திருக்கோ ணேஸ்வரம்
இது இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையானஇவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜாஎன்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான்
இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
கி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்டன்டைன் டீ சா கோயிலை இடித்து கோவிலில் இருந்த கல்வெட்டுப் பிரதியொன்றினை போர்த்துக்கேய மன்னனுக்கு அனுப்பி வைத்தான்
கோயிலின் மூல விக்கிரகம் நகர உலா சென்றபோது போர்த்துக்கேயர் கோவில் குருமார் போன்று வேடம் தரித்து கோயிலினுள் புகுந்து அதன் சொத்துக்களை கொள்ளையிட்டதுடன் கோயிலையும் அழித்தனர்
அழிக்கப்பட கற்களைக் கொண்டு திருகோணமலைக் கோட்டையையும் கட்டினர். இந்தக்காலப்பகுதியில் பல பெளத்த இந்து ஆலயங்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கோட்டை சுவரில் "முன்னே குளக்கோட்டன் ..." எனும் கல்வெட்டு காணப்படுவதும், கயல் சின்னம் (பாண்டியருடயது) பொறிக்கபெற்றிருப்பதும் இக்கோவிலின் தொன் பெருமையை உணர்த்தும்.
நீங்கள் குள மும் கோ ட்டமும் கட்டிய தால் ஏற்பட்ட குளக்கோட்ட ன் வரலாறு அறிவீர்கள் அதனால் அதை நான் நீட்டி சொல்லவில்லை
இந்தக் குளக்கோட்டன் தான் கந்தளாய்க்கு ளத்தை வெட்டு வித்தான்
“
இப்பொழுது அங்கெ காணப்படும் கல்வெட்டு இது தான்
"முன்னாட் குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னாட் பறங்கி பிடிப்பானே - பொன்னாரும்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய்மாற
மானே வடுகாய் விடும்".
கி பி 1478 சுபதிருஷ்டிமுனிவர்
(திருகோணமலைத் தம்பத்தில் உள்ள கல்வெட்டு)
இராவணன் காலத்துக்கு முன் சிவன் ஆதிசேடன் போர்களத்தின் களத்தில் ஏறக்குறைய 10000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தளம் . எழு பெருவள நாடுகளில் குமரி மலை முகட்டின் கிழக்கு எல்லையில் இந்த ஆலயம் அமைக்க பட்டு, தென் கயிலை என்று பெயர் பெற்றது .
பூமி சரிகின்றது என்று சிவன் அகத்தியரை அனுப்பி மிதிக்கச் சொன்னதாக புராணம் கூறும் மலை இந்த கோணேசுவரம். அங்கு உள்ள மலையில் கால் அடையாளம் போன்ற தடம் உள்ளது அதுவே அகத்தியர் கால் அடையாளம் என்று சொல்ல படுகின்றது..
ஆனால் அகத்தியர் மிதித்த மேருமலை கீரிமலை .மேருமலையில் தான் அர்ச்சுனன் தவமிருந்து பாசுபத அத்திரத்தை சிவனிடம் பெற்ற இடம் மேருமலை எனப்படும் கீரிமலையே .
