இன்று பிராமணர்களைப் பற்றி சிறிதாக ஒரு செய்தி
நீங்கள் இது பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு
கி.பி. ஏழாம் நூற்றாண்டு பல்லவர் ஆட்சிக்காலத்திலேயே, வடக்கிலிருந்து புலம் பெயர்ந்து மேலை மற்றும் கீழை சாளுக்கிய பகுதிகளில் (கன்னட மற்றும் தெலுங்கு பகுதிகளிலிருந்து) குடியேறி, பின்னர் அங்கிருந்து வந்தவர்களே பிராமணர்கள்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
பின்னர் சோழர்களின் ஆட்சிக்காலத்திலும் முதன்மை பணிகள்செய்து வந்தார்கள். ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்திலும் அவர்களுடைய முதன்மை தளபதியாக இருந்தவர் கிருஷ்ணன் ராமன் என்னும் பிராமண குலத்தவர். அவர்களுடைய முதன் மந்திரியாக இருந்தவர். அநிருத்த பிரம்மராயர் என்னும் பிராமண குலத்தவர். பொதுவாக பிராமணர்கள் அதிக உயரம் மற்றும் உடல் வலிமை மற்றும் கூர்மையான அறிவும் கொண்டவர்கள். வட இந்திய பிராமண சமூகத்தினர் பல பிரிவினர் புலால் உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். இங்கு பெருநகரங்களில் வாழும் உயர்மட்ட பிராமணர்கள் பலர் புலால் உண்ணும் பழக்கம் கொண்டவர்கள்.
ராஜராஜ சோழர் தகப்பனாராகிய சுந்தர சோழர் ஆட்சிக்காலத்தில், அவருடைய மூத்த மகனும், பட்டத்து இளவரசருமான ஆதித்த கரிகாலனை சதி செய்து கொன்றவர்கள் பாண்டிய அரசனின் மெய்க்காவல் படையை சேர்ந்த ரவிதாசன், சோமன் சாம்பவன், இடும்பன் காரி, பரமேஸ்வரன் என்ற நான்கு பிராமண சகோதரர்கள்.. பாண்டிய அரசர்களின் மெய்க்காவல் படையில், கேரளப் பகுதியிலிருந்து போர் பயிற்சி பெற்ற பிராமணர்களே நியமிக்கப்பட்டு வந்தனர்.
ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்த பின்னர் இப்போது கேரளப் பகுதியிலும், அந்நாட்களில் பாண்டிய நாட்டு பகுதியான காந்தளூர் என்னும் ஊரில் அவர்களுடைய போர்ப்பயிற்சி சாலையையும், அவர்களையும் முற்றிலும் அழித்து,பழி தீர்த்துக்கொண்டார். இது ராஜராஜ சோழன் மெய்க்கீர்த்தியிலும் "காந்தளூர்சாலை கலமறுத்தருளி ...." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனு ஸ்மிருதி என்னும் நூல் பிராமணர் என்பவர் யாசித்தே உண்ண வேண்டும் என்றும், நாட்டின் நலனுக்காக மன்னர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேதங்களையும் பிற கல்வி அமசங்களையும் பயிற்றுவிக்க வேண்டுமென்றும் கூறுகிறது. மேலும் பிராமணர் என்பவர் அமைதி, சுய கட்டுப்பாடு, பொறுமை, நேர்மை, அறிவு, விவேகம், சுத்தம், புனிதம் போன்ற தன்மைகளும் நிறைந்திருக்க வேண்டும். என்பதே உண்மை .
ஸமோ தமஸ் தப சௌகம்
க்சந்திர் அர்ஜவம் இவா கா
ஜ்னனம் விஜ்னனம் அஸ்திக்யம்
பிரஹ்ம கர்மா ஸ்வபவ ஜம்
(பகவத் கீதை – 18:42)
தொடக்கத்தில், வேதகால சமூகத்தில், இந் நிலைகள் ஒருவருடைய குணம், நடத்தை, இயல்பு போன்றவற்றால் அடையப்படுவதாக இருந்திருக்கிறது.
