தம்பு சிவசுப்பிரமணியம்

%%%%%%%%%%%%%%%







. தம்பு சிவா என்ற பெயரிலும் இணுவையூர் தொண்டு, தேடலோன், இணுவை வசந்தன், இணுவிலிமாறன், சிவநித்திலன், த. சிவா, சிவ சிவா போன்ற பல்வேறு புனைபெயர்களில் பல்துறை இலக்கிய ஆக்கங்களைப் படைத்தவர். 1970, 1971 இல் வெளிவந்த கற்பகம் சஞ்சிகையில் சிறப்பாசிரியராக இருந்து இலக்கியப் பணியாற்றியவர். அத்தோடு தொழிற்சங்கவாதியாக அடையாளம் காட்டிக்கொண்ட இவர் இடதுசாரிக் கொள்கையில் தீவிர பற்றுடையவராக இருந்து வருகின்றார்.



 யாழ்ப்பாணத்தில் இணுவில் என்ற ஊரில் தம்பு, தையல்நாயகி ஆகியோருக்குப் (பிறப்பு: பெப்ரவரி 24, 1944) 

 இல் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை இணுவில் சைவ மகாசன வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்றார். இவர், மாணவனாக இருந்த காலத்திலேயே பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளார்.




கல்லூரிக் காலத்தில் இலக்கிய ஆர்வம் மிக்கவராக இருந்த இவர் தமது நண்பர்களுடன் இணைந்து ‘அரும்பு’ என்னும் சிறு சஞ்சிகையை வெளிக்கொணர்ந்தார். பின்னாளில் பல சஞ்சிகைகளின் ஆசிரியராக இவர் உருவாக ‘அரும்பு’ அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது.



பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சையில் தோற்றிபின் அரச உத்தியோகம் பெற வேண்டும் என்ற உந்துதலால் 1965 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொது எழுதுவினைஞர் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து கொழும்பு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் எழுதுவினைஞராகத் தொழிலை ஆரம்பித்த இவர், அரசாங்க லிகிதர் சேவைச் சங்கத்தின் துணைச் செயலாளராகவும், தாய்ச் சங்கம் வெளியிட்ட ‘சமதர்மம்’ பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்துமன்றம், தமிழ் இலக்கிய மன்றம் ஆகியவற்றில் முக்கிய பதவிகளை வகித்து தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளார்.


1975 ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடத்திய வரி உத்தியோகத்தருக்கான தேர்வுப் பரீட்சையில் தோற்றி அதிகூடிய புள்ளிகளைப் பெற்று வரி உத்தியோகத்தராக (TAX OFFICER) பதவி உயர்வு பெற்றார். பதவியால் தம்மை மட்டும் உயர்த்திக் கொள்ளாமல் பொதுநல எண்ணம் கொண்டவராய் சக உத்தியோகத்தர் சங்கத்தின் துணைச் செயலாளராக இருந்து செயற்பட்டார்.


1985 ஆம் ஆண்டு அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற இவர், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்தின் செயலூக்க முகாமையாளராக இணைந்து பணியாற்றினார். அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உதயன், சஞ்ஜீவி ஆகிய பத்திரிகைகளில் தமது ஆக்கங்களை வெளியிட்டதுடன் மாணவர் சஞ்சிகையாகிய ‘அர்ச்சுனா’ சஞ்சிகையில் அவரால் எழுதப்பட்ட ‘குட்டிமாமா’ தொடர் நவீனம் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.




1987 இல் மாலைதீவு அரசாங்க நிறுவனமாகிய (S.T.O) இல் இணைந்து கொண்ட இவர், மீன்பிடி செயற்பாட்டுத் திணைக்களத்தில் உதவிக் கணக்காளராகக் கடமையாற்றினார். 1988 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாண சபை நிறுவப்பட்ட போது அதன் பிரதம செயலாளரினால் நாட்டுக்கு அழைக்கப்பட்ட இவர் வடக்கு கிழக்கு மாகாணப் பத்திப்பகத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அங்கு கடமையாற்றிய காலத்தில் திணைக்களங்களின் வெளியீடுகளையும் நூல்களையும் விழா மலர்களையும் பதிப்பித்து வழங்கிப் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார். மேலும் பதிப்பகத் திணைக்களத்தின் வெளியீடாக வெளிவந்த ‘தமிழ்த் தென்றல்’ என்ற சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து பணியாற்றினார்.


இவருடைய ஆக்கங்கள் அநேகமானவை இலங்கையில் வெளிவருகின்ற வீரசேகரி, தினக்குரல், சுடர் ஒளி, தினகரன், இலண்டன் புதினம், தமிழினி ஆகிய பத்திரிகைகளிலும் கற்பகம், மல்லிகை, ஞானம், செங்கதிர், ஜீவநதி, தமிழ்த் தென்றல், படிகள், கொழுந்து, பூங்காவனம், இந்து ஒளி, நித்திலம், இனிய நந்தவனம், வெள்ளிமலை, ஓலை, சங்கத் தமிழ், இணுவில் ஒலி, தாயக ஒலி ஆகிய சஞ்சிகைகளிலும் வடிவேல் ஐயா நினைவுமலர், பேராசிரியர் சபா ஜெயராசா விழா மலர், முப்பால், நடந்தாய் வாழி, பூவல், திருகோணமலை பிரதேச சாகித்திய விழா மலர் (2011) முத்துக்குமாரசுவாமி விழா மலர் ஆகிய மலர்களிலும் மற்றும் இலண்டனிலிருந்து வெளிவந்த ‘இலக்கியப் பூக்கள்’ என்னும் கட்டுரைத் தொகுதியிலும் இடம்பிடித்துள்ளன. தம்புசிவாவால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் இலக்கிய மாநாடுகளிலே வாசிக்கப்பட்டு அம்மாநாட்டு மலர்களிலே அச்சேறியுள்ளன. திறனாய்வுத் துறையில் கணிசமான பங்களிப்பை வழங்கி வருவதன் மூலம் பல அறிஞர்களின், எழுத்தாளர்களின் மதிப்புக்குரியவராகத் தம்மை வளர்த்துக் கொண்டார். 




