கர்ணபரம் பரைக் கதைகள்
%%%%%%%%%%%%%%%%
ஓர் நாள் கர்ணன் தனது அரண்மனையில் இருக்கும் போது, ஓர் இரவலன் கர்ணனிடம், "ஐயா, நாட்டில் விடாது மழைப் பெய்து வருவதால் காய்ந்த விறகுகள் கிடைக்கவில்லை. அரிசி இருந்தும் விறகு இல்லாததால் சமைக்க இயலாது பட்டினியாக இருக்கிறோம். நீங்கள் தான் தர்மம் செய்ய வேண்டும்" என்றுக் கேட்டுக் கொண்டார்.
உடன் இருந்த அனைவரும் அரண்மனையில் காய்ந்த விறகிற்கான அவசியமே இல்லை. மற்றும் நமது அரண்மனையில் இதற்கு எங்கே போவது என்று கூறினார்கள்.
கண்டிப்பாக இந்த இரவலனுக்கு கர்ணனால் தர்மம் செய்ய இயலாது, இல்லை என்று கூறி தான் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறி வந்தனர்.
ஆனால், கர்ணன் அனைவரின் எண்ணத்தையும் பொய்ப்பித்து, அரண்மனையின் தாழ்வாரத்தில் போட்டிருந்த கை மரங்களில் சிலவற்றைப் பிரித்தெடுத்தான். நன்கு காய்ந்திருந்த அவற்றை அந்த இரவலனுக்குக் கொடுத்து அனுப்பினான்.
சுற்றி இருந்தவர்கள் அனைவரும், வள்ளல் தன்மைக்கு ஒருவன் என்று உலகம் கர்ணனைப் பாராட்டுவது சரிதான் என்று கூறி புகழ்ந்தனர்.
ஒரு நாள் கர்ணன் எண்ணெய் நீராட்டுக்காகத் தங்கக் கிண்ணத்தில் எண்ணெய் எடுத்துத் தன் உடலில் தடவிக் கொண்டிருந்தான். அப்போது ஓர் இரவலன் வந்தான்.
அந்த இரவலன் கர்ணனிடம் பிக்க்ஷாம்தேகி என்றி (பிச்சையிடுக) இரவல் வேண்டி வந்து நின்றான். உடனே தனது இடக்கை பக்கமாக இருந்த தங்க கிண்ணத்தை தனது இடக் கையாலையே எடுத்து, இரவலனுக்கு அளித்துவிட்டான் கர்ணன். இரவலனும் மகிழ்வுடன் சென்றான்.
அப்போது அருகிலிருந்த நண்பர், கர்ணா, இடக் கையால் தானம் தரலாகாது என்று அறநூல் கூறுகின்றதே. தாங்கள் செய்தது அறநூலுக்கு எதிரானது அல்லவா? வலக் கையால் தானே தர்மம் செய்தல் வேண்டும் என்று கூறினார்.
நண்பரே, அந்த அறநூலை நான் நன்கு படித்தவன். ஆனால், மனித மனம் நிலையானது அல்ல. நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும். இடக்கை அருகே இருக்கும் தங்க கிண்ணத்தை வலக் கையால் எடுக்க சில நொடிகள் ஆகும். அதனால் தான் இடக் கையில் கொடுத்தேன் என்றான்.
மற்றும் அந்த சில நொடிகளில் மனம் மாறிட வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வளவு உயர்ந்த தங்க கிண்ணத்தை தானம் தர மனம் மறுக்கலாம். அதனால் தான் இடக் கையில் உடனே தானம் செய்தேன் என்று இடக் கையில் தானம் செய்ததற்கு காரணம் கூறினான் கர்ணன்.
இதைக் கேட்ட கர்ணனின் நண்பர்," கர்ணா, உனது தானம், கொடை பண்பு அந்த அறநூல்களையும் விஞ்சிவிட்டது. உன்னை விட ஒருவன் தானத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்க முடியாது என்று வாழ்த்திக் கூறினார்.
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!"
எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட நான் அவதரிப்பேன் ...
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கர்ணன் அவரது தாய் குந்திதேவிக்கு அவரது தந்தை சூரியக் கடவுள் சூரியன் மூலமாகப் பிறந்தார். இளவரசர் பாண்டுவை அவரது தாய் திருமணம் செய்வதற்கு முன்னரே கர்ணன் பிறந்தார். குந்தி இளமையாக இருந்தபோது, துர்வாச முனிவர் அவரது தந்தையிடம் வந்ததால் . குந்திதேவி முனிவருக்கு மிகுந்த கனிவோடு ஒரு ஆண்டு முழுவதும் பணிவிடை செய்தார். அவரது சேவை மற்றும் விருந்தோம்பலில் மகிழ்ந்த முனிவர் அவரது எதிர்காலத் திருமணத்திற்குப் பின்னர் பாண்டு மூலம் குழந்தையின்மையால் ஏற்படும் சிக்கல் பற்றி கணித்து, அந்த துன்பத்தை தீர்க்க வரம் ஒன்றை முன்கூட்டியே அளித்தார். இந்த வரத்தினால் அவர் தனது விருப்பப்படி எந்த கடவுளையும் அழைத்து குழந்தை பெற முடியும். குந்தி மணமாகாமல் இருந்த போது, அவர் அந்த வரத்தின் சக்தியைச் சோதிக்க முடிவுசெய்தார். அவர் மந்திரத்தை உச்சரித்து சூரிய பகவானை அழைத்தார். மந்திரத்தின் சக்தியால் கட்டுப்பட்டு, சூரியன் குந்தியின் முன்னாள் தோன்றி அவருக்கு மகனை அளித்தார். இந்தக் குழந்தை சூரியனைப் போன்றே பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது. இந்த குழந்தையானது பிறக்கும்போதே போர்க்கவசம் ('கவசம்') மற்றும் காதுவளையங்களைக் ('குண்டங்கள்') உடலுடன் கொண்டு பிறந்தது. இருப்பினும் குந்தி தனது கன்னித்தன்மையை இழக்கவில்லை. அவர் மணமாகாத தாயாக உலகத்தை எதிர்கொள்ள விருப்பமின்றி, அவரது தோழியான தத்ரியின் துணையுடன், அவர் அந்தக் குழந்தை கர்ணனை கூடையில் வைத்து, புனித நதியான கங்கையில் அக்குழந்தையை வேறொரு குடும்பத்தினர் எடுத்து வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் விட்டார்.
