பரஞ்சோதி முனிவர்

%%%%%%%%%%%%%%%%%
திருவிளையாடல் புராணத்தை எழுதியவர். இவர் வேதாரணியம் எனப்படும் திருமறைக்காட்டில் வசித்த மீனாட்சி சுந்தர தேசிகரின் மகன் ஆவார். தந்தையே குருவாக இருந்து, மகனுக்கு சைவ சித்தாந்த கருத்துக்களைப் பயிற்றுவித்தார். திருமறைக்காட்டில் கோவில் கொண்டுள்ள சிவனைத் துதித்து வந்த பரஞ்சோதி முனிவர், தமிழகத்திலுள்ள பிறகோவில்களையும் பார்க்க ஆவல் கொண்டார். மதுரைக்கு வந்த அவர், மண்டபம் ஒன்றில் தங்கியிருந்த போது, அவரது கனவில் தோன்றிய மீனாட்சியம்மன், அந்நகரில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்களை அழகு தமிழில் பாடும்படி உத்தரவிட்டாள். அதற்கிணங்கிப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை எழுதினார்.திருவிளையாடற் கதைகள் சிலப்பதிகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது.இவர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சிவ பக்தியில் சிறந்து விளங்கியவர்களுள் ஒருவராக வாழ்ந்தவர்.
பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடற் புராணத்தில் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் விளக்கப்பட்டுள்ளன. அந்நூலின் ஐம்பத்திரண்டாவது படலமாக தருமிக்குப் பொற்கிழியளித்த படலம் உள்ளது. இதில் சோமசுந்தரப் பெருமான் வறுமையில் வாடிய வேதியனாகிய தருமி என்பவனுக்கு மன்னனின் சந்தேகத்தைத் தீர்க்கும் பாடலை தானே எழுதிக்கொடுத்து பொற்கிழி பெற்றுக் கொடுத்த வரலாறு கூறப்படுகிறது.
கதை இதுதான் !
வங்கிய சூடாமணி பாண்டியன் என்பவன் மதுரை ஆட்சி செய்து வந்தார். அவர் மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் கோயிலில் நந்தவனம் அமைத்து பல வகையான மரங்களையும், மலர்ச் செடிகளையும் வைத்து பராமரித்தார். அந்த நந்தவனத்தில் செண்பகப்பூ செடிகளை அதிகம் வைத்து அந்தப் பூக்களை இறைவனுக்கு அணிவித்து வந்தார். அதிகமாக செண்பக மாலையிலேயே இறைவன் காட்சியளித்தமையால், செண்பக சுந்ததரர் என்றும், மன்னன் செண்பகப் பாண்டியன் என்றும் அழைக்கப்பட்டார்.
செண்பக தோட்டத்தில் மன்னன் தன்னுடைய மனைவியுடன் இருந்தபோது, அவளுடைய கூந்தலில் இருந்து மணம் வருவதை அறிந்தான். பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா. செயற்கையாக பூக்களை வைப்பதால் மணம் வருகிறதா என்ற கேள்வி எழுந்தது. தன்னுடைய சந்தேகம் என்ன வென்று கூறாமல், மன்னரின் சந்தேகத்தினை தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் என அறிவிக்க செய்து, சபையின் முன்பு அந்த பொற்கிழியையும் தொங்க விட்டான்.
மதுரை சொக்கநாதரை வணங்கும் தருமி என்ற ஆதி சைவர் இருந்தார். அவர் உறவுகள் இல்லாத அனாதையாக இருந்தார். அவருக்கு திருமணம் செய்து இறைவன் அடி சேர வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஏழையாக இருந்தமையாலும், அனாதையாக இருந்தமையாலும் பெண் கிடைக்காமல் சிரமம் கொண்டார். தன்னுடைய மணவாழ்க்கைக்காக காத்திருந்தவருக்கு மன்னன் அறிவித்த ஆயிரம் பொற்காசுகள் போட்டியைப் பற்றிய செய்தி தெரிந்தது. அப்போது அங்கு வந்த சொக்கநாதர் புலவராக மாறி ஒரு ஓலையை தருமிக்குத் தந்தார். இதை மன்னிடம் கொடுத்தால் பரிசு கிடைக்கும் எனக் கூறினார்.
