நாங்கள் எங்கு போய்க்கொண்டு இருக்கின்றோம் _ ?
எங்கிருந்து வந்தோம் _ ?எங்கே எதற்க்காக ?என்ன காரணங்களால் இன்னும் நாம் முன்னேற்றப் பாதையில் முழுமையாக முன்னேற முடியவில்லை ?
சிலரின் கேள்வி அல்ல இது பலரின்ஆ .. தங்கம்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சில ஆண்டுகளாகத்தான் மன அழுத்தம், மனச் சோர்வு போன்ற மனநலம் சார் சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.தற்கொலைக்கும், மனநல குறைபாடுகளுக்கும் தொடர்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பே தன் வலைதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.
"ஒருவர் தன்னைக் குறித்து முழுமையாக புரிந்து வைத்திருப்பது,தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் ஒரு சுமூகமான உறவில் இருப்பது, ஒருவர் செய்யும் காரியங்கள் தனக்கும் மற்றவர்களுக்கும் பயன் தரும் விதத்தில் இருப்பது," என மூன்று விஷயங்களில் சரியாக இருப்பவர்கள் நல்ல மனநலத்துடன் இருக்கிறார்கள்
மனநலம் என்பது எல்லோரையும் ஒரே மாதிரியான அளவு கோளில் பொருத்திப் பார்க்கக் கூடிய விஷயமல்ல. மன நலம் சார்ந்த பிரச்னைகள் ஒரு நிலை தானே ஒழிய அது ஒரு நோயல்ல. மனநல பிரச்னைகள் அனைத்துமே மனநோய் கிடையாது. மனம் ஆரோக்கியமின்றி இருப்பது ஒரு தற்காலிக நிலை மட்டுமே"
யாரோடும் பேச முடியாமல் இருப்பது, நல்ல தூக்கம் இல்லாமல் தவிப்பது, அதிகம் கோபப்படுவது, அதிகம் பயப்படுவது போன்றவைகளை மனநல ஆரோக்கியமின்மைஎன்று சொல்லலாம்
ஆனால்
சிலர் மன அழுத்தத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை கடந்து வர முடியாமல், அதிலேயே சிக்கி தவிக்கிறார்கள். இதை மன நல குறைபாடு ஆகும் .அதாவது
ஒரு பற்றற்ற நிலையில் இருப்பது, இதற்கு முன் செய்த வேலைகளைச் செய்வதற்குக் கூட தடுமாறுவது, ஏன் வாழ வேண்டும் என்று தோன்றுவது,
யார் மீதும் எதன் மீதும் நம்பிக்கையின்றி இருப்பது, எதையும் ஒரு எதிர்மறையான கண்ணோட்டத்திலேயே பார்ப்பது போன்றவைகளை மனநல குறைபாடுஆகும்
மனநலமின்மையை சரி செய்வதை விட, மன நல குறைபாட்டை சரி செய்ய கொஞ்சம் அதிக காலம் ஆக நேரிடும்
பேசக் கூடியவர் திடீரென பேசுவது குறைகிறது என்றாலோ, பெரிதாக ஆடை அணிகலன்களில் கவனம் கொடுக்காத ஒருவர் திடீரென அதீதமாக அதில் கவனம் செலுத்தினாலோ, அதிகம் ஆன்மிகம் அல்லது தத்துவார்த்தமாகப் பேசத் தொடங்குவது, எதிர்மறையாகவே பேசுவது, எப்போதும் சோகம் தொய்ந்த ரீதியிலேயே பேசுவது, சுய அழகு பராமரிப்புகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது போன்றவைகள் அவருக்கு ஏதோ மன நலத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகளாகும் .