குழந்தை கர்ணனை அதிரதன் என்பவரால் கண்டெடுக்கப்பட்டார்- இவர் பிதாமகர் பீஷ்மரின் தேரோட்டி ஆவார். அதிரதனும் அவரது மனைவி ராதாவும் கர்ணனை தங்களின் சொந்த மகனாகவே வளர்த்தனர். மேலும் அவருக்கு வாசுசேனா என்று பெயரிட்டு அழைத்தனர். கர்ணனை ராதேயன் என்றும் அழைத்தனர் - ராதாவின் மகன் (அவரது வளர்ப்புத் தாய்), அவ்வேளையில் அவரது உண்மையான பெயர் கர்ணன் என்பது 'காது' என்ற பொருள்படும், ஏனெனில் புராணத்தின் படி, குழந்தை கர்ணன் அவரது தாய் குந்தியின் காது வழியாக வந்தவர். கர்ணன் மற்றும் அவரது வளர்ப்பு பெற்றோர்கள் இடையேயான உறவானது தூய அன்பு, மரியாதை மற்றும் பாசம் ஆகியவற்றால் நிறைந்தது. கர்ணன் அவர்களின் மகனாக தனது கடமைகளை விருப்பத்துடன் செய்துவந்தார்
ஒரு நாள் துரோணர் ஒரு கடும் சோதனை வைக்க அதில் அர்ஜுனன் மட்டுமே தேர்ச்சி பெற்றான். அவர் மகன் அஸ்வத்தாமன் உட்பட அனைவரும் தோல்வி உற்றனர். அதனால் அவனுக்கு பிரமசிரா என்னும் அஸ்திரத்தை ஞானத்தை வழங்கினார். ஒரு நாள் துரோணர் ஒரு கடும் சோதனை வைக்க அதில் அர்ஜுனன் மட்டுமே தேர்ச்சி பெற்றான். அவர் மகன் அஸ்வத்தாமன் உட்பட அனைவரும் தோல்வி உற்றனர். அதனால் அவனுக்கு பிரமசிரா என்னும் அஸ்திரத்தை ஞானத்தை வழங்கினார். பிரமசிரா இந்த பிரபஞ்சத்தை அழிக்க வல்லது. அதை எதிர்பார்த்து, மற்றவரை அழிக்கும் எண்ணம் உள்ளவரிடம், கொடுப்பது பெரும் ஆபத்து ஆகும். அர்ஜுனன் அதை தவறாக பயன் படுத்த மாட்டான் என்ற முழு நம்பிக்கை கொண்ட பின்னரே அவனுக்கு அதை கற்பித்தார்.
கர்ணன் பிரமசிராஅஸ்திரம் வித்தை யை பயில விழைந்தான். அர்ஜுனனுக்கு தெரியும் ஆதலால் தனக்கும் தெரிய வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. அவன் அர்ஜுனன் மேல் உள்ள பொறாமையால் அதை தவறாக பயன் படுத்தினால் என்ன ஆகும் என்று பயந்தார். மேலும் துரோணர் வைத்த தேர்விலும் அவன் வெல்லவில்லை. எனவே துரோணருக்கு அவனுக்கு அதை மட்டும் சொல்லித்தர மனம் அனுமதிக்க வில்லை.இந்த பிரபஞ்சத்தை அழிக்க வல்லது. அதை எதிர்பார்த்து, மற்றவரை அழிக்கும் எண்ணம் உள்ளவரிடம், கொடுப்பது பெரும் ஆபத்து ஆகும். அர்ஜுனன் அதை தவறாக பயன் படுத்த மாட்டான் என்ற முழு நம்பிக்கை கொண்ட பின்னரே அவனுக்கு அதை கற்பித்தார்.
கர்ணன்பிரமசிரா அஸ்திரம் வித்தை யை பயில விழைந்தான். அர்ஜுனனுக்கு தெரியும் ஆதலால் தனக்கும் தெரிய வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. அவன் அர்ஜுனன் மேல் உள்ள பொறாமையால் அதை தவறாக பயன் படுத்தினால் என்ன ஆகும் என்று பயந்தார். மேலும் துரோணர் வைத்த தேர்விலும் அவன் வெல்லவில்லை. எனவே துரோணருக்கு அவனுக்கு அதை மட்டும் சொல்லித்தர மனம் அனுமதிக்க வில்லை.
இதனால் அவன் பரசுராமரிடம் சென்றான்
இவன் அந்தணன் என நினைத்து பரசுராமர் ஏற்றுக் கொண்டார்
ஏழு வருடங்கள் எல்லா வித்யையும் கற்றான் (ப்ரஹ்மஷிரா அஸ்திரம் உட்பட). ஆனால் அவன் விதி ஒரு நாள் மாட்டிக்கொண்டான். அதனால் கோபமும் ஏமாற்றமும் உற்ற பரசுராமர், குருவை ஏமாற்றி பெறப்பட்ட வித்யை, சுயநலத்துக்காக பெற பட்ட வித்யை, தேவையான நேரத்தில் பலனளிக்காது என்பது என அவனுக்கு . அவர் அளித்தது சாபம் அன்று அதுவே உலக நியதி ஆகும்.
7 வருடங்கள் தன்னோடு இருந்தும் தன்னிடம் உண்மையை அவன் உரைக்கவில்லையே என்ற மனவேதனை அவருக்கு ஏற்பட்டது.
இருப்பினும் கர்ணன் மீது கொண்ட பரிவால் அவன் எப்போதும் கீர்த்தியோடு இருப்பான் என வரமும் அளித்தார். இங்கே இன்னொரு சிறப்பு என்னவென்றால் பரசுராமர், கர்ணனுக்கு தேவேந்திரனுடைய விஜய தனுசையும் வரமளித்தார். அர்ஜுனன் வைத்திருந்த காண்டீபம் என்பது அக்னிதேவனுடைய வரப்பிரசாதம் ஆகும். கர்ணன் பெற்றிருந்த வில்லானது காண்டீபத்தை விட எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல.