தருமியும் மன்னரின் அவைக்கு சென்று இறைவன் கொடுத்த பாடலைப் படித்தான். அதில் பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் உண்டு என்ற செய்தி மறைமுகமாக கூறப்பட்டிருந்தது. மன்னனுக்கு தருமியின் பாடல் சந்தேகம் தீர்த்து என்று பரிசினை தருமிக்கு கொடுத்தார். ஆனால் அவையிலிருந்த புலவர் நக்கீரன் என்பவர் தனக்கே அனைத்து புலமையும் தெரியும் என்ற ஆனவத்தால் அந்தப் பாடலில் பொருட் குற்றம் இருப்பதாக கூறி பரிசினை தடுத்துவிட்டார்.
தருமி சொக்கநாதர் கோயிலில் உள்ள இறைவனிடன் நடந்ததைக் கூறி முறையிட, இறைவன் மீண்டும் புலவராக வந்து தருமியுடன் இணைந்து அவைக்குச் சென்றார். அங்கு நக்கீரனுடன் வாதம் செய்தார். நக்கீரன் இயற்கையாக கூந்தலுக்கு மனமில்லை என்று மறுத்தே கூறிவந்தார். அதனால் கோபம் கொண்ட சொக்கநாகப் புலவர், இறைவியின் கூந்தலுக்குமா மணமில்லை என்ற கூற, ஆம் இறைவியின் கூந்தலுக்கும் இயற்கையில் மணமில்லை என்றார் நக்கீரர். செய்தியை நக்கீரர் தன்னுடைய ஆனவத்தினால் சரியானது என்றே மறுப்பு தெரிவித்துவந்தார்.
அதனால் சிவபெருமான் தன்னுடைய நெற்றிக் கண்ணால் அவரை எரித்தார் என்று திருவிளையாடல்
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமஞ்செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் மயிலியிற்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே..
இது தான் அப்பாடல்



%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%




உன்னை சுற்றி நிறைய வரங்கள் உண்டு அதை நீ தான் தேடிக் கொணர வேண்டும் .எமது ஊர் வளவில் ஐநூறு ஆண்டுகள் பழமையான வேப்பமரம் இருந்தது .வீடு கட்டும்பொழுது மூதாதியரின் ஆசி யுள்ளமரமாக அதனை தறி த்து வீடு கட்டிவிட்டார்கள் .தேவதைகள் மரங்களில் வசிப்பார்களாம் .அதில் அம்மனும் ஓன்று .அது காவல் செய்யும் நோக்கில் இரவில் நடந்து செல்வதைக் கண்டிருக்கின்றேன்
ஒரு முறை நான் ஊருக்கு சென்ற பொழுது குரை த்துக் கொண்டிருந்த நாய் அமைதியாக வாலை ஆட்டிக் கொண்டு சிறிது நேரம் நின்றது .
அதிகாலை மூன்று மணி இருக்கும் மிதுவடி ஓசை மட்டும் கேட்டுக் கொண்டு இருந்தது .மறு நாள் விளாத்தியடி வயிரவர் கோவிலுக்கு சென்றிருந்தேன்
(என் பையன் கள் இருவரும் ஒரு கிழமையாக காய்ச்சலினால் பாதிக்கப் பட்டிருந்தார்கள் .எந்த மருந்தும் வேலை செய்யவில்லை)
.கும்பிட்டுவிட்டு அச்டாங்க நமஸ்காரம் பண்ணி எழுந்தேன் .அப்பொழுது கோவிலின் பின்பக்கம் சுற்றி வரும்பொழுது நினைத்தேன் .வயிற்றில் சத்திர சிகிச்சை செய்த இடம் நோகிறது சுவாமி விழுந்து எழும்பக் கஷ்டமாக இருக்கிறது யாராவது கோவில் பிராமணர்கள் வந்து திரு நீறு தரமாட்டார்களா? என் எண்ணினேன் .சரி பார்ப்போம் என்று சுற்றி வருகிறேன் வாசலுக்கு வந்து விட்டேன் மீண்டும் அச்டாங்க நமஸ்காரம் பண்ணக் குனிகிறேன் .
.