பேராசிரியர் சபா ஜெயராசா, திரு. கே. எஸ். சிவகுமாரன் போன்றவர்களுடன் கொண்டிருந்த இலக்கிய உறவு காரணமாகத் திறனாய்வுத்துறையிலும் தடம் பதித்துள்ளார். இற்றை வரை முன்னூற்றம்பதுக்கும் மேற்பட்ட நூல்களுக்குத் தமது பங்களிப்பை வழங்கியுள்ளார். இலங்கை எழுத்தாளர்கள் மட்டுமன்றி புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள எழுதாளர்களும் அவருடைய திறனாய்வை மதித்து அவருக்கு நூல்களை அனுப்பிய வண்ணம் உள்ளார்கள். அவரும் தன்னால் முடிந்தளவு சலிப்பின்றி அப்பணியை மேற்கொண்டு வருகின்றார்.


பத்தி எழுத்தாளர்களைப் பொறுத்தளவில் தினக்குரல் ஞாயிறு பதிப்பில் ‘நினைவுகள் நிகழ்வுகள்’ என்ற பகுதியிலும் சுடர் ஒளியில் இலக்கியப் பூங்கா என்ற பகுதியிலும் தினகரன் வாரமஞ்சரியிலும் மற்றும் மல்லிகை, ஞானம், செங்கதிர், இனிய நந்தவனம் ஆகிய சஞ்சிகைகளிலும் வீரசேகரி சங்கமம் பகுதியிலும் இவரது ஆக்கங்கள் இடம்பிடித்துள்ளன.


ஓயாது எழுத்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் இவர் கவிதைத் துறையில் நாட்டம் செலுத்தாத போதிலும் இவரால் எழுதப்பட்ட கவிதைகள் அனுராதபுரம் கலைச்சங்கம் வெளியிட்ட புத்துலகம் படைப்போம் என்ற கவிதைத் தொகுப்பிலும் ஈழமணி, சுடர் ஒளி காப்புறுதி உலகம், பூங்காவனம் தாயக ஒலி ஆகிய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. சிறந்த பேச்சு வன்மை மிக்கவராகிய இவர் இலக்கிய மேடைகளில் தமது ஆற்றலை வெளிப்படுத்தி வந்துள்ளார். நூல் ஆய்வுகளை மேற்கொண்டு கனதியான பங்களிப்பை வழங்கியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையில் முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய உரைகளை ‘கலைக்கோலம்’ நேயர்களுக்கு வழங்கியுள்ளார்.




இவரால் எழுதப்பட்ட ஆக்கங்கள் நூல் உருப்பெற்று வெளிவந்துள்ளன. ‘காலத்தால்’ மறையாத கற்பகம் இதழ் சிறுகதைகள் (சிறுகதைத் தொகுதி), சொந்தங்கள் (சிறுகதைத் தொகுதி) முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் (கட்டுரைத் தொகுதி) ஆகிய இரண்டு நூல்களும் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய பேரவையின் வெளியீடாக வெளிவந்துள்ளன. உலகில் வெளிவருகின்ற தரமான நூல்களை வெளியிட்டுவரும் இந்திய நியுபுக் சென்சுரி நிறுவனத்தினர் தம்பு சிவாவின் ‘சொந்தங்கள்’, ‘முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்’ ஆகிய இரு நூல்களையும் மீள்பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவ்விரு நூல்களின் அறிமுக விழா லண்டன் லூசியம் சிவன்கோயில் மண்டபத்தில் வவுனியூர் இரா. உதயணன் தலைமையில் நடைபெற்ற வேளை பெரிய பிரித்தானியா இணுவில் ஒன்றியம் எழுத்தாளர் தம்பு சிவசுப்பிரமணியத்திற்கு ‘தமிழ்த் தென்றல்’ என்னும் விருதினை வழங்கிச் சிறப்பித்தனர்.


தம்பு சிவாவின் ‘முதுசம்’ சிறுகதைத் தொகுதியின் அரங்கேற்றம் பேராசிரியர் சபா ஜெயராசாவின் தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக லண்டனில் இருந்து வவுனியூர் இரா உதயணனும், சிறப்பு அதிதியாக இந்தியாவின் முற்போக்கு நாவலாசிரியர் நாமக்கல் கு. சின்னப்ப பாரதியும் பங்குகொண்டு சிறப்பித்தனர்.



பொதுநல சேவையில் தம்மை ஈடுபடுத்திச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், இணுவில் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் மத்திய கல்லூரியின் பழைய மாணவ சங்க கொழும்புக் கிளையின் துணைத் தலைவராகவும் தமிழ் - சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் துணைச் செயலாளராகவும் உலக சிற்றிதழ் சங்கத்தின் இலங்கைக் கிளையின் கொழும்பு மாவட்ட நிர்வாக உறுப்பினராகவும் இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருந்து பணியாற்றி வருகின்றார்.