துரோணர், பீஷ்மர் தவிர பரசுராமரிடம் பயிற்சி பெற்ற அதிருஷ்டவானும் கர்ணனே ஆவான். அர்ஜுனனுக்கு கூட அந்த வாய்ப்பு அமையவில்லை.
அவரது மனைவியின் பெயர் விருஷாலி, பொன்னுருவி. தேரோட்டி குலத்தில் தாழ்ந்தவன் என்று எங்கும் கூற படவில்லை. தேரோட்டிகளே சில ராஜ்யங்களில் அமைச்சர்களாகவும் இருப்பர். சஞ்சயன் என்னும் தேரோட்டி தான் திருதிராஷ்டிரனின் உற்ற நண்பன் ஆவார். சுமந்த்ரார் என்னும் தேரோட்டி தன் அயோத்தியின் அமைச்சர் ஆவார்.
சூத என்னும் மக்கள் பிராமண தாய்க்கும் சத்திரிய தந்தைக்கும் பிறந்தவர்கள் ஆவர். அவர்களும் நாடாளும் க்ஷத்ரியர்களே. அதிரதன் அங்க தேசத்து மன்னனாக இருந்தான். அவனை வேறு ஒருவன் வெல்ல, தன் ராஜ்யம் விட்டு அகன்று, அவன் தன் நண்பன் திருதிராஷ்ட்ரன் அரண்மனையில் தேரோட்டியாக சேர்ந்தான். அதே போல் அதிரதன் நல்ல செழிப்பு உடையவன் என்பதை மறக்க வேண்டாம். கர்ணன் நல்ல வசதியான குடும்ப சூழலில் தான் வளர்ந்தான் பாண்டவர் கௌரவர் போலவே கர்ணனும் குரு துரோணரிடம் அஸ்திர வித்யை அனைத்தையும் கற்றான். ப்ரம்மாஸ்திரம் உட்பட. க்ருபரிடம் குருகுல கல்வி பெற்றான். அவன் தேரோட்டி மகன் என கூறி அவனை விரட்டவில்லை என்பதே உண்மை.
கர்ணனுக்கு பல மகன்கள் இருந்தனர் அவர்களின் ஒன்பது மகன்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. விருசசேனன் சுதமா; ஷத்ருஞ்ஜயா; திவிபடா; சுஷேனா; சத்தியசேனா; சித்ரசேனா; சுஷர்மா (பனசேனா); மற்றும் விருச்சகேது. குருச்சேத்திரப் போரில் இறக்காத ஒரு மகன். போருக்குப் பின் இவன் அருச்சுனனின் அரவணைப்பில் இருந்தான்.
திரௌபதியின் சுயம்வரத்தைத் தொடர்ந்த கைகலப்பில் சுதமா இறந்தான். ஷத்ருஞ்ஜயா மற்றும் த்விபடா ஆகியோர் குருக்ஷேத்ரா போரில் துரோணர் கௌரவர்களின் படைக்கு தலைமை தாங்கியபோது அர்ஜூனன் கைகளில் மடிந்தனர். சுஷேனா போரில் பீமனால் கொல்லப்பட்டார். சத்யசேனா, சித்ரசேனா மற்றும் சுஷர்மா நகுலனின் கைகளால் இறந்தனர். கர்ணனின் மூத்த மகன் விருசசேனன் போரின் 17வது நாள் போரில், கர்ணன் போர்படைகளுக்கு தலைமை ஏற்றிருந்தபோது அருச்சுனனிடம் போரிட்டு இறந்தார்.
நகுலனால் தனது சகோதரர்கள் துஹ்ஷசேனா மற்றும் சித்ரசேனா ஆகியோர் கொல்லப்பட்டதால் கடும் கோபமுற்ற வீரஷசேனா பழிவாங்கும் பொருட்டு தனது தந்தையின் எதிரிகளுடன் போரிட விரும்பினார். நகுலன் மற்றும் வீரஷசேன்னுக்கும் இடையே பயங்கர யுத்தம் நடந்தது. வீரஷசேனா நகுலனின் குதிரைகளைக் கொன்று, நகுலனை பல அம்புகளால் தாக்கினான். இதனால் நகுலன் தனது தேரிலிருந்து இறங்கி, தனது உடைவாள் மற்றும் கேடயத்தை எடுத்துக்கொண்டு, வீரஷசேனாவை நோக்கிச் செ ல்ல உள்ள தடைகளை அகற்றினார். அவர் பாதையில் இருந்த இரண்டாயிரம் குதிரைவீரர்களின் தலையை வெட்டிச் சாய்த்தார். வீரஷசேனா, நகுலன் தன்னை நோக்கி வருவதைக் காண்டு, தன் உடைவாளை தடகளம் போன்று சுழல்கின்றான். அவர் உடைவாளை உடைத்தெறிந்து நான்கு பிறைச் சந்திர வடிவிலான முனைகளைக் கொண்ட அம்புகளைக் கொண்டு தடுக்கின்றார். நகுலன் பின்னர் பீமனின் தேரில் ஏறிவிடுகின்றார். அர்ஜூனரின் அருகில் வந்தபோது, நகுலன் அவரிடம், "தயவுசெய்து அந்த பாவப்பட்ட வீரஷசேன்னைக் கொன்றுவிடு" என்று கோருகின்றார்.
அர்ஜூன்ன் கிருஷ்ணரை நோக்கி, "கர்ணனின் மகனை நோக்கிச் செல்லுங்கள். நான் அவனை அவனது தந்தையின் கண்முன்னே கொல்லவேண்டும்" என்று கட்டளையிடுகின்றார். யாருடைய உதவியுமின்றி, வீரஷசேனா அர்ஜூனனுக்கு சவாலாக பல வேறு வகையான அம்புகளை எய்து போரிட்டார். அவர் அர்ஜூனரின் தோளில் பத்து அம்புகளைப் பாய்ச்சி குத்தினார், கிருஷ்ணரை நோக்கியும் பத்து அம்புகள் பாய்ந்தன. அர்ஜூனன் கடும் கோபத்துடன் வந்து கர்ணன் உள்ளிட்ட கௌரவர்களிடத்தில் உரக்க கத்தி, "கர்ணா, மோசமான முறையில் என் மகன் அபிமன்யூவைக் கொன்றதால் நான் உன் மகனை இன்று கொல்லுவேன்! அனைத்து போர்வீரர்களும் முடிந்தால் அவனைக் காப்பாற்றுங்கள். நான் அவனைக் கொல்லுவேன், அதன் பின்னர்,நான் மாவீரரான தம்மையும் கொல்லுவேன்; மேலும் இந்தப் போர் ஏற்படக் காரணமான தீய கொள்கைகளைக் கொண்ட அண்ணன் துரியோதனனை பீமன் கொல்லுவார்" என்றார்.
