கோபுரம் என்பது தற்போதைய நிலையில் இந்துக் கோயில்களின் நுழை வாயில்களில் அமைந்திருக்கும் கட்டிட அமைப்பைக் குறிப்பதாக பலர் நினைக்கலாம்
. பல்வேறு அளவுகளிலும் காணப்படும் இக் கோபுரங்கள், தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டிலேயே மிகவும் உச்ச வளர்ச்சியைப் பெற்றுக் காணப்படுகின்றன.
ஒரு கூம்பு (பிரமிட்) போல் கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் இந்த அமைப்பு, ஒன்றிமேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட தளங்களாகக் காட்சி தருகின்றன.
ஒரு தளம் கொண்டவை முதல் 12 தளங்கள் கொண்ட கோபுரங்கள் வரை உள்ளன. இது போலவே ஒரு கோயிலில் இருக்கக்கூடிய கோபுரங்களின் எண்ணிக்கையும் பலவாறாகக் காணப்படுகின்றன.
ஒரேயொரு கோபுரத்தைக் கொண்ட கோயில்களும், 16 கோபுரங்களைக் கொண்ட கோயில்களும் உள்ளன.
கோயில்களில் பிரமிட் வடிவில் உயர்ந்து நிற்பனவெல்லாம் கோபுரங்கள் அல்ல.
வட நாட்டுக் கோயில்களிலும், தமிழ் நாட்டின் ஆறு தொடக்கம் 10 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதிகளில் கட்டப்பட்ட கோயில்களிலும் உள்ள உயர்ந்த பிரமிட் வடிவ அமைப்புக்கள் விமானங்கள், அல்லது சிகரங்கள் எனப்படுகின்றன. ஒரு சில ஊர்களில் தன்னிச்சையாக முடிவெடுத்துக் கட்டப்பட்டவை கோபுரம் என அழைக்கப்பட்டாலும் அவை விமானங்கள் என்பதை காலம் கடந்தே உணரத் தலைப்படுகிறார்கள் ..இந்தக் கோபுரங்களின் நான்கு திசைகளிலும் விமானங்கள் அமைக்கப் படுவதும் உண்டு .கோபுரத்தின் கோட்டிற்கு உள்ளே மணிக்கோபுரம் அமைப்பது சிறப்பு .இதை மீறி அமைக்கப்படும் பொழுது .சில அவலங்களும் நிகழ்ந்து விடும் .மணிக் கோபுரம் மணி மண்டபத்துக்கு முன்னால் அமைந்து விட்டால் .ஊரில் நடக்கும் அவலங்களை அவரவர் உணர்ந்து கொண்டால் மட்டுமே பிராயச்சித்தம் உண்டு .என்னால் சிலவற்றைக் குறிப்பிட முடியும் .
நடப்பவை யாவும் நன்மைக்கே என்று சிந்தித்துக் கொள்வேன்
கோபுரம் கருவறைக்கு மேலேயே கட்டப்பட்டிருக்கும். ஆனால் கோபுரங்கள் கோயிலைச் சூழவுள்ள சுற்று மதில்களில் அமைந்துள்ள வாயில்களில் கட்டப்பட்டிருக்கும். தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் ஆகியவற்றில் பெரிய அளவில் காட்சி தருபவை விமானங்கள் ஆகும்.
கோபுரம் என்ற சொல் முற்காலத்தில் கோயில் நுழைவாயில் அமைப்புக்களை மட்டுமன்றி, நகரங்கள், அரண்மனைகள் ஆகியவற்றின் வாயியில் கட்டப்பட்ட அமைப்புக்களையும் குறித்தது.
இன்று இது கோயில் கோபுரங்களையே பெரிதும் குறித்தாலும், உயரமான பிற கட்டிட அமைப்புக்களையும் கோபுரம் என்ற பெயர் கொண்டு அழைப்பதுண்டு.
மணிக் கோபுரம், மணிக்கூட்டுக் கோபுரம், ஈபெல் கோபுரம், பெட்ரோனாஸ் கோபுரங்கள் போன்ற பெயர்கள் இதற்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். இப்பதிவு கோயில் கோபுரங்களைப் பற்றியது ஆகும்.