யாரோ என் தோளைப் பற்றி நிமித்தினார்கள் .ஒரு அம்மா நின்று திருநீறு கேட்டாய் இதைப் பூசு என்று தந்தார்கள் .கும்பிட்டது போதும் .கிணற்றைக் காட்டி அதில் உள்ள நீரை அள்ளி நீ குடி வயிறு நோய் எல்லாம் மாறிவிடும் .உன் வீட்டுக்கு கொண்டு சென்று எல்லோரும் கொஞ்சம் குடிக்க சொல் என்றார்கள் .எப்படிக் கொண்டு போவது என்று யோசித்தேன் .சரி பரவாயில்லை,கிணற்று தண்ணீரை வேண்டிய மட்டும் குடித்தேன் .என் கைகுட்டையை எடுத்து கைகளையும் வாயையும் துடைத்துக் கொண்டேன் .என் கையை விட்டுத் தவறிய கைகுட்டை கிணற்று வாளிக்குள் விழுந்து வி ட்டது .
சுற்று முற்றும் பார்த்து விட்டு வாளிக்குள் விழுந்த ஈரமான என் கைக்குட்டையை எடுத்து நன்கு பிழிந்து விட்டு காற்சட்டை பை யினுள் வைத்து விட்டு அந்த அம்மா தந்த திருநீறுடன் வீடு வந்தேன் .
என் மகன்மார் இருவருக்கும் திருநீறைப் பூசி விட்டேன்
சொன்னால் நம்ப மாட்டர்கள் காற்சட்டை கனத்தது .என்ன என்று வெளியே எடுத்தேன் எனது கைக் குட்டைக்குள் கிணற்று நீர்
ஆச்சரியம் ஆனால் உண்மை
இருவருக்கும் பருகக் கிண்ணம் ஒன்றில்பிழிந்து விட்டுக் கொடுத்தேன் ,நீற்றைப் பூசி விட்டேன்
என்ன ஆச்சரியம்
காய்ச்சல் இல்லாமல் போய்விட்டது
.யாரிடமும் சொல்லவில்லை நம்பமாட்டார்கள்
எனக்கு நானே சாட்சி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வரம் தருவதால் அது தாவரம் எனப்பட்டது. விருத்தி அடையச் செய்வதால் அதற்கு விருட்சம் என்று பெயர். நாம் நடக்கும் பாதையில் இருக்கும் அருகு முதல் ஆண்டவன் சந்நிதிக்குப் பின்புறம் முளைத்தெழும் மரங்கள் வரை அனைத்துமே தெய்வாம்சம் நிறைந்தவைதான் என்று விருட்ச சிந்தாமணி சொல்கிறது. சில மரங்கள் தனித்தன்மை கொண்டவை என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அசோக மரம்: அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும்.
அத்திமரம்: அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்ப்பார். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மனசாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாக கைகூடும்.
அரசமரம்: அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.
அரிசந்தன மரம்: திருவோண நட்சத்திர நாளில் புதன், சனிக்கிழமைகளில் இந்த மரத்தை வழிபட்டுவர தீமைகள் விலகி, நன்மை சேரும் என்று சொல்வார்கள்.
ஆலமரம்: ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது
கருநெல்லி மரம்: திருமகள் வாசம் செய்வதாகக் கூறப்படும் இந்த மரத்துக்கு லட்சுமி மரம் என்ற பெயரும் உண்டு. வளர்பிறை அஷ்டமி, பூர நட்சத்திரம், பவுர்ணமி நாளில் வழிபட்டால் வறுமை நீங்கி, வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
குறுந்த மரம்: வாஸ்து குறைகளால் வீட்டில் அசம்பாவிதங்கள், தடைகள் ஏற்படுவதாக உணர்ந்தால் இந்த விருட்சத்தின் வேரை வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில் முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்து நடு அறையில் கட்டி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கொன்றை மரம்: சரக்கொன்றை என்ற பெயரில் அழைக்கப்படுகிற இந்த மரத்தை அமாவாசையன்று பூஜை செய்து வந்தால் துஷ்ட சக்திகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.
சந்தன மரம்: சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிபடுகின்றன. இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.
