தமிழுக்காக உயிர் விட்ட மன்னன் நந்தி வர்மன்
தமிழு க்காகஎத்தனையோ உயிர்கள் காவு கொள்ளப்பட்டன .ஆனால் தான் இறப்பேன் என்று அறிந்திருந்தும் தமிழுக்காக உயிர் விட்ட மாமன்னன் பல்லவ நந்தி வர்மனை பணிகின்றேன்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
கிபி 3 நூற்றாண்டு முதல் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்டனர் பல்லவர்கள். இவர்கள் தமிழ் மொழியை வளர்த்துு தமிழ் மொழியைை ஆதரித்தனர்். ஆனால் தமிழ் மொழியை ஆதரித்து வளர்த்த பல்லவ மன்னர்களில் மூன்றாம் நந்திவர்மன் குறிப்பிடத்தக்கவர். ஆகையால் மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்டதே "நந்திக்கலம்பகம்" ஆகும்.
இந்நூல் மற்ற நூல்களை போல அல்லாமல் வரலாற்றில் மிகவும் முக்கியம் வாய்ந்த நூலாக திகழ்கிறது."உள்ளதை உள்ளவாறு கூறுவது வரலாறு", உள்ளதை உயர்த்தி கூறுவது "இலக்கியம்" ஆகும். நந்திகலம்பகத்தில் மூன்றாம் நந்திவர்மனின் அரசியல் தொடர்பான செய்திகள் அதிகம் மிகுந்துள்ளது.
இலக்கியத்தில் மூன்றாம் நந்திவர்மனின் வரலாற்றுச் செய்திகளை புறத்துறைகள் வாயிலாகவும், தலைவி தன் மகிழ்ச்சியை கூறுவதாக அமைந்து அகப்பொருள் சுவையுடன் விளங்குகிறது.
நந்திக்கலம்பகத்தில் மூன்றாம் நந்திவர்மனின் வரலாறு குறித்த கல்வெட்டு, செப்பேடு செய்திகளும், நந்திகலம்பகத்தில் உள்ள செய்திகளும் ஒன்றாக இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நந்திக் கலம்பகத்தில் மூன்றாம் நந்திவர்மனின் "கொடைச் சிறப்பு, தமிழ் பற்று, சிவபெருமான் மீது கொண்ட பக்தி, வீரம், அறிவு போன்ற பண்புகளுடன் நந்திக்கலம்பகத்தில் மேலும் போற்றப்படுகிறது.
தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று தான் நந்திக்கலம்பகம். இது காஞ்சியைத் தலைநகரகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் "தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன்"குறித்து பாடப்பட்டுள்ளது. மூன்றாம் நந்திவர்மனின் காலம் கிபி-825-850 ஆகையால் நந்திக் கலம்பகத்தின் காலம் கிபி 9 ஆம் நூற்றாண்டு ஆகும். நந்திக்கலம்பகத்தில் காஞ்சி, மல்லை (மகாபலிபுரம்), மயிலை (மயிலாப்பூர்) ஆகிய நகரங்கள் பற்றி இந்நூலில் சிறப்பாக போற்றப்பட்டுள்ளது.
கடவுளுக்கு 100, முனிவருக்கு 95, அரசருக்கு 90, அமைச்சருக்கு 70, வணிகருக்கு 50, வேளாளருக்கு 30 எனும் அளவில் கலம்பக பாடல்கள் அமைய வேண்டும் என்பது விதி. ஆனால் கலம்பகத்தில் மேற்கூறிய அளவுகளை மீறி பாடப்பட்டுள்ளது. நந்திக் கலம்பகத்தில் அகம், புறம் ஆகிய துறைகள் கலந்து வர அமையப்பெற்றுள்ளது. ஆனால் இக் கலம்பகத்தில் அகத்திணைகள் பெருந்தன்மையாகவும், புறத்திணைகள் சிறு தன்மையாகவும் உள்ளது. நந்திக்கலம் மொத்தம் 144 பாடல்கள் உள்ளன. ஆனால் அரசர் மீது பாடப்படும் கலம்பக பாடல் 90 பாடல்கள் இருக்க வேண்டும் என்பது நியதி. எனவே இதில் உள்ள 54பாடல்கள் பிற்காலத்தில் எழுதி சேர்க்கப்பட்டு இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
நந்திவர்மனின் தெள்ளாறு வெற்றியைப் பற்றிக் கூறும் 16 பாடல்கள் சிறப்பாக கூறுகின்றன. கொற்ற வாயில் முற்றும், விரியலூர், வெள்ளாறு, தெள்ளாறு போன்ற பல்வேறு போர்க்களங்கள் பற்றிி கூறும் அளவுக்கு சிறப்பு மிக்கது.
