சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பதுதான் இந்த பழமொழியின் சரியான வடிவம். சோழ நாட்டை சார்ந்த ஆண்கள் முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள்.பாரம் தூக்கும்போது பெண்கள் தம் சீலையை சுற்றி தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள் .
இதற்கு சும்மாடு என்று பெயர்.( பிரம்பு, கோரைகளை கொண்ட சேலை சுற்றிய பொருளும் சும்மாடு என்பதில் அடங்கும் ) . ஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழ நாட்டவர் தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது.ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகி திரிந்து விட்டது.
கொலையும் செய்வாள் பத்தினி யென்றால் சகல குணங்களும் பொருந்திய ஒரு பெண்,ஏழ்மை நிலையில் உள்ள ஒருவனை மணமுடித்தாளேயானால் அவள் தன் கணவன் நிலையை உணர்ந்து,குடும்ப சூழ்நிலையை உணர்ந்து அக்குடுப்பத்தில் உள்ள ஏழ்மையும்,வறுமையும்,கொலை செய்வாள் என்று பொருள் கொள்ள வேண்டும். கொலையும் செய்வாள் பத்தினி என்று பெண்களை துன்புறுத்தி ஏசக்குடாது.அவள் அடி எடுத்து வைத்த குடும்பத்தை எல்லா வழிகலிலும் உயர்த்தி காட்டுவாள். ஏழ்மையும்,வறுமையும்,கல்லாமை,இல்லாமை இவற்றை கொலை செய்வாள் என்று அர்த்தம்.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.என்றால் உன் மனைவியாகவந்தவள் யாரோ வின் மகள்
அவளின் வயிற்றில் உன் பிள்ளை வளருகிறதே .அவளை நல்ல போசாக்குடன் கவனி
உன் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும் .
உன் கணவன் யாரோ ஒருவனின் மகன்
அவனின் உணர்வுகளை உறவுகளைப் பேணி, ஊட்டி அன்போடு பராமரி உன் பிள்ளை உன் குலம் சிறந்து வளரும்
கோரைபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாய் சாதாரணமாக இருக்கும்.இதன் விலையும் குறைவு பாமர மக்கள் பயன்பாட்டிற்கு உதவும். இதனை மனதில் வைத்து வந்த பழமொழிதான் “கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை” கழு என்ற கோரை புல்லின் பெயருடன் தைக்க என்ற செயலும் இணைந்து ‘கழுதைக்க, கழுதைக்க’ என்று சொல்லி சொல்லி அவ்வார்த்தை மருவி ‘கழுதைக்கு’ என்று ஆகிவிட்டது.
அதன் உண்மையான அர்த்தம் “கழு என்ற கோரைபுல்லு கொண்டு செய்யப்படும் பாய் தைத்தால் கற்பூர வாசனை வரும்” என்பது தான்.அது தான் தற்பொழுது மருவி “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்று ஆகி விட்டது
மாமியார் நாள் செல்ல செல்ல கழுதை போல கேவலமாக ஆகிவிட்டார் என வரும் படியாக கிண்டலாகப் பேசும் முறையில் இந்த பழமொழி புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் மூத்தவர்களை எப்போதுமே மதிக்கும் தமிழ்ப் பழமொழி அவ்வளவு குறைவாகப் பேச வாய்ப்பில்லை. ஆகவே என்ன நடந்திருக்கும் ?
சரியான பழமொழி தெரிந்தால் புரிந்து விடும். சரியான பழமொழிப்படி,
வர வர மாமியார் கயிதை போல் ஆனாளாம்
கயிதை என்பது ஊமத்தங்காய் என்பதைக் குறிக்கும். ஆரம்பத்தில் பூவாக இருந்து பின்னர் நாள் செல்ல செல்ல அது காயாக்கிக் கனியும் பொது முள்ளாக மாறும். இதனை திருமணமாகி வந்த முதல் நாட்களில் இருந்து நாள் செல்ல செல்ல மாமியாரின் குண மாற்றத்தை குறிக்கப் பயன்படுத்தினர். அக்காலத்தில், ஏன் இப்போதும் கூட மாமியார்களுக்கு பயந்து கட்டுப்பட்டு வாழும் பல மருமக்கள் கள் உள்ளனர்.