கர்ணனால் அருகில் நெருங்க இயலாமல்போனது, அர்ஜூன்ன் பத்து அம்புகளால் வீரஷசேனாவைத் தாக்கினார் அது அவனை பலவீனப்படுத்தியது. நான்கு கூரான முனையுடைய அம்புகளைக் கொண்டு அர்ஜூனன் அவனின் வில், அவனது இரண்டு கைகள் மற்றும் அவரது தலை ஆகியவற்றை வெட்டினார். வீரஷசேனா கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டிருந்த கர்ணன் கடும் துன்பத்தில் கண்ணீர் சிந்தினான். மேலும் அவனது கண்கள் கடும் கோபத்தில் சிவந்தன. பின்னர் அவன் அர்ஜூனனை நோக்கி தன்னிடம் சண்டையிட வருமாறு சவால் விடுக்கின்றான்.
விருச்சகேது மட்டுமே பேரச்சமூட்டுகின்ற குருக்ஷேத்திரா போரில் பிழைத்த கர்ணனின் மகன்களில் ஒருவன். போருக்குப் பின்னர் அவன் பாண்டவர்களின் அரவனைப்பில் இருந்தான். அஸ்வமேதா யாகம் நடைபெற்றபோது நடந்த போட்டியின் போது, வீரிஷகேது அர்ஜூனுடன் இணைந்து சண்டையில் பங்குபெற்று சுதவா மற்றும் பாப்ருவஹனா ஆகியோருடன் போரிட்டான். போர் நடைபெற்ற வீரஷகேது யவனதா அரசரின் மகளைத் திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்வானது அர்ஜூன்ன் தனது அண்ணன் மகன் வீரஷகேது மீது வைத்திருந்த அளவுகடந்த பாசத்தைக் கூறுகின்றது.
மகாபாரத போரில் பாண்டவர்களின் வீரமும், கண்ணனின் சூழ்ச்சியும் பாண்டவர்களுக்கு பெரிய வெற்றியை தேடித்தந்தது என்றாலும், முடிவில் பாண்டவர்கள் பெற்றது ராஜ்ஜியமாய் இருந்த போதிலும், அவர்கள் இழந்தது ஏராளம். ஐந்து புதல்வர்கள், அன்பு மகன் அபிமன்யு, மூத்த சகோதரன் கர்ணன், பிதாமகர் பீஷ்மர், சிறுவயது முதலே வழிகாட்டிய குரு துரோணர், பீமனின் மகன் கடோத்கஜன், அர்ஜுனனின் மகன் அரவான், என பாண்டவர்களின் இழப்புகள் நீண்டுக்கொண்டே செல்லும். இதில் கர்ணன் இறந்த பிறகு குந்தி வந்து அழுது புலம்பிய பிறகுதான் அவர் தங்களின் மூத்தவன் என்பதை அறிந்து சொல்லவொண்ணா துயரத்திற்கு ஆளாகினர் பாண்டவர்கள். துரியோதனன்கூட தன் ஆருயிர் நண்பன் கர்ணன், தன் எதிரிகளுடைய சகோதரன் என்பதை அறிந்ததும், முன்பே இது தெரிந்திருந்தால் போரிலேயே ஈடுபட்டிருக்க மாட்டேனே! என தன் நண்பனின் மரணத்தை நினைத்து அழுது துடித்தான்.
கர்ணன் பாண்டவர்களில் மூத்தவனாக இருந்தாலும், அவனது பிறப்பின் மர்மத்தினால், தன் திறமைக்கு அங்கீகாரம் இல்லாமல் ,கடைசிவரை செஞ்சோற்று கடனுக்காக உயிரை விட்டவன். பீஷ்மர் இருக்கும்வரை போர்க்களம் புகமாட்டேன் என சபதம் புரிந்த கர்ணன் பீஷ்மரின் மறைவுக்கு பின்னரே போர்க்களம் புகுந்து தன் வீரத்தால் பாண்டவ சேனைகளை துவம்சம் செய்தான். இந்திரன் வழங்கிய சக்தி எனும் ஆயுதத்தால் கடோத்கஜனை கொன்றான். கர்ணனுக்கு முன்னர் பாண்டவர்கள் யாரும் தாக்கு பிடிக்கமுடியவில்லை. தருமன், பீமன், நகுலன், சகாதேவன் எல்லோரும் கர்ணனிடம் தோற்று கைதிகளாக ஆனபின்னரும், தனது தாய்க்கு கொடுத்த வாக்குறுதியினால் அவர்களை கொல்லாமல் கர்ணன் விட்டுவிட்டான். அவனது ஒரே இலக்கு அர்ஜுனன் மட்டுமே!அந்த அர்ஜுனனால்கூட கர்ணனை நேருக்குநேர் நின்று கொல்ல முடியாது என்பது கிருஷ்ணருக்கும் தெரியும். அவ்வளவு ஏன்?! பாண்டவ, கவுரவ சேனைகள் உள்பட எல்லோருக்குமே தெரியும். தனது குருவான துரோணரும், கர்ணனும் பரசுராமரின் நேரடி சீடர்கள் என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் தெரியும். ஆகவே, கர்ணன் தன்னை வெல்ல எவருமில்லா தன்னிகரில்லாத வீரனாக இருந்தான். பரசுராமர்கூட தன்னிடமிருந்த எல்லாக்கலைகளையும் கர்ணனுக்கு கற்றுக் கொடுத்தார். பரசுராமர் கர்ணனை போர்க்கலை மற்றும் வில்வித்தை ஆகியவற்றில் தனக்கு நிகரானவராக அறிவித்தார். தன்னுடைய சிறந்த மாணவர்களில் கர்ணனும் ஒருவன் என்று அறிவித்தார் அதானல் கர்ணனின் பராக்கிரமத்தை அனைவரும் அறிவர்
பதினாறாவதுபோர் நாளில் கர்ணன் ஒற்றை ஆளாக அனைத்து பாண்டவர்களையும் வீழ்த்தினான். முதலில், பீமனை வீழ்த்தினான் கர்ணன். ஆனால் தனது தாய் குந்திக்கு செய்து கொடுத்த சத்தியத்தினால், பீமனை கொல்லாமல், ஏ ..பீமா! நான் உன்னை விட வயதில் பெரியவன் ,என்னை விட சிறியவயதில் இருக்கும் உன்னை கொல்வது கூடாது இது எனது குரு பரசுராமர் கற்றுக்கொடுத்தது. ஆகையால் உன்னை கொல்லமாட்டேன் இங்கிருந்து சென்றுவிடு என்று பீமனை கொல்லாமல் விட்டுவிட்டான் கர்ணன் .
