மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா !!!!!!!!
இதுவா உன் காதல் ?
இந்தப் பதிவு காதலர்களுக்கான பதிவு
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
காதல் என்பது இருவரது தனிப்பட்ட அன்பு பிணைப்பாக இருந்தாலும் நட்பு, குடும்பம், சமூகம் மீதான காதலும் கூட காதல் தான். கொஞ்சம் இடம் கிடைத்தாலும் கட்டிஅணைத்து முத்தமிடுதலை நீங்கள் விரும்பினால் இது மோக காதல். இது உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லதல்ல. காதலில் மோகம் அதிகமாவது நல்லதல்ல..இது மகிழ்ச்சியை உண்டாக்கும் பாலின கவர்ச்சியாக இருந்தாலும் மிகுந்த துக்கத்தை உண்டாக்கவும் செய்யும்.
கவர்ச்சி தீர்ந்த பிறகு உங்களுக்கு ஆழமான அன்பு வந்தாலும் வரலாம். அல்லது வராமலே பிரிந்து போகவும் செய்யலாம்.இது தான் இன்றைய காதலில் முக்கிய பிரச்சனை .இப்படிப் பிரச்சனை வரும் சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் ஆதரவைக் கொடுத்து ஒற்றுமைப் படுத்த முயல வேண்டும் .
ஆனால் பெற்றோர்கள் பிரித்து விடுவதில் தான் அக்கறை கொள்கிறார்கள் .இதனால் பெரும்பாலும் விவாகரத்து சாதாரணமாகி விட்டது
நட்பு கலந்த பாசம். காதலில் துணைநிற்கும்
ஒவ்வொருவருமே மற்றவரை சமமாக நினைப்பார்கள். இது நண்பர்களிடையே கொண்ட பாசத்துக்கு நிகரானது. கடினமான நேரங்களில் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.இவர்களின் காதல் தெய்வீகமானது .புரிதல் என்றும் இருக்கும் .
நட்போடு கூடிய இந்த காதல் மற்ற காதலை காட்டிலும் அதிக சக்தி வாய்ந்தது இதற்கு ஆயுள் அதிகம். இவர்கள் தனிமை விரும்பியாக இருந்தாலும் நிதானம் தவறமாட்டார்கள்.
துணையின் வருத்தத்தில் ஆதரவாக வருடி கொடுப்பது மிகப்பெரிய சக்தியைஒருவர் ஒருவரின் மனதுக்கு கொடுக்கும்.
நட்பின் அடையாளமாக அவர்களிடையே அன்பு பெருக்கெடுக்கும். ஆரோக்கியமான காதல் என்று சொல்லும் இது அவர்கள் வாழ்வு முழுமைக்கும் நேர்மறையான சந்தர்ப்பத்தையே கொடுக்கும். இந்த காதலர்கள் பிறரை நெகிழ செய்யும் வகையில் ஆயுள் வரை பாசமாக இருப்பார்கள்.
காதலிக்கும் பொழுது
காதலின் போது வயிற்றீல் பட்டாம்பூச்சி உணர்வு, எப்போதும் இளமை கனவு, பசியின்மை, முகத்தில் புன்னகை எல்லாமே காதலில் விழுந்தமைக்கான அடையாளங்கள். அதோடு இந்த நேரத்தில் அவர்களது மூளை போதையில் இருப்பது போன்று செயல்படும். இதை ஆய்வுகளும் தெரிவித்துள்ளது.
காதலில் ஊடல் என்பது வேறு. சிறு தவறையும் பெரிதாக்கி பூதாகரமாக சண்டை போடும் காதல் ஆரோக்கியமான எதிர்காலத்தை உண்டாக்காது.