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.
தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்
பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.
நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பற்றி முதலில் ஒரு முறை பார்ப்போம். தமிழர்களைப் போன்று ஒரு இளிச்சவாயர்களை நான் எங்கும் காணவில்லை. தனக்குத் தெரியாத ஒரு மொழியில் எந்த ஒரு விடயத்தையும் யாரும் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்வது என்றாலும், சொல்லப்படுவதன் அர்த்தத்தை புரிந்து கொண்டுதான் செய்வார்கள். ஆனால் நாமோ பிறப்பில் இருந்து இறப்பு வரை மதத்தின் பெயரில் எமக்கு தெரியாத ஒரு மொழியிலேயே அனைத்து சடங்குகளையும் செய்து வருகிறோம்.
உண்மையில் இந்தச் சடங்குகளும், அதில் சொல்லப்படும் மந்திரங்களும் எம்மை இழிவுபடுத்துவதை நாம் உணர்ந்து கொள்வதும் இல்லை. உணர்ந்து கொள்ள விரும்புவதும் இல்லை.
திருமணத்தின் போது சொல்லப்படும் சில மந்திரங்களை பார்ப்போம்.
மந்திரம்: ஸோம ப்ரதமோ விவித கந்தர்வ விவிவத உத்தர!
த்ருதியோ அக்னிஷ்டே பதி துரியஸ்தே மநுஷ்ஐயா!!
ஸோமோ ததத் கந்தர்வாய கந்தர்வோ ததத் அக்னயே!
ரயிம்ச புக்ராம் சாசாத் அக்னிர் மஹ்யம் அதோ இமாம்
பொருள்: அதாவது மணப்பெண்ணை சோமன் முதலில் மனைவியாக அடைந்தான். பிறகு கந்தர்வன் அடைந்தான். இவளுடைய மூன்றாவது கணவன் அக்னி, நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன். சோமன் உன்னை (மணப்பெண்ணை) கந்தர்வனுக்குக் கொடுத்தான். கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னிதேவன் இவளுக்குச் செல்வத்தையும் குழந்தையையும் கொடுத்த பிறகு எனக்குத் தந்தான்.... என்பதே புரோகிதர் கூற அதை திருப்பி மணமகன் கூறும் மந்திரத்தின் பொருள்.
இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தம் என்ன? இந்து மதப்படி திருமணம் செய்து கொள்கின்ற ஒருவரின் மனைவி பலரால் அனுபவிக்கப்பட்ட ஒரு பரத்தை (விபச்சாரி) என்றும், இந்த பெண் (மணப்பெண்) வேறொருவனிடம் குழந்தை பெற்றுக் கொண்டே அவனுக்கு மனைவியாகிறாள் என்றும் இந்து மதம் கூறுகின்றது. ஆதாரம்: காஞ்சி சங்கராச்சாரியார் எழுதிய தெய்வத்தின் குரல் - பாகம் 2 - பக்கம் 874
எனவே இந்துமதப்படி திருமணம் செய்துக் கொண்டால் உன் மனைவி ஒரு விபச்சாரி என்று பொருள். நீ முதலில் சொமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். அத்துடன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு….) வேறு இருக்கிறது.
இதை பல பார்ப்பனர்களே இன்று ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் மக்களை ஏமாற்றி தலையில் மிளகாய் அரைப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ள சிலர் வேறு அர்த்தம் சொல்வார்கள்.
பார்ப்பனர்கள் வேறு ஒரு அர்த்தம் சொல்லவது சோமன், கந்தர்வன், அக்னி போன்றவர்கள் அவளுக்கு அதிபதியாக இருந்தார்கள், காத்து வைத்திருந்தார்கள், தந்தை போன்று இருந்தார்கள் என்று வேறு விளக்கம் சொல்வார்கள்.
வித்தைக்கார பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் சொல்வார்கள். அதன் உள்ளே சொல்லப்பட்டிருக்கிற தத்துவத்தை பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள்.
சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் சோமன், கந்தர்வன், அக்னி ஆகியோர் அந்தப் பெண்ணிற்கு தந்தையாக இருந்தார்கள் என்று சொல்வார்கள். அதாவது மந்திரத்தில் உள்ள “பதி” என்ற சொல் கணவன் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுவது இல்லை. பாதுகாவலன் என்ற அர்தத்தில்தான் சொல்லப்படுகிறது.
“முதலில் சந்திரன் அவளை பாதுகாத்தான், பின்பு கந்தர்வன் பாதுகாத்தான், பின்பு அக்னி பாதுகாத்தான்” என்று ஒரு விளக்கத்தை இவர்கள் சொல்வார்கள். பெண்ணின் உடலில் ஏற்படும் வளர்ச்சிக்கு அமைய இந்த மந்திரங்கள் அமைக்கப்பட்டது என்று “அறிவியல்” விளக்கம் வேறு தருவார்கள்.
ஆனால் வேதங்களிலும் புராணங்களிலும் ஒரு பெண்ணிற்கு “பதி” என்பது அவள் கணவன் என்றுதான் சொல்லப்படுகிறது. அத்துடன் அதேவேதங்களிலும் புராணங்களிலும் “பொம்பிளைப் பொறுக்கிகளாக” சொல்லப்படுகின்ற சோமன், கந்தர்வன், அக்னி போன்றவர்களின் “பாதுகாப்பில்” தன்னுடைய மனைவி இருந்தாள் என்பது குறித்து எந்தக் கணவன் மகிழ்ச்சி அடைவான் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.
ஏதாவது ஒன்றை நம்பி எமது வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவிட்டுவிட்டோம் என்றால் பிற்காலத்தில் அவை எந்தளவு தான் தவறாக அர்த்தமற்றதாக தெரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மறுப்போம். ஒருவகை நிராகரித்த மனநிலையில் மிகுதிக் காலத்தை செலவிடுவோம்.
இப்படி ஆபாசம் மிகுந்த மந்திரங்களை சொல்லி நடக்கின்ற திருமணங்களையே எமது தமிழர்கள் செய்கிறார்கள். இவைகளை விட்டு திருக்குறள் சொல்லி திருமணங்கள் செய்யுங்கள் என்றால், "கடவுள், மதம்" என்று அடம்பிடிக்கிறார்கள். தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர் இந்த மந்திரங்கள் பற்றிய விளக்கங்களை சொல்லி உள்ளார். அவர் மட்டும் அல்ல. உண்மையை ஒத்துக் கொள்ளக் கூடிய சில பார்ப்பனர்களும் இதை ஒத்துக் கொண்டுள்ளார்கள்.
அதனால் பாடசாலையில் பாடவிதானங்களில் ஒரு முக்கிய அங்கமாக சிறுவயதில் இருந்தே கற்பிக்கப்பட வேண்டும். மற்றய இனங்களிற்கு மதங்களிற்கு மதிப்பு கொடுக்கக்கூடிய வகையில் எல்லா இனங்கள் மதங்கள் பற்றிய அடிப்படை விடையங்களை எல்லோரும் படிக்க வேண்டும். அது தான் ஒற்றுமை புரிந்துணர்வு கொண்ட வளமான பலமான சமூகத்தை உருவாக்க உதவும்.
திருமண மந்திரங்கள் இவற்றுடன் முடிந்து விடவில்லை. தொடர்ந்து வருகின்ற திருமண மந்திரங்கள் இவர்கள் சொல்கின்ற இந்த மோசடி விளக்கத்தை சுக்கு நூறாக உடைக்கின்றன. திருமண மந்திரங்கள் ஒரு மணமகள் எவ்வளவு தூரம் இழிவுபடுத்தப்படுகிறாள் என்பதை பார்த்தோம்.
எம்மை ஈன்றெடுத்த தாயையே இந்த மந்திரங்கள் மிக மோசமாக கொச்சைப்படுத்துகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?
கருத்துகள்
கருத்துரையிடுக