அடுத்து தருமரையம் வீழ்த்தினான் கர்ணன், தருமனையும் கொல்லாமல் ஏ யுதிஷ்டிரா! உனது குரு உனக்கு கற்றுக்கொடுத்த வித்தை அனைத்தையும் மறந்துவிட்டாயா?! போ... முதலில் பயிற்சி எடுத்துவிட்டு பின்னர் சண்டையிட வா" என்று கூறி தருமனையும் உயிருடன் விட்டுவிட்டான் கர்ணன். அதன்பிறகு நகுலன் மற்றும் சகாதேவன் கர்ணனின் முன்னே தாக்குப்பிடிக்க முடியாமல் தோற்று நின்றனர். அவர்களையும் கொல்லாமல் தனது தாய் குந்திக்கு அளித்த சத்தியத்தினால் தனது சகோதரர்கள் அனைவரையும் போரில் வீழ்த்தினாலும் கொல்லாமல் விட்டுவிட்டான். பின்னர், கர்ணன் தனது மாமனாரும்,தோரோட்டியுமான சல்லியனை அர்ஜூனனின் தேர் இருக்கும் இடத்திற்கு எடுத்து செல்லக் கூறினான். அர்ஜுனனும், கர்ணனும் நேருக்கு நேர் சந்தித்தனர் .போர்க்களத்தில் இருவரும் ஆவேசமாக போரிட்டனர். போர்க்களமே இருவரின் யுத்தத்தை பார்த்து வியந்து நின்றது. அர்ஜுனனும் கர்ணனுக்கு எதிராக சளைக்காமல் போரிட்டான். ஆனால், அவனால் கர்ணனின் வில் வித்தைக்கு முன்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை. அங்கிருந்து அர்ஜுனனை, பகவான் கிருஷ்னர், அப்புறப்படுத்தி காப்பாற்றினார். தங்களது குரு துரோணாச்சாரியாரும் கர்ணனும் பரசுராமரின் நேரடி சீடர்கள். அதனால் அவர்களை எப்படி வீழ்த்த முடியுமென்பதை உணர்ந்து, துரோணரை எப்படி வெல்லமுடியாமல் சதியின் மூலம் கொன்றனரோ ,அதுபோலத்தான் கர்ணனையும் வீழ்த்த முடியும் என்பதை அர்ஜுனனும் நன்கு உணர்ந்திருந்தான். இங்கேதான் மாயக்கண்ணன் விளையாட ஆரம்பித்தான். அர்ஜுனனின் பாணங்கள் கர்ணனை ஒன்றும் செய்யமுடியாது அப்படியானால் அவனை வெல்ல சாதகமான வழிகளை நோக்கி கண்ணன் காய் நகர்த்த தொடங்கினான்.
(கதையை சுருக்குகின்றேன் )
கர்ணனின் சாவிற்கு முதல் காரணம் முனிவர் துர்வாசர் இரண்டாவது சூழ்ச்சிக்காரன் இந்திரன், கவச குண்டங்களையும் வாங்கிவிட்டு வண்டாக வந்து உடலையும் துளைத்து பரசுராமரிடம் கட்டிக்கொடுத்தவன். மூன்றாவது கர்ணனது குரு பரசுராமர். பொய்யுரைத்தமைய்க்காக சாபமிட்டார். நான்காவது பசுவை கொன்றதற்காக பிராமணனின் சாபம். ஐந்தாவது பூமாதேவியின் சாபம். ஆறாவது அவனது தாய் குந்தி. அவள்தான் அர்ஜுனன் மேல் ஒருமுறைக்கு மேல் நாகாஸ்திரம் மாதிரியான சக்தியான ஆயுதங்களை பயன்படுத்தமாட்டேன். அர்ஜுனன் தவிர்த்த ஏனைய சகோதர்களை கொல்லமாட்டேன் என்று உறுதிமொழியை வாங்கினாள். ஏழாவது சல்லியன், போர் மிகமுக்கியமான கட்டத்தில் இருந்தபோது நடுவழியில் கர்ணனின் தேரை விட்டுச்சென்றது. எட்டாவது அர்ஜூனனை கர்ணனின் நாகாஸ்திரத்திலிருந்து காக்க கிருஷ்ணன் தேரை அழுத்தியது. உடனே, பகவான் கிருஷ்ணர், கர்ணன் தனது தேரை சேற்றிலிருந்து வெளியே கொண்டுவரும்போது அவரைக் கொல்லும்படி அர்ஜூனனை வற்புறுத்தியது. இவையெல்லாம் சேர்ந்து கர்ணனின் உயிரை வாங்கியது .
