சேர் சிற்றம்பலம் கார்டினர்
அச்சுவேலி இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் கிழக்கு பகுதியில் உள்ள கிராமமாகும். இதன் உப பிரிவுகளாக இடைக்காடு, வளலாய், தம்பலை, பத்தமேனி, கதிரிப்பாய் போன்ற கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. இக்கிராமத்தின் வடக்கே தொண்டைமானாறும், தெற்கே ஆவரங்காலும், மேற்கே ஓட்டகப்புலம், வசாவிளானும், கிழக்கே வல்லை கடலின் தொடர்ச்சியுடன் கூடிய பரந்த வயல் வெளியும் பற்றைக் காடுகளும் காணப்படுகின்றன.
யாழ்நகரில் இருந்து பருத்தித்துறைக்குச் செல்லும் பெருந்தெரு, அச்சுவேலியை மையமாகக் கொண்டே செல்கின்றது. இதனால், யாழ்ப்பாணத்தையும் பருத்தித்துறையையும் இணைக்கும் வண்டிச்சக்கர அச்சுப்போல் இக்கிராமம் இருந்து “அச்சுவேலி” என நாமம் பெற்றது .
அச்சுவேலி மத்திய கல்லூரி
அச்சுவேலி சரசுவதி வித்தியாசாலை
புனித திரேசா மகளிர் கல்லூரிஎன்ற பிரபல பாடசாலைகளை யும்
புனித சூசையப்பர் ஆலயம்
அந்தோனியார் கோயில்
புரட்டத்தாந்து ஆலயம் என மூன்று கிறித்தவ ஆலயங்களையும்
காட்டுமலைக் கந்தசுவாமி கோயில் (அச்சுவேலி தெற்கு)
சித்திர வேலாயுதர் கோயில் (அச்சுவேலி வடக்கு)
மகிழடி வைரவர் கோயில் (அச்சுவேலி நகரப்பகுதி)
பத்தமேனி பிள்ளையார் கோயில் (அச்சுவேலி பத்தமேனி)
சிவசக்தி கோயில் (அச்சுவேலி தெற்கு)
போதிப்பிள்ளையார் கோயில் (அச்சுவேலி தோப்பு)
பயித்தோலை நரசிம்ம வைரவர் கோவில் (அச்சுவேலி மத்தி)
முனியப்பர் கோயில் (அச்சுவேலி வல்லை வீதி)
என இந்து ஆலயங்களும் கொண்டது இந்த மண் .
இந்த மண்ணிலே sir சிற்றம்பலம் கார்ட்னர் பிறந்தார்
இவராலேயே இலங்கையில் சிலோன் சினிமாஸ் லிமிடெட் ஆரம்பிக்கப்பட்டது
எல்லாளா மன்னனைக் கொன்ற துட்டகைமுனுவும் ஒரு நீதி மான்
கடவுள் பக்தி மிக்கவன் .இவன் தான் கொன்ற எல்லாலனுக்கே சமாதி கட்டி வழிபாடு செய்தவன்
இவனுக்கு ஒரு மகன் சாலியாஇவனின் கதையை இங்கே கூறவேண்டியது எனது கடமை .
இலங்கையில் நடந்த காதல் கதைகளில், சரித்திர வரலாறு படைத்த கதை “சாலியா – அசோகமாலா” காதல் கதை. அக்கதை மக்களின் கவனத்தை ஈர்த்ததுக்கு முக்கிய காரணம்,; சாலியா சிங்களவர்கள் பெருமையாகப் பேசும் இலங்கை முழுவதையும் கிமு 161 -137 காலத்தில் ஆண்ட துட்டகைமுனு மன்னனின் மகன் ஆவான்.
அதோடு பட்டத்து இளவரசன். அசோக்கமாலா கீழ்சாதியான சண்டாளக் குலத்தைச் சேர்ந்தவள்,
ஆனால் அழகி.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிங்கள இனத்திடையே சாதிவேற்றுமை இருந்து வந்ததுக்கு இக்கதை ஒரு ஆதாரம்
. இக்காதலர்களை கல்லில் சிலை வடிவில் அமைத்து, அனுராதபுரத்தில் உள்ள “இசுருமுனிய” விகாரவுக்கு போக முன், வாசலில் “இசுருமுனிய காதலர்கள்” என்ற பெயரில் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
சிங்களவர்கள போற்றும் “மகாவம்சம்” என்ற இலங்கையின் வரலாற்று நூலில் இக்காதல் கதை விபரமாக எழுதப்பட்டுள்ளது
ஒருநாள், இளவரசன் சாலியா, அசோக மரக்காட்டில் உலாவும் போது ஒரு இனிமையான பெண்குரலில் பாட்டோன்றைக் கேட்டான். அந்தக் குரலால் கவரப்பட்ட சாலியா, குரல் கேட்ட திசை நோக்கிச் சென்று பாடிய இனிமையான குரல் எவருடையது என்று தேடும் போது, ஒரு அழகிய பெண்ணொருத்தி பாடியபடி, அசோக மலர்களை ஆய்வதைக்கண்டான்.