* 2005 ஆம் ஆண்டு புலோலியூர் கே. சதாசிவம் நினைவாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் ‘சுரங்களும் சுருதிகளும்’ என்னும் சிறுகதை பரிசுக் கதையாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது.


* 2005 இல் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தால் நடத்தப்பட்ட பொருளாதார ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் வட மாகாணத்தின் பொருளாதார வளங்களும் அதன் முன்னேற்றகரமான செயற்பாடுகளும்’ என்னும் இவரது கட்டுரைக்கு முதல் பரிசும் பணப் பரிசும் கிடைத்தது.


* லண்டனிலிருந்து வெளிவரும் ‘புதினம்’ சஞ்சிகை தனது பத்தாவது ஆண்டு விழாவையொட்டி உலகளாவிய ரீதியில் நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘உத்தமர்கள் உறவு’ என்னும் சிறுகதை சன்மானத்துடன் விருதினைப் பெற்றுக் கொண்டது.


* திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சாகித்திய விழாவை ஒட்டி நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்று அதற்கான கேடயமும் சான்றிதழும் கலாசாரத் திணைக்களத்தினால் வழங்கப் பெற்றது.


* ஆக்க இலக்கியத்துறைக்கான கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதினை - 2010 இல் பெற்றுக் கொண்டார்.


* ‘சொந்தங்கள்’ சிறுகதைத் தொகுதி - நாமக்கல் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை இலக்கிய விருதினை 2011 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டது.


* இலங்கை பூதந்தேவனார் இலக்கியப் பேரவை, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடத்திய சிலப்பதிகார முத்தமிழ் பெருவிழாவில் ‘சொல்லின்செல்வர்’ என்னும் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப் பெற்றார்.


* 2012 ஆம் ஆண்டு இலங்கை கலாசார அமைச்சு ‘கலாபூஷணம்’ விருதினை வழங்கி கெளரவித்தது.


பல்துறை ஆளுமை மிக்கவராகிய மூத்த பிரபல எழுத்தாளர் தம்பு சிவசுப்பிரமணியம் கடந்த 45 ஆண்டுகளாக இலக்கியத்துறைக்கும், சமூகத்துறைக்கும் தமது மேலான பங்களிப்பை வழங்கி வருகின்றார். இலங்கையில் மட்டுமல்ல இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளிலும் தமது முத்திரையை பதித்துள்ளார். இணுவில் ஒலி என்னும் சஞ்சிகையின் ஆசிரியராக செயற்பட்ட இவர் தற்பொழுது ‘தாயக ஒலி’ சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து உலக இலக்கியத்தை நோக்கிய தமது பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்













சுருக்கமாக 

%%%%%%%%%%





1965 ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் எழுத்தராக நியமனம் பெற்ற இவர், 1975 இல் இறைவரி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்று 1985 இல் ஓய்வு பெற்றார். 1987 முதல் 1989 வரை மாலைதீவில் மீன்பிடி செயற்பாட்டுத் திணைக்களத்தில் உதவிக் கணக்காளராகப் பணியாற்றினார். பின்னர் இவர் இலங்கை வடக்குக் கிழக்கு மாகாண சபையில் பதிப்பகத் திணைக்களத்தில் உதவிப் பணிப்பாளராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். அங்கு கடமையாற்றிய காலத்தில், இத்திணைக்கள வெளியீடான "தமிழ்த்தெனறல்" என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்தார். தொழிற்சங்கவாதியாக அடையாளம் காட்டிக்கொண்ட இவர், இடதுசாரிக் கொள்கையில் தீவிர பற்றுடையவராக இருந்து வருகின்றார்.




1973 இல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். "ஈழமணி", "ஞானம்", "காப்புறுதி உலகம்", "சுடர் ஒளி" போன்ற வெளியீடுகளில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. 80 சிறுகதைகளையும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். வீரகேசரி, தினகரன், தினக்குரல், சுடர்ஒளி, உதயன், ஆகிய பத்திரிகைகளிலும், மல்லிகை, ஞானம், இனிய நந்தவனம், செங்கதிர், ஜீவநதி, இந்து ஒளி, ஒலை, பூங்காவனம் போன்ற இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. ‘அரும்பு’, ‘கற்பகம்’, ‘அர்ச்சுனா’, ‘தமிழ்த்தென்றல்’, ‘ஓலை’ போன்ற இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார்.



சொந்தங்கள் (சிறுகதைத் தொகுப்பு)

முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் (கட்டுரைத் தொகுப்பு)

முதுசம் (சிறுகதைத் தொகுப்பு, 2012)


காலத்தால் மறையாத கற்பகம் இதழ் சிறுகதைகள்’ (சிறுகதைத் தொகுதி)

தூரத்துக்கோடை இடிகள் (சிறுகதைத் தொகுதி)

அப்பா (சிறுகதைத் தொகுதி)



போன்றவற்றை எழுதியும் தொகுத்தும் வழங்கினார் .










சிறுகதை பற்றி நோக்ககின்ற போது அது வாழ்க்கையின் அவலங்களை துன்பங்களை எடுத்துக் காட்டுகின்றது. தனி மனித வாழ்வில் ஏற்படும் அவலங்கள் துன்பங்கள் வெளிக்கொணரப்படாவிட்டால் அவற்றினை அழித்து விடவும் முடியாது. எனவே சிறுகதை மக்களின் வாழ்க்கை அவலங்களை துன்பங்களை மட்டும் சித்திரிப்பதாக அன்று அதனை தீர்ப்பதற்காக உந்துதலையும் வழங்குகின்றது என்பதை சிறுகதை வரலாற்றினை ஊன்றிக் கவணிப்பவர்களால் உணர முடியும்.


