கொடிமரம் இறைவனைக் குறிக்கும்

கொடிச்சீலை உங்களின் மனத்தைக் குறிக்கும் அதாவது ஆன்மா .
இறைவனையும் ஆன்மாவையும் கண்டவர் இல்லை
கண்டவர்கள் சொல்வதில்லை .
அதாவது கண்டவர்கள் சொல்வது →தில்லை
அதாவது கண்டவர்கள் தில்லையில் நடமிடும் சிவனே என்பார்கள்
⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭
சுருக்கமாக சொல்கிறேன்
கொடித்தம்பத்தை முது கெலும்பு ஆகக் கருதுங்கள் இதில் இருந்து கோபுரம் வரை வசந்த மகா மண்டபங்கள் உடல் கூறுகளாகக் வகுக்கப்படுகிறது .
வசந்த மண்டபமூலையில் காண்டாமணி அமைக்கப்படுகிறது.
இது கோபுரத்தை அண்மித்து அமைக்கப்படும் .இதில் இருந்து எழும் ஒலி ஓம்கார ஒளியாக ஒலியாக ஆலயத்துக்குள்ளிருக்கும் ஆன்மாவிலுள்ள துர் தேவதைகளை விரட்டி விடுகிறது .கோவிலுக்குள் சென்று ஒரு சில நிமிடங்கள் நின்று பாருங்கள் ,
வெளியில் வரும் பொழுது ஒரு புத்துணர்ச்சியுடன் வெளிவருவீர்கள் .
மணியோசை ஒலிக்கும் பொழுது ஆவாகனம் ,ஸ்தாபனம் ,சந்நிதானம் சந்திரோதனம்,திக் பந்தனம் .
காம தேனுமுத்திரை ,பத்மம் திரிசூலம் போன்றவைகளை பூசாரி செய்யும் பொழுது நீங்களும் அதைப் பார்த்து செய்யுங்கள் அப்பொழுது மணி ஓசை யும் ,மூலஸ்தான யந்திர சக்தியும் ,மணிக்கோபுர காண்டா மணியின் ஒலி யும் அந்த அதிர்வுகளும் உங்களின் சகல் பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்பட்டு வருவதை உணர்வீர்கள்
மேலும் ராஜகோபுர அமைப்பு பிரம்ம பாகம் விஷ்ணுபாகம் ருத்திரபாகம் என்று மூன்று பிரிவுகள் அடிப்படையிலேயே இலங்கைக் கோவில்கள் அமைக்கப்படுகின்றன .விளக்கமாக பின்னர் பார்ப்போம்
ஆனால் இந்தக் கோபுரத்துக்குப் பக்கத்தில் அல்லது மூலவருக்குப் பக்கத்தில் அமையப் பெற்ற மணிக் கோபுரம் மூலவரின் சக்தியை பலப்படுத்துவதோடு கீர்த்தியையும் கொடுக்க ஆரம்பிக்கும்
இது பல பிராம்மண மகரிசிகளுக்குத் தெரியும்
ஆனால் சொல்வதில் லை
இதற்குப் பிராயச் சித்தமாக
மணி மண்டபம் பற்றி எழுதவேண்டும் .
அதற்க்கு முன்பாக எல்லோரும் நீங்கள் கற்றவர்கள் என்பதால் ,
மாளிகைமுன் னத்தாணி மண்டபத்தின் மணிபுனைபொற்
கோளரியா சனத்திருந்து குடபுலமன் னவர்கொணர்ந்த
ஓளிநெடுங் களிற்றினணி யுலப்பில்பரி துலைக்கனகம்
நீளிடைவில் லிலகுமணி முதனிறையுந் திறைகண்டார்.
என்ற பாடல் புரியும் என்று நினைக்கின்றேன்
புரியாவிட்டாலும் பரவாயில்லை இது பற்றி இனிமேல் வரும் பதிவுகளில் ஆராய்வோம்
வெங்கலப்பாத்திரங்கள் பழங்கால பொருட்கள் ( Antique ) என வீட்டில் பரணுக்கு போய்விட்டன. சிறிய வெண்கல சாமான்கள் சிலர் வீட்டு ஷோகேசை அலங்கரிக்கின்றன!
