முகநூலும் பக்தியும்
மனதை வேறு எதிலும் நாட்டம் இல்லாமல் சீவனில் ஆத்மாவாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் பிரம்மத்தில் மனதை லயித்து கொண்டிருப்பவர் அடையும் பேரானந்தத்தை, புலனுகர் போகங்களில் ஈடுபட்டுள்ளவன் அடைய முடியாது.
எந்த விருப்பமும் இல்லாதவன், பொறிகளை அடக்கியவன், சாந்தமும், சமபுத்தியும் வாய்க்கப் பெற்றவன்; பிரம்மத்திலேயே மனதை நிலைநிறுத்தி நிறைவோடு இருப்பவன் எவனோ, அவனுக்கு எல்லாம் சுகமாகவே இருக்கும்.
பொய்யான பொருள்களைப் பற்றிச் சிந்திப்பதை விட்டு, மெய்ப்பொருளான பிரம்மம் எனும் பகவானைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். மனதை பிரம்மத்தில் நிலை நிறுத்துவதே பக்தியோகத்தின் சிறப்பாகும்.
பக்தன் தனது குரு மற்றும் வேதாந்த சாத்திரங்களின் துணை கொண்டு, வேதாந்த அறிவினால் பிரம்மத்தை அடையும் ஞானத்திற்கு ஞானயோக பக்தியாகும். இந்த பக்தியை பராபக்தி எனப்படும்.
உருவம் அற்ற பிரம்மத்தை மனதில் நிலைநிறுத்தி செய்யும் பக்தியை நிர்குண உபாசனையாகும்
உருவத்துடன் கூடிய இறைவனை மனதில் நிலைநிறுத்தி செய்யும் (தியானத்தை) பக்தியை சகுண பிரம்ம உபாசனையாகும்.
தனது நன்மைக்கு அன்றி உலக நன்மைக்காக, இறைவன் மீது செய்யும் பக்திக்கு நிஷ்காம்ய பக்தியாகும்
தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான, இறைவன் மீது பக்தி செலுத்துதல் என்பது காம்ய பக்தியாகும்.
பல்லவர்களின் ஆட்சிக் காலமான கி பி 600 முதல் 900 முடிய உள்ள காலத்தில், தமிழகத்தில், தழைத்தோங்கிருந்த சமணம் மற்றும் பௌத்த சமயக் கருத்துக்களை எதிர்த்து வளர்ந்தது இந்து சமய பக்தி இயக்கம். இக்கால கட்டத்தில் நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்கள், தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் மற்றும் கம்பராமாயணம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் போன்ற சைவ மற்றும் வைண சமய பக்தி இலக்கிய நூல்களை இயற்றினர்.
பெருமளவில் சமண மற்றும் பௌத்த சமயத்திற்கு மாறியவர்கள் மீண்டும் தாய்ச் சமயமான சைவ மற்றும் வைணவ சமயத்திற்கு மாறினர்.
பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் பக்தி இயக்கம் உச்ச கட்டத்தை நோக்கிச் சென்றது. சமண, பௌத்த தத்துவக் கருத்துக்களுக்கு எதிரான வாதப் போரில் சைவர்கள் வென்றனர்.
பக்தி இயக்கத்தின் விளைவாக சைவமும், வைணவமும் தழைத்ததால், தமிழ்நாட்டிலும்
இலங்கையிலும் புறச்சமயங்களான பௌத்தமும், சமணமும் மறைந்தது.
சிங்களவர்களுக்கு முன்னமே புத்தரின் பஞ்ச சீலக் கொள்கை தமிழரிடையே தனது செல்வாக்கை கொண்டிருந்தது
பக்தி இயக்கத்தால் தமிழ் பக்தி இலக்கியங்கள் மலர்ச்சியடைந்தது. மேலும் தமிழ் நாடெங்கும் சைவ, வைணவக் கோயில்கள் மீண்டும் எழுப்பப்பட்டது.