தம்பு சிவா அவ்வப்போது எழுதிய சிறந்த சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. அக்கதைகளை அவ்வப்போது சஞ்சிகைகளிலும் பத்திரிக்கைகளிலும் வாசிக்கக் கூடிய வாய்ப்புக் கிடைக்கப் பெற்றிருப்பினும், அவை கால அடைவில் தொகுக்கப்பட்டு வெளிவருகின்ற போதே ஆசிரியரது மன வளர்ச்சியையும் கலை முதிர்ச்சியையும் அறிய முடிகின்றது. அவ்வாசிப்புத் தரும் உந்துதல் தவிர்க்க முடியாத வகையில் உள்ளடக்கத்திலும் உருவத்திலும் சிறுகதைகளின் சாதனைகள் யாவை? அதன் போக்குகள் எந்தெந்த வகையில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது? போன்ற விடயங்கள் தொடர்பில் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்தப் பின்னணியில் தம்பு சிவா தமது கதைகளில் சமூகம் சார்ந்த- ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக் கூறுகளை எவ்வாறு கையாண்டுள்ளார்? அவரது புரிந்துக் கொள்ளலின் அடிப்படை யாது? போன்ற விடயங்கள் பற்றி நோக்குவோம்.


இக்கதையாசிரியர் ஆரம்கால முதலாகவே தெழிற்சங்க ஈடுபாடு கொண்டவராக, சமூக செயற்பாட்டாளராக இணைத்துக் கொண்டு தன்போன்ற சக மனிதனின் வாழ்வுக்காக வீயூகம் அமைக்க முற்பட்டவர், தான் சந்திக்க நேர்ந்த அவலங்களைக் கருப்பொருளாகக் கொண்டே கதைகளை ஆக்கியிருக்கின்றார். அதனால்தான் இத்தொகுப்பில் அடங்கியுள்ள பெரும்பாலான கதைகள் அவரது சுய அனுபவங்களாகவே அமைந்திருக்கின்றன. ‘உறவு’, ‘சதுரங்கம்’, பிரளயம்’, ‘மனிதம் மரணிக்கின்றது’, தீயாய் கனன்ற வாழ்வு’, மனமே வாழ்க்கை,’பயணம்’, சொந்தங்கள்’ முதலிய கதைகள் இதற்குத் தக்க எடுத்துக் காட்டுகளாகும். இக்கதைகளை வாசித்த போது ஓர் உண்மை தெரிகின்றது. தம்பு சிவா அவர்கள் வரட்டு தத்துவாதியாகவோ அல்லது முன்பின் நவீனர்களாகவோ இருந்துக் கொண்டு படைப்புகளில் ஆய்வு ஆழத்தையோ நுண்மான் நுழைப்புலத்தையோ தேடுபவர் அல்லர். மாறாக இதயமுள்ள சாதாரண மனிதன் என்ற நிலையில் நின்று கொண்டுதான் பார்க்கின்றார். அத்தகைய சாதாரண மனிதனாக நின்று பார்த்து, மனித அவலத்தை சமத்துவமின்மையை: இனமுரண்பாடுகளை அதன் வர்க்க நலனை தமது கதைகள் மூலமாக வாசகனிடத்தில் பதிய வைக்கின்றார். எடுத்துக் காட்டாக ‘மனிதம் மரணிக்கின்றது’ என்ற கதை கேவலமானதோர் அரசியலின் பின்னணியில் மோசமானதோர் இன வண்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்ற போது அது தோற்றுவிக்க கூடிய கொலைவெறி, மனித அவலங்களை சித்திரிக்கின்றது. ஓர் இளம் பெண் உடம்பு முழுவதும் இரத்தகாயங்கள் பட்ட தன் தாயாரை சுமந்து வருகின்ற காட்சி, கூடவே அவ் வைத்தியசாலையில் மனிதநேயத்துடன் கடமையாற்றும் டாக்டர், அவர் அவ்விளம் பெண் புதிதாக வைத்தியரானவர் என்பதை தெரிந்துக் கொண்டதும் அவர்களிடையே இடம் பெறும் உரையாடல்கள் யாவும் மனதை உருத்தி கண்ணீரை வரவழைக்கின்றது.


அவ்வாறே இத்தொகுப்பில் அடங்கியுள்ள ‘தீயாயட கனன்ற வாழ்வு’, ‘விடியுமா?’ ஆகிய கதைகள் வேலைத் தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களின் துன்பம் தோய்ந்த வாழ்க்கையை காட்சியாக பதிய வைக்கின்றது. ‘பயணத்தின் ஆரம்பம்’ என்ற திக்குவலை கமாலின் சிறுகதையும் இதனை அழகுற சித்திரிக்கின்றது. இக் கதைகளில் பணக்கார வர்க்கத்தின் மனோபாவம், செயல் பெண் மீதான ஆண்களின் ரொமம் அடர்ந்த கரங்களின் ஆதிக்கம், அவற்றின் மூலம் எழும் வர்க்க முரண்பாடுகளும் கருத்தோட்டங்களும் நுண்ணயத்துடன் தீட்டப்பட்டுள்ளன.