நந்திவர்மனிடம் இருந்து அரசைக் கவரும் நோக்கில் அவனது தம்பியால் ஒழுங்குசெய்யப்பட்டு அறம் பாடுதல் என்னும் முறையில் இப்பாடல்கள் பாடப்பட்டன. அறம் வைத்துப்பாடிய நூலின் பாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்தி வர்மன் அப்பாடலின் சிறப்பில் மனம் பறிகொடுத்து பாடல் முழுவதையும் பாட விரும்பினான். நூல் முழுவதையும் கேட்டால் மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழின் மீதுள்ள தனியாத காதலால் உயிரையும் பொருட்படுத்தாது, எரியும் பந்தலின் கீழிருந்து கேட்டு உயிர் இறந்தான் என்று கூறப்படுகிறது. 'நந்தி, கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்' - என்னும் சோமேசர் முதுமொழி வெண்பா என்னும் நூலின் வெண்பா வரிகளும், கள்ளாரும் செஞ்சொல் கலம்பகமே கொண்டு, காயம் விட்ட தெள்ளாறை நந்தி -என்னும் தொண்டை மண்டலச் சதகப்பாடல் வரிகளும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. இதற்கேற்ப இந்நூலிலும் பல வசைக்குறிப்புகள் இடம் பெறுகின்றன. இதனை மறுத்துக்கூறுவாரும் உள்ளனர்
நந்திக் கலம்பகப் பாடல்களில் வீரமும் நகைச்சுவையும் கலந்து காணப்படுகிறது. பரத்தையர் வீட்டுக்குச் சென்று திரும்பிய தலைவன், பாணன் ஒருவனைத் தலைவியிடம் தூது அனுப்புகிறான் பாணரின் தூது உரை கேட்டுச் சினம் கொண்ட தலைவி அவனை இழித்துரைப்பதாக அமையும்
" ஈட்டுபுகழ் நந்தி பாண நீ எங்கையர் தம்
வீட்டிலிருந்து பாட விடிவளவும் -கேட்டிருந்தோம்
பேயென்றாள் அன்னை பிறர் நரியென்றார் தோழி
நாயென்றாள் நீ என்றேன் நான்".
என்னும் பாடல் வரிகளால் இதனை அறியலாம்.
தமிழுக்காகத் தன்னுயிர் நீத்த நந்தியின் பிரிவினைத் தாளாது கையறு நிலையாகப் பாடப்பட்டுள்ள பாடல் புலவரின் புலமைக்குச் சான்றாகத் திகழ்வதோடு நந்தியின் சிறப்பையும் புலப்படுத்துகிறது.
"வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயா பரனே!"
சரி விடயத்துக்கு வருகிறேன்
நந்திவர்மனின் தந்தைக்கு இரண்டு மனைவியர். ஒரு மனைவிக்குப் பிறந்தவன் நந்திவர்மன். மற்று ஒரு மனைவிக்குப் பிறந்தவர்கள் நால்வர். இந்த நால்வரும் நந்திவர்மனுக்குப் பின் பிறந்தவர்கள். நந்திவர்மன் இளமைப் பருவம் அடைந்ததும் அவன் தந்தை இறந்து விட்டார். எனவே, நந்திவர்மன், தன் தம்பியர் நால்வரையும் துரத்திவிட்டுத் தான் முடி சூடிக் கொண்டான். இந்தத் தம்பியர் நால்வருள் ஒருவரே நூல் ஆசிரியர் என்றும் கருதப்படுகிறது.
