அகஸ்தியர் யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை என்ற கிராமத்தில் சவரிமுத்து, அன்னம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். தனது 20வது அகவையில் கவிதை மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமானார். சுதந்திரனில் எழுதத் தொடங்கியவ்ர் தினகரன், வீரகேசரி, தினபதி, ஈழநாடு, மல்லிகை, சுடர் ஆகிய பத்திரிகைகளில் எழுதினார். எழுத்து, தீபம், கண்ணதாசன், கலைமகள், தாமரை போன்ற தமிழக இதழ்களும் இவரது சிறுகதைகளைப் பிரசுரித்தன. தாமரை இதழ் 1970 ஆம் ஆண்டில் இவருடைய படத்தை அட்டையில் பிரசுரித்தது

இருளினுள்ளே (குறும் புதினத் தொகுதி, 1968)
திருமணத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள் (புதினம், 1976)
மண்ணில் தெரியுதொரு தோற்றம் (புதினம், 1978)
கோபுரங்கள் சரிகின்றன (குறும் புதினம், 1984)
எரி நெருப்பில் இடை பாதை இல்லை (புதினம், 1992)
நரகத்திலிருந்து (குறும் புதினத்தொகுதி, 1994)
பூந்தான் யோசேப்பு வாழ்க்கை வரலாறு
மகாகனம் பொருந்திய
எவளுக்கும் தாயாக
அகஸ்தியர் பதிவுகள்
கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும்
அகஸ்தியர் கதைகள்
என்று எழுதி தள்ளினார் சிறுகதைகள், குறும் புதினங்கள், புதினங்கள், மேடை நாடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள் எனப் பல கோணங்களிலும் எழுதியவர். 1986 ஆம் ஆண்டில் புலம் பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தார்.
நவஜோதி
நவஜெனனி
நவஜீவா
என மூன்று பிள்ளைகள் இவருக்கு
ஈழத்து இலக்கிய ஆக்கத்தின் பாரம்பரியத்தையும் தோற்றத்தையும், வளர்ச்சியைப் பார்க்கும்போது அகஸ்தியரும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் பின்னிப் பிணைந்திருப்பதை அறிந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது. வர்க்க பேதமற்ற ஒப்பில்லா சமுதாயத்தைப் படைக்க மனிதப் பெருங்குடி நடாத்தும் போராட்;டத்தையும், அதில் தோன்றும் புதிய சமுதாய அமைப்பைப் பிரதிபலிக்கும் சோஷலிஸ்ட்ட யதார்த்த வாதத் தத்துவத்தோடு 1946 ல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோற்றிவிக்கப்பட்டபோது, தன் இளம் வயதின் கருத்தியல்களை அதில் பிரதிபலிக்கும் நோக்குடன் இணைந்து கொண்டு செயலாற்றினார்.
தமிழிலக்கியப் பரப்பினது பொதுவான பண்புகளையும், பாரம்பரியங்களையும் கையேற்றுத் தமதாக்கிக் கொள்ளவும், நமது மக்களின் வாழ்வோடும், வாழ்க்கைப் பிரச்சனைகளோடும், நமது தேசத்தோடும், தேசப் பிரச்சனைகளோடும் ஒன்றுபட்ட ஈழத்தின் மரபுவழி வரும் எமது தேசிய இலக்கியத்தை உருவாக்க வேண்டும் என்ற எழுச்சி, ஈழத்து இலக்கியப் பரப்பிலே ஒரு வரலாற்றுத் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்த இலக்கிய வரலாற்றுக் காலத்தின் அவசியத்தை உணர்ந்து மானிட நேயத்தை நேசிக்கும் எழுத்தாளராக புடம்போட்டுக் கிளர்ந்தெழுந்த ஒரு இலக்கிவாதிதான் திரு.அகஸ்தியர் ஆவார்.