இனமுரண்பாடும் யுத்தமும் மேலோங்கிய சூழலில் அவை தோற்றுவிக்கக் கூடிய அகதிவாழ்க்கையயின்- புலம்பெயர்வு வாழ்க்கையின் கோரங்கள், தவிப்புகள், துன்பங்களை சிறப்பாகச் சித்தரிப்பவையாக ‘சதுரங்கம்’. செந்தங்கள் ஆகிய கதைகள் அமைந்துள்ளன. சுனாமி ஆழிப் பேரலையினால் இழந்து போன சொந்தங்கள்- உறவுகள் பற்றிய் பரிதவிப்புகளை ‘பிரளயம்’, ‘பயணம்’ ‘சொந்தங்கள’ முதலிய கதைகளில் காணலாம்.


சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் சிங்கள பேரினவாதம் என்பது புதிய வடிவில் தன்னை வடிவமைத்துக் கொண்டது. மறுபுறத்தில் தமிழ் தேசியம் ஏகாதிபத்தியத்திற்கு காட்டிக் கொடுக்கும் குணாதிசியத்துடனேயே எழுச்சிக் கொள்ளத் தொடங்கியிருந்தது. தமிழ் இடதுசாரி சக்திகள் தமிழர் பண்பாட்டில் புரையோடிப் போயிருந்த சாதித் தகர்ப்பு போராட்டத்தை தன்னகத்தே எடுத்த போது இனவொடுக்கு முறைக்கு எதிரான பேராட்டத்தில் போதியளவு கவனமெடுக்கவில்லை என்பது உண்மை. இந்த சூழலில் தமிழ் தேசிய போராட்டமானது பிழையானதோர் அரசியலின் பின்னணியில் மோசமானதோர் நிலையை எட்டியதை வரலாறு எண்பித்திருக்கின்றது.


அதேசமயம் சிங்கள இடதுசாரி சக்திகள் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்ih கொண்டிருந்த அதே சமயம் சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான விழிப்புக் கொண்டிராமை துரதிஸ்டவசமான தொன்றே. அதே சமயம் சிலர் சிங்கள இனவாத்திற்குள்ளும் முடங்கிப் போனமை இன்னொரு துரதிஸ்டமானதொரு நிகழ்வாகும். இந்தச் சுழலில் தமிழ் இடது சாரிகள் தமிழ் இனவாத்திற்கு எதிராக போhரடிய போது சிங்கள இடதுசாரிகள் தமிழ் தேசியத்தின் ஏகாதிபத்திய சார்பை எதிர்த்துடன் தம் பணிகனை சுருக்கிக் கொண்டனரேயன்றி வளர்ந்து வந்த பேரிவாதத்துக்கு எதிரான உருப்படியான திட்டங்கள் எதனையும் அவர்கள் முன் வைக்கவில்லை. இந்த தவறு கண்டுக் கொள்ளப்படாதவரையில் எமது நோக்குகள் செயற்பாடுகள் திசையற்றதாகவே இருக்கும்.


யுத்தச் சூழலில்  வன்முறை, மனித உரிமை மீறல்கள், கூடவே காணாமல் போன இஞைர்கள் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு கதைகளை எழுதியவர்கள் வெகு சிலரே. குறைந்தபட்ச விமர்சனங்களை முன்வைத்தவர்கள் கூட இனந்தெரியாமல் அழிக்கப்பட்டார்கள். ரஜனி திராணகம, அன்ரனி நோபேட், செல்வி என இப்பட்டியலை நீட்டிச் செல்லாம். இந்தப் பின்னணியில் நமது எழுத்தாளர்களின் மௌனத்தை நாம் புரிந்துக் கொள்ள முடிகின்றது. இன்று இந்த மௌனம் கலையப்பட்டுள்ளது என்பதற்கு யோ. கர்ணன், ஷோபாசக்தி (புலம்பெயர்ந்திருந்ததனால் யுத்த காலத்திலும் மேற்குறித்த பதிவுகளை வெளிக் கொணர முடிந்தது.) முதலானோரின் எழுத்துக்கள் சான்றாய் அமைந்திருக்கின்றன.


இன்று இனவாதம், இன முரண்பாடு என்பன பல நிலைகளில் குமிழிட்டு மேற்கிளம்பியுள்ளது. மறுபுறத்தில் தமிழர் சமூகவமைப்பில் புரையோடியிருக்கின்ற சாதிய கருத்தியல் இன்று புதிய வடிவில் மக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தி வருகின்றது.இவ்விரு முரண்பாடுகளையும் தம்பு சிவா தமது சிறுகதைகளில் ஆங்காங்கே காட்டத்தவறவில்லை. இந்தச் சூழலில் இவ்விரு முரண்பாடுகளையும் கவனத்திலெடுத்து சமூகமாற்ற செயற்பாடு;களை முன்னெடுக்கின்ற போது ‘இரட்டைத் தேசியம’; பற்றிய தேடல் அவசியமானதாகின்றது. இன்று இலங்கை இந்திய சூழல்களில் சமூகமாற்றத்தில்; இரட்டைத்தேசியம் வகிக்கும் பங்கு குறித்து விரிவான ஆய்வுகளை ந. இரவீந்திரன் செய்து வருகின்றார். எமது சூழலில் இன, சாதிய கருத்தியல் ஒடுக்குமுறையின் வடிவங்களாக உள்ளமையால் ஐரோப்பிய சமூகம் போல்லல்லாமல் அரசியல் புரட்சிக்கு முன்னதாக பண்பாட்டுப் புரட்சியே இன்றைய சூழலின் யதார்த்தமாகியுள்ளது.