(நீங்கள் செய்யவேண்டியது இது தான் கீர்மலைக் கடலுக்குள் இற ங்கி வடகடலு க்குள் இருக்கும் மண்ணில் ஒரு கைப்பிடி எடுத்து வந்து ஈர உடுப்புடன் குறைந்தது ஒருமுறையாவது சுற்றி வந்து குபெரமூலை நோக்கி அட்டணக்கால் போட்டு இருந்து கொண்டு கோளறு பதிகத்தை மனதுக்குள் படிக்கவேண்டும் .படித்துமுடித்த பின்னர் சிவபுராணத்தை செபித்துவிட்டு நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதை நினைக்க வேண்டும் .நினைத்துக் கொண்டு .கையில் இருக்கும் மண்ணை கீழே போட்டுவிடல் வேண்டும் .எண்ணி வருகின்ற நவமிக்கு பின் உங்கள் எண்ணம் நிறைவேறுவதை நீங்கள் உணர்வீர்கள் .தயவுசெய்து கெடுதல் யாருக்கும் நினைக்க வேண்டாம் .அப்படிக் கெடுதல் நினைத்தால் உங்களின் எண்ணம் நிறைவேறும் .பதிலுக்கு மற்றவர்களினால் நீக்கப்பட்ட பிரம்மகத்தி தோஷம் உங்களை பின் தொடர்ந்து விடும் .இது பிரம்மா ஸ்ரீ இராமனாதக் குருக்கள் எனக்கு சொல்லித் தந்தது .காரணம் இது சிவன் வீணை வாசித்த இடம் .இராவணன் இந்த மேருமலையை தூக்கியதாக கூறப்படுவதும் இங்கே தான் .ராவணன் வீணை
வாசித்ததும் இங்கே தான் )
மேலும்
மீண்டும் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு சுமார் 450 வருடங்களின் பின்னர் 1952 ல் திருகோணமலையில் உள்ள பெரியார்களால் மீள கட்டுவிக்கப்பட்டது. முன்னைய கோயிலுடன் ஒப்பிடும் போது இப்போது இருக்கும் கோயில் மிகச்சிறியதே
திருக்கோணேச்சர ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்பு மிகுந்தது. இத்தலத்தில், இறைவன் கோணேச்சரரும், இறைவி மாதுமையாளும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் என அழைக்கப் படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது. தலவிருட்சமாக கல்லால மரம் விளங்குகின்றது.
இத்தலதின் மீது திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப் பெற்றுள்ளது. அவ்வாறே, அருணகிரிநாதரும் இத்தலத்தின் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர், நீறு
அணி திருமேனி
வரை கெழு மகள் ஓர்பாகமாப் புணர்ந்த வடிவினர், கொடி
விடையர்
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப(அ)ருங்
கன மணி வரன்றி,
குரைகடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை
அமர்ந்தாரே.
. கடிது என வந்த கரிதனை உரித்து அவ் உரி மேனிமேல்
போர்ப்பர்
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை
பிறைநுதலவளொடும் உடன் ஆய
“கொடிது” எனக் கதறும் குரைகடல் சூழ்ந்து கொள்ள, முன்
நித்திலம் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கம் ஆய்த் தோன்றும்
கோணமாமலை அமர்ந்தாரே.
. பனித்த இளந்திங்கள் பைந்தலை நாகம் படர் சடை முடி
இடை வைத்தார்
கனித்து இளந் துவர்வாய்க் காரிகை பாகம் ஆக முன்
கலந்தவர், மதில்மேல்
தனித்த பேர் உருவ விழித் தழல் நாகம் தாங்கிய மேரு
வெஞ்சிலையாக்
குனித்தது ஓர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை
அமர்ந்தாரே.
. பழித்த இளங் கங்கை சடை இடை வைத்து, பாங்கு உடை
மதனனைப் பொடியா
விழித்து, அவன் தேவி வேண்ட, முன் கொடுத்த விமலனார்;
கமலம் ஆர் பாதர்
தெழித்து முன் அரற்றும் செழுங் கடல்-தரளம் செம்பொனும்
இப்பியும் சுமந்து
கொழித்து, வன் திரைகள் கரை இடைச் சேர்க்கும்
கோணமாமலை அமர்ந்தாரே.
“தாயினும் நல்ல தலைவர்!” என்று அடியார் தம் அடி
போற்று இசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர், காண்
பலவேடர்,
நோயிலும் பிணியும் தொழலர்பால் நீக்கி நுழைதரு நூலினர்
ஞாலம்
கோயிலும் சுனையும் கடல் உடன் சூழ்ந்த கோணமாமலை
அமர்ந்தாரே.
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணிதன் உயிர்மேல் வரும்
கூற்றைத்
திரிந்திடா வண்ணம் உதைத்து, அவற்கு அருளும்
செம்மையார்; நம்மை ஆள் உடையார்
விரிந்து உயர் மௌவல், மாதவி, புன்னை, வேங்கை, வண்
செருந்தி, செண்பகத்தின்
குருந்தொடு, முல்லை, கொடிவிடும் பொழில் சூழ்
கோணமாமலை அமர்ந்தாரே.
எடுத்தவன் தருக்கை இழித்தவர், விரலால்; ஏத்திட ஆத்தம்
ஆம் பேறு
தொடுத்தவர்; செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு
அறியாதவர்; வேள்வி
தடுத்தவர்; வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள்
பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர்; விரும்பும் பெரும் புகழாளர் கோணமாமாலை
அமர்ந்தாரே.
அருவராது ஒரு கை வெண்தலை ஏந்தி; அகம்தொறும் பலி
உடன் புக்க
பெருவராய் உறையும் நீர்மையர்; சீர்மைப் பெருங்கடல்
வண்ணனும், பிரமன்,
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரி ஆய் உயர்ந்தவர்;
பெயர்ந்த நல் மாற்கும்
குருவராய் நின்றார், குரைகழல் வணங்க; கோணமாமலை
அமர்ந்தாரே.
. நின்று உணும் சமணும், இருந்து உணும் தேரும், நெறி
அலாதன புறம்கூற,
வென்று நஞ்சு உண்ணும் பரிசினர்; ஒருபால் மெல்லியலொடும்
உடன் ஆகி
துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு
திரைபல மோதிக்
குன்றும் ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை
அமர்ந்தாரே
இது சம்பந்த சுவாமிகள் அருளியது
. குற்றம் இலாதார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை
அமர்ந்தாரை,
கற்று உணர் கேள்விக் காழியர்பெருமான்-கருத்து உடை
ஞானசம்பந்தன்-
உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்-ஐந்தும் உரைப்பவர்,
கேட்பவர், உயர்ந்தோர்
சுற்றமும் ஆகித் தொல்வினை அடையார்; தோன்றுவர்,
வான் இடைப் பொலிந்தே.
திருகோணமலையிலிருந்து கொழும்பு செல்லும் வழியில் தம்பலகாமம் எனும் தமிழ் கிராமம் உள்ளது. இங்கே ஆதி கோணேச்சரம் என ஒரு கோயில் உள்ளது. போர்த்துக்கேயர் திருகோணமலையில் ஆலயத்தை அழித்தபோது சில நலன் விரும்பிகள் சில விக்கிரகங்களை மறைத்து காப்பாற்றினர். அவ்வாறு காப்பாற்றப்பட்ட விக்கிரகமே பின்பு தம்பலகாமத்தில் பிரதிட்டைசெய்யப்பட்டது. ஆதிகோணேச்சரம் என்றறியப்படும் இக்கோவிலை தம்பலகாமத்தில் காணலாம்.
கோணேஸ்வரம் கோவிலுக்கு "கோகர்ணம்" என்றும் ஓர் பெயர் வரலாற்றில் புராண காலத்தில் வழங்கப்பட்டதாக பழைய நூல்களின் மூலம் அறிய முடிகிறது!
சைவர்களின் பிரதானக் கடவுளாக ஈழத்திலும் சிவனையே தமிழர்கள் அன்றிலிருந்து இன்றுவரை முன் நிறுத்தி வணங்கி வருகிறார்கள்.
பழங்கால மன்னனாகிய இராவணன் கூட ஓர் மாபெரும் சிவ பக்தன்தான். பல்லவர்,பாண்டியர்,சோழர்களின் வணக்கத்துக்கு உரிய பிரதான கடவுள் சிவன் ஆகும்..
சிவனின் காலடியில் கங்கை நதி ஊற்றெடுத்து வந்து கலப்பதாக புராணங்கள் கூறுவது போல் தென் இலங்கையில் ஊற்றெடுத்த மகாவலி கங்கையானது இறுதியில் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களுக்குள் நுழைந்து கடலில் கலக்கும் இடம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூருக்கு அருகே கங்கை என்னும் சிற்றூரில்தான் உண்டு
கோவிலின் மிக அருகில், வலது புறத்தில் உள்ள பெரும் மலையொன்றை இரண்டாகப் பிளந்ததுபோல் செங்குத்தாக சுமார் முன்னூறு அடி ஆழத்துக்குமேல் கடலுக்குள் பிளந்து - புதைந்து கிடக்கும் அந்த இடத்தைத்தான் இராவணன் கல்வெட்டு என்று அழைக்கிறார்கள்..!..அந்தப் பகுதி மிக..மிக ஆழம் கூடிய பகுதி ஆகும்..தோணிகளில் அதனருகே போகும்போது.. காந்தம் போல் அந்த மலை தம் தோணிகளை இழுப்பதாக நமது மீனவர்கள் கூறுவதுண்டு..இது புவியியல் ரீதியாக ஆராயப் படவேண்டிய ஒன்று..! அதற்கு அண்மையில் இராவணனின் வெண்கலச் சிலை ஒன்றும் உள்ளது!..என்பது மட்டுமல்ல..இந்த கோவிலில் இராமருக்கு என ஓர் குடிசையைக்கூட தமிழர்கள் கட்டி வைக்கவில்லை..ஆனால்.. இந்த கோணேஸ்வரம் கோவிலில் இராவணனுக்கும் ஓர் சிறிய கோவில் உண்டு என்பதுதான் கவனிக்கப் படவேண்டிய ஒன்று..!..சிவனை வழிபடும் பக்தர்கள் இராவணனையும் வழி பட்டுச் செல்வார்கள்!
கோவிலுக்கு அண்மையில் உள்ள ஆழக் கடலுக்குள் தான் நன்னீர் நதி ஊற்று இருக்கிறது..இது கதை அல்ல!..பூகோள ரீதியாக உள்ள வரலாறு..இந்த சிறு நதியில் இருந்தே பாபநாச தீர்த்தம் ' என்னும் ஊற்று கோணேசர் மலையை சுற்றி சுரக்கிறதாம்!..இந்த கல்வெட்டுக்கும் பாபநாச தீர்த்ததுக்கும் அன்றில் இருந்து இன்று வரை கடலைப்பார்த்தவாரு பூசை நடப்பதுண்டு!
வரலாற்றின்படி, கி.மு.205இல் உள்ள திராவிடக் கட்டிடக் கலை அமைப்பின்படியே சுவாமி மலையில் அமைந்துள்ள கோணேஸ்வரம் கோவில் கட்டப் பட்டுள்ளதாக சொல்வார்கள்..!
ஆனால்... அதற்கும் சில நூற்றாண்டுக்கு முன்னர் வடிக்கப் பட்ட
கி.மு.ஆறாம் நூற்றாண்டிற்கும் கி.மு..இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட வரலாற்று- புராண நூல்களில் கோணேஸ்வரத்தின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கி.மு. 400 க்கும் கி.மு.100க் குமிடையில் எழுதப்பட்ட மகா பாரதத்தில் 'கோணேஸ்வரம்' கோவிலை கோகர்ணம்' என்று குறிப்பிடுகிறார்கள் !... பாரதம்..இராமாயணம் இரண்டிலுமே இடம் பெற்ற கோவில்தான் எங்கள் கோணேஸ்வரம் ஆகும்..ஆனால்..இராவணன் கல்வெட்டு..கி.மு.1580 இல் கட்டப் பட்டதாக கட்டிடக் கலை நிபுணர்கள் கூறுகிறார்கள்!..எனவே..அதற்கும் பல் ஆண்டுகளுக்கு முன்னர்தான் கோணேசர் கோவில் கட்டப் பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறதல்லவா..?
ஆனால்.. 'வாயு புராணம்' என்னும் வரலாற்று நூலில்
Paul E .Peiris ..என்ற வரலாற்று ஆசிரியர்..கோணேசர் கோவில் கி.மு.543-505 கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார்
அருணகிரிநாதர், திருஞான சம்பந்தர், சுந்தரர்
போன்றவர்கள் கோணேஸ்வரத்துக்கு வந்து தரிசித்துச் சென்றுள்ளனர். திருஞானசம்பந்தரால் பாடப் பட்ட தேவாரப் பதிகமும் கோணேஸ்வரம் பற்றி குறிப்பிடுகிறது..ஆனால் ..சம்பந்தரின் காலம்..கி.பி. 7ஆம் நூற்றாண்டு ஆகும்!
இராவணன் சிவனையே முழு முதற் கடவுளாக வழி பட்டவன் என்பது குறிப்பிடத் தக்கது..அதுமட்டுமன்றி..அவன் ஓர் சிறந்த இசை வல்லுனரும் ஆவான்
..இராவணனின் வீரத்தை இராமனால் கூட வெல்லமுடியாது..அதனால்தான் வாலியைக் கூட யுத்த தர்மத்துக்கு மாறாக சதியால் இராமன் கொன்றான் என்று அறிய முடிகிறது!
அப்படிப்பட்ட இராவணன் தன் வாளால் மலையை வெட்டிய இடமே 'இராவணன் கல்வெட்டு' என்று வழங்கப்படுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். ஓர் வரலாற்றுப் பின்னணி இன்றி கர்ண பரம்பரைக் கதைகள் தோன்ற முடியாது
சிங்களவர்கள் கோணேஸ்வரத்தை கோகர்ணவிகாரை என்றே அழைப்பர்
கர்நாடகமாநிலத்தில்
^^^^^^^^^^^^^^^
வட கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில் நகரம் கோகர்ணம் என்றே அழைப்பர்.
கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள மஹாபலேஸ்வரர் திருக்கோயிலில் சிவலிங்கம் பாக்க அளவில் சிறியதாக உள்ளது. இத்தலத்து வழக்கப்படி மக்கள் திருமேனியைத் தொட்டு வழிபடலாம்.
கோ-பசு, கர்ணம் -காது, சுவாமி பசுவின் காதுபோலக் குழைந்து காணப்படுவதால் இத்தலம் இப்பெயரைப் பெற்றது. இதற்கு ருத்ரயோனி, வருணாவர்த்தம் முதலிய பெயர்களுண்டு.
இத்தலத்தை அப்பர், தாம் அருளிய திரு அங்கமாலையில் வைத்துப் பாடியுள்ளார்.
"கால்களாற் பயனென், கறைக்கண்டன் உறைகோயில்
கோலக்கோபுரக் கோகரணம் சூழாக், கால்களாற் பயனனென்'.
ஒரு சமயம் இராவணன் இலங்கையில் பிரதிஷ்டை செய்விப்பதற்காகக் கயிலையிலிருந்து (சிவபெருமானிடம்) ஒரு சிவலிங்கம் பெற்று வந்தான். வந்தவன்,
வழியில் இத்தலத்திற் சற்று இளைப்பாற எண்ணித் தரையில் வைத்தான். இறைவன் இத்தலத்திலேயே வீற்றிருக்கத் திருவுள்ளம் கொண்டாராதலின், அவன் சிறிது நேரம் இளைப்பாறிய பின்னர் அச்சிவலிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்றபோது அது அசைந்து கொடுக்கவில்லை. அவன் தன் வழிமையனைத்தையும் பயன்படுத்தி எடுக்க முயன்றபோது அச்சிவலிங்கபாணம் பசுவின் காது போலக் குழைந்துவிட்டது. அதனால் தலத்திற்குக் கோகர்ணம் என்று பெயர் வந்தது.
இறைவனுக்கு மகாபலேஸ்வரர் என்று பெயருண்டாயிற்ற. ஆலயத்தில் நேரிற்காண்போர், சிவலிங்கம் ஒரு கொட்டைப்பாக்கு அளவில் ஆவுடையாரில் அடங்கியருப்பதைக் காணலாம். இத்தலத்து வழக்கப்படி மக்கள் திருமேனியைத் தொட்டு நீராடி மலர்சூட்டி வழிபடலாம்.
இறைவன் - மஹாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்ம லிங்கேஸ்வரர்.
இறைவி - கோகர்ணேஸ்வரி, தாம்ரகௌரி.
சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.
இத்தலத்தில் சிவராத்திரி வழிபாடு சிறப்புடையது. இத்தலச் சிறப்பை பிரமோத்திர காண்டம், உபதேசகாண்டம் முதலிய நுழல்கள் புகழ்கின்றன. பிரமன், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், சரஸ்வதி, வசிட்டர் முதலான மகரிஷிகள், இராவணன், நாகராசன் முதலிய எண்ணற்றோர் இப்பெருமானை வழிபட்டுள்ளனர்.
இத்தலத்தில் உள்ள கோகர்ப்பக்குகை கண்டுகளிக்கத்தக்கது. இங்கு 33 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றுள் கோகார்ண தீர்த்தம், தாம்ரகௌரிநதி, கோடி தீர்த்தம், பிரமகுண்ட தீர்த்தம் முதலியவை சிறப்புடையன. இவற்றுள்ளும் கோடி தீர்த்தம் மிக்க சிறப்புடையது. இத்தலவரலாறு வருமாறு-
இலங்கை வேந்தன் இராவணன் கயிலைமலை சென்று சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். சிவபிரான் உமையம்மையோடு காட்சியளித்து வேண்டும் வரம் யாதென வினவனரிர். இராவணன் இலங்கை அழியாதிருக்க அருளவேண்டும் என்றான். அதற்கிசைந்த பெருமான் இராவணன் கையில் பிராண லிங்கத்தைக் கொடுத்து இதனை இலங்கைக்கு எடுத்துச் சென்று பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தால் இலங்கை அழியாது. இச்சிவலிங்கத்தை தலையில் சுமந்து செல்ல வேண்டும். வழியில் இதனைக் கீழே வைத்தால் எடுக்கவாராது என அருளி மறைந்தார். இராவணன் பிராணலிங்கத்தைச் சிரசில் சுமந்து இலங்கை நோக்கிச் சென்றான்.
நாரதர் மூலம் இதனை அறிந்த இந்திரன் பிராண லிங்கத்தை இராவணன் எடுத்துக்கொண்டு சென்று பிரதிட்டை செய்தால் இராவணன் அழியான், தேவர்கள் துயர்நீங்காது என எண்ணித் தேவர்கள் புடைசூழக் கயிலைமலை சென்று விநாயகரை வேண்டினான். இந்திரனின் வேண்டுகோளை ஏற்ற விநாயகர் இராவணன் கோகரணத்தை அடையும் வேளையில் அவன் மூத்திர நீர்சுரக்குமாறு செய்ய வருணனை ஏவினார். அந்தணச் சிறுவன் போல அவன் முன் தோன்றி நின்றார்.
இராவணன் வந்த அந்தச் சிறுவனை நோக்கிச் சிவலிங்கத்தை அச்சிறுவன் கையில் கொடுத்துச் சிறுநீர் கழித்து வருமளவும் அதனைக் கையில் வைத்துக்கொண்டு நிற்குமாறு வேண்டினான். சிறுவனாக வந்த விநாயகர் இராவணனை நோக்கி என்னால் சுமைபொறுக்க இயலாத நேரத்தில் மூன்றுமறை உன்னை அழைப்பேன் அதற்குள் வராவிட்டால் நிலத்தில் வைத்து விடுவேன் என அருளினார். இராவணனும் இசைந்து சென்றான். நெடுநேரம் ஆகியும் அவன் வராததால் மூன்றுமறை, அழைத்து சிவலிங்கத்தைப் நிலத்தில் வைத்து விட்டார். இராவணன் வந்து சிவலிங்கத்தை இரு கரங்களாலும் எடுக்க முயன்றான். பெருமான் பசுவின் காதுபோலக் குழைந்து காட்டினார். இராவணன், மகாபலம் உடையவர் இவ்விறைவர் எனக் கூறி அந்தணச்சிறுவன் செய்த தவறுக்காக மூன்று முறை அவனது தலையில் குட்டினான். சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டினார். இராவணன் பிழைபொறுக்க வேண்டினான். விநாயகர் உன் தலையில் இவ்வாறே மூன்றுமுறை குட்டிக்கொள் என்று கூறினார். இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக் குருதிசோரத் தலையில் குட்டிக்கொண்டு அவரை வழிபட்டு அருள் பெற்றான். விநாயகர் சினம் தணிந்து தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோர்க்கு வேண்டும் வரங்கள் தருவதாகக் கூறி இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருளினார்.
இத்தலத்திற்கு வருவோர் முதலில் கோடி தீர்த்தத்தில் நீராடி, பின்பு கடல் நீராடி, பிண்டதர்ப்பணம் செய்து, மீண்டும் நீராடி பிறகு மகாபலேஸ்வரரை வழிபடவேண்டும்.
இன்னுமொரு விடயத்தை இங்கு சொல்ல வேண்டும் .இந்த கொகர்ணத்தில் இருந்து சிவன் சிலை செய்து வந்து அதனை திருக்கொநேஸ்வரத்தில் ஸ்தாபிக்கவேண்டும் .அப்பொழுது இலங்கை தன அழிவில் இருந்து மீள்படும் என்று விநாயகர் அருளியதாக இந்தியாவில் அறிந்து கொண்டேன்
தொண்டேச்சரத்தில் அட்ட லாக்குமிக்கு கோவில் கட்டினால் மட்டுமே இலங்கை செல்வந்த நாடாக மாறும் என்று கதிர்காமத்தில் பண்டைத் தரிபை சேர்ந்த சுவாமியார் கூறினார்
பேதை மங்கையரு பங்கிட
மிகுத்திடப் மேறியமரர்
வாதைபட வண்கடலெ ழுந்தவிட
முண்டசிவன் வாழுமிடமாம்
மாதரொடும் ஆடவர்கள் வந்தடி
யிறைஞ்சிநிற மாமலர்கள்தூய்க்
கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல்
கின்றவளர் கோகரணமே.