இலக்கியம் மூலம் தாம் எண்ணித் துணிந்த தேசப்பணியொன்றினைச் செய்வதாகவே அவர் கருதிச் செயற்பட்டார். தனது இறுதி மூச்சு உள்ளவரை உயர்ந்த மனித வர்க்கத்துக்கான இலக்கியம் படைப்பதையே விரும்பினார். தேசிய ஒருமைப்பாடு தமிழ் பேசும் மக்களின் தனித்துவத்தைப் பேண வேண்டும் என்ற நோக்கோடு மண்வாசனை கமழும் பல் சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதினார். இதில் முக்கியமான சிறப்பு என்னவெனில் தனது இலக்கியப் படைப்புக்களில் ஈழத்தில் உள்ள பல கிராமங்களின் பேச்சு வழக்கினையும், யாழ்ப்பாண மக்களின் பேச்சு வழக்கினையும், மலையக முஸ்லீம் மக்களின் பேச்சு வழக்கினையும் சுவாரஸ்யத்துடன் எழுதுவதும், இந்தப் பேச்சுத் தமிழுக்குச் சரியான எழுத்துருவம் கொடுத்திருப்பதும் அவரது தனிக்கலை. அல்லது அவருக்குக் கிடைத்த ஒரு கொடை என்றும் சொல்லலாம். அதுமட்டுமல்லாது தனது ஆக்க இலக்கியங்களின் கருப்பொருளாக அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் மீட்சியை சமுதாயப் பார்வையுடனும், பரிசுத்த நேசிப்புடனும் நோக்கினார். அதற்காகவே வாழ்நாள் முழுதும் பேனைiயைத் தூக்கிய போராளியானார்.
1983 தொடக்கத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டை கொண்டாடிய வேளையில் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த மூத்த எழுத்தாளர்களும் பாரதி இயல் ஆய்வாளர்களுமான தொ.மு.சி. ரகுநாதன், ராஜம் கிருஷ்ணன், பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கும் அழைக்கப்பட்டனர்.
யாழ். கொட்டடியில் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் பூபாலசிங்கம் அவர்களின் இல்லத்தில் தமிழக எழுத்தாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, இலக்கிய கலந்துரையாடலும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அகஸ்தியர்தான் தலைமை தாங்கினார்.
இலக்கியம் என்பது ஒரு எழுத்தாளன் வாழும் காலகட்டத்தில் அவன் கண்ட சமுதாயத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு சரித்திர ஆவணம்.
வாழும் சமுதாயத்தில் சாதி மத இன,நிற வர்க்க பேதங்களால் மக்களுக்கு நடக்கும் கொடுமைகயைக் கவனிக்காமல் அல்லது தெரிந்தும் தெரியாத நடித்துக்கொண்டு ஒரு எழுத்தான் தனது இலக்கியப் படைப்புக்களைச் செய்தால் அவை சமூகம் சாராத-தன்னை அந்தச் சமுகத்துடன் இணைத்துப் பாராத ஒரு படைப்பாளியின் உயிரற்ற வெற்றுப் படைப்பாகத்தானிருக்கும்.
எழுத்தாளன் வாழும் காலங்களில் அன்றைய சமூகத் தாக்கங்கள்
இலக்கியததைப் படைத்தவனின் தற்போதுள்ள சமூகக் கண்ணோட்டதை;தைக் காட்டிக் கொடுத்து விடும்..
இலங்கை எழுத்தாளர்கள் பலர்3௦முதல் 60ம் ஆண்டுகளில் சமுகத்தின் வேறுபாடுகளால் அடக்கப் பட்டு ஒடுக்கப் பட்ட மக்களைப் பற்றி எழுதினார்கள். அவர்களின் சமுதாய வெளியுலகத் தொடர்பால் கண்ட கொடுமைகளையுணர்ந்த உள்ளுணர்வின் கோபப்பொறிகள்,ஆதங்கங்கள், அதிர்வுகள்,என்பன அவர்களின் படைப்புக்களில் பிரதி பலித்தன.
ஒட்டுமொத்தமான மக்களின் சமத்துவ வாழ்க்கைக்கு வழிதேடியவர்களில் சமயவாதிகள்,அரசியல்வாதிகள் என்று பலர். அவர்களில் தங்கள் வாழ்க்கையையே ஒடுக்கப் பட்ட மக்களின் நிலையை மாற்றும் வித்தில் தங்கள் இலக்கியப் படைப்புக்களைச் செய்தவர்களும்; அடங்குவர்.
தமிழ் இலக்கியம் வளர்ந்த தமிழ்நாட்டில் சாதிக் கொடுமையால் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் இலக்கியத்தற் கேட்காமலிருந்த கால கட்டத்தில் அவர்களின் துயரைத் தங்கள் படைப்புக்களில் காட்டியவர்கள் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள்.
இன்றும் அவை தொடர்கின்றன
இலங்கையின் முற்போக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் முக்கியமான படைப்பாளிகளில் அகஸ்தியரும் ஒருவ ர்.
