மோடி ஒரு இந்து அவர் விளக்கேற்ற சொன்னதன் மர்மம் என்ன ?
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
பஞ்ச லோகம், வெள்ளி விளக்கு, பாவை விளக்கு, சர விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கோடி விளக்கு, தூண்டா மணி விளக்கு, அகல் விளக்கு எனப் பல வகைகள் இருந்தாலும், அவரவர் வசதிகேற்ப மனத் தூய்மையுடன் சிறு மண் விளக்கையாவது வீடுகளில் ஏற்றி வைத்து இறைவனை வழிபடுவது நல்லது.
விளக்கு என்ற இப்பதம் ஒளி உமிழும் பொருளைக் குறிக்கிறது. மின்சார பாவனை வருவதற்கு முன்னர் எண்ணைகளில் எரியும் விளக்குகள் பரவலாகப் பாவனையில் இருந்தன; இருக்கின்றன.
வெளிச்சத்துக்காக ஏற்றப்படுவது என்ற பொருள் தொனியில் பார்த்தோமானால் அது கை விளக்கில் இருந்து கலங்கரை விளக்கம் வரைக்குமாக விரியும்.
பற்றறயில் ஒளி உமிழும் ரோச் லைட்டில் இருந்து சூரிய ஒளியில் இயங்கும் மின் குமிழ் வரைக்குமாக; வாசனையோடு ஒளி உமிழும் மெழுகு வர்த்தியில் இருந்து வண்ண வண்ணமாக விட்டு விட்டு ஒளி உமிழும் Fairy விளக்குகள் வரையிலுமாக; விளக்குகளின் வகைகள் எண்ணற்றன.
சீன தேசத்து மக்கள் சிவப்பு வண்ணக் காகிதங்கள் கொண்டு செய்யும் விளக்குகளும் இலங்கையில் வெசாக் கொண்டாட்டங்களின் போது வண்ணக்காகிதங்களால் செய்யும் அலங்காரக் கூடுகளும் மின்சாரத்தில் இயங்கும் பிரமாண்ட ஒளி ஜாலங்களும் இன்று வரை மனங்களைக் கொள்லை கொள்ளும் ஒளியின் கலை வண்ணங்களே!
லாந்தர் என அழைக்கப் படும் ஹரிக்கேன் விளக்கு, கைவிளக்கு, மேசை விளக்கு, பெற்றோல் மக்ஸ், குத்து விளக்கு, தூண்டா மணி விளக்கு, சர விளக்கு, ஆத்ம விளக்கு, தெரு விளக்கு,சுட்டி விளக்கு, மின்சார விளக்கு, பற்றரி விளக்கு (ரோச்) மெழுகு வர்த்தி விளக்கு, எனத்தொடரும் இந்த விளக்கு வகைகள் ஈழத்தில் பொருளாதாரத் தடை விதிக்கப் பட்ட காலங்களில் சிக்கன விளக்கென ஒரு விளக்கு கண்டு பிடிக்கப் பட்டதையும் சொல்ல வேண்டும். கூடவே தகரத்தினால் இணக்கப் பட்ட விளக்குகள் உள்ளூரில் தயாராகி புழக்கத்திலும் வந்தன.
நம் பெயர் விளங்க வைக்கும் வாரிசுகளை ‘குலவிளக்கு’ என்றும், வீட்டுக்கு வரும் மருமகளை வாழ்வில் ‘விளக்கேற்ற வந்தவள்’ என்றும் குறிப்பிடுவதன் மூலம் தீபத்தின் பெருமையை அறியலாம்
பொதுவாக விளக்குகளில் ஐந்து முகங்கள் இருக்கும். ஐந்து முக விளக்குகளை அனைத்து நேரங்களிலும் நம்மால் ஏற்றி வைப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம். அதனால் ஒரு முகமோ, இரண்டு முகமோ தினமும் விளக்குகளை ஏற்ற வேண்டும். இவற்றிற்கான பலன்களை காண்போம்.