ஒருவர் அல்லது ஒரு குழுவினர் ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு உயர்த்தப்படுவதும், தாழ்த்தப்படுவதும் நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. காலப்போக்கில், இந் நிலை மரபு வழியாக அடையப்படும் ஒன்றாக மாறிவிட்டது. தற்காலத்தில் இவ் வருணமுறை கடைப்பிடிக்கப்படுவது இல்லை ஆயினும், பிராமணர்களாகத் தங்களைக் கருதிக் கொள்பவர்கள், பல்வேறு தகுதி நிலைகளிலும் உள்ள பல்வேறு சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
தமிழகத்தில் ஐயர், ஐயங்கார் என இரு பிரிவுகள் உண்டு
ஈழத்தில் பிராமணர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இவர்கள் தமிழுக்கும் சைவசமயத்துக்கும் பெருந்தொண்டாற்றியுள்ளார்கள். இப்போது பெரும்பாலானோர் கோயில்களில் பூசகர்களாக உள்ளனர்.
இது தொழிலாக மாறி வருகிறது
சிலர் ஆகம விதிகளையும் வேதங்களையும் நன்கு கற்றறிந்து கோயில் விழாக்கள், சமூகத்தினரின் சமயச் சடங்குகள் என்பவற்றை நடத்தி வைக்கிறார்கள். தற்காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் பல நாடுகளில் குடியேறியுள்ளதால் ஈழப் பிராமணர்களும் அந்தந்த நாடுகளுக்குச் சென்று சமயப் பணி ஆற்றி வருகிறார்கள். ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் இவர்கள் மதிப்பிற்குரியவர்களாக விளங்குகிறார்கள்.
காசுக்கு தான் ஓதுகிறார்களே தவிர மத சம்பிரதாயங்களுக்கான அடித்தளமாக இல்லை .அங்கெ பக்தியை சிலரில் காண முடிவதில்லை .
ஒப்புவிப்பது போல மந்திரங்களைக் கூறுவது காணக் கூடியதாக இருக்கிறது
பிராமணர்
பார்ப்பனர்
என்போர் பண்டைய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும்.
பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய, படிமுறை இயல்பு கொண்ட, இந்த முறையில் பிராமணர்கள் முதன்மை நிலையில் வைக்கப்படுகின்றனர்.
பழைய இந்துச் சமூக அமைப்பில், மனுநீதி என்னும் நூலில் விளக்கப்பட்டபடி, இவர்கள் வேதங்களைப் பயின்று இறை வழிபாடுகளை நடத்தும் கடமை கொண்டவர்களாக இருந்தனர்.
இவர்கள் அறிஞர்களாகவும் அரச குருமார்களாகவும் இருந்தனர். முக்கடவுளரில் வேதங்களின் காப்பாளரான பிரம்மா இவர்களின் மூத்தையராக இருந்ததாகக் கருதி ஒரு பக்தி இவர்கள் மேலும் இருந்தது .
பிரம்ம +அண்ணர்கள்
அதாவது அண்ணன் என்றால் குருவானவன்
பிரம்மக்குருக்கள் என்று மதிப்பளிக்கப்பட்ட காலம் அன்று இருந்தது .
தமிழ் பிராமணர்கள் எனப்படுவோர் தமிழ் மொழி பேசும் தமிழ் பிராமணர்கள் ஆவர். இவர்கள் ஆந்திரா, கேரளா மற்றும் கருநாடகா போன்ற பிற மாநிலங்களிலும் வசிக்கின்றனர். இவர்களுள் குருக்கள் என்பவர்கள் சைவ சமயத்தையும்,
ஐயர் என்பவர்கள் ஸ்மார்த்தம் சமயத்தையும்,
ஐயங்கார் என்பவர்கள் ஸ்ரீவைஷ்ணவம் சமயத்தை பின்பற்றுவர்கள் என மூன்று குழுக்களாக இருந்தனர்
அந்தணர் என்போர் அறவோர். அவர்கள் தமிழர் வழி ஆலய பூசை, திருமணம் முதலிய சடங்குகளை செய்விக்க அந்தந்த குடிப்பிரிவினர்களால் மரபு வழியாக நியமிக்கப்பட்டவர்கள். தமிழர்களில் குடிவழி மரபு காலம், காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. அறவாழி அந்தணர் என்பதும் இவர்களையே ஆகும் .
பெருமை மிகு சமய குரவர்களான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் தமிழ் அந்தணர்கள் ஆவார்கள்.
அவர்கள் பெரும்பாலும் வேளாளர் மரபை சேர்ந்தவர்கள். இந்த சமயக்குரவர் நால்வரில் திருஞானசம்பந்தராலேயே மதுரை ஆதீனம் ஏற்படுத்தப்பட்டது.