ஆளும் வர்க்கம் எப்படி ஏழை மக்களை வதைக்கிறது. வாட்டுகிறது,மனிதராக மதிக்காமல் இழிவுபடுத்துகிறது என்பதைத் தனது படைப்புக்கள் மூலம் உலகுக்குச் சொன்ன முற்போக்கு எழுத்தாளர்களில் திரு அகஸ்தியரும் சிறப்பானவர் .
இங்கே ஆளும் வர்க்கம் என நான் குறிப்பிடுவது சாதியம் பற்றியது .பதினெட்டு சாதிகளும் அதன் தாக்கங்களும் .நீங்கள் அனைவரும் அறிந்தவர்கள் .எந்த மிகைப் படுத்தலும் இன்றி சிந்தித்து தெளிவு கொள்ளுங்கள்
பெண்ணடிமைத்தனம் ,ஆணாதிக்கம் போன்ற பல விடயங்களை இவர் தனது பேனாக்களில் வடித்தவர்.
‘எரி நெருப்பில் இடைபாதையில்லை’
சுரண்டும் வர்க்கத்தின் எச்ச சொச்சமான,யாழ்ப்பாண சமூக அமைப்பின்,’தாழ்த்தப்பட்ட’,’உயர்த்தப்பட்ட’பிறழ்வுகளை மையப்படுத்தி,அவர் கூற முற்பட்டதை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்
1959ம் ஆண்டு அகஸ்தியர் எழுதிய ‘எரிநெருப்பில் இடைபாதையில்லை’ என்ற நாவல் அக்கால கட்டத்தில் வடக்கில் நடைமுறையிலிருந்த சாதிக்கொடுமையை மிகவும் சிறந்த முறையில் வெளிப்படுத்திய நாவல்அது .
20ம் நூற்றண்டின் ஆரம்பத்தில்,உயர்சாதியினரால் ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியுரிமை மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையிலுள்ள அத்தனை மக்களுக்கும் கல்வி வசதி பெறவேண்டும் என்ற அரச கொள்கையால் பலர் கல்வியறிவப் பெற்றனர்.
1940ம் ஆண்டுகள் தொடக்கக் கட்டத்தில், மார்க்சிய அரசியல்,இலக்கிய ரீதியாகப் பல முற்போககுவாதிகள், சாதி மத பேதமற்று,சாதாரண மக்கள் அத்தனைபேரும் இந்தக் கொடிய சாதி முறையைத் தகர்க்கவேண்டும் என்று பாடாய்ப் பாடுபட்டார்கள். யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம், தொழிலாளர்கள்,ஏழைமக்கள்
சாதி பாகு பாட்டால் அந்நியமான நேரம் அது .சாதி வெறி நீறு பூத்த தணலாக உள்ளே புகைந்த நேரம் அதுவே யாகும் .
‘எரிநெருப்பில் இடைபாதையில்லை’என்கின்ற நாவல்
’1964ல் இந்நாவலை வெளியிட முனைந்த’ தினகரன்’ பத்திரிகை,நாவலுக்கான முன்னுரையைப் பிரசுரித்ததோடு நிறுத்திக் கொண்டது.
இந்நாவலைப் பிரசுரிக்க மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது.
இந்நாவல் 1968ம் ஆண்டு’ஈழமலர்’ பத்திரிகை நடத்திய அகில இலங்கை நாவல் போட்டிpயில் விசேட பரிசு பெற்றது.
அதன் பின்தான் வடக்கில் சாதிக்கெதிரான் போராட்டங்களும் கோயிற் பிரவேசப்; வலுப்பெற்றன
இந்நாவலுக்கு அணிந்துரை எழுதிய மலைநாட்டு மன்ற செய்தி நிர்வாக ஆசிரியரான,ரா.மு. நாகலிங்கம் அவர்கள்,
‘வர்ணாசிரமம் என்ற பெயரில் நால்வகைச் சாதி படைத்து,அதன் அடிப்படையில் மனுக்குலத்தைக் கூறுபோட்டது இருக்கு வேதம்.வைசியரும் சூத்திரரும். ஊயர்சாதியினர் அல்லர் என்று இருக்கு வேதத்தில் வலிமை சேர்த்தான் கீதையில் (ராஜவித்யா,ராஜகுஹ்யயாகம்) கண்ணன்.பிராமணர்கள் உயர்சாதி,(அத் 2-100),சூத்திரனும் வைசியனும் குறைந்தசாதி.அதனால் அவர்களை,’தாசன்’,’தாசி’ என்றே அழைக்கவேண்டும் என்று (அத் 2-31,32) கண்ணனுடன் பங்காளிச் சண்டைபோட்டவன் மனு’ என்று விளக்குகிறார்.
