரவியிருக்கும் கிருமிகளை அழித்துவிடுகிறது. நாம் பயன்படுத்தக்கூடிய விக்ஸ், டைகர் பாம்-இல் கூட கற்பூரம் 5% இருக்கின்றது.விக்ஸ் வேபர் சுடுதண்ணீரில் போட்டு நாம் அதனை உள்ளிழுக்கும் போது இருமல் சளி உள்ளிட்டவை கட்டுக்குள் வந்து, நல்ல எளிதாக சுவாசத்திற்கு வழி கொடுக்கும்
Ist möglicherweise ein Bild von Himmel, Dämmerung und Text

கருத்துகள்