மதுரையில் 14-ஆம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜி -யின் படைத்தலைவரான மாலிக்காபூர் படையெடுப்பு நிகழ்ந்து பாண்டியர்கள் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்.
சுமார் 50 ஆண்டு காலம் அலாவுதீன் கில்ஜியின் ஆளுகைக்கு உட்பட்ட முஸ்லிம் சுல்தான்கள் ஆட்சி நடைபெற்றது. அது நீண்ட காலம் நீடிக்க வில்லை. சுமார் 50 ஆண்டு காலத்திற்குள் சுமார் 5 சுல்தான்கள் ஆண்ட காலத்தில் பெருமளவில் முஸ்லிம்கள் குடியேற்றம் நிகழ்ந்தது.
பின்னர் கி.பி 15 மற்றும் 16-ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகர சாம்ராஜ்ய ஆட்சியின்போது கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில்தான், தமிழ்நாடு அவருடைய ஆட்சிக்குள் முழுவதும் கொண்டுவரப்பட்டது.
விஜயநகர சாம்ராஜ்ய ஆட்சிக்காலத்தில் கிருஷ்ணதேவராயரால் அனுப்பப்பட்ட விஸ்வநாத நாயக்கருடைய படைகள், மதுரை சுல்தான் ஆட்சியை வென்று தமிழ்நாட்டுக்குள் விஜயநகர சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தினார். அவருடைய ஆட்சிக்காலத்தில் ராவ் மற்றும் ராயர் என்று குலப்பெயர் உள்ள தெலுங்கு மற்றும் கன்னட பிராமணர்கள், கோமுட்டி செட்டியார் மற்றும் கன்னட நாயக்கர் மற்றும் தெலுங்கு ரெட்டி, நாயுடு இன மக்கள் குடியேற்றம் பெருமளவில் தென் மற்றும் மத்திய தமிழ்நாட்டில் நிகழ்ந்தது.
கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில்தான் தமிழ் பெயர்களில் இருந்த பல ஊர் பெயர்களும், பெரிய கோவில்களின் தெய்வங்களின் பெயர்களும் தமிழிலிருந்து அப்படியே சம்ஸ்கிருத பெயர்களாக மொழி பெயர்க்கப்பட்டு, சம்ஸ்கிருத பூஜை முறைகளுக்கு மாற்றப்பட்டன. கோவில் தல வரலாறுகள், கோவில் ஊரணி, கோவிலுக்குரிய மரங்களின் பெயர்கள் முதலியவைகள் சம்ஸ்கிருதத்தில் புதிதாக எழுதப்பட்டன. அரசர்களின் ஆதரவும் அவரகள் பக்கமே இருந்தது.
எனவே, தமிழ் அந்தணர்கள் வேறு என்பதும், வடக்கிலிருந்து தமிழ் நாட்டுக்குள் அரசர்களின் படையெடுப்பு மற்றும் ஆளுகை காலத்தில் தமிழ் நாட்டில் குடியேறிய பிராமணர்கள் வேறு என்பதும் நன்கு தெரிகிறது. பிராமணர்கள் வருகையின் போது, அவர்களுள் பல வகையான கோத்திரப் பிரிவினர் இருந்தனர். தமிழ் அந்தணர் குடியில் மண உறவுகள் பல ஏற்பட்டன. அந்த பிராமண உறவு காரணமாக, அவர்களின் வாரிசுகள் பிராமணர்கள் என்று கருதப் பட்டார்கள்.
. இப்போது அந்தணர்களையும் பொதுவாக பிராமணர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள்.
பிராமணர்களின் பூர்விகம் ஸ்கேண்டிநேவியா, அதை ஒட்டிய வட துருவ பிரதேசமாகும்.
வேதத்தில் பிராமணர்களின் பூர்வேஈக தேசம் ஆயிரம் ஆறுகள் ஓடும் பனிபடர்ந்த பகுதி எனவும் அங்கே 6 மாதம் பகல் 6 மாதம் இரவாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது ஸ்காண்டிநேவிய நாடான சுவீடன், பின்லாந்து, நார்வே பகுதியே பிராமணர்களின் பூர்விகம் என நிறுவுகிறார். ஆயிரம் ஏரிகளின் நாடு பின்லாந்து, நள்ளிரவில் சூரியன் தெரியும் நாடு நார்வே என்ற சொற்பதங்கள் இன்றும் உள்ளது.