இத்தொகுப்பில் அடங்டகியுள்ள ‘உறவு’ என்ற கதை யதார்த்த சிதைவுக் கொண்டதாக காணப்படுகின்றது. ஆசிரியர் ஒருவர் மீது அன்பும் மரியாதையும் கொண்ட மாணவரொருவர் தான் வைத்தியரான போதும் எவ்வித சீதனமும் வாங்காமல் தமது பெற்றோரின் சம்மதத்துடன் ஆசிரியரின் மகளை திருமணம் செய்கின்றார். இவரது இக்கதையில் மாத்திரமன்று பெரும்பாலான கதைகளில் சீதனம் பற்றிய விமர்சனங்களை முன் வைக்கின்றார். சில மனிதாபிமானிகளின் மூலமாக சீதனத்ததை நிராகரிக்கின்றார். இன்றைய யாழ்பாண சூழலில் சீதனம் என்பது எந்தளவு பலம் பொருந்திய விஷ மரமாக வளர்ந்துள்ளதென்பதை நாம் அறிவோம். அத்தகைய பலம் பொருந்திய மரத்தை பலம் கொண்ட கோடாரியால் பிளக்க வேண்டுமே தவிர சில மனிதாபிமான செயற்பாடுகளால் அதனை அழித்து விடலாம் என நினைப்பது பொருத்தமற்றதாகவே படுகின்றது. சுமூகத்தில் ஆங்காங்கே அவரது கதையில் வருவது போன்ற விதிவிலக்கான மனிதாபிமானவர்கள் காணப்பட்ட போதினும் அவர்கள் வகை மாதிரியான பாத்திரப்படைப்பாக ஆக்கக் கூடியவர்கள் அல்லர். வகைமாதிரியான பாத்திரப்படைப்பு யார்த்தவாதத்தின் உயிராகும். அவ்வாறே அவரது ‘சொந்தங்கள்’ என்ற சிறுகதையும் சிறுக்கதைக்கான கலைத்துவத்தை இழந்து பிரச்சார வாடை மேலோங்கியதாக காணப்படுகின்றது.


இத்தொகுப்பில் அடங்கியுள்ள கதைகளை ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது முக்கியமானதொரு விடயம் பற்றிய கவனம் செலுத்துதல் அவசியமானதாகும். அதாவது நமது சிறுகதை எழுத்தாளர்கள் படைப்பாளிகள் திரும்பத் திரும்பத் ஒன்றையே கூறுவதற்கான காரணம் அவர்களது சமூக தரிசனம் பற்றிய தெளிவின்மையாகும். நமது சிறுகதைப் படைப்பாளர்கள் சிலர் தத்துவார்த்த தெளிவு அல்லது அறிவுப் பெற்றிருப்பினும் அவர் அதனை கதை நிகழ் சூழலுக்கேற்ப தமிழ் மரபிற்கேற்ப பொருத்தி பார்ப்பதில் இடருகின்றனர். இந்த சமூக அனுபவம் விஸ்தரிக்கப்படாமையால் கலைப்படைப்புகளில் காலத்திற்கேற்ற உள்ளடக்கத்தினை அதன் வடிவம் சிதையாதவகையில் வெளிக் கொணரத் தவறிவிட்டனர். இவ்வகையில் தம்பு சிவா வடிவப் பரிசோதனையில் அதிகம் அக்கறை காட்டுபவரல்ல. பாரம்பரியமான சிறுகதை வடிவத்தைக் கையாண்டு தன் கண் எதிரே உறுத்திக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் குரூரங்களையும் அவலங்களையும் மனசை பிழியும் துன்பக் காட்சிகளையும் படைப்பாக்கியிருக்கின்றார்.


வெற்று அலங்கார வார்த்தை ஜாலங்களை வைத்துச் செல்லரித்துப் போன தத்துவங்களுக்கும் போலி தனமான கோட்பாடுகளுக்கும் வண்ணம் பூசிப் பொது மக்களையும் வாசகனையும் ஏமாற்ற முற்படாமை இக்கதையாசிரியரின் நுண்ணுணர்வு மிக்க பரந்த இதயத்தை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.


அதேசமயம், இவ்விடத்தில் பிறிதொரு விடயம் பற்றியும் சற்று அழுத்திக் கூற வேண்டியுள்ளது. அதாவது இலக்கியத்தில் உள்ளடக்கம் எவ்வாறு கால, தேச வர்த்தமாணங்களுக்குக் கட்டுப்பட்டும் அதனை மீறியும் இயங்குகின்றதோ அவ்வாறே அதன் வடிவமும் அத்தகைய தாக்கங்களுக்கு உட்பட்டே இயங்குகின்றது என்பதை இலக்கிய வரலாறு எண்பித்திருக்கின்றது. உள்ளடக்க ரீதியாக மட்டுமன்று வாசிக்கின்ற முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. முற்போக்கு இலக்கியத்திற்கும் அழகியல் பிரச்சனைகள் உண்டு. காலத்திற்கு ஏற்ற வடிவத்தை மக்களின் நலனிலிருந்து அந்நியமுறால் படைப்பாக்கித் தர வேண்டியது முற்போக்கு- மார்க்சியப் படைப்பாளியின் கடமையாகும். இன்றைய சிறுகதை வளர்ச்சியில் முக்கிய கணிப்பைப் பெற்றுள்ள ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதைகள் இந்த சீரிய பணியினை செய்திருக்கின்றது. இதற்கு ‘கதையின் தலைப்பு கடைசியாக இருக்கக் கூடும்’ என்ற கதை தக்க எடுத்துக்காட்டாகும். இந்திய அரசியல் பின்புலத்தில் நின்றுக் கொண்டு மெஜிக்கல் ரியலிச பாணியில் எழுதப்பட்ட கதையாகும். இந்திய சமூகத்தில் சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுவதாக இக்கதை அமைந்துள்ளது. இக்கதை சொல்லும் பாணியில் பவனி வருகின்ற பாத்திரங்கள் யாவும் இன்றைய விடுதலையை நாடும் அதே நிலைக்குரிய பாத்திரங்களை மறுவாசிப்புச் செய்ய ஏதுவாக உள்ள புனைக்கதை ஏற்பும் சமூகமாற்றத்திற்கான உந்தலும் முற்போக்கு இலக்கியத்திற்கு மாத்திரமன்று முழுத் தமிழ் இலக்கியத்திற்கும் வழங்கிய மகத்தான பங்களிப்பாக அமைந்துள்ளது. தம்பு சிவாவின் சிறுகதைகளை வாசிக்கின்ற போது அவர் வடிவ அமைப்பில்- கதை சொல்லுகின்ற முறையில் இத்தகைய உத்திகளை கையாண்டிருக்கலாமே என்று எனக்குத் தோன்றுவதுண்டு. எனினும் அவ்வகையான புதிய திசை வழியை கைக்கொள்ளாது பராம்பரிய முறையில் தமது கதைகளைப் படைத்திருப்பது அவரது கதை சொல்லும் பாணியின் ஓர் அம்சம் என்று நாம் அமைதி காணலாம்.


