இணுவில்
சின்னத்தம்பிப்புலவர்
இப்புலவர் இணுவில் கிழக்கில் பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். சிதம்பரநாதன் என்பவரின் மகனான இவரின் இயற்பெயர் கதிர்காமசேகரமான முதலியார் ஆகும். சிறுவயதில் அழகுடைய சிறுவனாக செல்லப் பிள்ளையக இருந்ததால் யாவரும் இவரைச் சின்னத்தம்பி என்றே அழைத்தனர். இறையருளின் பேறாக இவர் முத்தமிழையும் நற்குருமாரிடம் குருகுலக்கல்வி மூலம் நன்கு கற்றுத் தேறினார். இதனால் இவர் இறையுணர்வுடன் கவி புனையவும் இறைவனை வேண்டிப் பாடவும் நாடகங்கள் எழுதவும், நடிக்கவும் ஆற்றல் மிக்கவரானார். தமது அயலிலுள்ள குல தெய்வமான இணுவில் சிவகாமி அம்மன் கோவிலுக்கு அதிகாலையிற் சென்று ஆலயப் பணியாற்றிப் பாடிப் பணிந்து வழிபட்டு வந்தார். இவரின் கல்வியறிவும் இறையருளும் கைகூட ஒல்லாந்தரின் அரச பணியில் இணைந்தார். இவர் மீது பொய்த் தகவல் சூட்டப்பட்டதால் ஒல்லாந்தரின் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பக்தி மேலிட சிவகாமி அம்பாள் மீது சிறை மீட்புப் படலம் என்னும் பதிகத்தை சிறையில் இருந்து பாடினார். அம்பாளின் பெருங்கருணையால் சிறைக்கதவு தானகவே திறந்தது. இதனால் இவரின் முத்தமிழின் புலமை மேலோங்கியது. சிவகாமி அம்பாளின் ஊஞ்சற் பாடல் மேலும் பல பாடல்களைப் பாடினார். இளந்தாரி கோயிலின் அற்புதத்தை வியந்து பஞ்சவர்ணத் தூது எனும் நூலைக் கையெழுத்துப் பிரதியாக எழுதினார். தமது ஆற்றலினால் பல நாடகங்களையும் எழுதினார். இவரின் இறைபக்தி முத்தமிழிலும் நன்கு பிரகாசித்தது.

கருத்துகள்
கருத்துரையிடுக