பன்றிகள் அறிவுக்கூர்மை உள்ள விலங்குகளாகக் கருதப்படுகின்றன. நாய், பூனைகளை விட இவற்றை எளிதில் பழக்க முடியும்
இவற்றை செல்ல(PET ) விலங்குகளாகவும் மக்கள் வளர்க்கின்றனர்
பன்றியில் பன்னிரண்டு வகைகள் உண்டு
அவற்றில் வளர்ப்பு பன்றி
காட்டுப் பன்றி என்ற இரண்டு வகைகளைமட்டும் இப்பொழுது கவனிப்போம்
பொதுவாக நாம் திட்டும் பொழுது பன்றி என்று ஏசுகிறோம் .
காரணம் அவைக்கு வியர்ப்பது இல்லை ,வியர்வை சுரப்பிகள் இல்லை .
வியர்வை சுரப்பிகள் இல்லாத காரணத்தால் அவை நீரில் இருப்பதன் மூலமோ சேற்றைப் பூசிக்கொள்வதன் மூலமோ தங்கள் உடம்பைக் குளிர்வித்துக் கொள்கின்றன. மேலும், இந்த சேற்றுப் பூச்சானது சூரிய வெப்பம் மற்றும் பூச்சிகளிடம் இருந்து காத்துக்கொள்ளவும் உதவுகிறது
இதனால் அதை ஒரு அழுக்கு மிருகமாக உற்று நோக்குகிறார்கள் .
அதன் பிறப்பால் அது சேற்றைப் பூசத்தான் செய்யும்
சரி இந்தப் பன்றிகள் ஒரு சமூகத் தொண்டன் .உதாரணமாக வீட்டில் வளர்த்தால் தன் இச்சையாக வளர விட்டால் ,உங்கள் வீடுகளில் சிரமதானம் செய்யத் தேவை இல்லை .ஏன் எனில் ..
பன்றிகள் மனிதனால் உட்கொள்ள முடியாத உணவுப்பொருட்களான பசுந்தீவனம், தானியங்களின் உப பொருட்கள், இறைச்சிக் கழிவுகள், சமையலறைக்கழிவுகள் ஆகியவற்றை உண்கின்றன.பன்றிகளின் சாணம் மண்ணின் தன்மையினைப் பாதுகாக்கும் உரமாக பயன்படுகிறது. பன்றிகள் வேகமாக வளரும் தன்மையுடையன. அவை நல்ல பராமரிப்பில் ஒரே சமயத்தில் ஒன்று முதல் பனிரெண்டு குட்டிகளை ஈனக்கூடியவை . இதன் பெருக்கத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் ...போகிற படியால் ..உணவாக்கத் தொடங்கினான் மனிதன் .பன்றிகளை இறைச்சிக்காக வெட்டும் போது சராசரியாக அவற்றின் உயிர் எடையில் 60-80 சதவிகித இறைச்சி பெறப்படுகிறது
நாளடைவில் இது ஒரு வியாபாரமாகப் போய் விட்டது
ப் +அன்றி =பன்றி ...,
ப =பஞ்சமம் எனப்படும் இளியிசையின் எழுத்து
அன்றி =அல்லாமல்
பன்றியை பன்றி என்று இழிவு செய்யாமல் அன்போடு நேசிப்போம்
சைவ சமயத்தில் சிவபிரான் பன்றிக் குட்டிகளுக்கு தாயான கதையும் உண்டு
எனவே நாமும் பன்றிகளைக் கொல்லாமல் எல்லா உயிரும் இறைவனே என்று நினைத்து
வாழ்வோமாக .
மச்சம் என்பது பன்றியை குறிக்கும்
விஷ்ணு பகவானின் வாகனமாக இருப்பதாக மச்ச புராணங்கள் கூறுகின்றன
இதனால் தானோ என்னவோ மச்ச மாமிசம் உண்ணாதே என்று ஆன்றோர்கள் கூறினார்
பன்றிகளுக்கு தகுந்த வியர்வை சுரப்பிகள் இல்லாத காரணத்தால் அதன் கொழுப்புக்கள் வெளியேறாமல் உடம்பில் தங்கி விடுகின்றன
பேக்கன் (பன்றி இறைச்சி) என்பது ஒரு பன்றியிலிருந்து தயாரித்த பதனம் செய்த மாமிச உணவு ஆகும். அது முதலில் உப்புக் கரைசல் அல்லது உலர்ந்த பொதிதலில் அதிக அளவு உப்புடன் சேர்த்து பதனம் செய்த மாமிச உணவு ஆகும்; அதில் இருந்து கிடைப்பதே புத்தம் புதிய பேக்கன் அல்லது பன்றி இறைச்சி ஆகும்
எனவே நீங்கள் இந்த இறைச்சியை உண்ணும் பொழுது
உங்கள் உடம்பில் கூடாத ,நல்ல கொழுப்புக்கள் அளவுக்கு மீறி சேர்ந்து
இருதய நோய்கள் வர வாய்ப்புண்டு
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
வராக ஈஸ்வரர் என்கிற பெயர் சிவனுக்கு உண்டு
இது பற்றிய விளக்கத்தை வேறு ஒரு பதிவில் காண்போம்


கருத்துகள்
கருத்துரையிடுக