தமது சிறுகதைகளின் மூலமாக தம்பு சிவா ஈழத்து சிறுகதை இலக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்













கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற, சிலப்பதிகார முத்தமிழ்க் காப்பிய பெருவிழாவில் பாண்டிச்சேரி புதுவை பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் ஏ. அறிவு நம்பி அவர்களால் ‘சொல்லின் செல்வர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

ஆக்க இலக்கியத்துக்கான கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது (2010)


போன்றன இவரை கௌரவப் படுத்தின.


தம்பு அவர்கள் கூறுகையில் 

%%%%%%%%%%%%%%%%%%%%%



"இலக்கியம் என்பது வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி. சமுதாயத்தில் நான் கண்டு தரிசித்த தரிசனங்களை என் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தி அதைத் திரும்பவும் செழு" மைப்படுத்தி மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதில் எனக்குள்ள ஈடுபாடு எனது சிறுகதைகளின் வெளிச்சம், ஆலவட்டங்களோ, வார்த்தை ஜாலங்களோ இன்றி இயற்கையாகவே எழுதியுள்ளமையினால் எல்லோரும் இலகுவில் படித்துப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். மக்களின் இன்றைய தேவைக்கேற்ப கருத்” துக்களை மக்கள் மொழிவழக்கிலேயே வழங்க வேண்டும் என்ற உந்துதலால் கூடியளவு சம்பாசனைகளை மண்வாசனைக்கேற்ப பேச்சு மொழியிலேயே எழுதியுள்ளேன்.


 உண்மையான கோரங்களை நான் தெரிந்து கொண்டிருக்கின்றேன். தினசரி வாழ்க்கையில் நிகழும் கோரங்களை நான் கண்டிருக்கின்றேன். நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள், எப்படி வசிக்கின்றிர்கள் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை வர்ணித்து உங்கள் உணர்ச்சிகளைத் துக்கத்திலாழ்த்த எனக்கு உரிமையுண்டு என்று நான் கருதுகின்றேன்.

நாம் வாழும் வாழ்க்கை கீழ்த்தரமான சாக்கடை வாழ்க்கை என்பதை யாரும் மறுக்க முடியாது. மனித சமூகத்தை நான் அளவு கடந்து நேசிக்கிறேன் என்றாலும் பிறருக்கு வேதனையளிக்க நான் விரும்பவில்லை. நாம் மானசிகமாக இருக்கக் கூடாதென்றும், அழகிய சொற்றொடர்களாலும் கவர்ச்சிகரமான பொய்களாலும் உண்மையை மூடிமறைக்கக் கூடாதென்றும் நான் உறுதியாகக் கருதுகின்றேன். வாழ்க்கையுடன் நாம் நெருங்கி நிற்க வேண்டும் " மிக நெருங்கி நிற்க வேண்டும்! நமது மனத்திலும் எண்ணங்களிலும் உறையும் நன்மைகளையும் மனிதாபிமானத்தையும் நாம் வாழ்க்" கையில் ஊற்ற வேண்டும்.

அதிர்ஷ்டத்திலோ, சந்தற்பவசத்திலோ நம்பிக்கை வைக்க" வில்லை. ஆனால் யாருக்கும் அஞ்சாத உறுதி என் உள்ளத்தை வளர்த்தது. வாழ்க்கையில் நெருக்கடி அதிகரிக்க அதிகரிக்க நான் மேலும் பலம் பெற்றதாகவும், என் புத்தி இன்னும் கூர்மையடைந்” தது போலவும் எனக்குப்பட்டது. தனது சுற்றுச் சார்புகளை எதிர்த்து மனிதன் நடாத்தும் போராட்டத்திலேயே அவன் உருவெய்துகிறான் என்பதை எனது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே நான் உணர்ந்தேன்” மேற்கண்டவாறு மாக்ஸிம் கார்க்கி (Maxim Gorky) கூறிய, அவர் பெற்ற பயிற்சிகளை இந்த இடத்தில் மீட்டுப் பார்க்கின்றேன்.