ஆனால் தவறை உணர்ந்து துணை மன்னிப்பு கேட்கும் போது அதை பெரிதுபடுத்தாமல் மன்னிப்பையும் அன்பையும் திருப்பி செலுத்தும் போது அந்த அன்பு காதல் பல மடங்கு ஆரோக்கியம் பெற்றுவிடுகிறது. இது அவர்களுக்குள் மட்டும் அன்பை வளர்க்காமல் அவர்களை சுற்றீ இருப்பவர்கள் சமூகத்திலும் அன்பை வளர்க்க செய்யும்.
காதலின் ஆரம்பத்தில் ஊடல்கள், கோபம், சிறு சண்டை, சச்சரவு, தாபம் என எல்லாமே கடந்து வந்த காதலானது இருவருக்குள் நல்ல புரிதலை கொண்டிருக்கும் இந்த நிலை மிக ஆரோக்கியமானது.
இருவருமே எப்போதும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்புவார்கள். இவர்கள் திருமணத்துக்கு பிறகு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார்கள். பக்குவப்பட்ட இந்த காதலை கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
ஒருவரை ஒருவர் காதலிக்கும் முன்பு ஒருவரை ஒருவர்
நேசிப்பதற்கு முன்பு உங்களை நீங்கள் நேசிக்க கற்றுகொள்ளுங்கள். இது சுயநலம் கிடையாது. இது எதிர்மறையான அன்பும் இல்லை. உங்களிடமிருந்து அன்பை பிறருக்கு கொடுப்பதாக இருந்தால் அது உங்களிடம் இருந்தால் தானே பிறருக்கு கொடுக்க முடியும்.
நம் மீது நமக்கே இல்லாத காதலை எப்படி மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்.
காதல் என்பது இரண்டு உறவுகளுக்குள் மட்டும் உண்டாகும் ஒரு அன்பு பிணைப்பு அல்ல. காதலுக்கு பிறகு திருமண பந்தத்துக்கு பிறகு குடும்பத்தையும் நேசியுங்கள். காதலியுங்கள்.
காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம்.
வியர்க்கும் கைகள், பசியின்மை ( "பாலுங்கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடி" ), முகம் உணர்ச்சிப்பெருக்கில் உப்புவது, இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவை இவை .
காதலுக்கு பல கட்டங்கள் உண்டு. ஒவ்வொரு கட்டமும் ஒருவிதமான ரசாயனப் பொருட்களால் தூண்டப்படும்.
உங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சகாவுடனோ அல்லது கல்லூரியிலோ அல்லது உங்கள் சமூக வட்டத்தில் இருப்பவர் ஒருவருடனோ உங்களுக்கு ஏற்படும் ஒரு வித ஆழமான பற்றை , நேசத்தை நீங்கள் உணரலாம். இது மாதங்கள் அல்லது சில ஆண்டுகளுக்குப் பின்னர், மேலும் கனிந்து மாற்றம் பெற்றும் திடீரென நீங்கள் அவர் மீது காதல் வயப்படுவீர்கள்"
இப்படியான காதல் ஆராய்ந்து அறிந்து கொண்டே வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் .அலுவலகத்தில் பலர் உண்மையை மறைத்தே வாழ்கிறார்கள் .தீர விசாரித்து புரிந்து காதலியுங்கள் .
காதலர்கள்
காதலில் வீழ்ந்து மற்ற எல்ல விஷயங்களையும் காதலர்களால் சிந்திக்கக்கூட முடியாத நிலைஏற்படுகிறது . அவர்கள் உண்மையில் பசியை இழப்பார்கள். தூக்கம் தேவைப்படாது. தங்கள் காதலரைப் பற்றியே பகல் கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.
காதலின் புனிதம்
ஒரு பூவில்
புனையும் மென்மை ...
நுனி வாளில்
உரசும் கூர்மை ...
எழுதும் கோலில்
உதிக்கும் உண்மை ...
உயர் சொல்லில்
தெறிக்கும் திண்மை ...
உயிர் பெண்மையில்
உள்ள தூய்மை ...
அத்துனை
மென்மையும் ...
கூர்மையும் ...
உண்மையும் ...
திண்மையும் ...
