எண்களின் பிறந்தநாள்
அகவை என்பது வயதை குறிக்கும் சொல்
அது ஆண்டைக் குறிக்கும் சொல்
அக வை நாள் என்பதோ ..
அன்றி அகவை தினம் என்றோ வாழ்த்துதல் ஆகாது .
வயது தினம் அல்ல ,அது ஆண்டாகும்
ஆண்டை தினம் என்று குறிப்பிடுவது மடமை அன்றோ
மேலும்
அகவை - என்றால் வயது.
அகம் - என்ற சொல் உள்புறம், உள்ளம் (மனம்), உயிர் எனப் பல்வேறு பொருள் குறித்தது.
காலத்தின் அகத்தே வைக்கப்பட்டிருப்பதால் "அகவை" எனப் பெயர் பெற்றது.காலச்சுழலில் அகப்பட்ட அளவு = அகவை.
வை + அகம் = வையகம் என்றால் பூமி. இவ்வையகத்தில் வாழும் உயிரினங்கள் வையகத்தில் இருந்து விடுபட இயலாது வயப்பட்டு வாழும் காலம் = அகவை.
அகம் > அக > அகவை.
அகம் = உள்ளே.
வை = வைக்கப்படுதல்.
வைக்கப்படுவதும் வயப்பட்டுக் கிடப்பதும் ஒரே செயல். (உங்கள் பையில் வைக்கப்பட்ட பொருள் (object) உங்கள் வயமாக (வசமாக) இருப்பதாகவே பொருள்படும்).
அகவை = வயது.
வயம் என்ற சொல்லிலிருந்து கிளைத்தது வயது.
வயம் என்றால் வயது (வயசு) .
(ஒப்பு நோக்கவும் : மனம் > மனது (மனசு)).
வயம் என்றால் வயப்படுதல் (வசப்படுதல்) ; மாட்டிக் கொள்ளுதல் / அகப்படுதல்.
அதாவது
காலத்தின்பால் வயப்படுவதே வயது.காலம் நம்மை வயப்படுத்தும் அளவு வயது.
பிறப்பு முதல் காலத்தால் வயப்பட்டிருக்கும் அளவினை கணிக்கும் வழி வயது.
வையகத்தில் வாழும் காலமே வயது.
காலக்கழிவில் வயப்பட்டுக் கிடக்கும் ஒவ்வோர் ஆண்டும் ஒரு வயது எனப்படுகிறது.
உங்களுக்கு ஐம்பதுஅகவை என்றால் ..? நீங்கள் ஐம்பது ஆண்டுகளைக் கடந்தவர் என்று தான் அர்த்தம் .
ஆண்களின் பருவ வயதுகளை வரிசைப் படுத்தினால் ..
1 -12 வயது ஆண் - பாலகன்
12 -24 வயது ஆண் - விடலை.
24 - 36 வயது ஆண் - காளை.
36 - 48 வயது ஆண் - மீளி.
48 - 60 வயது ஆண் - மறவோன்.
60 - 72 ஆண் - திறவோன்.
72 வயதுக்கு மேல் ஆண் - முதுமகன்.
என்று ஆண்டுகள் அகவைகளில் வயதாகக் கொள்ளப்படுகிற து .
இலங்கை பேச்சு வழக்கில் நாம் என்ன பேசினோம் ?
பிள்ளை -குழந்தைப்பருவம்
சிறுவன் -பாலப்பருவம்
பையன் -பள்ளிப்பருவம்
காளை -காதற்பருவம்
தலைவன் -குடும்பப்பருவம்
முதியோன் -தளர்ச்சிப்பருவம்
கிழவன் -மூப்புப்பருவம்
என்றல்லவா பேசி வந்திருக்கின்றோம் .மாறாக இது என்ன குழப்பம் ?
யாரும் வாய் திறந்து சொல்லாமல் இருப்பதால் தான் அடியேன் சொல்ல விழை கின்றேன் .
பெண்களை
பேதை - என்றோம் 1 வயது முதல் 8 வயது வரை
பெதும்பை - என்றோம் 9 வயது முதல் 10 வயது வரை
மங்கை - என்றோம் 11 வயது முதல் 14 வயது வரை
மடந்தை - என்றோம் 15 வயது முதல் 18 வயது வரை
அரிவை -என்றோம் 19 வயது முதல் 24 வயது வரை
தெரிவை - என்றோம் 25 வயது முதல் 29 வயது வரை
பேரிளம் பெண் -என்றோம் 30 வயதுக்கு மேல்
ஆக மொத்தத்தில் தமிழைப் பேணி னோம்
பெண்களை வர்ணித்தோம் .பெண்களை தாயாகக் கண்டோம்
பெருமைப்படுத்துகின்றோம்
பெண்ணைக் குறிக்கும் சொற்கள், தமிழில் ஏராளம் உண்டு.