இலக்கியம் பொழுது போக்குக் கருவி அல்ல. நயம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கக் கூடியதும் அல்ல. மக்கள் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டியதே இலக்கியம். "உண்மை அது உனது இதயத்தைத் திருப்தி செய்வதாக, உனது சொந்தச் சரக்குப் போன்றதாக நீபொறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்" என்ற படிநிலையில் நின்று எனது எழுத்துக்களை யதார்த்தமாக எழுதிவருகின்றேன். சந்தற்பவாதத்திற்கு விலைபோக முடியாத எனது போக்கு சிலருக்கு ஆச்சரியத்தைத் தந்தாலும், நீண்ட எனது ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை நோக்கிய லட்சிய யாத்திரை தொடரும்.

"சிறுகதை வாழ்க்கையின் சாளரங்கள், வாழ்க்கையிலே ஒரு பகுதியை அல்லது ஒருவரின் தனி உணர்ச்சியை, அல்லது ஒரு சம்பவத்தை எடுத்துக் கூறுவது" என்கிறார் புதுமைப்பித்தன்.

எனது இச் சிறுகதைகளின் இலக்கிய மதிப்புப் பற்றிய பிரச்சனையை ஒரு புறத்தில் வைத்துவிட்டாலும் தன்னைத் தானே வெற்றி கண்டுவிட்டது போன்ற ஒருவித உவகை இக்கதைகளால் எனக்கு உண்டாயிற்று. இப்பொழுது நான் பத்திரிகை சஞ்சிகை" களில் கூடுதலாக எழுதிக் கொண்டிருப்பதாக உணர்கின்றேன். பலர் என்னைச் சந்தித்து எனது எழுத்துக்கள் பற்றிய விமர்சனங்களை நேரடியாகவும் பத்திரிகை, சஞ்சிகை வாயிலாகவும் எடுத்தியம்பி வருகின்றார்கள். எத்தகைய விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவம் எனக்கு உண்டு.

“எழுதுவதில் எனக்கு எதுவித சிரமமுமில்லை. ஏன் என்றால் எனக்குத் தெரிந்தவற்றைத்தான் நான் எழுதுகின்றேன். எனக்குத் தெரியாதவற்றைப் பற்றி நான் ஒருபோதும் எழுதுவதில்லை" என்று அடிப்படைப் பெருமக்களின் அனுபவப் பெருஞ்செல்வனான மார்க் ஸிம் கார்க்கி என்ற உலகம் போற்றும் முற்போக்கு எழுத்தாளர் கூறிவைத்தார். ஆம், இலக்கியம் மக்களுக்காகவே என்ற கோட்பாடு முற்போக்கு எழுத்தாளர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு மக்கள் இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

1970 இல் “கற்பகம்” என்ற கலை இலக்கிய அறிவியல் சஞ்சிகை மூலம் எழுத்துத் துறையில் காலடி எடுத்து வைத்தபோது என்னுடைய இலக்கியதாகத்தின் வளர்ச்சிக்கு உந்துசக்தி கொடுத்தவர்களாக பேராசிரியர் க.கைலாசபதி, நீர்வை பொன்னை


யன், செ.கதிர்காமநாதன், செ.யோகநாதன் ஆகிய முற்போக்குப் படைப்பாளிகள் இருந்து வழிகாட்டியுள்ளார்கள். இலக்கியம் மக்களுக்காகவே என்ற பற்றுறுதியுடன் என் சிறுகதைகளை எழுதி வருகின்றேன். இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய பேரவையைச் சேர்ந்த நீர்வை பொன்னையன், அ.முகம்மது சமீம், சிவா சுப்பிரமணியம், இக்பால் போன்றவர்கள் இன்றும் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

என் நெஞ்சை நெருடிய சம்பவங்கள்; என்மனதில் நீண்ட காலமாகத் தேக்கிவைத்திருந்த உள்ளக் கிடக்கைகள் அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் எதிரான போக்குகள் போன்றவற்றை உள்வாங்கி யதார்த்தமாக என் சிறுகதைகளை எழுதியமையால் அவைகள் முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டனவாக அமைந்திருக்கின்றன.

யுத்தத்தினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் மற்றும் புலம் பெயர்வுகள், சுனாமி ஆழிப்பேரலைகள் ஏற்படுத்திய அனர்த்தங்கள், பெண்களின் அவலங்கள், அகதிவாழ்க்கையின் அல்லோலங்கள், வெளிநாட்டுப் பணிப்பெண்களாக சென்றுவந்தவர்களின் சோக வரலாறுகள், கல்வியின் முக்கியத்துவம், குடும்பப் பிரச்சினைகள், வெளிநாட்டுக்குப் போகும் பிள்ளைகளின் போக்குகள், ஏழ்மை, சுரண்டல், ஏமாற்றங்கள் போன்ற இன்னோரன்ன அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு இத்தொகுதியிலுள்ள பன்னிரண்டு சிறுகதைகளும் படைக்கப்பட்டுள்ளன. மக்களுக்காக இலக்கியம் படைக்கும் யதார்த்தப் போக்கு என் எழுத்” துக்களின் அடிநாதம்.


சாதாரண பாமரமக்களை நாடி எனது எழுத்துக்கள் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் என் மனதில் ஒரு ஆத்மதிருப்தி ஏற்படும். எனது கதைகளின் கதாபாத்திரங்கள் யாவும் உயிர்த்துடிப்புள்ள ஜீவன்கள். சமுதாயத்தில் அன்றாடம் நாம் தரிசிக்கும் மனிதர்கள். அவர்களில் நானும் ஒருவனாக நடமாடுகின்றேன்.


என்றார் தம்பு 












கருத்துகள்