பிராமணர்களின் மொழியான சமஸ்கிருதம் வட ஐரோப்பிய மொழிகளோடு மிகவும் ஒத்திருக்கிறது. ஒரே இலக்கண அமைதியை கொண்டிருக்கிறது. பல சம்ஸ்கிருத சொற்கள் இன்றளவும் ஜெர்மன், டேனிஷ், ஸ்விடிஷ் ஆங்கிலத்தில் அதே அர்த்தத்தில் பேசப்படுகிறது. எனவே வேதத்தின் அடிப்படையிலும், மொழியின் அடிப்படையிலும் பிராமணர்களின் பூர்வீகம் வட ஐரோப்பியா என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
வட துருவம் மிக கடும் குளிர் பிரதேசம், ஆண்டிற்கு 9 மாதங்கள் பனிப்பொழிவு ஏற்படும் ஆதலால் உணவு பஞ்சம் எப்போதும் இருக்கும். ஆண்டின் 3 மாதத்தில் கிடைக்கும் கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்ற தானியங்களையும், பழங்களையும் பதப்படுத்தி வைத்து கொண்டு குளிர்காலத்தில் மாமிசம், மீன் மற்றும் முட்டைகளுடன் சேர்த்து உண்டு வந்த பிராமணர்கள், குளிர் காலங்களில் கடுமையான உணவு பற்றாக்குறை மற்றும் பல வித நோய் தொற்றுக்களால் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர். எப்டியாவது வாழ்ந்தாக வேண்டுமே. கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நோக்கி நகர்ந்து மித வெப்பமான மத்திய ஆசிய பகுதிக்கு வந்தவர்களை அங்கிருந்த பூர்வ குடிகளான ஜிப்ஸிகள் அடித்து விரட்ட தெண் கிழக்கு திசையில் நகர்ந்து கி.மு 1500 வாக்கில் சிந்து சமவெளியை (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்) அடைந்தனர். அங்கு ஏற்கனவே நாகரிகமான மக்கள் இனம் ஆரிய பிராமணர்களை போல் நாடோடியாக இல்லாமல் விவசாயம் செய்து நகரங்களை அமைத்து கல் வீடுகளில் வாழ்ந்து வந்தனர். சிந்து சமவெளி நாகரீகம் ஆரியர்களின் வருகைக்கு 1000 ஆண்டுகள் பேசாமையானது. அதாவது இன்றிலிருந்து சுமார் 5000 ஆண்டுகள் பழமைமையானது.
அதுவரை அரிசி பயிரிட்டு வந்த சிந்து சமவெளி மக்களிடம் பிராமணர்கள் முதன்முறையாக கோதுமையை அறிமுகப்படுத்தினார். பாலுக்காகவும், உழவுக்காகவும் மாடுகளை பயன்படுத்தி வந்த திராவிடர்களிடம் வேகமாக ஓடும் ஆனால் பால் தராத, விவசாயப்பணிகளுக்கு பயன்படாத குதிரையை அறிமுகப்படுத்தினர். குதிரை மாடுகளை விட உயர்வானது எனவும் சொல்லினர். இதுவே ஆரியர்கள் தங்களை உயர்வானர்கள் என்று காட்டி கொள்ள எடுத்த முதல் படி. அதை தொடர்ந்து துருப்பிடிக்கும் இரும்பை திராவிடர் பயன் படுத்திய செம்பை விட உறுதியான உலோகம் என நம்பவைத்தனர்.
அதுபோலவே சம்ஸ்கிருத மொழியையைம் முன்னிலை படுத்தினர். உண்மையில் சமஸ்கிருதம் (sanskrit) என்பதன் அர்த்தம் "நன்றாக செய்யப்பட்டது" என்றாகும். san என்ற சொல் "நல்ல, புனித" என்ற பொருளிலும் create என்ற சொல் அதே பொருள் மற்றும் எழுத்து வடிவில் இப்போதும் பிரெஞ்சு, ஸ்பேனிஷ் மொழிகளில் வழங்கப்படுகிறது. ஆக இந்த மொழி மக்களால் பேசப்பட்டு தோன்றியதில்லை. மாறாக ஒரு குழுவினரால் கட்டமைக்கப்பட்ட மொழி. வேண்டுமென்றே சாமானியவர்களுக்கு புரியாத, மிகக்கடினமான இலக்கணத்தை இம்மொழிக்கு உருவாக்கினார். மேலும் கடினமானகூட்டெழுத்துக்களை சேர்த்தும், பிரித்து படிக்கும்போது எதிர்மறையான பொருளைத்தரும் விதமான சொற்களை சேர்த்தும் அமைக்கப்பட்ட மொழிதான் சமஸ்கிருதம். இதை தேவ பாஷை என அறிமுகப்படுத்தினர்.