அகத்தியர் 360 சிறுகதைகள்,40 குட்டிக் கதைகள்,10 குறுநாவல்கள்,9 நாவல்கள்களை எழுதியிருக்கிறார்.
20 வானொலி நாடகங்கள்,நாட்டுக் கூத்து நாடகங்கள்,’உணர்வூற்றுரவகச் சித்திரம்’ என்ற புதிய இலக்கிய வடிவம்- என்றெல்லாத் எழுதியிருக்கிறார்.
அக்கால கட்டத்தில்;,இருபது புனைப் பெயர்களில்; பல பத்திரிகைகளில் எழுதிக் குவித்த ஒரு தமிழ் எழுத்தாளர்
இவர் ஒரு சாதாரண முறபோக்குத் தமிழ் எழுத்தாளர் மட்டுமல்ல,இவர் கர்நாடக இசையில் பரிட்சயம் பெற்றவர்,மிருதங்கம் வாசித்தவர்.இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக் குழு உறுப்பினராக இருந்தவர்.
இவரது படைப்புக்கள் சிங்களம். மலையாளம், ரஷ்ய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கின்றன.
இலங்கைத் தமிழ் சமூகம் கடந்த பல ஆண்டுகள் நடந்த போரால் சிதறி, சிதைந்து,சிந்தனை மழுங்கிப்போயிருக்கிறது. அவர்களின் ஒற்றுமையைத் திரட்டித் தமிழச் சமுதாயத்தை முன்னேற்றாமல் போலித் தமிழ் தேசியவாதிகள்,பழையபடி சாதிப் பிரிவுகளைச் சமயக் கோயில்கள், பிராந்தியவெறிக் கோட்பாடுகள், தேர் இழுப்புக்கள் மூலம் நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் கையாளுகிறார்கள் .
இலங்கையில் தமிழரின் சரித்திரம் ஒரு இருண்டகாலத்தையே நோக்கிப் போய்க் கொண்டிருகிறது .பிள்ளைகள் பெற்றோரை கணம் பண்ணுவது அருகி வருகிறது .பண்பாடு அற்ற மேலைத்தேய சினிமாத் தாக்கங்கள் வரலாறு ஆகி வருகிறது .
செல்லரித்துப்போன தமிழ்ச்சினிமா இனியாவது சிறந்த இலக்கிய ஆக்கங்களால் தரமான கலையாக உருவாகுமா?
வணிகமயப்படுத்தப்பட்ட கலை இலக்கிய சீரழிவுகளையும் நச்சுக் கருத்துக்களையும் ஊழல்களையும் சமூகக் குறைபாடுகளையும் அரசியல் பொருளாதார அக்கிரமங்களையும் பல துறைகள் சார்ந்த சுரண்டற் கொடுமைகளையும் இறுதி மூச்சுவரை ஆக்கிரோசத்துடன் கண்டித்தும் தாக்கியும் புத்துலகம் சமைக்க இடையறாது பாடுபட்ட போராளி; அசுர உழைப்பாளி ;அகஸ்தியர் .
மனிதகுலத்தை உள்ளன்போடு நேசித்த மனிதாபிமானி; சமுதாய உயர்விற்காக இலட்சியப் பயணம் மேற்கொண்ட இலட்சியவாதி அகஸ்தியர்.
சமுதாய மாற்றத்திறகேற்ற கருவியாகவே அவர் தமது ஆக்கங்களைப் பயன்படுத்தினார். தான் சரியெனக் கருதும், மனதில் தோன்றும் கருத்துக்களை ஒளிவு மறைவின்றிக் கூச்சப்படாது அசுரத் துணி;ச்சலுடன் தமது படைப்புக்களிலும் கட்டுரைகளிலும் வெளியிட்டவர் .