.தமிழில், கோபுரம் என்னும் சொல்லின் தோற்றம் பற்றிப் பல கருத்துக்கள் நிலவுகின்றன. தேவநேயப் பாவாணர் போன்ற சில அறிஞர்கள் இது ஒரு தூய தமிழ்ச் சொல்லே என்கின்றனர். ஆனால் வேறு சிலரோ இது சமஸ்கிருதம் அல்லது வேறு பிராகிருத மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது என்கின்றனர். கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்ட மகாபாரதம் போன்ற சமஸ்கிருத நூல்களில் கோபுரம் என்ற சொல் ஆளப்பட்டிருக்க, சங்க காலத் தமிழ் நூல்களிலோ அல்லது பிற்பட்ட சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலோ கோபுரம் என்ற சொல் காணப்படவில்லை என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்
ஆதி காலத்தில் பசுக்களை அடைத்து வைக்கும் பட்டிகளுக்கு மூங்கிலால் வேலியிடப்பட்டு அதன் வாயிலில் மூங்கிலாலேயே ஒரு வாயில் அமைப்பும் அமைக்கப்பட்டிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கோ என்றால் பசு, புரம் என்பது காத்தல் என்னும் பொருளுடையது இதனால் பசுக்களைக் காக்கும் இடத்தின் வாயில் கோபுரம் எனப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அரண்மனை, நகரங்கள் முதலியவற்றின் வாயில் அமைப்புக்களையும் இப் பெயராலேயே அழைத்தனர். காலப்போக்கில் கோயில்களின் வாயில் கட்டிட அமைப்புக்களையே கோபுரம் என்னும் சொல் குறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பசுக்களாகிய ஆன்மாக்களை காக்கும் இடம் கோபுரம் ஆகிறது .எனவே கோபுரம் என்பது சரியானதே .
வேலியிடப்பட்ட இடங்களின் வாயில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கட்டிட அமைப்புக்களை அமைக்கும் வழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்துள்ளது. கி.மு 1500 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய எகிப்தில் வாயிற் கட்டிட அமைப்புக்களுடன் கூடிய கோயில்கள் இருந்துள்ளன. இன்றுள்ள அமைப்பில் இந்துக் கோயில் கோபுரங்கள் கி.பி 6 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்டவையே எனலாம்.
எனினும் இவற்றுக்கான கருத்துரு இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருந்து வருகிறது. வேத கால ஊர்களிலே கோபுரங்களின் கருத்துருவுக்கான அடிப்படைகளை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவ்வாறு வீடுகளிலும், ஊர்களிலும் காணப்பட்ட, மூங்கில் முதலிய இயற்கைப் பொருட்களாலான எளிமையான வாயிற்கட்டிட அமைப்புக்கள், காலப்போக்கில் நீடித்துழைக்கும் கட்டிடப் பொருட்களினால் அளவில் பெரியனவாக உருவாக்கப்பட்டு முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடத் தொகுதிகளின் வாயில் அமைப்புக்களாக வளர்ச்சியடைந்தன. இவை தோரண வாயில்கள் எனப்பட்டன. தோரண வாயில்கள் சிகரங்களாக இருந்தன .பல திருவிழாக்களில் சிகரங்கள் வைப்பார்கள் .அது போலவே முகப்பில் வருபவை கோபுரங்கள் அல்ல விமானங்களே .(இது பற்றி பின்னர் விபரமாக தருகிறேன் )
ஆலயம் என்பதை படுத்திருக்கும் ஒரு மனிதனின் உடலாக எண்ணிக் கொள்ளவேண்டும்.
கருவறை விமானம் தலை, அர்த்தமண்டபம் கழுத்து, மகாமண்டபம் மார்பு, இங்கு தான் இதயதுடிப்பு இருப்பது போல நடராஜர் நடனமாடும் சந்நிதி அமைக்கப்படும். தொப்புள் கொடிமரம். ராஜகோபுரம் பாதங்கள். இப்படி இறைத்திருமேனியாக இருக்கும் கோயிலில் கருவறையின் மேலே விமானம் உள்ளது. "மானம்' என்றால் "அளவு',"வி' என்றால் "கடந்தது'.
"அளவு கடந்த தெய்வீக சக்தி கொண்டது விமானம். கோபுரம் என்பதை"கோ+புரம்' என்று பிரிக்க வேண்டும். "கோ' என்றால் இறைவன். "புரம்' என்றால் "இருப்பிடம்' . இறைவனின் இருப்பிடமே கோபுரம். அதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டுகிறார்கள். இதனால் தான் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்று சொல்லும் வழக்கம் வந்தது.
திருக்கோயில்கள் வழிபாட்டிற்குரிய இடம் மாத்திரமன்றி கலைத்திறன்களை வளர்க்கும் பொது இடமாகவும் விளங்கி வருகின்றன. கோவில்களால் கலைகள் வளர்ந்ததாகவும், கலைகளால் கோவில்கள் வளர்ந்ததாகவும் ஒரு பொதுவான முடிவை நாம் ஏற்றா க வேண்டும்
கோவில்களில் நான்கு திக்குகளுக்கும் நான்கு கோபுரங்களும், நடுவில் ஒரு கோபுரமாகப் பஞ்ச கோபுரங்கள் கட்டலாம் எனச் சிற்ப நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. இவற்றை விட கோவிலைச் சுற்றியுள்ள பிரகாரங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே கோபுரங்கள் கட்டவும் மானசாரம் என்ற நூல் அறிவுறுத்துகிறது.