நந்திவர்மனால் துரத்தப்பட்ட தம்பியர் நால்வரும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடிவு செய்தனர். எனவே ஒருவன் மந்திர வித்தையைப் படித்தான். ஒருவன் தந்திர வித்தையைப் படித்தான். மற்று ஒருவன் வாள் வித்தையைப் படித்தான். இன்னும் ஒருவன் தமிழ் நூல்களைக் கற்று நூல் இயற்றும் திறமை பெற்றான்.
பின், இவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து நந்திவர்மனை எதிர்த்துப் போர் செய்தனர். ஆனால், போரில் தோல்வி அடைந்தனர். அதன் பிறகே இந்த நூல் பாடப்பட்டது என்று கருதப்படுகிறது.
நந்திக் கலம்பகம் என்ற இந்த நூலை இயற்றிய பின்பு ஆசிரியர் துறவு மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். வீடுகள் தோறும் சென்று பாடல்களைப் பாடிப் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். அவ்வாறு பாடும் போது தாம் இயற்றிய நந்திக் கலம்பகப் பாடல்கள் சிலவற்றையும் பாடுவார்.
ஒரு நாள் புலவர், நந்திவர்மனின் தலைநகர் ஆகிய காஞ்சிபுரத்துக்கு வந்தார். ஒரு கணிகையின் வீட்டின் முன் நின்று சில நந்திக்கலம்பகம் பாடல்களைப் பாடினார். இதைக்கேட்ட அந்தக் கணிகை மனம் மகிழ்ந்தாள். புலவர் பாடிய பாடல்களை எழுதி வைத்துக் கொண்டாள். அந்தக் கணிகை, தான் எழுதி வைத்துள்ள பாடல்களைத் தன் மாளிகையின் மேல் மாடத்தில் இருந்து இரவில் பாடிக் கொண்டிருந்தாள். ஊர்க் காவலர்கள் நகரைச் சுற்றி வந்து கொண்டிருந்தனர். கணிகை பாடும் பாடல்களைக் கேட்டனர். கணிகை பாடிய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த காவலர்கள்
பின்வரும் பாடலைக் கேட்டனர் அது அறம் பாடுதல் முறையில் அமைக்கப்பட்டது .
வான்உறு மதியை அடைந்ததுஉன் வதனம்
மறிகடல் புகுந்ததுஉன் கீர்த்தி
கான்உறு புலியை அடைந்ததுஉன் வீரம்
கற்பகம் அடைந்ததுஉன் கரங்கள்
தேன்உறு மலராள் அரிஇடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுஉன் தேகம்
நானும்என் கலியும் எவ்விடம் புகுவேம்
நந்தியே நம்தயா பரனே
நந்தி என்ற பெயர் உடைய மன்னனே! அருளில் மேம்பட்டவனே! நீ இப்போது இறந்து விட்டாய். எனவே உன் முகத்தின் ஒளி வானத்தில் உள்ள நிலவில் சேர்ந்துவிட்டது. உன் புகழ் கடலில் மூழ்கிவிட்டது. உன் வீரம் காட்டில் வாழும் புலியிடம் சேர்ந்து விட்டது. உன் கொடைத்திறம் கற்பக மரத்திடம் சேர்ந்து விட்டது. திருமகள் திருமாலிடம் சேர்ந்து விட்டாள். இவை எல்லாம் போய் விட்டன. எனவே, உன் உடல் நெருப்பிடம் சேர்ந்து விட்டது. ஆனால் நானும் என் வறுமையும் எங்கே போய் வாழ்வோம் என்ற பொருளில் இப்பாடல் அமைகின்றது.
(வான் உறு = வானத்தில் தோன்றும்;
மதி = சந்திரன்;
வதனம் = முகம்;
மறி = மோதுகின்ற;
கீர்த்தி = புகழ்;
கான் = காடு;
தேன் உறு மலராள் = திருமகள்;
அரி = திருமால்;
தழல் = நெருப்பு;
தேகம் = உடம்பு;
கலி = வறுமைத் துன்பம்;
தயாபரன் = அருள் நிறைந்தவன்)
மன்னன் இறந்துவிட்டதாகச் செய்தி உள்ளதை ஊர்க் காவலர்கள் அறிந்தனர். உடனே தம் தலைவனிடம் இதைக் கூறினர். தலைவன் அரசனிடம் அறிவித்தான். அரசன் அந்தக் கணிகையை அழைத்து வருமாறு கட்டளை இட்டான். கணிகையைக் காவலர்கள் அழைத்து வந்தனர். கணிகை நடந்ததைக் கூறினாள். அரசன் அந்தத் துறவி வந்தால் தன்னிடம் அழைத்து வரும்படி ஆணை இட்டான்.