இலக்கியத்தின் சமூகப்பணி பெறுமதி மிக்கது. இலக்கியமானது சமுதாயத் தீமைகளை அகற்றிச் சமூகத்துக்கு நன்மை பயக்கும் கருத்துக்களை வற்புறுத்த வேண்டும்; பிரச்சனைகளை அலசுவதுடன் நில்லாது அப்பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணங்களை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்;பதற்கான வழிவகைகளையும் விண்டு காட்டுதல் வேண்டும், கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணம் இவை என்னும் அறிவுமிலார், என்ற நிலையில்வாழும் மக்களைத் தட்டியெழுப்பி உண்மையை உணர்த்தி விழிப்புறச் செய்ய முயல வேண்டும் என்னும் கருத்துக்களை உறுதியுடன் பின்பற்றி இறுதிவரை செயற்பட்டவர் .
அகஸ்தியரது மேய்ப்பர்கள் (1990) என்னும் சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை அரசும் தமிழக அரசும் பரிசில்கள் வழங்கிக் கௌரவித்துள்ளன. இதே போன்று இவரது மண்ணில் தெரியுதொரு தோற்றம், நாட்டுக் கூத்து கலாநிதி பூந்தான் யோசேப்பு வரலாறு ஆகியவற்றுக்கும் இலங்கைச் சாகித்திய மண்டலப் பரிசில்கள் வழங்கப்பட்டன. அகஸ்தியரது ஆக்கங்கள் அவரது சொந்தப் பெயரில் மட்டுமன்றி இருபத்துநான்கு புனைபெயர்களிலும் வெளிவந்துள்ளமை சிந்திக்கவேண்டியதொன்றாகும். அகஸ்தியரது கருத்து வீச்சும் சமுதாய மாற்றம் வேண்டி நிற்கும் தீவரப் போக்கும் அசுரத்தனமான எழுத்து வேகமும் கண்டிக்க வேண்டியவற்றைக் தயங்காது அசுரத் துணிச்சலுடனும் நையாண்டியுடனும் கண்டிக்கும் இயல்பும், அவர்மீது சிலருக்கு குரோதத்தையும் எரிச்சலையும் அச்சத்தையும் ஏற்படுத்தின. அதனால் அகஸ்தியரது ஆக்கங்களை அத்தகையவர்கள் பண்பற்ற முறையில் விமர்சித்தனர். தூஷித்தனர். அத்தகையவர்களைத் திக்குமுக்காட வைக்கும் வகையிலும் இவை அகஸ்தியருடையதா, பிறருடையதா எனத் திணறச்செய்யும் நிலையிலும் அவரது புனைபெயர்கள் பல விளங்கின. ஆலடியம்மான், காலன், தீட்ஷண்யன், எஸ்.ஏ, அருளம்பலனார், குறுமுனிவர், வித்தக பண்டிதர், யாழ்ப்பாணன், ஈழத்துச் செல்வன், சத்தியமூர்த்தி, நவமணி, நவஜோதி, ஜெகா, ஜீவா, ஜெகனி, நாவலன், வசந்தன், லெனினிஸ்ட், கலைதாசன், புதுமைப்பிரியன் முதலிய அவரது புனைபெயர்கள் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் நவமணி முதல் ஜெகனி இறாக உள்ள ஐந்து புனைபெர்களும் உண்மையில் அவரது துணைவியாரினதும் பிள்ளைகள் நால்வரினதும் சொந்தப் பெயர்களாகும்.
இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் அரசாங்க அலுவராக அவர் கடமையாற்றிய போதும் கண்டியில் அவர் வாழ்ந்த பதினேழு ஆண்டுகள் மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இலங்கையின் முழுத்தகைமையுள்ள தொழிலாள வர்க்கத்தைக்கொண்ட மலையகத்தின் தலைநகரான கண்டியில் அவர் வாழ்ந்தபோது மலையக தொழிலாளர்களின் அவலங்களை உள்ளபடி உணர்வதற்கும் அவர்களோடு பழகுவதற்கும் அவர்களிடமிருந்து கற்றவற்றைப் புடம்போட்டுச் சிறுகதைகளாகவும், குறுநாவல்களாகவும், நாவல்களாகவும் படைப்பதற்கும் ஏற்ற சந்தர்ப்பம் கிடைத்தது.
கண்டியில் அவர் வாழ்ந்தபோது மலையகத்தின் சண்டமாருதம் எனப்பட்ட சட்டத்தரணியான இரா.சிவலிங்கம், கே.கணேஷ் முதலிய முதுபெரும் எழுத்தாளர்கள் முதல் இளந்தலைமுறையினர் வரை பலரதும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் முதலியோரதும் ஆதரவுடன் மலையகக் கலை இலக்கியச் சங்கம் அமைத்துப் பலதரத்து மக்களுடனும் இணைந்து இலக்கியப் பரிவர்த்தனை புரிந்தார்.