தூய்மையும் கலந்து ...
இதயத்தில் விதைத்து
உயிரில் முளைப்பதே
காதல் ...
தவறி காதலில் தோல்விகண்டவர்கள்
தங்கள் உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதும் உண்டு. மேலும் அவர்கள் மதிப்பற்றவர்களாகவும் அன்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள். எதோ வாழ்க்கையே போய் விட்டது என்று மூழ்காதீர்கள். காதல் உணர்வுகள் அழகான ஒன்று தான். ஆனால் அதை உங்களை ஆட்கொள்ள விடாதீர்கள். இல்லையென்றால் நீங்கள் பிரிவில் இருந்து மீண்டு எழ பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். வருத்தத்திலும், வேதனையிலும் இருப்பதை விடுத்து அதிலிருந்து மீள முயற்சி செய்யுங்கள்
காதல் தோல்வி என்பது நரகவேதனை தான் .
காதலித்தவர்களும் ,காதலில் தோல்வி கண்டவர்களும் சரி
உங்களை புண்படுத்தும் எந்த உணர்வுகளையும் மதிக்காதீர்கள். நீங்கள் அதை மதிக்கும் போது அது உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் ஏற்படும் உங்களை தவறான பாதையில் அழைத்துச் செல்லும்.
நானும் காதலில் மேற்படி இரண்டிலும் அனுபவம் மிக்கவன் ,
தன்னம்பிக்கையும் எதையும் தாங்கும் இதயமும் இருந்தால் உங்கள் முகத்தில் அந்த தாக்கங்கள் வராது .
நீங்கள் காதலிக்கின்ற பெண்ணானவள்அல்லது ஆண் ஆனவன் தன்னுடன் என்றும் தொடர்பில் இருக்க சொல்கிறாள்/சொல்கிறான் .
நீங்களோ ஒரு பெரிய அதிகாரி .பலருக்கு ஆலோசனை உதவி செய்வதற்கு தான் உங்களின் நேரம் போதுமானதாக இருக்கிறது .இப்பொழுது தொடர்பு சாதனங்கள்whatsup ப்போன்றவற்றின் மூலம் அடிக்கடி தொடர்பில் வரக்கூடும்
சிலவேளை board மீட்டிங் கில் கூட நீங்கள் இருக்கலாம் .இப்படியான் சந்தர்ப்பங்களில் பிரச்சனைகள் காதலில் ஏற்படும்
வீண் சந்தேகங்கள் ஏற்படும் .அலுவலக இரகசியங்களை வெளியில் சொல்ல முடியாது .இங்கே காதலில் நிம்மதியை தொலைத்து விடுவீர்கள்
இருவரின் மேலேயும் தப்பு இருக்கலாம். எனவே நீங்கள் மட்டும் பழியை சுமத்தாதீர்கள். இது ஒரு மோசமான நிலையை உங்களுக்கு ஏற்படுத்தலாம். எனவே உங்கள் இருவருக்குள் எவ்வளவு கோபமாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு தோல்வியை உங்களால் ஏற்பட்ட பிறகும் வாழ்க்கை என்பது இருக்கிறது.
பிரிந்த பிறகும் ஒருவரின் வாழ்க்கை என்பது நிற்காது
ஓடிக்கொண்டு தான் இருக்கும்.
எனவே நீங்கள் மற்றொரு நபரின் மீது கூட காதல் வயப்படலாம். காதல் வரலாம்.
ஆனால் இந்த உறவு வலுவாக இருக்க வேண்டும் என்றால் முந்தைய காதல் உறவை நீங்கள் மதிப்பீடு செய்ய வேண்டும்.
பிரிந்த காதல் உறவில் இருக்கிற அதே தப்பை நீங்கள் மறுபடியும் செய்யக் கூடாது.