ஒரு நாள் துறவி வந்தார். அவரைக் காவலர்கள் அரசனின் முன் கொண்டு வந்தனர்.
அரசன் துறவியைக் கண்டான். அவர் வரலாற்றைக் கேட்டான். தன் தம்பி என உணர்ந்தான். மகிழ்ச்சி அடைந்தான். கலம்பகப் பாடல்களைப் பாடுமாறு அரசன் வேண்டினான். துறவி முதலில் மறுத்தார். பின் ஒப்புக் கொண்டார்.
பச்சை ஓலையால் நூறு பந்தல்கள் போட வேண்டும். ஒவ்வொரு பந்தலிலும் மன்னன் அமர்ந்து ஒவ்வொரு பாடலாகக் கேட்க வேண்டும். ஒரு பாடல் முடிந்ததும் அந்தப் பந்தல் எரிந்துவிடும். கடைசிப் பாடலைக் கேட்கும் முன் பந்தலில் விறகுகளை அடுக்கி அதன் மேல் படுத்துக் கொண்டு கேட்க வேண்டும். கடைசிப் பாட்டு முடிந்ததும் உன் உடலிலும் விறகிலும் தீப்பற்றி எரியும். நீ இறப்பாய். இதற்குச் சம்மதமா என்று துறவி கேட்டார். மன்னவனும் சம்மதித்தான். துறவி கூறியவாறு பந்தல்கள் போடப்பட்டன. ஒவ்வொரு பாடலைக் கேட்கும் போதும் அந்தப் பந்தல் எரிந்தது.
இறுதியில் மன்னன் விறகை அடுக்கி அதன் மேல் படுத்தான். துறவி முற்கூறிய ''வான் உறு மதியை" என்று தொடங்கும் பாடலைப் படித்தார். மன்னன் உடலில் தீப்பற்றி எரிந்தது. மன்னன் இறந்தான். தமிழ் மொழி அல்லாத பிற மொழியைச் சேர்ந்த மன்னன் ஆகிய நந்திவர்மன் தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் காரணமாக உயிர் விட்டான் என்பதை
இந்த மரபு வழியாக வரும் செய்தி மூலம் அறியமுடிகிறது.
அதாவது தமிழுக்காக நல்ல இலக்கியம் கிடைக்கும் என்பதனால் தன உயிர் துறந்தவன் .
"நந்திக் கலம்பகம்" மற்ற கலம்பக நூற்களைப் போலல்லாமல் வரலாற்று நூலாகவே திகழ்கின்றது. உள்ளதை உள்ளவாறு கூறுவது வரலாறு. உள்ளதை உயர்த்திக் கூறுவது இலக்கியம்.
மூன்றாம் நந்திவர்மனது அரசியல் தொடர்பான செய்திகள் நந்திக் கலம்பகத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.இந்நூலில் நந்தி வர்மனின் தெள்ளாறு வெற்றியைப் பற்றி மட்டும் 16 பாடல்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.கொற்ற வாயில் முற்றம், வெறியலூர், வெள்ளாறு, தெள்ளாறு போன்ற பல்வேறு போர்க்களங்களைப் பற்றிக் கூறும் சிறந்த வரலாற்று நூலாக இது திகழ்கிறது.
நந்திவர்மன், கங்கர், சாளுக்கியர்மற்றும் வட நாட்டு மன்னர்களையும், சேர,சோழ, பாண்டியர் என்ற தென்னாட்டு மன்னர்களையும் போரில் வென்று பேரரசனாக விளங்கினான். இவன் , சிறந்த சிவ பக்தன். அன்னதானம், கோயில் கட்டல், திருப்பணி செய்தல், சைவ சமய நெறிகளை உணர்ந்து சிவ வழிபாட்டில் ஈடுபடல் ஆகிய வற்றில் சிறந்து விளங்கினான். இவனுடைய சிவத்தொண்டு காரணமாக , இவனை நாயன்மார் கூட்டத்தில் ஒருவனாக கழற்சிங்க நாயனாராகச் சமய குரவர்கள் ஏற்று வழிபட்டார்கள்.