ஆரியர்கள் சிந்து சமவெளியில் குடியேறியபோது அவர்களுடன் பெண்கள் வரவில்லை. ஆண்கள் மட்டுமே குடியேரினர். அவர்கள் வேண்டுமென்றே பெண்களை விட்டுவிட்டு வந்தார்களா, அல்லது அவர்கள் வரும் வழியில் பெண்கள் நோய் மற்றும் எதிரிகளால் கொல்லப்பட்டனரா என்று தெளிவில்லை. ஆனால் ஆண்கள் மட்டுமே வந்து குடியேறினர் என்ற கருத்தை சங்கராச்சாரியார் குறிப்பிட்டுள்ளார். இங்கு குடியேறிய ஆரிய ஆண்கள் இனப்பெருக்கத்துக்காக பூர்வகுடி திராவிட பெண்களையே சார்ந்திருக்க வேண்டி இருந்தது. ஆனால் திராவிட பெண்களுடன் இனவிருத்தி செய்தாலும் அப்பெண்களை தங்கள் இனத்தவராக ஒப்பு கொள்ளவில்லை. மாறாக அப்பெண்கள் எப்பொழுதும் மீண்டும் திராவிட ஆண்களோடு கலந்து விடுவார்களோ என்ற அச்சம் ஆரிய ஆண்களை சதா குடைந்து கொண்டிருந்தது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆரியர்கள் நாகரீகத்தில் பின் தங்கி இருந்தனர். சிந்து சமவெளியில் ஏற்கனவே ஆண்கள் விவசாயம், நெசவு தொழில், உலோக வார்ப்பு, கட்டிட கலை என பல தொழில்நுட்பங்களை அறிந்திருந்தனர். ஆனால் ஆரிய ஆண்கள் நாடோடிகளாகவும், நாகரீகரிகமற்றவர்களாகவும், பல நோய் தொற்று உள்ளவர்களாகவும் இருந்ததால் தங்களை மணந்த பெண்கள் தங்களை விட்டு போய் விடக்கூடம் என்ற சந்தேகத்திலேயே வாழ்ந்தனர்.
இதன் வெளிப்பாடாக தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைகள் பெண் யோனியில் ஜனித்த பாவம் தீர வேண்டும் என்று ஆண்களுக்கு பூணூல் அணிவித்தனர். பெண்களை சொத்து, சடங்குகளில் பங்கேற்கும் உரிமை என எதுவும் இல்லாமல் அடிமைகளாக நடத்தினர். அந்த நடை முறைகளையே வேதங்களிலும் சொல்லி வைத்தனர். ஆக ஆரிய பிராமணர்கள் ஆண் வழி அதாவது தந்தைவழி சமூகமாக உருவெடுத்தது. மாறாக இயற்கை வழிவந்த திராவிட இனம் உயிர் தோன்றலுக்கு காரணமான பெண்ணை தெய்வமாக வழிப்படும் தாய் வழி சமூகமாக இருந்தது.
மேற்சொன்ன நாகரீகம் , தொழில் ஏதும் அறியாத பிராமணர்கள் தங்கள் இருப்பை நிலை நிறுத்தி கொள்ள ஏற்கனவே தொழில் வளர்ச்சி பெற்றிருந்த திராவிட மக்களை தொழில் ரீதியாக பிரித்தனர். பிறகு அந்த பிரிவினையை சாதி என்றும், தொழில் அடிப்படையில் இல்லாது பிறப்பின் அடிப்படையில் ஆனது என்றும் மேலும் கடுமையாக்கி அதற்கு ஆதரவாக வேதத்தில் ஸ்லோகங்களையும் உருவாக்கினார். ஆனால் நால்வகை சாதியை சொல்லும் ஸ்லோகம் பழைய ரிக் வேதத்தில் இல்லை என்றும், பின்னாளில் இடைச்செருகலாக புகுத்தப்பட்டது என்றும் அந்த சொல்லாடல்களின் தன்மையை ஆராய்ந்த பண்டிதர்கள் சொல்கிறார்கள்.