ஒரு முகம்- மத்திமம், இரண்டு முகம்- குடும்ப ஒற்றுமை பெருகும், மூன்று முகம் - புத்திர இன்பம் கிடைக்கும், நான்கு முகம்- மாடு மனை வளம் சேரும், ஐந்து முகம் - செல்வம் செழிக்கும்.
பொதுவாக தூய பஞ்சினால் திரியை இட்டு விளக்கேற்றுவோம். இதற்கும் குடும்ப ஒற்றுமை போன்ற நற்பலன்களே பெறுவோம். ஆனாலும் விசேஷ பலன்களை மேலும் பெற சிறப்புத் திரி வகைகளும் உண்டு. மஞ்சள் நிறம் கொண்ட திரியை ஏற்றினால் அம்பாளின் கருணை கிடைப்பதோடு, மன தைரியம் கூடும். சிவப்பு நிற திரி ஏற்றினால் தடைபட்ட திருமணம் சிறப்பாக நடைபெறும். வாழைத்தண்டு திரி ஏற்றினால் புத்திரப் பாக்கியத்தை அருளும். வெள்ளெருக்குப் பட்டையை திரியாக்கி விளக்கேற்றினால் செல்வங்கள் பெருகி வாழ்வு வளம் பெறும். தாமரைத் தண்டின் நாரைத் திரித்து ஏற்றும்போது, தெய்வக் குற்றங்கள் அகன்று, தீய சக்திகள் விலகி விடும்.
தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுவது அறிவு வளர்ச்சியும், செல்வ வளர்ச்சியும் தரும். கிழக்கு திசையில் ஏற்றுவது துன்பங்களை நீக்கும். மேற்கு திசையில் ஏற்றுவது கடன் தொல்லைகளையும், தோஷங்களையும் போக்கும். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் தெற்கு திசையில் தீபங்களை ஏற்றக்கூடாது.
பொதுவாக நல்லெண்ணெயால் விளக்கேற்றலாம். தற்சமயம் ஐந்து வகையான எண்ணெய் களைக் கொண்டு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய், விளக்கெண்ணைய் ஆகியவைகளை கலந்து பஞ்சமுகங்கள் கொண்ட விளக்குகளை ஏற்றி பூஜைகள் செய்யும்போது சகல சம்பத்துக்களும் பெருகி, இறை அருள் கிட்டும்.
திருவிளக்குகள் இறைவனின் பிரதிநிதியாக பார்க்கப்படுவதால் அவற்றிற்கான மரியாதையையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். பூஜைக்கு ஏற்றப்படும் திருவிளக்கிற்கு பால், சர்க்கரை, கற்கண்டு போன்றவைகளை நைவேத்தியமாகவும், கார்த்திகை தீபத்தன்று அவல் பொரியில் வெல்லப் பாகு சேர்த்து கார்த்திகை பொரி படைத்தும் வழிபாடு செய்தல் சிறப்பு.
விளக்குகளை அணைப்பதற்கும் விதிகள் உண்டு. வெறும் வாயினால் விளக்கை ஊதி அணைப்பது தீமையைத் தரும். பூ அல்லது நீர்த் துளி, பால் துளியைக் கொண்டு விளக்கினை அமர்த்த வேண்டும். விளக்குகளை அமர்த்தும்போது ‘சாந்த ஸ்வருபியே நமஹ’ என்று மனதில் தியானிப்பது நலம். விளக்குகளை வெறும் தரையில் வைப்பது நல்லதல்ல. பித்தளை தட்டுகளில் வைப்பது நல்லது. தட்டுகளில் வைப்பது எண்ணெய் கீழே சிந்துவதை தடுக்கவும் செய்யும்.
அதிகாலை சூரியன் உதிக்கும் முன்னும், மாலையில் அந்தி சாயும் முன்பும் வீட்டின் வாசல் தெளித்துக் கோலமிட்டு மனதை ஒருமுகப்படுத்தி விளக்கேற்ற வேண்டும். இதனால் நேர்மறை சக்திகள் நம்மை சூழ்ந்து வாழ்வில் இருள் விலகி ஒளி பிறக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக