முளைச்சு மூநிலை நிக்கலை என்றால் என்ன ?
ஆணிவேர் பக்கவேர் என்று பரம்பி மரமாக நிமிர்ந்து நிற்பது என்பதே பொருளாகும்
%%%%%%%%%%%%%%%%%%%%%%
அப்பொழுது எனக்கு பதினான்கு வயது .,ஆச்சி (அதாவது அம்மாவின் தாய் )சொல்லுவா ...
முளைச்சு மூநிலை நிக்கலை இவனுடைய போக்கு என்னவோ ..ஒரு மாதிரியா இருக்கிற மாதிரி இருக்கு என்று
. கொஞ்சம் அலசுகிறேன் எல்லோருக்கும் பொதுவாக .சொல்வதானால் இதை சிந்திக்கிற மனப்பான்மை பக்குவம் அடைந்த நிலை என்று தான் கூறுவார்கள் .அது தப்பான சொல் அல்ல .தவறாக சித்தரிக்கப் படுகிறது
நான் ஸ்கந்த வரோதயாக் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த காலம் .முதல் நாள் ,எனக்கு சில காத கவட்டுத் தூரத்தில் மகாதேவா மாஸ்டர் செல்கிறார் .கண்டீனுக்கு உள் இருந்து போண்டா தின்றவன் அடே ஆமத்துரு என்று மகாதேவா மாஸ்டரை கூப்பிட்டு விட்டான்
பின்னால் சென்ற என்னை வாங்கு வாங்கு என்றுகை களால் விளாசி விட்டார் .
அவர் தான் ஆமத்துரு என்று எனக்குத் தெரியாது .முதல் நாள் அல்லவா அது .என் சட்டை கசங்கி விட்டது .சந்தனப் பொ ட்டு ஒன்று வைத்திருப்பேன் .பின்னால் வந்த சிறுமி கள் இருவர் என்னை தூக்கி விட்டனர் .
ஓன்று பட்டம்மாள் (இன்றும் என் வாழ்வில் மறக்க முடியாத பெயர் அது )
எல்லோரும் தேவாரத்திடலில் கூடியிருக்கிறோம் அதிபர் ஏகாம்பரம் .துணை அதிபர் சிவகுமாரன் ,வித்துவான் ஆறுமுகம் எல்லோரும் நிக்கிறார்கள் .வகுப்புக்கள் பிரிக்கப்பட்டன .கசங்கிய உடையுடன் வகுப்புக்குள் நுழைகிறேன் .என்னைத்தேடி வித்துவான் ஆறுமுகம் வந்தார்
இடைவேளைக்கு அதிபர் காரியாலயத்துக்கு வருமாறு கூறிவிட்டு சென்று விட்டார்
வகுப்பில் எல்லா மாணவர்களும் குசும்பு விட்டார்கள் .அடே !!! உன் சீட்டு கிழிபடப் போகிறது என்று .
ஆனால் எனக்கு கலக்கமின்றி வகுப்பில் உட்கார்ந்து இருக்கிறேன் .எனக்கு மனதில் பட்ட தை அப்படியே கூறும் மனப்பக்குவம் எனக்கு இருந்தது .அப்படி வளர்க்கப்பட்டேன் .அதனால் அச்சமடை யாமல் இருந்தேன் .
இடைவேளையும் வந்தது .என்னைப்பார்க்க பல வகுப்பு மாணவர்கள் முண்டியடித்து திடலில் நிற்பது தெரிந்தது
எதோ நினைத்தவனாக எனது கொப்பிகளை முழுவதும் எடுத்துக் கொண்டு இறங்கினேன் .
ஒன்றும் நடக்காது போ!!!!!!!!!!!!! என்று புத்தகத்தை பறித்து வைத்தனர் .பட்டம்மாள் கிரிஜா இருவரும் .
மெதுவாக சென்று அதிபர் அறைக்கு முன்னால் நின்று கொண்டேன் .
வாங்கோ தம்பி என்று பவ்வியமாக அழைத்தார் அதிபர்
உள்ளே சென்றேன்
இரும் என்றார்
எனக்கு முன்னே ஆமத்துரு என்கிற மகாதேவா மாஸ்டர் ,வித்துவான் ஆறுமுகம் இருந்தார்கள் இருவரும் மன்னிப்புக் கேட்டனர் நாகரிகமாக .