தெள்ளாற்றுப் போரில் வெற்றி பெற்ற நந்திவர்ம பல்லவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்றதே நந்திக்கலம்பகம். இதுவே முதலில் தோன்றிய கலம்பக நூலாகும்.
நந்திவர்மனின் தந்தையாகிய தந்திவர்மனுக்குப் பட்டத்தரசிகள் நால்வர். நால்வர்க்கும் நான்கு ஆண் மக்கள். தந்திவர்மன் இறந்தபின்பு அவன் மகன்களில் ஒருவனாகிய நந்திவர்மன் , தனது பேராற்றலால் பல்லவப் பேரரசைத் தனக்கு உரியதாக்கிக் கொண்டான். அதனை ஏற்றுக் கொள்ளாத உடன் பிறப்புகள், நந்திவர்மனை எவ்வழிகளிலாவது கொன்றுவிட வேண்டும்! என்று , சூழ்ச்சி செய்தனர்; ஆனால் ஒன்றும் பலிக்க வில்லை. மற்றவர்கள் அவனைக் கொல்ல மறைமுகமாகச் சூழ்ச்சிகளைச் செய்ய, அவர்களில் இளையவனனான "காடவன்" என்பவன் மட்டும் தமிழை நன்குக் கற்று, பெரும் புலவனாகி, அறம் பாடியே நந்திவர்மனை அழிப்பேன்! என உறுதிக் கொண்டான். இவரும் பல்லவ அரச வம்சத்தவர் என்பதால், இவரை "காடவர்கோன்" என்பர்.
தமிழில் அறம் பாடி அழிப்பதா? என நமக்கு வேடிக்கையாகத் தோன்றலாம்; ஆனால் பழந்தமிழில் அம்முறை இருந்தது. அதாவது தமிழில் பாடி வாழ்த்தினால் சாகக்கிடப்பவனும் பிழைப்பதைப் போல, தமிழிலால் எதிர்மறை எண்ணங்களைக் கொண்ட சொற்களைப் பயன்படுத்தி ஒருவரது அழிவை வேண்டுவதையே "அறம் பாடுதல் என்பர்". ( முனிவர்கள் சாபமிடுவதைப் போலவே இது).
முற்காலத்தில் அத்தகைய வாக்குவன்மையைப் பெற்ற கவிகள் பலருண்டு
கம்பர் கூட, அவர் எதை, எவ்வாறு பாடுகிறாரோ, அவ்விதமே நடக்கும்! என்பர். பாம்புக் கடித்து சாகக்கிடந்த தில்லை தீட்சிதரின் மகனை, இவர், பாடல்பாடி, காப்பாற்றியதே. இதற்குச் சான்று. அவ்வாறே காடவர்கோன், நந்திவர்மனை அழிக்கப் பாடியதே நந்திக்கலம்பகம் என்பர். இந்நூலின் இறுதியில் நந்திவர்மன் இறந்துவிட்டான்! எனச் சோகமாகப் பாடி முடிவதைப்போல இந்நூலை அமைத்தார் காடவர்கோன். ஆனால் தமிழின் சிறப்பு, இந்நூலை இயற்றிய பின்னர், அவரது பழியுணர்ச்சி நீங்கி, அவர் சமணத்துறவியாகவே ஆகிவிட்டாராம்.
ஆனாலும் தமிழின் மீது தீராக்காதல் கொண்ட நந்திவர்மன், தான் அழிந்தாலும், இந்நூலை அரங்கேற்றியே தீரவேண்டும்! எனப் பிடிவாதமாக இருந்து இதை அரங்கேற்றினான்! என்பர். நூலின் இறுதிப் பகுதியைப் பாடும்போது நந்திவர்மனின் மீது தானாகவே தீப்பிடித்து இறந்தான் என்பர்.
இவ்வாறான சூழ்ச்சியின் விளைவால் தோன்றியதே நந்திக்_கலம்பகம்.