அதில், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று ஏழு பருவங்களுக்கும் தனித்தனிப் பெயர்கள்.என்று மேலே கண்டோம்
இவற்றைத்தவிர, வேறு சில சொற்களும் உள்ளன. அவை, அணங்கு, ஆடவள், ஆட்டி, இளம்பிடி, இளையாள், காந்தை, காரிகை, கோதை, சிறுமி, சுந்தரி, சுரிகுழல், தையல், நல்லாள், நாரி, நுண்ணிடை, பாவை, பூவை, பெண்டு, மகடூ, மகள், மடவரல், மடவோள், மாது, மாயோள், மானினி, மின், வஞ்சனி, வஞ்சி, வனிதை, நங்கை, மதங்கி, யுவதி, விறலி என்று தொடர்கிறது .
பல பண்பாடுகளிலும் பிறந்தநாட்கள் பரிசு, விருந்து அல்லது சமயச்சடங்குகளுடன் கொண்டாடப்படுகின்றன. பல சமயத்தினரும் தங்களது சமய நிறுவனர் அல்லது கடவுளரின் பிறந்த நாட்களை கொண்டாடுகின்றனர். உலகெங்கும் கிறித்துவர்கள் மட்டுமின்றி ஏனையவரும் கொண்டாடும் ஓர் முதன்மையான பிறந்தநாள் விழாவாக கிறிஸ்துமஸ் உள்ளது.
பிறந்தநாள் ஒருவரின் பிறந்த தேதியை கொண்டாடும் நாள் அல்லது ஆண்டுவிழா என்பர் .
ஆண்டு விழாவை அகவை விழா என்பது எந்த வித தவறு மேயில்லை .
தமிழர்கள் இலங்கையில் வாழ்வோர் ஒருவரின் பிறந்த நாள் அவர் சார்ந்த பிரிவினர் பின்பற்றும் சந்திர நாட்காட்டி அல்லது சூரிய நாட்காட்டியைப் பொறுத்து அதே மாதத்தில் வரும் திதி அல்லது நட்சத்திரம் (ஜென்ம நட்சத்திரம்) அன்று கொண்டாடப்படுகிறது.
அ ன்றையநாளில் சிறப்பு பூசை நடத்தப்படுகிறது.
ஒருவரின் முதல் பிறந்தநாள் உறவினர்களுடன் சிறப்பான சடங்காக விளங்குகிறது. நீண்ட ஆயுளுக்காக சிறப்பு பூசைகள் நடத்துவதும் உண்டு.
இதேபோன்று ஒருவரின் அறுபதாவது பிறந்தநாள் (சஷ்டியப்த பூர்த்தி),
எழுவதாவது பிறந்தநாள் (பீஷ்ம சாந்தி)
மற்றும் எண்பதாவது பிறந்த நாள் (சதாபிசேகம்) சிறப்பாகக் கொண்டாடப்படுவதுண்டு.
அறுபதாவது பிறந்தநாளன்று மனைவிக்கு மறுதாலி அணிவிப்பதால் சில நேரங்களில் இது அறுபதாம் கல்யாணம் எனவும் அழைக்கப்படுகிறது.
எண்பதாவது பிறந்தநாளுக்கு அண்மித்து ஒருவர் ஆயிரம் பிறைகள் காணும் வாய்ப்புள்ளதால் இவர்கள் ஆயிரம் பிறை கண்டோர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
இன்று நடப்பது என்ன ?
மேற்கத்தையர் முறையில்
இன்றைய தலைமுறையில்இருக்கும் இந்து சமயத்தினரும் கிரெகொரியின் நாட்காட்டியின்படியான தங்கள் பிறந்த தேதியிலேயே பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.
மேற்கத்தியப் பண்பாட்டின்படி பிறந்தநாள் கேக் வெட்டி மெழுகுவர்த்திகளை அணைத்து விருந்துடன் கொண்டாடுகின்றனர்.
மது பானம் ஆண் பெண் வித்தியாசமின்றி பரிமாறப்படுகிறது .
தம் நிலை மறந்து சமூக சீர் கேடுகளுக்கு காரணமாகவும் அமைந்து விடுகிறது .
இது உங்களின் காலாசாரம் ,இது உங்களின் பண்பாடு
உண்மையில் எது எம்முடையவை ?
நான் போகும் வழி தவறானதா ?என்று சிந்தித்தால் மட்டுமே உன் நிழலின் அருமை உனக்குப் புரியும்
கருத்துகள்
கருத்துரையிடுக