நாம் சிறுவயதில் கேட்ட பாடல் இது
(((((((((((************)))))))))))))))))))))))))))))((((((((((____________
கதை கதையாம் காரணமாம் !
கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் ஒரு தோரணமாம்
தோரணத்தில் ஒரு துக்கடாவாம்
துக்கடாவில் கொஞ்சம் வைக்கோலாம்
வைக்கோல எடுத்து மாட்டுக்குப் போட்டா
மாடு பால் கொடுத்ததாம்
பாலைக் கொண்டுபோய் கடையில ஊத்துனா
கடைக்காரன் தேங்காய் கொடுத்தானாம்
தேங்காய் ஒடைக்க கல்லுக்குப் போனா
கல் எல்லாம் பாம்பாம்
பாம்ப அடிக்கத் தடியத் தேடினா
தடி எல்லாம் சேறாம்
சேறு கழுவ ஆத்துக்குப் போனா
ஆறெல்லாம் மீனாம்
மீனப் புடிக்க வலைக்குப் போனா
வலை எல்லாம் ஓட்டையாம்
ஓட்டைய அடைக்க ஊசிக்குப் போனா
ஊசிக்காரன் ஊருக்குப் போயிட்டானாம்
ஒரு கதை தொடக்கி முடியுமுன்னரே அடுத்த செய்தி ரெடி ஆகி விடுவதனால் ..
தகவல்கள் திசை திரும்புகின்றன
மறைக்கப் படுகின்றன .மூடி மறைக்கப் படுகின்றன .
தினம் ஒரு கொலை ,ஏமாற்றுதல் திருட்டு இன்னோரன்ன ஏமாற்றுக்கள்
என்று செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன
+பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து
தாழ்விடைத்து நோ்கருதும் திட்டையும் – ஊழினால்
ஒட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவா்
நட்கப் படாஅ தவா்”
அதாவது பொய்யான சொற்களைப் பேசி அதனால் உயிர்வாழ்கின்ற அழிவற்றவனும்,
முறைமைமாறி ஒருவன் தாழ்ந்த இடத்துத் தன்னை உயா்ந்தவனாகக் கருதும் மூங்கில் போன்ற புரைபட்ட மனத்தையுடையவனும்,
பிறரிடம் சோ்ந்து வினை ஆற்றும் போது தனக்குரிய பயனையே எதிர்பார்த்து செயல் செய்கின்றவனும்,
ஆகிய இம் மூவரும் யாராலும் நட்புக் கொள்ளத் தகுதியற்றவா்கள் .
“கல்லாதான் தான்காணும் நுட்பமும் காதிரண்டும்
இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தலும் – இல்லாதான்
ஒல்லாப் பொருளில்லார்க்கு ஈததளியான் என்றலும்
நல்லவா்கள் கேட்பின் நகை”
புரிகிறதா ?
கல்வியறிவில்லாதவன் தானே ஆராய்ந்து காண்கின்ற நுட்பமான பொருளும்
இரண்டு காதுகள் இல்லாதவள் தான் மிக்க அழகுடையவள் என்ற இறுமாப்பு கொள்ளுதலும்
பொருளில்லாதவன் இல்லாதார்க்கு ஈத்தறியான் என்றாலும், தான் வறியவரிடத்து மிக்க அருளுடையவன் என்றலும்
அறிவுடையவா்களாகிய சான்றோர்கள் கேட்பின் நகைப்பர் இல்லையா ?
இது தானே முகநூல்களில் நடக்கிறது
“கொண்டான் வழியொழுகல் பெண்மகன் தந்தைக்குத்
தண்டான் வழியொழுகல் தன்கிளை அஃது அண்டாதே
வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு
கோல்வழி வாழ்தல் குணம்”
தன்னை மணந்து கொண்டவன் சொற்படியே ஒரு பெண் ஒழுகல்
மகன், தந்தையின் சொல்லைத் தட்டாதவனாய் அவன் சொல்படி நடத்தல்
போரின்கண் வீரா்கள் பகைவரோடு சேராமல் தன்மன்னனோடு வாழ்தல்,
குடிமக்கள் அரசனது கோல்வழியே வாழ்வதும்
அவரவர்க்குரிய குணங்களாகு ம்.
பொதுவாக மக்களாகிய நாங்கள் நீதி நூல்களைக் கற்றுக் கொள்ளல் வேண்டும்
தர்ம நூல்களை கற்றுக் கொள்ளல் வேண்டும் அதன் படி ஒழுகல் வேண்டும்
அப்படி நடந்தால் கொலை செய்கின்ற உணர்வு நீங்கி
நாடு சுபீட்சம் அடையும்
(சில விடயங்களை தவிர்த்து விட்டு விடுகிறேன் .காலம் நேரம் வரும் பொழுது விளக்கமாக தருகிறேன் )
தாம் சார்ந்த சாதி, குலம், மதம் ஆகியவையே மனித நேயம், அன்பு, பந்தம், பாசம், உறவு முறை ஆகியவைகளைவிடமிக மேன்மையானவை, அவற்றை என்ன விலைக் கொடுத்தேனும் காக்க வேண்டும் என்றுத் திடமாகக் கருதும் மக்கள் உள்ளனர்...இவர்கள் தம் குடும்பத்து உறுப்பினரொருவர் பிற சாதி, குலம், மதத்தைச் சேர்ந்தவர்களை சாதி/மத மறுப்புத் திருமணம் செய்துகொண்டாலோ அல்லது காதலித்தாலோ, தாம் பெற்ற மகள்/மகனாக இருந்தாலும், அல்லது உடன்பிறந்தவர்களாயினும் அவரைக் கத்தியால் குத்தியோ/வெட்டியோ அல்லது விடம் வைத்தோ கொன்றுவிடுவர்...மேலும் சில சூழ்நிலைகளில் ஒரு குடும்ப உறுப்பினரின்,தம் குடும்பத்துக் கௌரவத்திற்கு விரோதம் என்று நினைக்கும் கள்ளக் காதல் தொடர்பு கொள்ளுதல், குடும்பத்தினரால் ஒழுங்குச் செய்யப்பட்டத் திருமணத்தை ஏற்க மறுத்தல், திருமணத்திற்கு வெளியே பாலுறவுக் கொள்ளுதல் ஆகியச் செயல்களும் ஆணவக் கொலைக்கு வழிவகுக்கிறது...கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்களும், அது அவர்களின் தவறல்ல எனினும், ஆணவக் கொலைக்கு ஆளாகின்றனர்...தன் சாதி, குலம், மதம் மற்றும் குடும்பம் என்று ஆணவம் கொண்டுச் செய்யப்படும் கொலை ஆணவக் கொலை ஆகும்...இதை கௌரவக் கொலை என்றும் குறிப்பிடுவர்.

கருத்துகள்
கருத்துரையிடுக