மலையகத் தோட்டத் தொழிலாள்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மட்டுமல்லாது பல்வேறு காரணங்களால் தோட்டங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுத் தொழிலாளர் சமூகத்தின் உதிரிகளாகக் கண்டி, கொழும்பு முதலிய நகர்ப்புறங்களில் தெருவோரங்களிலும், ஒதுக்குப் புறப்பகுதிகளிலும் பரிதாபகரமான முறையில் வாழ்க்கைப் போராட்டம் நடாத்துவோரையும் மையமாகக் கொண்டு மேய்ப்பர்கள், கள்ளத்தோணி, பிரசாதம், பிராத்தனை, இரத்தசாட்சி முதலிய பல சிறுகதைகளையும் நீ என்னும் உணர்வூற்றுருவகச் சித்திரத்தையும், மண்ணில் தெரியுதொரு தோற்றம் முதலிய நாவல்களையும் அவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
அகஸ்தியரது ஆக்கங்களுள் அதிகமானவையும் பல கட்டுரைகளும் அவர் பிறந்து வாழ்ந்த யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டு அங்கு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களின் வாழ்வியல் அம்சங்களையும் பலவேறுபட்ட பிரச்சினைகளையும் சாதியக் கொடுமைகளையும், சீதன முறையின் இறுக்கம், அதனடியாகத் தோன்றும் அவலங்கள் முதலியவற்றையும், ஆறுமுகநாவலர் காலத்தில் இருந்து இற்றைவரை யாழ்ப்பாண மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பலதுறை மாற்றங்களையும் மாறிவரும் விழுமியங்களையும் சீரழிவுகளையும் உயிர், உடைமை இழப்புகளையும், மனித வதைகளையும் பலப்பரீட்சைக் கெடுபிடிகளையும், அற்புதமான முறையிற் படம்பிடித்துக் காட்டி, அலசி ஆராய்பவையாகவும் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட யாழ்ப்பாணத்தைப் பற்றிய வரலாற்று ஆவணங்களாகவும் விளங்குதல் அவதானிக்கத்தக்கது.
அவரது ஆக்கங்கள் சித்தரித்துக் காட்டும் யாழ்ப்பாணத்தை, ஆறுமுகநாவலர் காலத்து யாழ்ப்பாணம், நாவலர் காலத்திலிருந்து 1950 களின் முற்பகுதி வரையிலான யாழ்ப்பாணம், 1950களின் பிற்பகுதியிலிருந்து 1970 களின் இறுதிவரையிலான யாழ்ப்பாணம், கடந்த பதினைந்து ஆண்டுகால யாழ்ப்பாணம் என வகுத்து நோக்குதல் பொருந்தும். இவ்வகையிலே அவரது நூற்றுக்கணக்கான சிறுகதைகள் ( இலவுகாத்த கிளி, மேய்ப்பர்கள், அகஸ்தியர் கதைகள், எவளுக்கும் தாயாக முதலிய தொகுதிகள் உட்பட) நவீன பரமாந்த குருவும் அவர்தம் சீடர்களும் (நாடகம்), அலைகளின் குமுறல் (நாடகம்) மகாகனம் பொருந்திய... (குறுநாவல்களின் தொகுப்பு), நரகத்திலிருந்து – (குறுநாவல்களின் தொகுப்பு) திருமணத்திற்காக ஒரு பெண் காத்திருக்கின்றாள் (நாவல்), எரிநெருப்பில் இடைபாதை இல்லை (நாவல்) மானிடதரிசனங்கள் முதலிய ஆக்கங்களும் அகஸ்தியர் பதிவுகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பலவும் விதந்து கூறத்தக்கவை. இவை அந்தக் காலத்து யாழ்ப்பாணத்தை இந்தக் காலத்து இளந்தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துபவையாகவும் விளங்குகின்றன.
வெளி நாட்டு தமிழர்கள் இவரின் முழு புத்தகங்களையும் வாங்கிப் படித்தால் உங்களின் கடந்த கால வாழ்க்கை முறை ,வாழ்ந்த முறை பற்றி அறிந்து கொள்ள முடியும் .மண் வாசனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Manikkavasagar Vaitialingam

கருத்துகள்