நந்திவர்மனைக் கொல்லுவதற்காக இரண்டு பொருள் தோன்றுமாறு வசைக் குறிப்புகளைக் கொண்ட பாடல்களுடன் ' நந்திக் கலம்பகம்' இயற்றினார் காடவர்கோன். வசைப்பாட்டைப் பாடி நந்திக்கலம்பகத்தை இயற்றும் வரை வஞ்சகனாக இருந்தவர், பாட்டைப்பாடி முடித்ததும் தன்னெஞ்சில் தொன்றிய வஞ்சத்தை ஒழித்துவிட்டானர்! தனக்கு ஏற்பட்ட அரசு மோகத்தையும் துறந்தானர்! யாசித்து உண்டு, துறவியாக வாழ்ந்தார்.
இதையறிந்த நந்திவரர்மனே பிடிவாதமாக அப்பாடல்களைப் பாடும்படி கேட்க; பாடலைக் கேட்க வேண்டுமென்றால் , நான் சொல்வது போல் இருந்து கேட்க வேண்டும்! என்றாராம் காடவர்கோன். மன்னன் உடன் பட, செய்தியை அறிந்த புலவர்கள் மன்னனைத் தடுத்தனர்; தீங்கு நேரிடும்! வேண்டாம் என்றனர். ஆனால் நந்தி வர்மன் கேட்கவில்லை.
பின்னர் , துறவியின் விருப்பப்படி, பச்சை ஓலைகளால் நூறு பந்தல் அமைத்தனர். ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு பந்தலில் அமைக்கப் பட்டிருந்த மன்னர் இருக்கையில் மன்னர் கோலத்தில் வீற்றிருந்து பாடலைக் கேட்டான். துறவி பாடலைப் பாடி முடித்ததும் அப்பந்தல் தீப்பற்றிக் கொள்ளும். உடனே மன்னன் அடுத்த பந்தலுக்குத் தாவுவான். அவ்வாறு தொண்ணூற்று ஒன்பது பாடலைக் கேட்டான்.
நூறாவது பந்தலில் , ஈம விறகுகள் அடுக்கப்பட்ட மேடையில் பிணம் போலப் படுத்துக்கொண்டானாம் நந்திவர்மன். துறவி, 'வானுறு மதியம்' என்ற பாடலை கதறியவாறே பாடினார்; நந்திவர்மன் தீப்பிடித்து இறந்தான்.
ஆனால் நூறாவது பாடலைப் பாடி முடித்ததும், வேறு ஒரு பாடலைப் பாடித் தானும் அந்த ஈமத்தீயில் விழுந்து உயிர் நீத்தான்! காடவர்கோன் என்பர்.
நந்திவர்மன் இறந்தாலும் அவன் கேட்டுப்பெற்ற தமிழ், நிலைத்து நிற்கிறது.
தமிழுக்காகத் தன்னுயிர் நீத்த நந்தியின் பிரிவினைத் தாளாது கையறு நிலையாகப் பாடப்பட்டுள்ள இப்பாடல் புலவரின், புலமைக்குச் சான்றாகத் திகழ்வதோடு, நந்திவர்மனின் சிறப்பையும் நன்குப் புலப்படுத்துகிறது.
தமிழின் வல்லமை என்னவென்பதை, அறம்பாடி அழிப்பதென்பதுக் காட்டுகிறது. இதுசரியா? என நாம் எண்ணினால், வேறுவழியின்றி, தனது உரிமைகள் பறிபோகும்போது, ஒருவரின் ஆழ்மன சாபமே இதற்குக் காரணமாக அமைகிறது! என்பது தெரியவரும்.
வலுக்கட்டாயமாக ஒருவரின் மீதோ, ஒரு சமூகத்தின் மீதோ அறமற்ற நீதிகளை வலியோர், திணிக்கும்போது நிர்கதியற்ற, நீதிகிடைக்காத எளியோர் அறம்பாடவே செய்வர். அதை என்றைக்கும் உயரிய இடங்களில் இருப்போர் உணரவேண்டும்! என்பதையே நந்திக்கலம்பகம் நமக்கு உணர்த்துகிறது

கருத்துகள்
கருத்துரையிடுக