அப்பெண்னின் பூர்வீகமறியாது, அவள் மேல் கண்டதும் காதல் கொண்டான். அந்தப் பெண் அசோக்கமாலா தான் சண்டாள சாதியைச் சேர்ந்வள் என தன்னை அறிமுகப்புடுத்தியும் அசோகமாலா மேல் சாலியாவுக்கு ஏறபட்ட காதலை மாற்றமுடியவில்லை.
முற் பிறவியில் சாலியாவும் அசோக்கமாலாவும் கணவன் மனைவியாக இருந்தவர்கள். அந்தத் தொடர்பே , அவர்களுக்கிடையே காதல் உருவாகக் காரணம் என்கிறது வரலாறு.
அசோக்கமாலா என்ற பெயர்; அசோகமலரைக் குறிக்கும்.
பல நல்ல காரியங்களைச் செய்த சாலியா மீது,
தந்தை துட்டகைமுனுவும் சாலியாவின் பாட்டியார்; விகாரமகாதேவியும் அன்பைப் பொழிந்தனர்.
சண்டாள ச் சாதியைச் சே ர்;ந்த பெண் ஒருத்தியைக் காதலித்து திருமணம் செய்தால்,; கைமுனுவுக்குப் பின்னர் மன்னனாகமுடியாது என்று சாலியா அறிந்திருந்தும் ;அசோக்கமாலாவை மறக்க அவனால் முடியவில்லை.
சாலியா- அசோக்கமாலா காதல், மன்னனின் எதிர்ப்பையும் மீறி, திருமணத்தில் போய் முடிந்தது. அதை அறிந்த கைமுனு மன்னன் கோபமுற்று மகனை அரண்மனையைவிட்டு துரத்திவிட்டான்.
சாலியா- அசோக்கமாலா தம்பதிகள் அரணமனை வாழவில் இருந்து விலகி வாழ்க்கை நடத்தினார்கள்
ஒரு நாள் முலிகைளால் தன் கைப்பட தாயரிக்கப்பட்ட “ரத்தம்பால” என்ற சுவையான உணவை கைமுனு மன்னனுக்கு அசோகமாலா அனுப்பினாள்.
உணவை அருநதிய மன்னனுக்கு உணவு வெகுவாகப் பிடித்துக்கொண்டது.“யார் இநத உணவை தயாரித்தது” என்று மன்னன் கேட்டபோது, “வேறு ஒருவரும் இல்லை, உங்கள் மருமகள் அசோக்கமாலாதான் தயாரித்தது என்றனர் உணவை மன்னனுக்குக் கொடுத்தவர்கள்.
ஒரு கீழ் சாதிப்பெண் தாயாரித்த உணவையா நான் உண்டேன் எனக கோபமுற்று “ரத்தம்பால” என்ற அசோக்கமாலா அனுப்பிய உணவைத் தூக்கி எறிந்தான மன்னன்..
உணவு சுவர்களில் தெறித்துச் சிதறியது.
இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களில் கைமுனு மன்னனின் காலில் பொக்களம் ஒன்று ஏற்பட்டுப் புண்ணாக்கியது.
அதைக் குணமாற்ற அரண்மனை வைத்தியர்கள் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. புண் பெரிதாகிக் கொண்டே வந்தது. அதைக் குணப்படுத்த ரத்தம்பால என்ற மூலிகை அவசியம் என்றனர் வைத்தியர்கள்.
அதை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
ஒரு அரண்மனை சமையலகாரனுக்கு அசோக்கமாலா அனுபிய ரத்தம்பால உணவை மன்னன் சுவரில் வீசி எறிந்தது நினைவுக்கு வந்தது. உடனே அவன் சொல்லி சுவிரில் காய்ந்திருந்த ரத்தம்பாலவை சுரண்டிஎடுத்து வரும்படி வைத்தியர்கள் காவலாளிகளுக்கு கட்டளையிட்டனர்.
காவலாளிகள் சுவரில் காய்ந்து போன ரத்தம்பால என்ற உணவைச் சுரண்டி எடுத்து வந்து வைத்தியர்களிடம் கொடுத்தார்கள். அதைப் பாவித்து, மருந்து தாயாரித்து மன்னனினது கால்;புண்ணுக்கு வைத்தியம் செய்து வெகு விரைவில் குணப்படுத்தினர்.
தன் கால் புண் சுகமாவதற்கு வேண்டிய ரத்தம்பால மூலிகை எங்கிருந்து கிடத்தது என்று வேலைக்காரர்களிடம் கைமுனு மன்னன் வினாவிய போது, அவர்கள் பயத்தொடு, நடந்த முழுவிபரத்தையும் மன்னனுக்குச் சொன்னார்கள்.
