குரக்கன்
%%%%%%%%%%%
நாம் பலவித தொற்றும் தொற்றாத நோய்களுக்கு ஆளாகி அல்லற்படுகிறோம் முப்பது வயதானாலே மருந்துகள் நம்மைப் பாதுகாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். ஆனாலும் கவர்ச்சிகரமான உணவுகளை உண்டு ஆடம்பரமாக வாழ்வதையே நாம் பெரிதும் விரும்புகிறோம்.
நமக்கு முன் இருக்கின்ற உணவு சரியானதா? ஆரோக்கியமானதா? சமவிகித உணவா? நோய்களை உருவாக்க காரணமாகுமா? இவ்வுணவுகளால் தேவையற்ற அழுக்குகள் நம் உடலில் சேருமா? சமூகத்துக்கு கேடாகுமா? என யாருமே சிந்திப்பதில்லை.
நம் முன்னோரின் உணவுப் பழக்கமானது ஆரோக்கியமாக நீண்டகாலம் அவர்களை வாழ வழிசமைத்தது. சாமை குரக்கன், வரகு போன்ற தானியங்களை பற்றி ஆராய்வோம்
ஆரியர்கள் இந்தியாவிற்கு வரும் முன்னரே, கேழ்வரகு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. கேழ்வரகு முதலில் இந்தியாவில் தோன்றி, பின்னர் அரேபியாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் சென்றடைந்துவிட்டதாகவும் டிகண்டோல்1886 இல் கூறுகிறார்.
தென்னிந்தியாவில் இது அதிகம் பயிர் செய்யப்படுவதால், இவ்விடம் முதல் நிலைத் தோற்ற இடமாக இருக்கக் கூடும் என்கிறார். எனினும், கேழ்வரகு ஆபிசீனியாவில் (எத்தியோப்பியா) தோன்றியிருக்கும் என்று வாவிலோ1951இல் கூறுகிறார் .
கேழ்வரகு முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி பின்னர் சோபியன் வழியாக இந்தியாவை சென்றடைந்திருக்கும் என்று மெஹ்ரா1963 இல் கூறுகிறார் .எது எப்படியோ இந்தியாவின் பழங்கால மனிதர்கள், காட்டுவகையான எல்லூசின் இண்டிகாவில் இருந்து பயிர் செய்யக் கூடிய எல்லூசின் கோரகானா வகையை தோன்ற வைத்துள்ளனர்.
என்பதே எனது முடிபு .ஆனால் தமிழர்கள் மூலமாகவே இது உலகில் பரவியிருக்கவேண்டும் .ஔவை முதல் பல அறிஞர்கள் தங்கள் பாடல்களில் கேழ் வரகைப் பற்றி விதந்து கூறியிருக்கிறார்கள்
எல்லூசின் கோரகானாவின் முந்தைய தலைமுறை எல்லூசின் இண்டிகா என்று கருதப்படுகிறது.
கேழ்வரகு வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிர் செய்யப்படுவதால்
இந்தியாவில் அதிகமாக பயிர் செய்யப்படுவதோடு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானில் பயிர் செய்யப்படுகிறது.
இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேசம் மற்றும் இமாச்சலபிரதேசம் மலைப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.
உணவாகும் பொழுது Tryptophanஎன்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.
கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
தாவர வகை இரசாயன கலவைகள் (Phytochemical Compounds) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
லெசித்தின் (Lecithin) மற்றும் மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் (Amino acids), கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்கிறது.
இரும்புச்சத்து ரத்தசோகையை குணப்படுத்துகிறது.
உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
குடலுக்கு வலிமை அளிக்கும்.
உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
கேழ்வரகு பயிரை ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பயிராக இருப்பதால், மலைச்சரிவுகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் வெற்றிகரமாக சாகுபடி செய்யலாம். கடின வகைப் பயிர் என்பதால் மானாவாரி மற்றும் தமிழ்நாட்டின் பாசனப் பயிர் என இருமுறையிலும் பயிர் செய்யலாம். கேழ்வரகு பயிருக்கு அதிக மழை நல்லதல்ல. கதிர் முதிரும் போது மழையிருக்கக் கூடாது. நல்ல வடிகால் வசதியுடைய, போதுமான அளவு நீர் தேக்கத் தன்மையுடைய, வண்டல் மண், கேழ்வரகு சாகுபடிக்கு ஏற்றது. சிறிதளவு நீர் தேக்கத்தையும் கூட தாங்கும் தன்மை பெறுவதற்கு போதுமான அளவு வடிகால் வசதியுடைய களிமண்ணிலும் கேழ்வரகு சாகுபடி செய்யலாம்.
கேழ்வரகு, அரிசி, உப்பு ஆகியவற்றைக் கொண்டு கேழ்வரகு கூழ் செய்யலாம்.