போரில் கொல்லப்பட்டது தங்களுடைய மூத்த சகோதரன் என அறிந்ததும் பாண்டவர்கள் அனைவரும் சொல்லவொண்ணா துயரத்தை அடைந்தனர். கர்ணனின் பிறப்பு இரகசியத்தை முன்னரே கூறாத தங்கள் தாய் குந்தியின்மீது கோபம் கொண்டனர், கர்ணனின் எல்லா புதல்வர்களும் போரில் கொல்லப்பட மீதம் இருந்தது விரிஷகேது மட்டுமே. போருக்குப்பின் தன் சிறிய தந்தைகளான பாண்டவர்களின் அரவணைப்பில் வளர தொடங்கினான். கர்ணனை தன் கையால் கொன்றதால் என்னவோ அர்ஜுனன் விரிஷகேது மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தான். சொல்லப்போனால் அபிமன்யுவின் இடத்தை விரிஷகேது நிரப்பினான். அர்ஜுனனே தன் தமையனின் மகனுக்கு ஆசானாய் இருந்து வில்வித்தையை கற்றுக்கொடுத்தான். விரிஷகேதுவும் தன் தந்தை கர்ணனை போலவே வில்வித்தையில் சிறந்து விளங்கினான். மேலும் கிருஷ்ணர் விரிஷகேது மீது அதிக அன்பு பாராட்டினார். விரிஷகேது அர்ஜுனனுடன் சேர்ந்து விரிஷகேது பல போர்களில் பங்குக்கொண்டு தன் வீரத்தை சிறப்பாய் வெளிப்படுத்தினான். மேலும் போரில் வெற்றிக்கொண்டு யவன தேசத்தின் இளவரசியை விரிஷகேதுவிற்கு மணம் முடித்தான். பல நாடுகளை வெற்றிகொண்ட அர்ஜுனனும் விரிஷகேதுவும் இறுதியில் நாக உலகத்திற்கு சென்றனர்.
அர்ஜுனனும், விரிஷகேதுவும் நாக உலகத்துக்கு சென்று போர் புரிந்தனர். அங்கு பப்புருவாகனன் என்ற வீரனிடம் போர்புரிந்தனர். தன் எதிரே இருப்பது தன் மகன் என்பதை அறியாத அர்ஜுனன் விரிஷகேதுவுடன் இணைந்து போர்புரிந்தான். போரில் பப்புருவாகனன் வில்லாற்றல் அர்ஜுனனையும் விட மிஞ்சியவனாக இருந்தான். போரின் இறுதியில் அர்ஜுனனும், விரிஷகேதுவும் பாப்புருவாகனனால் கொல்லப்பட்டனர்
தன் மகன் புரிந்த செயல் கண்டு அதிர்ச்சியடைந்த உலூபி தன் சக்தி மூலம் அதிசய நாகமணியை கொண்டுவந்தார். ஆனால் அதனை வைத்து ஒருவரைத்தான் உயிருடன் கொண்டு வரமுடியும் என்பதால் கிருஷ்ணருடைய ஆலோசனை பேரில் அர்ஜுனனை மீண்டும் உயிருடன் கொண்டுவந்தார். விரிஷகேது வீரமரணம் அடைந்து வீரசொர்க்கம் சென்றடைந்தான். தன் மரணத்திற்கு பிறகு விரிஷகேதுவிற்கு முடிசூட்ட நினைத்திருந்தார் யுதிஷ்டிரன் ஆனால் காலம் அர்ஜுனனுடைய மகன் கையாலேயே கர்ணனின் மிச்சமிருந்த ஒரே மகனின் உயிரையும் பறித்துவிட்டது. விதி வலியது
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
நாம் ஏன் வணக்கம் சொல்கிறோம் ??
இதை உங்களுக்கு விளக்க வேண்டிய கடப்பாடு எனக்குண்டு என்று கருதி சிறு விளக்கம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அக்கம் என்பது கண்
அதாவது வண்ணமய மான அந்தக்கண் அகத்தினுள்
மூன்றாம் கண்ணாக இருக்கிறது
அந்த விழிப்புணர்வினைத்தான் அகக்கண் என்கிறோம்
அகக் கண் என்றால் என்ன ?
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்” - என்று திருமூலர் பாடுவார். அந்த அகக் கண் நமக்கு மூடிக் கிடக்கிறது. ஞானம் என்னும் இமையைத் திறந்து அகக் கண்ணுல் பார்க்கும் ஞானப் பார்வையை நாம் பெறவில்லை. அப்பர் சுவாமிகளும் அப்படி இருந்ததாகச் சொல்கிருர்.
ஊன் கண் கோக்கி, -உணர்வு எனும் இமை திறந்து விழித்திலேன்.
- 'ஊனக் கண்ணினுல் நோக்கினேனே அன்றி உணர்வாகிய ஞானக் கண்ணுல் நோக்கவில்லை என்கிருர். ஞானக்கண்ணுல் பார்க்கிறவர்களுக்கு எல்லாம் இறைவன் மயமாகத் தோன்றும். -
நாம் அறிவென்னும் செம்மையின்றி அறியாமை யென்னும் வெளிறு தோன்ற நிற்கிருேம். இதல்ை தக்கது. இன்னது, தகாதது இன்னது என்று பகுத்து அறியும் ஆற்றல் இல்லாமல் போகிருேம்; அதல்ை மேலும் மேலும் பாவங்களை ஈட்டுகிருேம். . • ,
உள்ளத்தே உறையும் மாலை
உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக்
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்
தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம்
உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப்போய் என்னுள்ளே நான்
விலவு அறச் சிரித்திட்டேனே
(இறைவன் மனிதருக்குள்ளேயே அங்கேயே இருந்துகொண்டு நான் போடும் பக்தி வேஷங்களையெல்லாம் – கள்ளத்தனங்களையெல்லாம் பார்த்து சிரித்துக்கொண்டு தான் இருக்கின்றான் என்பதை உணர்ந்தேன்.
அடடா, இதை அறியாமல் இத்தனை நாள் நான் வெளிவேஷம் போட்டுக்கொண்டிருந்தேனே என்ற என் அறியாமையை எண்ணி வெட்கப்பட்டு விலா நோகச் சிரித்தேன்.)