1950 களின் இறுதிவரை கிராமங்களில் எல்லா வீடுகளிலும் வெண்கல பாத்திரங்களே புழக்கத்தில் இருந்தன. அதன் பின்னர்தான் அலுமினியம் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் உபயோகத்திற்கு வந்தன.
வெண்கலத்தால் செய்யப்பட்ட வட்டில், டம்ளர், செம்பு, பானை மற்றும் பல பாத்திரங்கள் நமது வீடுகளில் முன்னர் பயன்படுத்தப்பட்டன.
நீண்ட காலம் பயன்படுத்தப்படாத வெங்கல பாத்திரங்கள் காற்றுடன் வினைபுரிந்து மேற்புறம் லேசாக பசுமை நிறமாக மாறும். இதனை களிம்பேறுதல் என்பார்கள்.ஆனால் பித்தளை உலோகப் பாத்திரங்கள் போன்று வெண்கலம் அதிகமாக களிம்பேறுவதில்லை!
இதனை உரியவாறு சுத்தம் செய்து நீக்காமல் களிம்பேறிய பாத்திரங்களில் சமைக்கவும் ,சாப்பிடவும் பயன்படுத்தினால் அந்த உணவு விஷமாகும்.
நன்கு சுத்தம் செய்யப்பட்ட வெண்கல வட்டிலில் இப்போதும் கூட நாம் சாப்பிடலாம்.மற்ற பாத்திரங்களையும் பயன்படுத்தலாம்.நம் முன்னோர்கள் இதனைத்தானே பயன்பாடுத்தி வந்தனர்!.
முன்னர் வெண்கல பாத்திரங்களை புளி, சாம்பல், தேங்காய் சடம்பு ( தேங்காய் உச்சியில் உள்ள குடுமி) ஆகியன வைத்து தினசரி நன்கு விளக்கி வைத்து உலர்ந்துவதுண்டு.எவர்சில்வர் பாத்திரங்கள் வருகையால் இப்போது பெரும்பாலான வெண்கல பாத்திரங்கள் வழக்கொழிந்து போயின.
இன்னமும் வெங்கலத்திலான பொங்கல் பானைகள், விளக்குகள் ஆகிய எல்லோர் வீடுகளிலும் புழங்குகின்றன.வெண்கல பானையில் பொங்கல் வைக்கும் போது பொங்கல் அவ்வளவாக அடிப் பிடிக்காது !
இளம்பிராயத்து விளையாட்டுகள் ஆன கோட்டிப்புல், ஆபியம், சோளக்குச்சி வண்டி, பனைவண்டி, கோலிக்குண்டு, பம்பரம் என, மாறி மாறி வரும் நினைவுகளும் இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்
கோவில் மணியின் ஓசை மனிதனின் மூளை செயல்திறனை மேலோங்க செய்கிறது என்று அறிவியலில் ஒரு பின்னணியும் இருக்கிறது. கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றது.
கோவில் மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்து, விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் நிம்மதியை அளிக்கிறது.
பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டிலுள்ள துர் தேவதைகள் போன்றவை வெளியே ஓடிவிடும். துர்தேவதை, பேய், பிசாசு போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; எனவே, ஓடி விடும்.
தினமும் பூஜையின்போது பேய், பிசாசு, மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர். ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் வந்து விடும். மறுநாள், மறுபடியும் மணியடித்து விரட்ட வேண்டும். அவை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால், அவை இருக்குமிடத்தில் தேவதைகள் வரமாட்டார்கள்! அதனால், மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம்.
கிராமங்களில் கூட இந்த துர்தேவதைகள் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆலயங்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, இந்த சப்தம் கேட்டதும் அந்த துர்தேவதைகள் ஓடி விடும்.
மற்ற மாதங்களை விட மார்கழி மாதத்துக்கு சிறப்பு அதிகம். அந்த மாதம் முழுவதும் பகவானுக்கு உகந்த நாட்கள். அதனால், மார்கழி மாதத்தில் எல்லாரும் விடியற்காலையில் எழுந்து நீராடி, நெற்றிக்கிட்டு, தெய்வ பூஜையில் ஈடுபடுவர்; ஆலயங்களுக்குச் செல்வர். இம்மாதத்தில் தெய்வ வழிபாடு மும்முரமாக இருக்கும். கிராமங்கள் என்றில்லாமல் நகரங்களிலும் இப்படி நடக்கிறது.
