நினைத்துப் பார்க்கிறேன்

தந்தையின் சொல் மிக்க
மந்திரம் இல்லை...
இளமையில் கற்றது
அப்பாவின் சொல்லில்
தந்திரமும் இல்லை...
காலம் கடந்து தான் சிந்திக்க வைப்பது

கடல் கடந்ததால் ..
தோளில் சுமந்து முதன் முதலில்
உலகை கா ட்டிய என் தந்தைக்கு...
தோரணம் கூட கட்ட ஒண்ணாப் பாவியான் யான்
சூரியன்
இருக்கும் பொழுது புரிவதில்லை
சிந்திக்கும் பொழுதே
அதன் அருமை
உணர்த்துகிறது
பலரது வாழ்வில் கடைசி
வரை விளங்கிக்கொள்ள
முடியாத புத்தகம் அப்பா..!
என் வாழ்வில் பஞ்சாமிர்தமாய்
இன்றும் இனிப்பவர்
குழந்தையாக இருந்த
பொழுது இறுக அணைத்து
என்னை கை வீசம்மா
கை வீசு ..என்றபொழுது
அப்போ புரியாத போதிலும்
இப்போ
புரிகின்ற பொழுது
கண்களில் கண்ணீர் !!
அந்த இனிமை நாட்கள்
மீளவும் வாராதா ?
அந்த நாள் என்பதால்
ஏக்கமாய் எனக்குள் சுனாமி அலைகள்
மின்சாரம் தாக்கி
நான் துவண்ட பொழுது
என்னை தூக்கி அணைக்க
முடியாமல் அவர் தவித்த
தவிப்பை
இப்போ நினைத்துப்பார்க்கிறேன்
ஒ என்று அவர் அழுததை
நினைத்துப் பார்க்கிறேன்
அன்று
நெஞ்சில்
நான் ரசித்த அழகிய
இசை என் அப்பாவின்
இதயத்துடிப்பு.
என்னை தூங்க வைத்தது
பற்பல வருடங்கள் கடந்த பின் தானே
அவர் அருமை தெரிகிறது
போதித்த அறிவுரை
ஆசிகளாக என்னை என்றும் சிறக்கவே வைத்தது
அவர்
பேசிய வார்த்தைகள்
கடுமை இன்றி
என்னை தூக்கி நிறுத்தியது
என்னை தோ ழில் சுமந்து
அவர் கடந்த பாதைகள்
என்ன வலி கள் கொண்டனவோ?
கண்ணுக்கு தெரியாத கடவுளை விட
கண்முன்னே கடவுளாய் ,அப்பா இருந்த பொழுது
புரியாத பேடியானேன்
குழப்படி செய்கையில்
பிரம்படி தந்தாலும்
உறங்கையில் எண்ணை போடும்
உன்னதக் கடவுள் அவர்
செதுக்கப்பட்ட ஒவ்வொரு
சிலையும் கடவுள் என்றால்
எனக்கு அப்பாவும் கடவுள்
தான். அடித்தாலும் அன்பால்
அணைக்கும் கடவுள் அப்பா.
ஆதாலால் கோவிலுக்கு செல்வதில்லை
உள்ளக் கமலத்தில்
உள்ளிறுத்தி உதிரத்தால் பூசிக்கிறேன்
கண்ணில் நீர் சொரிய
பல வலிகளை
மறக்க அப்பாவின் வார்த்தைகள் மட்டும்
ஔடதம் ஆனது
என் வாழ்வில்

கருத்துகள்