செண்பக மரம்: சௌபாக்ய விருட்சம் என்ற சாஸ்திரப் பெயரைக் கொண்டிருக்கும் இந்த மரத்தை வீட்டில் வளர்த்து செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் வளங்கள் சேரும் என்பது ஐதீகம்.
துளசி: துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசிக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும்.
நெல்லி மரம்: நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கீழே தம்பதிகளை அமரவைத்து அன்னதானம் செய்தால், அன்னதானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும்.
பன்னீர் மரம்: இந்தப் பன்னீர் மரம் திருச்செந்தூர் கோயில் மரம் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த மரத்தை வீட்டில் வளர்த்து அதன் அருகில் வாகனங்களை நிறுத்த, விபத்துகள் நடக்காமல் பாதுகாக்கப்படும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை மற்றும் திரயோதசி திதி நாளில் இந்த மரத்துக்குப் பூஜை செய்யலாம்.
பாரிஜாதகம்: அனுமன் மரம், சிரஞ்சீவி மரம் என்ற பெயர்களுடைய இந்த மரத்தை வீட்டில் வளர்த்து வழிபட்டால் நீண்ட ஆயுள் கிட்டும் என்பது ஐதீகம். அமாவாசை மூல நட்சத்திர நாளில் இந்த மரத்தைக் குழந்தைகள் வழிபட்டு வர ஆயுள் விருத்தியடையும் என்பது நம்பிக்கை.
பிராய் மரம்: மின்னலைத் தாக்கும் விருட்சம் என்ற பெயரும் இந்த மரத்துக்கு உண்டு. தொழிற்சாலை வைத்திருப்போர் முன்பகுதியில் இந்த மரத்தை வளர்த்தால் 5 கி.மீ சுற்றளவுக்கு இடி தாக்காது என்று சொல்வார்கள். திருச்சி திருப்பராய்த்துறை சிவாலயத்தில் தல விருட்சமாக ஒரு மரம் மட்டுமே உயிர்வாழ்கிறது. பிராய் மரங்கள் நிறைந்திருந்ததால் திருப்பராய்த்துறை என்ற பெயர் நிலைத்தது
பின்னை மரம்: திருமண விருட்சம் என்ற அபூர்வமான இந்த மரத்தைத் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் வெள்ளி, பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றி வந்து வணங்கி, கையில் காப்புக் கட்டிக்கொண்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.
பும்ஸிக மரம்: சந்தான பாக்யத்தைத் தருகிற இந்த தெய்வ விருட்சத்தை வீட்டில் வளர்த்து வந்தால் பிள்ளைப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. இதன் காற்று படும்படி மரத்தைச் சுற்றிவர வேண்டும்.
புளிய மரம்: புளியமரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும். புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாகும்.
மகிழ மரம்: இந்த மரம் திருவண்ணாமலை கோயில் மரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தெய்வ மரத்தை வீட்டில் வளர்த்து வந்தால், குழந்தைகள் அதன் காற்றைத் தொடர்ந்து சுவாசித்து வர அறிவு வளரும் என்று சொல்வர்.
மந்தாரக மரம்: வெள்ளை மந்தாரை என்ற மலரைத் தருகிற இந்த விருட்சத்தை செவ்வாய், சனி ஏகாதசி தினங்களில் வழிபட்டால் மனதில் எண்ணிய நல்ல செயல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கேட்டதைத் தரும் கல்பதரு என்றும் இந்த மரத்தைச் சொல்வார்கள்.
மருதாணி மரம்: மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கேட்ட கனவுகள் வராது.
மாதுளம் மரம்: மாதுளை மரம் லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே விளகேற்றி தம்பதிகளால் வலம் வர தம்பதிகளிடையே அன்யோன்யம் ஏற்படும்.
மாமரம்: மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தபடுகின்றன. சுபகாரியங்கள் செய்யும் போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்க விடப்படுகிறது.
ருத்ராஷ மரம்: ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. ருத்ராஷ கோட்டையை உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.
வில்வமரம்: வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.
வேப்பமரம்: வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள் ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்து வணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.
ஷர்ப்பகந்தி: இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகள் உடலில் கட்டி கொண்டால் பாம்புகள் தீண்டாது.


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%














கருத்துகள்