என்கிறார் தொண்டரடிபொடி ஆழ்வார்
கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கி
தெள்ளியனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே-
( நான் ஒரு பொய்யன். பொய்த் தொண்டு செய்வதாய் காலத்தை வீணே கழித்தேன். அது தீர்ந்து தெளிவுற்றவனாகி ஒரு நிலையுடன் தேடினேன்; நாடினேன்; கண்டேன். நினைப்பவர்களின் உள்ளிருந்து- உடன் இருந்து அவர்கள் நினைப்பதை எல்லாம் நீ அறிவாய் என்று வெட்கம் கொண்டேன்; வெட்கத்தோடு என் பொய் நடிப்புகளை எண்ணி விலா புடைக்கச் சிரித்தேன். )
என்கிறார் அப்பர் சுவாமிகள்
ஆம் எதிரில் இருக்கும் மனிதருக்குள் இறைவன் இருக்கிறான்
அவனைக் கை கூப்பி வணங்குதல் என்ன தப்பு ?
அது தான் கை கூப்புகிறோம்
வணங்குகிறோம்
எதிரில் இருக்கும் பொருள் அனைத்திலும்
நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் எமக்குமுன்னே காற்றாய் கடவுளாய் பல்வேறு உயிர்களாய் எமக்குமுன் இருக்கிறான்
அந்த இறைவனை நாம் பார்க்குமிடமேல்ல்லாம் காண்கிறோம்
வணங்குவோம்
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
வணக்கம் கூறும் பொழுது இரண்டு கைகளையும் கூப்பிக்கூற வேண்டும் என்பதை நம் முன்னோர் வலியுறுத்தி இருக்கின்றனர்.
இது வர்மக்கலை படித்தவர்களுக்கு மட்டும் புரியும் .நீங்கள் கை கூப்பித் தொழுகின்ற பொழுது உங்களின்கைகள் அழுத்தப்படுகிறது (தேக ஆரோக்கியத்துக்கு நல்லது )
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை, வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை, தன்னைக்கொண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே
இந்த வண்ணம் எதிரில் உனக்குள் (அக்கத்தில் )இருக்கிறது
இந்த அக்கமாகிய உள்ளுணர்வை நீ வணங்கி உனக்குள் இறைவனைத்தேடு
இது தான் வணக்கம்
இதற்காகவே எல்லோரையும் வணங்குகின்றோம்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
எரிகிற நெருப்பை நீரினால் அணைப்பது போல, மனதில் எழுகிற கோபத்தைப் புத்தியினால் அடக்குகிறவனே மகாத்மா.கோபத்தை அடைந்த எவன்தான் பாவத்தைச் செய்யமாட்டான்?கோபத்தினால் ஆட்கொள்ளப்பட்டவன் பெரியோர்களையும் கொன்றுவிடுவான். தீய சொற்களால் சாதுக்களை அவமதித்தும் பேசுவான். அவன் எது சொல்லத்தக்கது, எதுசொல்லத்தகாதது என்பதை அறியான்.பாம்பு தன் சட்டையை உதறித் தள்ளுவதைப் போல, எழுகிற கோபத்தைப் பொறுமையினால் உதறித் தள்ளுபவனே புருஷன் என்று கருதப்படுவான்.
காட்டிலோ, போரிலோ, பகைவர், வெள்ளம், நெருப்பு ஆகியவற்றின் நடுவிலோ, பெருங்கடலிலோ, மலையுச்சியிலோ இருப்பவனாயினும், அந்த மனிதனை முற்பிறவியில் செய்யப்பட்ட புண்ணியங்கள் (நல்வினைகள்) காப்பற்றுகின்றன.
எல்லோரும் சித்தர்களாக ஆகிவிட முடியாது. மக்கள் தங்கள் சித்தத்தை அடக்குவது கடினம். ஆனால் அவர்கள் சிறந்தவர்களாக விளங்க முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் எண்ணங்களில் பரிசுத்தமானவர்களாக இருக்க வேண்டும்.
தீமை செய்தால் தீமை செய்வதுதான் உலக வழக்கம். ஆனால் தீமை செய்தாலும் நன்மை செய்வது உத்தமர் வழக்கம்.
ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கையின் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான சந்தர்ப்பங்களும் காரணங்களும் உண்டாகின்றன. ஆனால் அவையெல்லாம் அறிவில்லாதவனைத்தான் பாதிக்குமே தவிர, விவேகமுள்ளவனை அணுகாது.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அழிந்துபோன எமது பாரம்பரிய விளையாட்டுக்கு உயிர் கொடுக்கத் துடிக்கிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^DO GOOD
கிச்சுக் கிச்சுத் தம்பலத்தை இரண்டு பேர் மட்டுமே
ஆடமுடியும். சிறுமியர் சிறுவர் யார் வேண்டுமானாலும்
ஆடலாம். பெரும்பாலும் சிறுமியர் ஆடுவர்.
ஆடும் இருவருக்கும் தோழர்கள்/தோழியர்கள் உண்டு.
திறந்த வெளிகளில் ஆடப்படும் ஆட்டம்.
இதை ஆட, ஒன்று அல்லது ஒன்றரை அடி நீளமுள்ள
மணற்கரை அமைப்பர்; அது ஒரு 4 அல்லது 5 அங்குல
உயரம் உள்ளதாக இருக்கும். அதில், அரை அல்லது ஒரு
அங்குல நீளம் உடைய மெல்லிய குச்சியை (சிறு
கிளிஞ்சல்/சங்கு/புளியங்கொட்டை/சிறு ஓடு/விலக்குமார்
குச்சி போன்றவற்றையும் பயன்படுத்துவர்)
போன்றவற்றை ஒருவர் மறைத்து வைக்க, மற்றவர் அதைக் கண்டு
பிடிக்கும் விளையாட்டே கிச்சுக் கிச்சு தாம்பலம்.
மணற்கரையை ஆக்கி வைத்து, முதலில் யார் ஆடுவது
என்று ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள். யார் முதலில்
மறைத்து வைப்பது என்பதில் முடிவு ஏற்படாவிடில்,
காசெடுத்து பூவா தலையா போடுவதைப் போல,
ஓட்டாஞ்சில்லை எடுத்து, ஒரு புறத்தை ஈரமாக்கி
(நக்கி
) , "எச்சா மானமா" என்று கேட்டு,
வெல்பவர் முதலில் ஆட ஆரம்பிப்பார்.
