கோ கர்ணம்,கஜ கர்ணம்,

அஜ கர்ணம் எனப்படும்
மூன்று வகை மனிதர்கள்
கோ கர்ணம், கஜ கர்ணம்,
அஜ கர்ணம் பற்றிய விளக்கங்களை
தேடி பார்த்ததில்
விளக்கம் கிடைத்தது தருகிறேன் .
அதைக் கீழே பதிவிட்டுள்ளேன்.
கோ கர்ணம் மனிதர்கள்.
கோ என்றல் பசு என்று பொருள்.
ஒரு பசு மாட்டின் உடலில்
ஏதாவது ஒரு இடத்தைத் தொட்டுப் பாருங்கள்,
உடனே உங்கள்
விரல் பட்ட இடத்தில்
சிலிர்த்துக் கொள்ளும்.
அதே போல் அறிவாளிகளிடம் ஏதேனும் தவறு இருந்தால்
அதை யாரேனும் சுட்டிக் காட்டினால் கூறியவர்
யார் என்றோ,
சொல்லப்பட்ட விஷயம் என்னவென்றோ ஆராய மாட்டார்கள்.
அது உண்மை தானா என்று தங்களிடம் தேடுவார்கள்.
அது உண்மை
என்றால் அதைப் புரிந்து கொண்டு அதனைத திருத்திக் கொள்வதுடன் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்வார்கள்.
இவர்களையே"கோ கர்ணம்"போடுபவர்கள் என று சொல்கின்றனர்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அடுத்து கஜ கர்ணம் மனிதர்கள்!
கஜம் என்றால் யானை. யானையானது நிற்கும் போது தன்னுடைய நான்கு கால்களையும் சரியான முறையில் ஊன்றி நிற்காது.
இது யானையிடம் உள்ள ஒரு குறை.
இதைப் போலவே சில மனிதர்களும் இருக்கின்றார்கள்.
எடுத்துக் கொண்ட ஒரு விஷயத்தில் அவர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்ல மாட்டார்கள்.
பற் பல விஷயங்களில் தங்கள் கவனத்தை திருப்புவார்கள்.
தேவையில்லாத விஷயங்களில் தங்கள்
மூக்கை நுழைப்பார்கள்.
இவர்களை கஜ கர்ணம் போடுபவர்கள் என கூறுவார்கள்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அடுத்து
அஜ கர்ணம் மனிதர்கள்!
கோ கர்ணம், கஜ கர்ணம்
போல
அஜ கர்ணம் _*என்ற
ஒன்று உண்டு.
அஜ என்றால் ஆடு.
இந்த ஆட்டுக்கு ஒரு சுபாவம் உண்டு.
நன்றாக இருக்கும் ஒரு ஆட்டின் வாலைப் பிடித்து யாராவது இழுத்து விட்டால் போதும்,
உடனே அது தன் தலையை தொங்கப் போட்டுக்கொள்ளும்.
இது போன்ற மனிதர்களும்
நம்மிடையே இருக்கிறார்கள்.
நம்மில் யாராவது அம்மாதிரியான நபர்களிடம் சென்று குற்றம் குறைகளைச் சுட்டிக் காட்டினால் போதும்.
அவர்கள் நம்மை வெறுத்து தள்ளி விடுவார்கள்.
ஏன், திரும்பிக் கூட
பார்க்க மாட்டார்கள்
இப்பேர் பட்டவர்களைத்தான்
அஜ கர்ணம் போடுபவர்கள்
என கூறுகிறோம்.

கருத்துகள்