எது எப்படியோ, ஆனால் வேதத்தில் இன்று இந்து கடவுளாக பிராமணர்கள் முன்னிறுத்தும் சிவனோ, விஷ்ணுவோ, விநாயகனோ, முருகனோ எங்கும் குறிப்பிட படவில்லை. மாறாக வேதம் முழுவதும் இந்திரனையே முழுமுதல் கடவுளாகவும் இந்திரனை குஷிப்படுத்த யாக, யக்ஞங்கள் செய்யும் முறைகளுமே விளக்கப்பட்டுள்ளது.
சிவனும் விஷ்ணுவும் எப்படி இந்து மதத்தில் புகுத்தப்பட்டனர்??
ஆரியர்கள் குடியேறும் இங்கிருந்த ஒரிஜினல் இந்துக்கள் முன் பெண் தெய்வங்களையும் (காளி, மாரி, கொற்றவை,கெங்கம்மா) , இயற்கையையும் (மலை, வேம்பு ,ஆல் போன்ற மரங்கள்), முன்னோர்களையும் (குல தெய்வம் & சிறு தெய்வ) வழிப்பட்டனர். அந்த சமயத்தில் சமண சமயமும் மேலோங்கி இருந்தது. கடைசி மற்றும் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர் கிமு 600 களில் வாழ்ந்தவர். அதற்கு 23 தலைமுறைகள் முன்பு (ஒரு தலைமுறைக்கு 25 வருடங்கள் என கொண்டாலும் சுமார் 600 ஆண்டுகள்) தோன்றிய முதல் தீர்த்தங்கரர் ஆதிநாத் என்று வழங்குப்படுகிறார். இந்த முதல் சமண துறவியை அபகரித்து ஆதி சிவன் என்றாக்கி பிராமணர்கள் தங்கள் தெய்வமாக வரித்து கொண்டனர். தவம் இயற்றுதல், தியானம் செய்தல், தன்னுள் மனதுள் கடந்து மனித இனத்தை உய்விக்கும் தேடல் சமண சமய கோட்ப்பாடுகளின் அடிப்படையாகும். தவம், தியானம் செய்யும் முறைகள் எதுவும் பிராமணர்களின் வேதத்தில் குறிப்பிடவில்லை. அதாவது உள்ளுக்குள் தேடும் உண்மையை அறியும் வித்தைகள் வேதத்தில் இல்லை. மாறாக பொருட்களை தீயிலிட்டு இந்திரனுக்கு படைக்கும் யாக முறைகளே உள்ளது. இப்படி ஆதிநாத்தை ஆதி சிவன் ஆக்கியதை நவீன கால ஆதி யோகி சிலையிலும் பார்க்கலாம்.
தற்போது கிருஷ்ணனை இந்து கடவுளாக ஒப்புக்கொண்டு கொண்டாடும் பிராமணர்கள், ஒரு காலத்தில் அதே கிருஷ்ணனை சூத்திரன், பெண் காமந்தகன், கள்வன் என்று தூற்றினார். காரணம் கிருஷ்ணன் திராவிடன். கரிய நிறமுடைய இடையன். பிராமணர்களின் கடவுளான இந்திரனுக்கு பூசை செய்ய விடாமல் தடுத்து இயற்கை வடிவான கோவர்த்தன மலைக்கு பூசை செய்ய சொன்னதால் ஆரம்பத்தில் கிருஷ்ணனை எதிரியாக பார்த்த பிராமணர்கள் பின்னாளில் அவரது பெருமை வளர்ச்சியை அபகரிக்கும் விதமாக கிருஷ்ணனை இந்து கடவுளாக ஏற்று கொண்டனர்.
இது போல காலத்திற்கேற்ப மக்களின் அறியாமையை முதலீடாக்கி பல வகைகளிலும் தன்னிருப்பை பிராமணர்கள் வரலாற்றின் வழி நெடுகிலும் தக்கவைத்து கொண்டனர்.
இன்று வரை பிராமணர்கள் தங்களை தக்க வைக்கவே முனைகின்றனர்
பல விடயங்களை தரலாம் .ஆனால் உங்களுக்கு அது கசக்கும் .
விரிவாக இன்னொரு சமயம் நோக்குவோம்
Manikkavasagar Vaitialingam

கருத்துகள்
கருத்துரையிடுக