இது என்மனதில் இன்றும் நினைவில் நிற்கிறது
மன்னிப்புக் கேட்பதற்கும் மனப் பக்குவம் வேண்டும் .
வளரும் காலத்தில்
என்னிடமும் பலதீயபழக்க வழக்கங்கள் இடையில்சிந்தனையில் மட்டும் புகுந்தன .பூர்வ புண்ணிய பலனோ ?அன்றி எதுவோ?நான் அறியேன் .பாராபரன் மட்டுமே அறிவான்
ஆனால் மனதை இறுக்கிக் கல்லாக்கி வாழ்வில் பயணித்தேன்
சராசரி மனிதன் எல்லோருக்கும் இருபக்கங்கள் உண்டு .அங்கே சந்தர்ப்ப சூழ்நிலைகள் கூட உண்டு .
அழுத்தங்கள் உண்டு .இவற்றையும் மீறி சேவை மனப்பான்மை உதட்டளவில் இன்றி செயலில் காட்ட வேண்டும்
பொதுவாக எனக்கு மக்கள் சேவகர்களை பற்றி அறிய ஆவல் உண்டு .
ஆனால் என்னை விட அந்த மக்களுக்கே அதிகம் தெரியும்
பொதுவாக மனித வாழ்வைப் பார்ப்போமானால்
எத்தனையோ சிவ பக்தர்கள் நமது வரலாற்றில் தவறு இழை க்கவில்லையா
அருணகிரி நாத சுவாமிகள் கூட வேறு ஒரு திசையில் பயணி த்தவர்தான் .
ஏன் நாம் வணங்கும் சிவனோ அன்றி கிருஷ்ணனோ இன்னொரு தவறு செய்திருக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம் .
அவ்வாறே சிவ தொண்டர்கள் ,பாதிரி மார்கள் அறிஞர்கள் புலவர்கள் எதிர்மறை வாழ்க்கை வாழ்ந்தார்கள் ..வாழ்கிறார்கள் ,,வாழ்வார்கள்
எமது சமூகத்தின் பற்களைக் குற்றி மணந்து பார்ப்பதும் ,அதை பகிரங்க மேடையில் மல்லாக்கப் படுத்து துப்புவது போல அமைந்து விடும்
ஒருவரின் நல்லதுகளை மட்டுமே பார்ப்போம் .அவற்றை ஆதரிப்போம்
நதிமூலம் ரிஷிமூலம் பார்ப்பதாயின் குறைகள் கூற முடியும்
ஆனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நீதி தேவதைகள் வாழ்கிறார்கள்
அதை நீங்கள் மனதார உணர்ந்திருப்பீர்கள்
தண்டனையை உங்கள் மனசாட்சி உங்களுக்கு தினமும் கொடுப்பதையும் மறக்க முடியாதது
பன்னாடையா ய் இருக்கவேண்டாமே
எல்லோரும் நல்லவர்களே
ஆணாகிலும் பெண்ணாகிலும் நல்லவர்களே
ஆனால் இயல்பு நிலை அதாவது வளர்க்கப்பட்ட விதம் முன் கோபம் போன்றவை சூழ்நிலைகள் ஒருவனை கெட்ட வழி நடாத்தினாலும்
மனசாட்சி நல்லதாகவே நடக்க செய்கிறது
நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல
மனித வாழ்வும் நல்ல கெட்ட சிந்தனைகளை பக்க பலமாக வைத்திருக்கின்றன
நமக்கு ஐந்து விரல்கள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடமைக்குப் பொறுப்பு
விரல்களை குறை கூறாமல்
சேர்த்துப் பிடித்தால் கை
குத்தினால் முஸ்டி
விரல்களா கப் பிரிவதையும் குறை கூறுவதையும் விட்டு விடுவோம்
இன்னொரு கையுடன் இணைந்தால் தான்
வணக்கமே
போட முடியும்
முயன்று பாருங்களேன்
Manikkavasagar Vaitialingam

கருத்துகள்
கருத்துரையிடுக