கிராமங்களில் மார்கழி மாதம் முழுவதும் பிரதி தினம் விடியற்காலையில் ஒவ்வொரு தெருவாக சங்கு ஊதிக் கொண்டும், மணியடித்துக் கொண்டும் வருவர். அதற்கென்று மணியடிப்பவர், சங்கு ஊதுகிறவர் உண்டு. அவர்கள் அதை தினமும் செய்வர். இதனால், கிராமத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் துர்தேவதைகள் ஓடிவிடும். இதனால் கிராம மக்கள் நோய் நொடி இல்லாமல் சுபிட்சமாக இருப்பார்கள்.
மணி ஓசை நமது உளவியலுடன் ஆழமானத் தொடர்புடையது. மணி என்பது ஒரே ஒரு உலோகத்தால் ஆனது அல்ல. அதன் உருவாக்கத்தில் பல உலோகங்கள் உபயோகிக்கப்படுகின்றன. அவை கேட்மியம், ஈயம், துத்தநாகம், தாமிரம், நிக்கல், குருமம் மாற்றும் மங்கனம். இந்த உலோகங்கள் மிகவும் தனித்துவமானவை. ஒவ்வொரு உலோகமும் தனக்கே உரிய குணாதிசியங்களைப் பெற்றுள்ளது. இத்தனை சக்திகளும் ஒன்று சேர கிடைக்கும் ஓசைதான் அந்த மணியின் ஓசை. மணிக்கே உரிய ஓசையின் காரணியாக திகழ்வது இந்த உலோகங்களே. இந்த மணியின் ஓசை நமது உடலுக்குள் ஊடுருவி மனதை அமைதி அடைய செய்கிறது.
வலது கையை உபயோகிக்கும் மனிதர்களுக்கு இடது மூளையின் செயல்பாடு அதிகம் இருக்கும். அதுபோலவே, இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது மூளை. இரு கைகளையும் உபயோகிக்கும்போது, நமது மூளை முழுமையாக பணிபுரியும். அதெல்லாம் சரி... இந்த மணியின் ஓசைக்கும் நமது மூளை செயல்பாட்டுக்கும் என்னத் தொடர்பு? மணியின் ஓசை ஒரு வகையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அது நமது மனதுள் ஊடுருவி, மூளையில் உள்ள வலது மற்றும் இடது பாகங்களை முழுமையாக தூண்டுகிறது. இதனால் நமது மூளை மிகவும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலை அடைகிறது. இதுவே, பிரார்த்தனையினால் நல்லவையே நடக்கும் என்ற ஒரு விதமான மனவுறுதியை ஏற்படுத்துகிறது.
மணியின் ஓசை சுமார் ஏழு வினாடிகளுக்கு நமது மூளைக்குள் நின்று எதிரொலிகளை ஏற்படுத்துகிறது. இந்த ஏழு வினாடிகளில் நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தூண்டுகிறது. இந்த மணியின் ஓசை நமது மனதில் உள்ள அனைத்து வகையான எண்ணங்களையும் மறக்கச்செய்து, நமது மனதை வெற்றிடமாக மாற்றுகிறது. இந்த நிலையில், நமது மனது மிகவும் அதிகமாக கிரகிக்கும் தன்மையை பெறுகிறது. மனதினுள் புதைந்துக் கிடக்கும் பல விஷயங்களை முற்றிலுமாக வெளியேற்றி, உண்மை நிலைக்கு நம்மை தயார்ப்படுத்தும். அப்போதுதான் தூய்மையான எண்ணங்கள் மனதில் ஈடேறும்.
கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கும். அதற்கு கோவில் மணிகளில் உள்ள கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள் தான் காரணமாகும்.
வெண்கலம் என்பது ஒரு செப்பு க் கலவை (உலோகக் கலவை). செப்புடன் சேர்ந்த பொருள் பெரும்பாலும் வெள்ளீயம் ஆகும், ஆனால் சில நேரங்களில் பாஸ்பரஸ், மாங்கனீசு, அலுமினியம், சிலிக்கான் போன்ற தனிமங்களும் கலந்திருப்பதுண்டு.