எனவே தோல்விக்குப் பிறகு
உங்களுக்கு தனிமை, கோபம், அழுகை, வெறுப்பு போன்ற பலவித உணர்வுகளை கொடுத்துச் செல்லலாம். நிறைய பேர் இந்த உணர்வுகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். இதனால் அவர்களுக்கு தற்கொலை போக்கு, கொலை போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர். வாழ்க்கையின் முடிவல்ல இது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களை நேசிக்க இன்னும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
உங்க காதல் உறவை மதிப்பீடு செய்து செய்த தவறை திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
இது அடுத்து வரும் உங்க வாழ்க்கையை மேம்படுத்தும்.எங்கிருந்தாலும் வாழ்க என்று கூறி விடுங்கள் உங்களின் வேதனைகளை சில சில பெரு மூச்சுக்களை விட்டு ஆசுவாசப்படுத்தி வாழக் கற்றுக் கொள்ளுங்கள் .
வலிகளை தாங்கிக் கொள்ளாமல் அழுவது தவறு இல்லை.. ஆனால் அதே வலிகளுக்காக மீண்டும் மீண்டும் அழுவது தவறு.
நினைத்து நினைத்து சிரிக்க கூடிய மகிழ்ச்சியும் காதல் தான்.. நம் உயிருக்கும் மேலானவர்கள் நம்மை நினைக்காததால் அழக்கூடிய வலியும் காதல் தான்.!
ஒருவரை உண்மையாக நேசித்தால் வார்த்தையால் சொல்லாதீர்கள்.. உங்கள் செயலில் அதை காட்டுங்கள்.. ஒருவரை உண்மையாக வெறுத்தால் வார்த்தையால் சொல்லிவிடுங்கள்.. உங்கள் செயலில் காட்டாதீர்கள்.
உடல் காயத்தை கண் கொண்டு பார்த்திட முடியும். மனதில் ஏற்படும் காயத்தை பார்த்திடவும் முடியாது. மற்றவர்களால் உணர்ந்திடவும் முடியாது.
என்னை தவிர எனக்கு யாரும் நிரந்தரமில்லை என்று உணர்வதற்குள் எத்தனை ஏமாற்றங்கள்.
எல்லோர் வாழ்விலும் நிச்சயம் இருக்கும்.. ஒருமுறை சாகடித்து நரகத்தை காட்டி சென்ற காதல் ஒன்று.
அவமதிப்பதை விட வலி மிகுந்தது நம் அன்புக்குரியவர்கள் நம்மை கண்டுகொள்ளாமல் இருப்பது.
என்னதான் வலிகளை கொடுத்தாலும் என் இதயம் நேசித்து கொண்டு தான் இருக்கும் அந்த இதயத்தை நினைத்து.
சில கேள்விகளுக்கு புன்னகை தான் பதில் என்றாலும்.. அந்த புன்னகைக்கு பின்னால் எவ்வளவு வலிகள் மறைந்த்திருக்கும் என்று அந்த இதயத்திற்கு மட்டுமே தெரியும்.
ஏன் என்று தெரியவில்லை உண்மையான அன்பு எப்போதும் நிராகரிக்கப்பட்டு விடுகின்றது.
எனக்கு வலிக்கும் என தெரிந்த பின்பும் வலி தர உன்னால் முடிந்தால்.. வலிக்காதது போல் நடிக்க என்னாலும் முடியும்.
வெளி நாட்டில் மட்டுமல்ல
இப்போ உள்ளூரிலும்
பலரது திருமண வாழ்க்கைகள் கௌரவ கொலைகள் தானே..!
பிரிவு என்பது அதுவாக நிகழ வேண்டும்.. புறக்கணிப்பு எல்லாம் கொலைக்கு சமமானது.
காதல் வலிகளுக்கு பின்னால் ஒளிந்திருப்பது கோபங்கள் அல்ல.. தாங்க முடியாத ஏமாற்றங்கள் மட்டுமே.!
காயங்கள் உருவாக கூர்மையான கத்திகள் தேவையில்லை.. புரிதலற்ற வார்த்தைகள் போதும் வலிக்க வலிக்க நின்று கொல்லும்.. உடல் காயத்தை விட மனக்காயம் அதிக வலிகளை கொடுக்கும்.
