நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!உங்கள் கண்ணீர்,உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!.
நமக்கு மனைவியாக வருகிற வர்கள்
நம்மளோட குடும்பத்தையும் அவங்க
குடும்பமாக பார்த்துக் கொள்வது தான்
கடவுள் நமக்கு கொடுக்கும்
மிகச் சிறந்த பரிசு…!
சொந்தங்கள் எல்லாம் சரியாக
அமையாவிட்டாலும் வாழ்க்கை
துணை எனும் சொந்தம் சரியாக
அமைந்து விட்டால் போதும்
அத்தனை உறவுகளையும்
உலகையும் வென்று விடலாம்.
ஒரு பெண்ணின் மனக் காயத்திற்கு
காரணம் அவள் கணவனாக இருந்தால்..
அந்த காயத்திற்கு சிறந்த மருந்தாக
திகழ அந்த கணவனால்
மட்டுமே முடியும்.
அன்பு ” யார் மீதும் காட்டலாம் ஆனால்
“கோபம்” உயிருக்கு மேலான உரிமை உள்ளவர்கள் மீது மட்டுமே காட்ட முடியும்
ஒவ்வொரு ஆணின் குறும்பை
ரசிக்க ஒரு பெண்ணும்.. ஒவ்வொரு
பெண்ணின் குழந்தை தனத்தை ரசிக்க
ஒரு ஆணும் வாழ்க்கையில்
கிடைத்தால் வாழ்க்கை வரம் தான்..!
மனைவியை காதலியை போல
பார்த்து நேசியுங்கள்.. தங்கை போல
பாதுகாத்துக் கொள்ளுங்கள்..
தாயைப் போல மரியாதை
செலுத்துங்கள் உங்களைத்
தாண்டி அவள் அன்பு
எங்கும் செல்லாது.
வரையப்படாத ஓவியத்தின்
வண்ணங்களாய் சிதறிக் கிடந்தேன்
நான்..! அழகிய ஓவியமாக இன்று,
என் அன்பு மனைவியின்
வருகைக்கு பின்பு.
துக்கம், சோகம், கவலை, அழுகை
போன்ற வாக்கியங்களை அகராதியில்
இருந்து நீக்க வேண்டும்.. என்னை
மனதார தாங்கியவள் என் மனைவி..!
எனது முதல் குழந்தை அவள்..! அவளை
நான் என் மூச்சு உள்ள வரை
சுமக்க வேண்டும் என் மார்பில்.
நீயும் நானும் கணவன் மனைவியாக
வாழ இந்த காதல் குடுத்து
வைத்திருக்க வேண்டும்.
உன் மனம் முழுவதும் நான்
மட்டும் தான் இருக்க வேண்டும்
அது தான் என் ஆசை.
என் வாழ்க்கை முழுவதும்
நீ மட்டும் என் கூடவே இருக்கணும்
அது தான் என் தவம்..!
தன் மனைவியை அடிக்கடி
குறை கூறிக் கொண்டிருக்கும்
கணவனுக்கு தெரியாது தன்
முதுமையில் அவள் தான்
தாயாவாள் என்று..!
ஒரு மனைவிக்கு தன் தாயைப்
போல தன்னை பார்த்துக் கொள்ளும்
ஒரு கணவன் கிடைத்து விட்டால்..
அவள் தான் உலகத்தின்
மிகப்பெரிய அதிஷ்டசாலி..!
என் கணவர் ரொம்ப
கோபக்காரர் தான் ஆனால்
அதை விட அதிகமா என் மீது
அன்பு வைத்திருக்கிறார்.
தோளுக்கு மேல் வளர்ந்த
பின்னும் என்னை தோளில்
போட்டு தாலாட்டி.. குழந்தை போல
பார்த்துக் கொள்ளும் உறவு
நீ மட்டும் தான் அன்பே..!
உரிமையை தந்து விட்டு
அன்பை வெளிப்படுத்த மாட்டான் கணவன்
ஆனால் சின்ன சின்ன விஷயங்களிலும்
அன்பை எதிர்பார்ப்பவள் மனைவி..!
விட்டுக்கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்…
தட்டிக்கொடுங்கள்; தவறுகள் குறையும்….
மனம்விட்டுப்பேசுங்கள்; அன்பு பெருகும்…
ஒரு பெண்ணிற்கு இந்த உலகில்
எவ்வளவு சந்தோஷங்கள் கிடைத்தாலும்
அவள் தேடும் ஒரே சந்தோஷம் அவள்
கணவனின் அன்பு மட்டுமே..!

கருத்துகள்
கருத்துரையிடுக