ஆடு கருவியான குச்சியை, எதாவது ஒரு கையின்
இருவிரல்களில் பிடித்து (கட்டை விரல், ஆள்காட்டிவிரல்),
மணற்கரையின் ஒரு முனையில் அவ்விரல்களை நுழைத்து
வைத்திருப்பார். மற்றொரு கையில் அந்த இரு
விரல்களையும் மறுபுறத்தில் நுழைத்து வைத்திருப்பார்.
குறிப்பு: "தம்பலம்" என்று ஒலிக்காமல் "தாம்பாலம்"
என்று நீட்டி ஒலிப்பது வழக்கம். பாவாணர் தம்பலம்
என்று சொல்கிறார்.
"கிச்சுக் கிச்சுத் தம்பலம்
கீயாக் கீயாத் தம்பலம்
மச்சு மச்சுத் தம்பலம்
மாயா மாயாத் தம்பலம்"
என்று பாடிக் கொண்டே, திரும்பத் திரும்பப்
பாடிக் கொண்டே குச்சியை இரு கைகளுக்கிடையே
மாற்றியோ, மாற்றாமலோ, அந்த மணற்கரையின்
முழுநீளத்திற்கும்,முன்னும் பின்னுமாய் போயும் வந்தும்,
எதிரே அமர்ந்திருப்பவர் பார்த்துக்
கொண்டேயிருந்தாலும், மணலுக்குள் தெரியாதாதலால்,
ஏதோ ஒரு இடத்தில் குச்சியை மறைத்து வைப்பார்.
மறைத்து வைத்தும், முன்னும் பின்னும் போய் வந்து
போக்க்குக் காட்டுவது உண்டு; முன்னர் மறைத்த இடத்தில்
இருந்து திறமையாக மாற்றி வைப்பதும் உண்டு.
இப்படி மணலுக்குள் மறைத்து வைத்தபின், அடுத்தவர்
எந்த இடத்தில் இருக்கிறது என்று நினைக்கிறாரோ, அந்த
இடத்தில், தன் இரண்டு கரங்களையும் பிணைத்து,
குச்சி இருக்கும் மணற்கரையின் இடத்தைப் பொத்த
வேண்டும்.
மறைத்து வைத்தவர், பாடிக் கொண்டே, முன்னும் பின்னும்
போய் வந்து கொண்டிருந்தபோது,
அவரின் கர அசைவுகள், உடல் அசைவுகள்,
முக அசைவுகள் இவற்றைக் கூர்மையாகக்
கவனித்தால்தான், மற்றவர் அதை எளிதில்
கண்டுபிடிக்க ஏதுவாகும்.
கரங்கள் பொத்திய இடத்தில் குச்சி அகப்பட்டால்,
எடுத்தவர் வென்றார். இல்லையெனில் மறைத்தவர் வென்றார்.
வென்றவர் மீண்டும் மறைத்து வைப்பார்.
இப்படியாக ந்து அல்லது பத்து தடவை வென்றவர்,
ஆட்டத்தை வென்றவர் ஆகிறார்.
தற்போது, தோற்றவரின் கையைக் கூட்டி,
(ஏந்துமாறு வைத்து) அதில் மணலை அள்ளி வைத்து,
நடுவிலே அந்த சிறு குச்சியை குத்தி வைப்பார். பின்னர்,
அவரின் கண்களைப் பொத்தி, அம்மணலை ஏந்தியவாறு,
நடந்து கொண்டே, "அம்மாயி வீடு எங்க இருக்கு?"
என்று கேட்க, வென்றவர், "ஆற்றுக்கு அங்கிட்டு" என்று
சொல்வார்;
இப்படியே, இடம் குறித்த சில கேள்விகளை திருப்பி,
திருப்பிக் கேட்டு, சிறிது தூரம் சென்றதும், அந்த ஏந்து
கை மணலையும், குச்சியையும் ஒரு இடத்தில் வைக்கச்
சொல்வார்; கண்கள் இன்னும் பொத்தப் பட்டிருக்கும்.
மேலும் சிறிது தூரம் சென்று, கண்களைப் பொத்தியபடியே,
இரண்டு மூன்று முறை, மணல் வைத்த இடம் தெரியாமல்
இருக்க, கண் பொத்தப் பட்டுள்ளவரை சுற்றி விடுவர்.
பின்னர் கண் திறந்தவர், அம்மணலைத் தேடிக் கண்டு பி
டிக்க வேண்டும். அப்போது, தோழர் தோழியரின்
மகிழ்ச்சி பொங்கிப் பாயும்.
இப்படி ஆடுவதுதான் கிச்சுக் கிச்சுத் தம்பலம்
விளையாட்டு.
யாருக்கும் இன்னல் இன்றி, குழுவினரோடு ஆடும் இந்த
விளையாட்டு, நகரத்தில் மற்றும் நாடுகள் தாண்டி
வாழ்பவர்க்கு ஏலவில்லை. அப்படியே இயன்றாலும்
அவ்விளையாட்டை நாம்/நம் பிள்ளைகள் ஆடுவதில்லை.
இது ஒரு சில்லறை விளையாட்டு - ஏழைகளின்
விளையாட்டு, என்ற கருத்தே நமக்குப் பெரும்பாலும்
தோன்றும். ஆனால் மிகவும் பொருள் பொதிந்த
விளையாட்டு.
1) மணற்கரையில் மறைத்த குச்சியை கண்டு பிடிக்கும்போது,
மறைத்து வைக்கும் சூக்குமத்தை மறைப்பவருக்கு
வளர்க்கிறது!
2) எடுக்க வேண்டியவருக்கோ, மறைத்து வைப்பவரின்
உடல் அசைவுகள், முக அசைவுகள் இவற்றை வைத்தே,
மறைத்து வைக்கும் இடத்தை உணரும் திறன் வளர்கிறது.
3)அதன் பின், விளையாட்டின் இறுதியில், கண் பொத்தி
சுற்றி விடப்பட்ட பின்,அம்மணலைத் தேடும்போது,
"திசையறியும்" திறன் வளர்கிறது.
இருவர் ஆடினும், மகிழ்ச்சி, கூடியுள்ளோர்
அனைவருக்கும்தான்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
கருத்துகள்
கருத்துரையிடுக