மனநலம் பாதிக்கப்படும் போது, பொதுவாக தன்னலன் மீது அக்கறையற்ற இருப்பர். ஆகையால் அவர்களை
உதாசீனப்படுத்தாமல், அறிவுரை கூறி புறந்தள்ளாமல், அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை கொடுக்கும். இதனால் .படிப்படியாக சாதாரண நிலை க்கு திரும்புவர்
அவர்கள் தொடர்ந்து மன உளைச்சலில் இருப்பதாக தெரிந்தால் மனநல மருத்துவரிடம் அழைத்து ஆலோசனை பெற வேண்டும்.
மனநலம் பாதிக்கப்படும் போது, பொதுவாக தன்னலன் மீது அக்கறையற்ற இருப்பர். ஆகையால் அவர்களின் நலனுக்காக அவர்களுக்காக நாம் முடிவெடுத்து அதற்கான தீர்வை பெற்றுத்தருவது அவசியம்..
எல்லோருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் பயம் வரும். சிலருக்கு குறிப்பிட்ட சூழலில் மட்டும் பயம் வந்து போகும். அதுவே நீடித்திருந்தால் மன நோயாக மாறுகிறது .
சிலர் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள் .இதனால் இருதய நோயாளிகளாக மாறி விடுகிறார்கள் .
மனப் பதற்றம் என்பது ஒரு வகையான பயம். எந்த வகையான எதிர்மறையான உணர்வும் உடனடியாக நோயாகிவிடாது. மனதில் சிறிதளவு பயம் இருப்பதால் பிரச்னையில்லை. உண்மையில் அத்தகைய பயம் திறனை மேம்படுத்துவதற்கும் வெளிப்படுத்துவற்கும் உதவும். சிலருக்கு பயம் அதிகமாகி . எப்போதும் பயத்திலேயே இருப்பார்கள் . வருங்காலத்தைப் பற்றியோ, அல்லது ஏதோ விபரீதம் நடந்துவிடும் என்றோ எப்போதும் அச்ச எண்ணத்திலேயே இருந்தால் அதை நோயாகக் கருத வேண்டும். இதுதான் மனப் பதற்றக் கோளாறு"
பதற்றத்தின்போது உருவாகும் கார்டிசால் என்ற ஹார்மோன் தொடர்ந்து அதிகமாக இருப்பது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நீண்ட காலமாக இதைக் கவனிக்காமல் விட்டால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், வயிற்றுக் கோளாறு என பலவகையான சிக்கல் ஏற்படும். உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பையே குலைத்துவிடும் ஆபத்தும் உண்டு.
சொந்தங்களைப் பிரிந்தது ?
வெளி நாட்டில் ஏனோ தானோ வாழ்க்கை
சினிமா மோகம் ,தமிழ் அறிவு சார்ந்த நூல்களை விடுத்து ,கலைகளை மறந்து
முறை கேடான எண்ணம்
கொண்டதே கோலம் ,கண்டதே வாழ்க்கை
முறை தலை தெரியாமல் பண்பாடு பணிவு தெரியாத சூழ்நிலைகளால் குடும்ப உறவுகள்
பகட்டு வாழ்க்கை ,குரோத மனப்பான்மை கொண்டு
வாழுகின்ற மனிதா !!!
இன்னும் ஒரு தலை முறை போன பின்பு ..
உன் சாதி எங்கே ? மொழி மாட்சிமை எங்கே ?உன் உறவுகள் எங்கே ?
காலம் கடந்தாவது நீ வாழ்வது மிருக வாழ்வு என்று புரிந்து கொள்
தெய்வீக வாழ்வு என்பது தமிழன் அன்று சந்தோசமாக தர்ம சிந்தனையுடன்
ஆரோக்கியமாக வாழ்ந்தான் என்று எழுதி வைத்துக் கொள் .
facebook twitter whatsup என்று உலகத்தை நீ சுருக்கவில்லை .உன் வரலாற்றை பண்பை சுய அறிவை இழந்து
மன நோயாளியாக் வாழுகிறாயே
இதனைக் குணப்படுத்த மருந்து உண்டா சொல்

கருத்துகள்
கருத்துரையிடுக