எப்படி என்றால்
ஒரு குவளை கேழ்வரகு மாவை எடுத்துகொள்ள வேண்டும் அந்த மாவு நன்கு சலித்து எடுத்து சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும். அதனுடன் கால் குவளை உடைத்த நொய் அரிசியை எடுத்து கொள்ள வேண்டும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கிளறி விடவேண்டும். பிறகு அதில் இரண்டு குவளை தண்ணீரை உற்ற வேண்டும் நன்றாக மாவு அடிபிடிக்காமல் கரைத்து விட வேண்டும். தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். 6 மணி நேரம் புளிக்க வைக்கவேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து தீயை சீராக வைத்து கொள்ள வேண்டும். பிறகு நாம் சற்று கனமான பாத்திரத்தில் கரைத்து வைத்து இருந்த கரைசலை ஒரு முறை நன்கு துழவிவிட்டு பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். பிறகு மெதுவாக கரைசல் கூழ் பதத்திற்கு வரும் வரை துழவி விடவேண்டும். சுமார் 5 முதல் 10 நிமிடத்துக்குள் கூழ் நன்றாக கொதித்து விடும். கூழை தொடர்ந்து மரக்கரண்டியால் துழவ வேண்டும். இடையில் விட்டு விட்டால் அடிபிடித்து கட்டியாக மாறிவிடும். கூழ் நன்றாக கொதித்து விட்டது உறுதி செய்துகொண்டு இறக்கி வைத்து அதில் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து இருந்த சின்ன வெங்காயத்தை கொட்டி ஒரு முறை கிளறி விட வேண்டும்.
இதில்
கால்சியம் சத்து அதிகமாக உள்ளது எலும்புகளுக்கு மிகவும் முக்கியம். பசியின் பொது சுரக்கும் அமிலத்தை சற்றுக் குறைத்து உடல் எடையை நிலையாக வைத்து இருக்க உதவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைக் காலை சிற்றுண்டியாக பருகுகின்றனர். கேழ்வரகு கூழை தொடர்ந்து காலையில் உட்கொள்ளுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களுடைய சர்க்கரை அளவு சற்று குறைந்து விடும். நிலங்களிலும், வயல்களிலும் வேலை செய்யும் பல கூலித் தொழிலாளிகள் விரும்பி உண்ணும் உணவாக இது கருதப்படுகிறது. உடலில் இருக்கும் தேவை அற்ற கெட்ட கொழுப்பை அகற்ற மட்டுமின்றி குடலுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. கூழில் நார் சத்து அதிகமாக உள்ளது. குருதியில் இருக்கும் கொழுப்பையும் குறைக்க வல்லது.
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம். உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும்.
கேழ்வரகில் உள்ள தாவர வகை இரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
ரத்தச்சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது அற்புதமான மருந்து. செரிமானத்துக்கு உதவும். பாலூட்டும் தாய்மார்கள் இதைக் சாப்பிட்டு வந்தால், பால் சுரப்பு அதிகரிக்கும்.
கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது. கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
ராகியில் இயல்பிலேயே குளிரூட்டும் சக்தி இருப்பதால், குளிர்ந்த காலநிலை அல்லது மழை பெய்யும் நேரங்களில் இந்த ராகியைப் உணவாக எடுத்துக் கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
எடுத்துக்காட்டாக, நம்மை சுற்றியுள்ள வானிலை மிகவும் குளிராக இருக்கும் பொழுது, நமது உட்புற உடல் வெப்பம் குளிர்ச்சி அடைகிற நேரத்தில் நாம் ராகி உணவை உட்கொள்கிறோம். இதனால் செரிமான பிரச்சனை போன்ற பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஹைப்போ தைராய்டு இருக்கின்றவர்கள் இந்த ராகியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது தைராய்டை சரிசெய்யும்.
பால் சுரப்பு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த ராகி மிக நல்லது. பால் கொடுக்கும் தாய்மார்கள் அடிக்கடி ராகியை உணவில் எடுத்துக் கொள்வதால், உடலுக்குள் இருக்கின்ற சிவப்பணுக்களின் அளவினை அதிகரிக்கும். பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.
அன்றாட உணவில் ராகியை பயன்படுத்தி வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுகிறது. அரிசி மற்றும் கோதுமை போன்றவற்றைக் காட்டிலும் நார்ச்சத்தானது ராகியில் அதிகமாகவுள்ளது. அதிக நார்ச்சத்து சர்க்கரை அளவைக் குறைக்கிறது. கார்ப்போஹைட்ரேட் அதிகம் சாப்பிட வேண்டும் என்ற உணர்வை ராகியில் செய்யப்படும் உணவு குறைக்கிறது.
வெளி நாட்டு உணவு மோகத்தால் தன உணவும் கெட்டு தனது ஆரோக்கியமும் கெடுத்துக் கொண்டான் தமிழன் .
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி வாழ்ந்த மனிதன் இன்று பணத்துக்காக வாழத் தொடங்கியதால் எதிலும் பணத்தையே முதன்மைப்படுத்துகிறான்.இதனால் அழிந்து கொண்டிருக்கின்றான் .
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
Manikkavasagar Vaitialingam



கருத்துகள்
கருத்துரையிடுக