வட இந்தியாவில் முகலாயர் காலத்தில்தான் பக்தி இயக்கம் தோன்றியது. இருப்பினும் கி பி எட்டாம் நூற்றாண்டு முதல் ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வர், சைதன்யர், மீராபாய், மற்றும் நிம்பர்க்கர் போன்றவர்களின் முயற்சியால், மக்கள் பௌத்த, சமண கருத்துகளிலிருந்து விடுபட்டு, இந்து சமயத்திற்கு திரும்பினர்.
முகலாயர்களின் இந்து சமய எதிர்ப்புக் கொள்கையால் குரு நானக் போன்றவர்களால் சீக்கிய சமயம் உருவானது.
கி பி ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு முடிய பக்தி இயக்க இலக்கியத்தின் ஆணி வேராக விளங்கிய புனிதர்களான திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், அப்பர், சுந்தரர், நம்மாழ்வார், ஆதிசங்கரர், நாதமுனிகள், வித்யாரண்யர், வல்லபர், நிம்பர்க்கர் மற்றும் தியாகராஜர் போன்றோர் சிறந்த பக்திப் பாடல்களை எழுதிய எழுத்தாள கவிஞர்களும் ஆவர்
இப்போதெல்லாம் பக்தி என்பது தினமும் கோவிலுக்கு சென்று விளக்கேற்றுவதும் விழுந்து விழுந்து கைகூப்பி கும்பிடுவதும் எங்கோ காடு மலையில் கோவிலையெல்லாம் தேடிபிடித்தும் மாபெரும் நிகழ்வுகளுக்குச் சென்று செல்பி எடுத்துக்கொள்வதுமே பக்தி என்கிறார்கள்........
உங்களின் கஸ்டம் தீர பேப்பரில் இருந்து பேஸ்புக் வரை சுற்றிக்கொண்டிருக்கும் அத்தனை இலவச பரிகாரங்களையும் செய்த பின்னரும் கூட கஸ்டம் தீரவில்லையென ஆதங்கப்படுகிறீர்களே அதுவா பக்தி?
அன்னதானம் என்கிற பெயரில் மூன்று வேளை சாப்பாட்டிற்கு எந்த கவலையும் படாமல் பசியின் தன்மை அறியாதவனுக்கு பகட்டாய் அளிக்கிறீர்களே தானம் அதுவா பக்தி??
உள்ளொன்றே இறைவனிருக்க வெளியொன்றே வெட்டிக்கதை பேசி விட்டு கோவிலுக்கு போய்வந்தோமென கணக்கு காட்டுகிறீர்களே இதுவா பக்தி......
பக்தி என்பது சுயநலமற்ற அன்பு கடவுளின் மீது செலுத்துவது தான் பார்க்கும் எல்லா கடவுளையும் வணங்குகிறீர்கள்........அதைக்கொடு இது சரியாக வேண்டும் என்று கேட்கிறீர்கள் ஆனால் குலதெய்வத்தை மறந்து விடுகிறீர்கள்......
முதலில் எந்த கடவுளானாலும் அவரின் மீது ஆத்மார்த்தமாக அன்பு செலுத்துங்கள் அவரின் பாதத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள் அவன்மீது நம்பிக்கை வையுங்கள்.... இல்லாதவனுக்கு கொடுத்து உதவும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ளுங்கள்.....
நீங்கள் அனுபவிக்கும் கஷ்டம் என்பது அவரவர் கர்ம விதிப்பலனே.. தர்மத்தாலே கர்மம் போகும்...ஆகையால் கடவுளின் பேரைச்சொல்லியாவது தன்னால் முடிந்த தானத்தை செய்து வாருங்கள்..அதையும் தாண்டி சிக்கல் தொடர்ந்தால் வேறு வித பரிகாரங்களை நாடலாம்......
பக்தி என்பது பகட்டுக்கு இல்லை ஆத்மார்த்த அன்பிற்காக மட்டுமே கடவுள் ஏங்குகிறான்...உண்மை என்னவெனில்
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது .
கருத்துகள்
கருத்துரையிடுக