ஆறுதல் கூற முடியாத வலிகளுக்கு அழுகை சிறந்த மருந்தாக இருக்கும்.
உன்னை அதிகம் நேசிப்பவர்களை அதிகம் நோகடிக்காதே அவர்களின் மௌனமே உனக்கு தாங்க முடியாத தண்டனை ஆகிவிடும்.
என் காதலில் மறக்க முடியாத இனிமையான நாட்களும் உண்டு.. மறந்து விடாத என ஏங்கும் வலிகள் நிறைந்த நாட்களும் அதிகம் உண்டு.
சிலரின் மௌனம் திமிரல்ல.. அவர்களுக்குள் இருக்கும் வலிகளின் வெளிப்பாடு.
பல உறுத்தல்களோடு சேர்ந்திருக்கும் காதலை விட.. சில நல்ல நினைவுகளோடு பிரிந்து செல்வதே சிறந்தது.
நான் கேட்டது அழகிய நேரங்கள்.. நீ கொடுத்தது விழிகளில் ஈரங்கள்.. வலிகளுடன் தொடர்கிறது என் வாழ்க்கை. என்பதல்ல
சில கவிதை வரிகள் எனக்குப் பிடித்தவை அவற்றை இதயத்தை தொட்டு தருகிறேன்
போதையால் அழிந்த இளைஞர்களை விட
பேதையால் அழிந்த இளைஞர்களே அதிகம் ...!!!
காதலில் தோற்றவன்
மனஉறுதி மிக்கவன்
எல்லா தடைகளையும்
வெறியோடு கடப்பான்
காதலில் மன பக்குவம்
இல்லாதவன் -தான்
காதல் பைத்தியம் ஆகிறான்
காதலுக்கு கனவு தேவை
காதலே கனவாக்கி விடக்கூடாது
பெற்றோர் காதலிக்கலாம்
பிள்ளைகள் காதலித்தால்
கேட்டுவிடுவார்கள் -இதுதான்
காதல் வழக்காரோ ...?
காதலியிடம் எத்தனை
மணித்தியாலமும் பேசு
ஆனால் ,
ஒரு நிமிடம் கூட சந்தேகபடகூடாது ...!
கண்ணாடி முன் நின்று அழு
அதுதான் நீ அழும்போது அழும்
மற்றவை எல்லாம் போலிக்கு அழும்
நடிப்பு என்று சொல்லி விலகும் ....!!!
காதலில் கண்ணீரில் கவிதை எழுதினாலும்
இரத்தத்தால் எழுதினாலும் - துடிக்காது
உடலால் தோன்றிய காதல் ...!!!
ஆண்களை விட பெண்ணிடம்
தான் காதல் பொக்கிஷம் உண்டு
அந்த பொக்கிசத்தை கண்டுபிடிக்கும்
இளைஞன் அறிவாளி
அவனே சிறந்த காதலன்
பெண்கள் இவனையே
தேடுகிறார்கள் ....!!!
உயிருக்காக வாழாதீர்
உயிரே நீ என்று
வாழுங்கள்
காதல் தோற்றபின்
இதயம் கல்லாகலாம்
காதலே இல்லாமல்
கல்லாக்காதீர்
மாப்பிள்ளை பார்க்கும் போது
பெண்களே -நீங்கா யாரையும்
காதலித்தீர்களா ...?
என்று கேழுங்கள் -இல்லை
என்றால் அந்த திருமணத்தை
விரும்பாதீர்கள் -உன்னிடம்
ஒரு எந்திரன் வருகிறான் ....!
திருமணம் ஆகாவிட்டால்
பரவாயில்லை
காதலிக்காமல் இருந்துடாதீர்
பிறப்புக்கே அர்த்தமில்லாமல்
போய் விடுவீர் ....!!!