மிகவும் கெட்டியான பொருள். இதனால் இது பழங்காலத்தில் இருந்து பல பணிகளுக்குப் பயன்படுகின்றது. வெண்கலம், இரும்பைவிடவும் செப்பை விடவும், பல கல் கருவிகளைவிடவும் கெட்டியானது.
இதனால் வெண்கலத்தைப் பல ஆயுதங்களிலும் போர்க்கவசம் போன்றவற்றிலும் பயன்படுத்தினர். பழங்காலத்தில் இதன் பயன்பாட்டை விரும்பி பெருக்கியதால், மாந்தர்களின் நாகரீக வளர்ச்சி நிலைகளை கற்காலம், இரும்புக் காலம் என்று அழைப்பது போல வெண்கலக் காலம் என்றும் அழைப்பதுண்டு.
செப்பு என்பதற்கு பாரசீகச் சொல்லாகிய `பிரிஞ்ச் ("birinj,") என்பதில் இருந்து ஆங்கிலச் சொல்லாகிய `பிறான்ஸ் (Bronze) என்னும் சொல் உருவாகியது.
வெண்கலம் கண்டு பிடிப்பதற்கு முன்னர் பயன்பட்ட செப்பு, கல் முதலாலவற்றைவிட உறுதிமிக்கது. முன் காலத்தில் செய்த வென்கலத்தில் சில நேரங்களில் சிறிதளவு ஆர்சனிக் கலந்திருந்தது, இதனால் அவை உறுதி மிக்கதாக இருந்தது. இது ஆர்சனிக் வெண்கலம் எனப்பட்டது.வெண்கல காலத்தில் இரண்டு விதமான வெண்கலங்கள் பயன்படுத்தப்பட்டன.அவைகளில் ஒன்று, 'கிளாசிக் வெண்கலம்' (classic bronze) என்றழைக்கப்பட்டது.இது 10 சதவீத தகரத்தை(tin) வெண்கலத்துடன் கலந்து வார்க்கப்பட்டது.மற்றொறு வெண்கலம் 'மென்மையான வெண்கலம்' (mild bronze) என்று அழைக்கப்பட்டது. இதில், 6 சதவீத தகரம் சேர்க்கப்பட்டு கடினமான உலோக கட்டிகளை தகடுகளாக மாற்ற பயன்படுத்தப்பட்டது.
வெண்கலத்தின் தோற்றம் கி.பி 1700 க்கு முந்தையது, இது வரலாற்றுக்கு முந்தைய காலமாகும், இது ஆயுதங்கள் மற்றும் பாத்திரங்களை நிர்மாணிப்பதற்காக இந்த புதிய பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது, இது தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஒரு பெரிய படியையும், கற்காலத்தின் முடிவையும் குறிக்கிறது.
பூஜா மணியின்
அதிதேவதை வாசுதேவர் !
மணியின் நாக்குக்கு
அதிதேவதை சரஸ்வதி !
அடித்தல் அல்லது ஒலித்தலுக்கு அதிதேவதை சூரியன்.!
நாதத்துக்கு அதிதேவதை ஈஸ்வரன் !
எனவே ,
மணிக்கும் பூஜை செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
காண்டா மணி
பூஜைக்கான மந்திரம்:
"ஆகமார்த்தம் துதேவாநாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
காண்டாரவம் கரோம்யத்ய
தேவதாஹ் வானலாஞ்ச நம:"
உள்ளத்தில் தூய்மையான
உணர்வு எழுவதற்கும்,
தீய உணர்வுகள் வெளியேறவும் மணியை ஒலிக்கிறேன் என்பதே அப்போது சொல்லும்
ஸ்லோகத்தின் பொருள்.
மணி தொடர்ந்து ஒலிக்கும் இடத்தில் தீயசக்திகள் நீங்குவதோடு,
அந்த இடம் முழுவதும் நல்ல சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
தொடரும் .......
⧬⧬⧬⧬⧬⧬⧬⧬⧬⧬⧬⧬⧬⧬⧬⧬⧬⧬⧬⧬⧬⧬

கருத்துகள்