பொதுவாக ஒரு சில கோவில்களைத் தவிர இலங்கையில் உள்ள கோவில்கள் யாவும் இரண்டு வீதிகள் மட்டுமே உள்ளன. இந்தியாவில் மூன்று முதல் ஏழு வரையான வீதிகள் உள்ளன. ஒரு கோவிலுக்குப் பல கோபுரங்கள் உள்ள கோவில்களும் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிதம்பரம் போன்ற திருத்தலங்கள் பல கோபுரங்களுடன் காட்சி அளிக்கின்றன.
ஓவ்வொரு வீதியின் வாசலிலும் கோபுரங்கள் அமைப்பது பற்றியும், சிற்ப நூல்கள் கூறுகின்றன. முதலாவது கோபுரம் துவார சோபை எனவும், இரண்டாவது கோபுரம் துவாரசாலை எனவும் மூன்றாவது கோபுரம் துவாரப் பிரசாதம் எனவும், நான்காவது கோபுரம் துவார ஹர்மியம் எனவும், ஐந்தாவது கோபுரம் மஹாமர்யதை எனவு ம் பெயர்பெறும்.
இவ்வைந்தாவது கோபுரமே மஹா கோபுரம் எனவும், ராஜ கோபுரம் எனவும் சிறப்புப் பெயர் பெறுகிறது. பொதுவாக மஹா கோபுரம் எனப்படும் ராஜ கோபுரமே கோவில்களில் காணப்படும்.
கோபுரங்களின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல பெயர்களால் அவை அழைக்கப்படுகின்றன. வல்லீ, கவாஷம், ஸ்வஸ்திகம், நாகபந்தம் சர்வதோபேதம், நந்தியாவர்த்தம், புஸ்பதந்தம் முதலியன சிலவாகும். கோபுரம் என்பதற்கு இறைவனை நோக்கி ஆன்மாக்கள் செல்லும் வழி எனப் பொருள் கூறுவார். கருவறையின் மேல் உள்ள விமானம் சிரசாகவும், கோபுரம் இறைவனின் திருப்பாதமாகவும் கூறப்படும். திருமூலர் திருமந்திரத்தில் பின்வரும் பாடல் ஒன்றின் மூலம் இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பைப் புலப்படுத்துகிறார்.
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம் வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல் தௌ
ள்ளத் தெளிந்தாரக்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே”
இறைவனுடைய ஆலயத்திற்குச் செல்வதற்குச் திருக்கோபுரம் எமக்கு வாசலாக இருப்பது போல் எமது தூய்மையான மனத்திற்குள் இறைவன் வருகை தருவதற்கு, எமது வாய் கோபுர வாசலாக இருக்கும். அதாவது இறைவனது நாமங்களை நாம் மீண்டும் மீண்டும் உச்சரிக்க வேண்டும் என்ற மறைமுகக் கருத்தும் உள்ளது.
கோவிலின் கருவறையில் இருப்பது சூட்சுமலிங்கம் எனவும், ஆலயத்தின் நடுவிலிருப்பது பத்திரலிங்கம் அதாவது பலிபீடம் எனவும், ஆலயத்தின் முகப்பு வாசல் இருப்பது ஸ்தூலலிங்கம் எனப்படும் ராஜகோபுரம் எனவூம் அழைக்கப்படும்.
லிங்கம் என்றால் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணமான இடம் எனக் குறிப்பிடப்படும். எமது புலன் ஒடுக்கத்திற்கும் இறையுணர்வின் தோற்றத்திற்கும் காரணமாக ஸ்தூலலிங்கம் முதல் அனைத்து லிங்கங்களும் இடமளிப்பதாக யாம் கருதலாம்.
இவ்வாறு லிங்கங்களுடன் தொடர்புபடுத்தி மேற்படி இடங்களை குறிப்பிடுவது போல் ஆத்மாவோடு தொடர்புபடுத்தி மேற்படி இடங்களை குறிப்பிடுவர்.
கோபுரம் – பூதாத்மா பலிபீடம் – அந்தராத்மா
துவஜஸ்தம்பம் – தத்தவாத்மா
லிங்கம் – ஜீவாத்மா
குரு – மந்திராத்மா விமானம் – பரமாத்மா
இவ்வாறு சர்வஞானோத்தர ஆகமம் குறிப்பிடுகிறது.
Manikkavasagar Vaitialingam

கருத்துகள்
கருத்துரையிடுக