பெண்களே
விழிப்பாக இருங்கள்
ஆண்கள் உண்மையை விட
பொய்யை உண்மைபோல்
சொல்வதில் வல்லவர்கள் ....!!!
ஆண்களே
விழிப்பாக இருங்கள்
நிறைவேற்ற வேண்டியை பெண்கள்
அழுது கொண்டே சாதித்திடுவர் ...!!!
காதலர்கள் பகலில்
வெட்கப்படுவது அதிகம்
இரவில் வெட்கப்படுவது
மிக குறைவு ....!!!
உன் கண்ணில் தெரிகிறது
காதலிக்க வேண்டும் என்ற ஆசை ....
காதலித்துப்பார்
நிச்சயம் புனிதனாவாய் .....!!!
காதல் இருக்கும் வரைதான் இதயம்
இல்லாவிட்டால் மிரமிட் ...!!!
கவிஞர் கூறுவது பொய்யல்ல....!!!
கவிதை சொல்வதெல்லாம் மெய்யல்ல...!!!
பேனையால் மை கசிகிறது....!!!
கவிதையில் வரிகள் வலிக்கிறது ...!!!
மண்ணும் விண்ணும்
ஆணும் பெண்ணும்
என்பதால் தான்
பெண்ணின் மனதை புரியமுடியாது
என்கிறார்கள் ....!!!
இளவட்டங்களே...
காதல் என்பது
அடகு கடைதான்
முதலில் சிரிப்பின்
மூலம் அடகுக்கடை
திறக்கப்படும் ....!!!
அடுத்து நீ சிரிப்பை
அடகுவைப்பாய் ...!!!
இதயத்தை அடகுவைப்பாய் ...!!!
வாழ்க்கையை அடகுவைப்பாய் ...!!!
கடைசியில் வெறும்
கையுடன் நின்று விடாதே ....!!!
நடந்துபார்
தூரம் தெரியும்
காதலித்துப்பார்
துயரம் தெரியும்
காதலித்துப்பார்
கருங்கல் கூட
கற்கண்டாய் தெரியும்
சப்பாத்து இல்லையே
என்று கவலைப்படாதே
கால் இருக்கு என்று
சந்தோசப்படு - (ஜேர்மனிய
பழமொழி )
காதலி ஏமாற்றி விட்டாளே
என்று கவலைப்படாதே
காதலிக்க ஒருத்தி இருந்தாளே
என்று சந்தோசப்படு ....!!!
காதலிக்க முன் இதயம் இருக்கா ..?
என்று பார்க்கமுதல்
காதல் இருக்கா என்று பாருங்கள் ...!!
காதலில் ஆரம்பத்தில் சிரித்ததை
போல் இறுதிவரை சிரித்தவர் இல்லை
அப்படி சிரித்தால்
துன்பத்திலும் சிரிக்க கற்றுவிட்டவர்கள் ...!!!
காதலில் பூவை கொடுத்து
இதயத்தை வாட வைப்பவர்கள் தான்
அதிகம்
எதிலுமே நிறைவு என் மனம் ...
நீ வெறுத்த போது ..
நிறைவடைந்தது ...!!!
காதலில் தோற்றபின்
கண்ணாடிமுன் நின்றுபார் ..
உன்னையே நீ வெறுப்பாய்
காதல் தோல்வி கறையான் அறிப்பது போல் ..
வெளியில் நன்றாக இருக்கும் உள்ளுக்குள்
உக்குவது போல் வெளியில் மனிதனாக தெரிவான்
உள்ளுக்குள் பிணமாவான்
கண்ணில்வடியும் கண்ணீரை காண்பதில்லை . அதைக்கட்டும் கண்ணாடி அதைபற்றி கவலைபடுவாதில்லை .
காதலிக்கும் வரை அவஸ்தை எல்லாம் ஆனந்தம் ...
காதலித்த பின் ஆனந்தம் எல்லாம் அவஸ்தையானது ..!!!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

கருத்துகள்
கருத்துரையிடுக