என்கிறார் சம்பந்தர்
ஆனால் அப்பர் சுவாமிகள்
சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண்
தாழ்சடையான்காண் சார்ந்தார்க் கமுதா னான்காண்
அந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண்
அவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண்
பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண்
பலபலவும் பாணி பயில்கின் றான்காண்
மந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே
என்கிறார் .
ஏகநா யகன்கயிலை இமையவர்கள் தம்பிரான்
இராவண னுள்ளமகிழ
ஈந்துசிவ லிங்மொ றீதுதரை வையா
திலங்கையில் கொடுபோவெனச்
சாகரத் தின்கரையில் வரும்வேளை யருபிரம
சாரியாய் வாங்கியதனைக்
தரைவைக்க அதுசத்த பாதாளம் வேருறச்
சமர்செயுமி ராவணன்றன்
ஆகமொரு பந்தென வெடுத்தண்ட கூடமுற
அம்மானை ஆடிவிளையா
டதிபலப ராக்கிரம விநாயகன் மகிழ்தம்பி
அம்பரவை ஏத்தினாகரச்
சீகரம் வந்துலவு கோகரணம் வாழ்முருக
சிறுதே ருருட்டியருளே
சிவன்மகா லிங்பெல லிங்கமூர்த் தியருள்குக
சிறுதே ருருட்டி யருளே.
என்கிறது சே த்திரக்ககோவைபிள்ளைத்தமிழ்
கோகர்ண ஸ்தல ஸ்துதி சுலோகம்
கீழே தருகிறேன் இதனை நாள் தோறும் சேவித்து
இலங்கையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து
இலங்கையில் அமைதி பெறுவோமாக
கோகர்ணம் ஸா மஹா காசீ, விசுவ நாதோ மஹாபல
கோடி தீர்த்தஸ் தத்ர கங்கா ஸமுத்ரோயம் விசிஷ்யதே.
குஞ்சா மாத்ரா திகம் காசியா கோகர்ண மபிதீயதே
கோகர்ண ஸத்ருசம் க்ஷேத்ரம் நாஸ்தி ஜகத்ரயே.
ஸர்வேஷாம் சிவலிங்காநம் ஸார்வபௌமோ மஹாபல
மஹாபல ஸமலிங்கம் நபூதோ நபவிஷ்யதி.
கங்காதி ஸரிதோ யஸ்மாத் ஸாகரம் ப்ரவிசந்தி U
தஸ்மாத் ஸமுத்ரேஹ்யதிகோ கோகர்ண தத் விசிஷ்யதே
ஆத்யம் பசுபதே ஸ்தாநம் தர்சநாத்ஏவ முத்கிதம்
யத்ர பாபோபி மநுஜ ப்ராப்நோத்ய பயதம் பதம்.
பச்சிமாம்புதி தீரஸ்தம் கோகர்ணக்ஷேத்ர முத்தமம்
மஹாபல ஸமம் லிங்கம் நாஸ்தி ப்ரஹ மாண்ட கோளகே
பூர்வே ஸித்தேச்வரோ நாம, தக்ஷிணத் யக நாசிநீ,
உத்தரே சால்மலீ கங்கா, பச்சிமே லவணாம் விதி
கோகர்ண சிவக் கோவில் வரலாறை ஆங்கிலம் தெரிந்தவர்கள்
மகாபலேஸ்வரர் திருக்கோயில்
திருக்கோகர்ணம் - post - 576 234
கர்நாடகா india
சென்று அறிந்து கொள்க
சிங்களவன் கோகர்ணம் என்னட்டும்
நீங்கள் கொநேஸ்வரர் என்னுங்கள்
பேசித் தீர்த்துக் கொள்ளலாம்
கருத்துகள்
கருத்துரையிடுக