கதையைக் கேள்விப்பட்ட துட்டகைமுனு மன்னன் தான் செய்த தவறை உணர்ந்தான். அசோக்கமாலா மேல் அனுதாபப்பட்டான.;
மகன் ;சாலியாவையும் மருமகள் அசோக்கமாலாவையும் மன்னித்து, அரண்மனைக்கு மன்னன்; வரவழைத்தான். மருமகளினது அழகையும், அறிவையும் கண்டு மன்னன் பெருமைப்பட்டான்.
சாலியா- அசோக்கமாலா தம்பதிகளுக்கு முறைப்படி ஆடம்பாரமாகத் திருமணம் செய்து வைத்தான் கைமுனு மன்னன்.
தம்பதிகள் அரணமனையில் வாழத் தொடங்கினார்கள். ஆனால் சாலியா, தாழ்ந்த சாதிப் பெண்ணைத் திருமணம் செய்த காரணத்தால் மன்னனாக முடியவில்லை.
கைமுனுவின் மரணத்துக்குப் பின் அவன் சகோதரன் சாததிஸ்ஸவே மன்னன் ஆனான்.
இந்தக் கதையை சேர் சிற்றம்பலம் கார்டினர்படமாகத் தயாரித்தார் .
இவரைப் பற்றி இங்கு நோக்குவோம்
அச்சுவேலியில் சாமுவேல் வைரமுத்து கார்டினர், சலோமாபிள்ளை பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு
6 சனவரி 1899 இல் பிறந்தவர் சிற்றம்பலம். தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு சென்று உயர்கல்வியை சென். யோசப் கல்லூரியிலும் பெற்றார்.
இலத்தீன் மொழியில் தேர்ச்சி பெற்ற இவர் சென். யோசப் கல்லூரியிலேயே சில காலம் மாணவர்களுக்கு இலத்தீன் மொழி கற்பித்தார். அலோசியசு கார்மெல் காசிச்செட்டி என்பவரின் மகள் ஏஞ்சலீன் காசிச் செட்டி என்பவரைத் திருமணம் புரிந்தார்.
சிரில் அலோசியசு இவர்களின் வளர்ப்பு மகன் ஆவார்.
கார்டினர் சட்டம் பயின்று பின்னர் சுய தொழிலில் இறங்கினார்.இலங்கையில் திரைப்படத் துறையில் நுழைந்தவர்களில் இவர் ஒரு முன்னோடியாவார். சிலோன் தியேட்டர்சு லிமிட்டெட் என்னும் நிறுவனத்தை 1928 செப்டம்பர் 29 இல் ஆரம்பித்தார்.
இந்நிறுவனம் தற்போதும் திரைப்படத் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனம் ஆகும்.
கார்கில்ஸ், மில்லர்ஸ் உட்பட இலங்கையின் பல முன்னணி நிறுவனங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் இவர் வைத்திருந்தார்.
இலங்கையில் இரண்டாவதாகத் திரையிடப்பட்ட அசோகமாலா (1947) என்ற சிங்களத் திரைப்படத்தை இவரே தயாரித்தார். இப்படம் இந்தியாவில் தயாரானது.
இலங்கையில் வெளியிடப்பட்ட மூன்றாவது சிங்களத் திரைப்படமான கபட்டி ஆரக்சாவ ஐயும் சிலோன் தியேட்டர் நிறுவனமே தயாரித்தது. இப்படத்தில் சில இலங்கைக் காட்சிகளும் சேர்க்கப்பட்டன. சிற்றம்பலம் கார்டினர் தயாரித்த பல படங்கள் வெற்றி பெற்றன. சிலோன் ஸ்டூடியோ என்ற பெயரில் ஒரு கலைக்கூடத்தையும் இவர் இலங்கையில் நிறுவினார்.
1947 ஆம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை இவருக்கு புனித சில்வெஸ்டர் கட்டளை விருதை வழங்கிக் கௌரவித்தது. புனித கிரெகரியின் கட்டளை விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
1947 ஆம் ஆண்டில் இலங்கை செனட் சபைக்கு நியமிக்கப்பட்டார்.
1951 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு இவருக்கு சேர் பட்டம் வழங்கியது.
பன்னாட்டு ரோட்டரி கழகத்தில் உறுப்பினராக இருந்த சிற்றம்பலம் பல அறக்கட்டளை நிதியங்களுக்குப் பொறுப்பாக இருந்தார்.
குதிரைப் பந்தயங்களிலும் இவர் ஈடுபட்டார். குதிரை ஒன்றை சொந்தமாக வைத்திருந்த இவர் 1947 ஆளுநர் கோப்பையை வென்றார்.
சிலோன் தியேட்டர்சு நிறுவனத்திற்குச் சொந்தமான கொழும்பில் உள்ள ரீகல் படமாளிகை வழியாக செல்லும் பார்சன்சு வீதிக்கு இவரது நினைவாக சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை எனப் பெயரிடப்பட்டது
இது அச்சுவேலி மக்களுக்கு பெருமை அல்லவா ?
Manikkavasagar Vaitialingam



கருத்துகள்
கருத்துரையிடுக